என் சகோதரர்களே இன்று அநேகருடைய எண்ணம் எப்படி இருக்கின்றது என்றால்
வேதத்தில் உள்ள அநேக கட்டளைகள் கற்பனைகள் எல்லாம் தேவன் மற்றவர்களுக்கு சொல்லும் பொழுது அவர் இதை அவருக்காக
தான் சொல்கின்றார் என்று நினைத்து கொள்கின்றார்கள்
ஆனால் உண்மை என்னவென்றால் அவருடைய கற்பனை கட்டளைகள் எல்லாம் நம்முடைய நன்மைக்கே
அதாவது நாம் பாவத்தில் வீழ்ந்து தேவனுடைய கோபத்திற்கும் அவருடைய தண்டனைக்கும் ஆளாக கூடாது என்பதற்காகவே அவர் நமக்கு பல
கட்டளைகள் கற்பனைகளையும் எழுது கொடுத்திர்க்கின்றார் எழுதிகொடுத்தது மட்டும் அல்லாமல் பாவம் எது தவறுகள் எது என்பதயும் கூட
வேதத்தில் தெளிவாக சொல்லியுள்ளார்
உபாகமம் : 10
12. இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும்
உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
13. நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்
பார்த்தீர்களா நண்பர்களே உனக்கு நன்மை உண்டாகும்படி என் கற்பனையை கை கொள் என்று தெளிவாய் சொல்கின்றார்
இதையே தான் தேவன் மீகா தீர்க்கதரிசியின் மூலமும் தெரிவிக்கின்றார்
மீகா : 6
8 .மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்
ஏன் இப்படி சொல்கின்றார் என்றால் ஒரு பாவம் செய்து தண்டனிக்கு ஆளாக கூடாது என்பதே அவருடைய நோக்கம் ஆனால் சாத்தானின் நோக்கம் மனிதனை பாவம் செய்ய வைத்து அவனுக்கு தண்டனையை வரவழைத்து தேவனுக்கு மனகஷ்ட்டத்தையும் வேதனையும் கொண்டுவருவதே அவனுடைய முக்கிய நோக்கம்
நாம் அவருடைய கற்பனைகள் கட்டளைகளுக்கு கீழ் படிவதினால் அவருக்கு மகிமையோ வல்லமையோ கூட போவதில்லை
ஏனென்றால் அவர் இருக்கிரவாராகவே இருக்கின்றார்
மாறாக நாம் தவறுகள்செய்தால் நமக்கு வியாதிகளும் வேதனைகளும் வரும் என்பதினாலேயே அவர் ஆதியாகம் முதல் வெளிபடுத்தல் வரை கற்பனையை கைகோள் கற்பனையை கைகோள் என்று சொல்லி கொண்டே இருக்கின்றார்
ஏனென்றால் அவர் தம்முடைய கையின் கிரியைகள் மேல் மிகுந்த அன்பாய் இருக்கின்றார்
அதாலால் என் நண்பர்களே நாம் தவறுகள் செய்து தண்டனை பெற்று அதினால் நம் தேவன் அதை பார்த்து வேதனை பாடாதா படிக்கு
நீதி நீயாயம் செய்து அவருடைய கற்பனை கட்டளைகளுக்கு கீழ்படிந்து சாத்தானை வெட்கபடுத்தி நம் தேவனை சந்தோஷபடுத்துவோமாக
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 24th of October 2011 01:38:34 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)