நம்முடைய பெயரில் காஸ், செல்போன், வங்கி கணக்கு, காசு எடுக்கும் அட்டை போன்றவை இருக்கலாமா? கூடாதா? அல்லது அவை கூட வாடகைக்குதான் எடுக்க வேண்டுமா? என்பதை கொன்சம் விளக்குங்கள்.
நாம் வேலை செய்யும் இடத்திலிருந்து வாங்கும் சம்பளத்தை நம் பெயரில்தான் வாங்குகிறோம். நமக்கு சொந்தமான இதை விற்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அப்படியே தரித்திரருக்கு கொடுத்து விடலாம். அப்படி கொடுக்க சொல்லத்தான் இயேசு கிருஸ்து சொல்லியிருக்கிறாரா? என்பதை கொன்சம் தெளிவுபடுத்துங்கள்.
இவைகளை நீங்கள் உங்கள் பெயரில் வைத்திருன்தால், நீங்கள் மரணத்தை வெல்ல தகுதியானவராய் ஆக முடியுமா? என்பதையும் சொல்லுங்கள்.

சகோதரர் அவர்களே!
எந்தஒரு மனுஷனும் என்னதான் பரிசுத்தமாக வாழ முயர்ச்சித்தலும தன் சுய பெலத்தால் அல்லது சுய நீதியால் தேவன் எதிர்பார்க்கும் அல்லது வேதம் சொல்லும் ஒரு முழுமையான பரிசுத்த நிலையை எட்ட முடியாது என்பதை தெரிவிக்கவே நான் இவ்வாறு எழுதினேனே யன்றி எதற்கும் ஒரு வரையறையை நிர்ணயிப்பதற்காக அல்ல! நம்முடயமுயற்சி நிச்சயம் அவசியம் அத்தோடு தேவனின் கிருபையும் மிகமிக அவசியம். நான்தான் செய்தேன் என்று சொல்வதற்கு இங்கு எதுவும் இல்லை!
சுருக்கமாக சொன்னால், எந்த ஒரு மனுஷனும் தேவனிடம்போய் ஆண்டவரே நான் உம்முடைய வார்த்தைகள்படி சரியாக வாழ்ந்து விட்டேன் என்று கூறிவிட முடியாது என்பதே என்னுடய கருத்து. எங்காவது ஏதாவது சில வசனங்களை நம்முடைய நிலைக்கு விரோதமாக காட்ட தேவனாலே கூடும்! எனவே ஒரு மனுஷனை முழுமையாக பரிசுத்தப் படுத்துவதும் அவரது நிலைக்கு தகுந்தால் போல மாற்றுவதும் தேவன் ஒருவராலேயாகும் என்ற உண்மையை ஏற்றே ஆகவேண்டும்.
இந்நிலையில் என்றுமே நாம் அடுத்தவரை நியாயம்தீர்க்க துணியாமல் நான் ஒரு அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்ற நிலையிலேயே இருக்கவேண்டும் அதற்க்கு மிஞ்சி நம்மை எண்ணுவது தவறு!
நம்மால் முடிந்த அளவுக்கு நாம் பரிசுத்தமாக நடந்து தேவனிடத்தில் முழு மனதோடு அன்புகூர்ந்து அவரது வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்படிய முயற்ச்சிப்பது அவசியம்! நம்முடைய முயற்சியோடுகூட, ஆண்டவரிடம் நம்மை பரிசுத்தபடுத்தி சரியான வழியில் நடத்தும்படி ஜெபிக்கும்போது, கீழ்படிய விரும்பும் நமது மனபக்குவம், பரிசுத்தத்தின் மேல் நமக்குள்ள வாஞ்சை இவைகளின் அடிப்படையில் ஒரு நிலையில் தேவன் ஒரு மனுஷனை தானே டேக் ஓவர் பண்ணிவிட்டார் என்றால் அவன் இந்த உலகத்தில் உள்ள எந்தஒரு காரியத்திலும் சம்பந்தபடாமல் பல நாட்கள் நம்மை அவர் நடத்திவிட முடியும். இதை நான் அறிந்திருப்பதால் சொல்கிறேன்.
