இந்த உலகத்தில் வாழும் மனுஷர்களாகிய நாம் ஒரு மனுஷனை பார்க்கும்போது அவனது முகதோன்றம்/ உடல்வாகு அவர் அணிந்திருக்கும் உடைகள் மற்றும் அவர் பயன்படுத்தும் வாகனம் அவரது வீடு அவரது மனைவிமக்கள் போன்ற அனேக காரியங்களின் அடிப்படையில் அவரை கணிக்கிறோம் அல்லது அவருக்கு மரியாதை அளிக்கிறோம்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் அவரின் பார்வை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
சாமுவேல் 16:7மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
அவர் இந்த உலகத்தை பார்த்த பார்வையே வேறு! அவர் எவரொருவரையும் வெளி தோற்றத்தின் அடிப்படையில் கணிக்காமல் ஒரு மனுஷனுக்குள் இருக்கும் ஆவியின் நிலையை வைத்தே அம்மனுஷர்களை கணித்தார் என்பதை நாம் அறிய முடிகிறது.
நாந்தான் வேல் என்னும் ஒரு மனுஷர் அவரிடம் வந்தபோது அவர் சற்றும் தாமதிக்காமல்
இங்கு இயேசுவால் எப்படி இவ்வளவு துல்லியமாக இந்த நாத்தான்வேலை பார்த்த வுடன் அவனை பற்றி கணிக்க முடிந்தது? இதுபோல் இன்னும் அனேக காரியங்களில் இயேசு அடுத்தவர்களின் ஆவியின் நிலையையும் இருதய நிலையையும் அறிந்து சொல்லியிருப்பது நமக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது.
தன்னை பார்க்கவேண்டும் என்ற இருதயம் நிறைந்த ஆசையுடன் மரத்தில் றியிருந்த சகேயுவின் மனநிலை அவரை மரத்துக்கு அடியில் வந்ததும் அவனை நோக்கி பார்க்க வைத்தது
யோவானை குறித்து அவர் பேசும்போது மத் 11:14நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். என்றார்
அதேபோல் யூதாசுக்குள் சாத்தான் புகுந்திருப்பதை அறிந்த இயேசு அவன் தம்மை காட்டிகொடுப்பான் என்பதை முன்னமேயே அறிந்துகொண்டார்.
மாற்கு 14:18உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
விபச்சாரியான ஸ்திரியை எல்லோரும் கல்லெறிந்து கொல்ல நின்றபோது அவளது இருதயத்தை அறிந்த ஆண்டவர் அவளை மன்னித்து அனுப்பினார்.
தனக்கு சீடர்களை தேர்ந்தெடுக்கும் போதுகூட படித்தவர்களையும் பணக்காரார் களையும் தேடாமல் இருதயத்தில் சுத்தம் உள்ள பாமரராய் இருந்தவர்களையே தேர்ந்தெடுத்தார்.
மேலும் உலகத்தில் உயிரோடு அலைந்துகொண்டிருந்த ஜனங்கள் அநேகர் ஆவியில் மரித்திருப்பதை அறிந்து அவர்களை மரித்தவர்கள் என்றும் கூறியிருக்கிறார்
மத்தேயு 8:22அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்
உயிரோடு அலையும் ஜனங்களின் வெளித்தோற்றம் அவர் கண்களுக்கு தெரியாமல் அவர்களின் மரித்த நிலையை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். எந்த மனுஷனை பற்றியும் அவருக்கு யாரும் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லது இருந்தது.
யோவான் 2:25மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டிய தாயிருக்கவில்லை.
இப்படி அடுத்தவர்களின் ஆவியைபற்றியும் இருந்தயத்தை அறிந்துகொள்ளும் ஆற்றல் அவருக்குள் செயல்பட காரணம்: கொலோ 2:9ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. அதனால் அவருக்கு மற்ற மனுஷர்களுக்குள் இருக்கும் ஆவி என்னவென்பதையும் அவர்கள் இருதயத்தின் நிலை என்னவன்பதையும் அவர்களை பார்த்த மாத்திரத்தில் கணிக்கமுடிந்தது. மனுஷர்களை குறித்து அவருக்கு யாரும் எதுவும் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.
இந்துபோன்ற ஒருவருடைய ஆவிக்குரிய காரியங்களை ஒரு நம்போன்ற ஒரு சாதாரண மன்ஷர்களால் அறிந்துகொள்ள முடியுமா?
யோவான் 14:12மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை
விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்
என்று ஆண்டவர் சொல்லியிருக்கிரபடியால்,அதேபோல் தேவ ஆவியின் வல்லமை நம்போன்ற ஒரு மனுஷனுக்குள் தேவ ஆவியின் பரிபூரணம் எல்லாம் வந்து தங்குமனால் அவருக்கு இந்த உலகத்தில் ஒருவரை பார்த்த மாத்திரத்தில் அவரது முகதொற்றமோ அல்லது உருவமோ கண்ணுக்கு தெரியாமல் அவருக்குள் இருக்கும் ஆவியும் அவரது இருதய நிலையுமே கண்ணுக்கு தெரியும்.
இந்த நிலையை எத்தனைபேர் அனுபவித்திருக்கிரார்களோ இல்லையோ ஆனால் தேவனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் ஒரு மனுஷனால் நிச்சயம் அனுபவிக்க முடியும்! ஒரு மனுஷனை கண்ணால் பார்க்காமலேயே அந்த மனுஷனை நினைத்து ஜெபித்த மாத்திரத்தில் அவரது ஆவிக்குரிய நிலையை தேவன் நமக்கு உணர்த்திவிட முடியும்!
நான் இதை அனுபவித்திருப்பதால் இங்கு எழுதுகிறேன் உங்களுக்கும் அந்த அனுபவம் இருந்தால் இங்கே தெரிவிக்கலாம்.
-- Edited by SUNDAR on Monday 24th of October 2011 08:47:59 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நம்மோடு இருக்கும் ஆவியானவர் அனலாக இருந்தால் நம்மோடு தொடர்பு வைத்துள்ள அல்லது நாம் வாஞ்சிக்கும் ஒவ்வொரு மனுஷர்களின் மனநிலையையும் அறிந்து கொள்ளும் பாக்கியத்தை பெறமுடியும் என்றே நான் கருதுகிறேன். அடுத்தவர் மனதில் இருக்கும் ஒரு சிறு கருப்பு புள்ளியை கூட நம்மால் கண்டு கொள்ளமுடியும்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் சாது செல்வராஜ் அவர்கள் நிகழ்ச்சியை பார்த்துகொண்டு இருந்தபோது அவர்களும் இதேகருத்தை சொன்னார்கள். அதாவது ஒரு சகோதரிக்காக ஜெபிக்கும்போது அவர்களின் இருதயத்தை அப்படியே நேரில் பார்ப்பதுபோல பார்க்கமுடிந்தது என்று அவர்கள் சொன்ன அந்த காரியம் முற்றிலும் உண்மை என்பதை அறிய முடிந்தது. இப்படி சில காரியங்கள் நம்முடய ஆவிக்குரிய அனுபவத்தோடு ஒத்துபோவதால் அவர் சொல்லும் வேறு சில அனுபவங்களை நம்மால் மறுக்கமுடிவதில்லை. எனக்கு அந்த அனுபவம் இல்லை என்பதற்காக அவர் பொய் சொல்கிறார் என்று தீர்ப்பது முற்றிலும் அறிவுடைமை அல்ல!
ஆவிக்குரிய நிலையை குறித்த எந்த ஒரு காரியமும் அதுபோல் அனுபவத்துக்குள் கடந்து சென்றவர்களுக்கு எழிதில் புரிந்துவிடும் ஆனால் அதை அறியாதவர் களுக்கோ அது கேலி கிண்டல் செய்வதற்கு எதுவாக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட காரியத்தை பற்றிய சரியான உண்மை நமக்கு தெரியாத பட்சத்தில் அடுத்தவர் சொல்வதை திட்டமாக மறுப்பது ஒரு தவறான செயல்.
ஆண்டவரிடம் அதிகமதிகமாக ஜெபித்து அந்த காரியத்தை குறித்த உண்மையை அறிந்துகொண்டால் மாத்திரமே நாம் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும்.
சரியான உண்மையை அறியாத நிலையில் விலகிஇருப்பதை விட்டுவிட்டு எல்லா ஊழியர்களையும் ஏதாவது ஒருவிதத்தில் குறை சொல்லிகொண்டு இருப்பது, குறை சொல்வத்ர்க்கேன்றே அவர்கள் கூட்டத்துக்கு செல்வது தனது மாம்ச சிந்தையில் நியாயம்தீர்ப்பது போன்ற செயல்கள் மனமேட்டிமை உண்டாக்கி தேவ கோபத்துக்கே வழி செய்யும்!
-- Edited by SUNDAR on Tuesday 25th of October 2011 04:09:01 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)