எனவே எதுவும் முடியாது என்று சொல்வதற்கும் எதுவும் தேவனிடம் இல்லை நமக்கு முடியாமல் இருக்கலாம் ஆனால் தேவனை சார்த்து கொண்டு முயலும்போது அது நிச்சயம் முடியும்!
லூக்கா 18:27அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
எனவே பரிசுத்த ஆவியாகிய தேவ ஆவியால் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களே "பரிசுத்தவான்கள்" என்ற வார்த்தைக்குள் வருவார்கள் என்பதே எனது கருத்து.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் கேட்ட சந்தேகங்களுக்கு ஆம் / இல்லை / எப்படி என்று தெளிவாக பதில் கொடுக்காமல் வேறு பதில் அளித்து சமாளிக்கிறீர்கள்.
முந்தையை பதிவில் நீங்கள்,
//மேலும் வாடகைவீடு அல்லது வாடகை பொருட்கள் அல்லது கம்பனி கொடுக்கும் வண்டி போன்றவைகள் நமக்குண்டானது அல்ல! அவைகளை நாம் நினைத்தாலும் விற்க முடியாது, எனவே அப்படிப்பட்டவைகளை வைத்திருப்பது இயேசுவின் வார்த்தையின்படி தவறில்லை.//
இப்படி தீர்மானமாக சொல்லி சொந்த வீடு வைத்திருப்பவர்களெல்லாம் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை என்று நியாயம் தீர்த்து இருக்கிறீர்கள். ஆனால் நான் கேட்டவைகளுக்கு தெளிவான பதிலை கொடுக்காமல் நழுவிகிறீர்கள்.
முன்பு மாத்திரம் வசனத்தின் அடிப்படையில் தெளிவாக உங்கள் கருத்தை சொன்ன நீங்கள் இப்போது அவ்வாறு சொல்ல மறுப்பது ஏன்?

சகோ. சந்தோஷ் அவர்களே தேவனை பற்றிய விஷயங்களின் இறுதி நிலையை "ஆம்" என்றோ "இல்லை" என்றோ ஓரிரு வரிகளில் பதில் சொல்லி நம்மால் முடித்துவிட முடியாது. காரணம் ஒருவசனத்துக்கு இன்னொரு வசனம் எங்காவது பதில் சொல்லலாம். அல்லது தேவனே கூட நாம் "ஆம்" என்று சொல்வதை அவர் "இல்லை" என்று மாற்றிவிடலாம்.
இந்த திரியில் நான் எழுதியிருக்கும் கீழ்கண்ட பதிலை திரும்ப ஒருமுறை படித்து பாருங்கள்.
//////ஆண்டவராகிய இயேசு சொல்லியிருக்கிறபடிய எனக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னிடத்தில் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலையில் வாழவிரும்பும் எனக்கு, தாங்கள் சொல்வது போல் மனுஷனுக்கு தேவையான அடிப்படை தேவைகளாகிய சில பொருட்களை என்னால்விற்று தரித்திரருக்கு கொடுக்க முடியவில்லை. அதற்காக இயேசு சொன்ன வார்த்தையை நான் மாற்ற விரும்பவில்லை அவர் எல்லாவற்றையும் என்று சொன்னால் எல்லாவற்றையும்தான் குறிக்கும். அதுநம்மால் முடியவில்லை என்பதற்காக அவ்வார்த்தையில் நான் அல்டர்ரேஷன் பண்ண விரும்பாமல், நமக்கு ஆதரவாக வேறு வசனம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனப்படி:
மத்தேயு 20:15என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா?
பிரசங்கி 5:19தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
என்ற வசனம், நம் சம்பாதித்ததில் நமக்கு தேவையானதை எடுத்து புசிக்கவும் குடிக்கவும் அதிகாரம் தருவதாக தீர்மானித்தேன். அதில்
பாவம் இல்லை என்றும் தீர்மானித்துள்ளேன். அதன் அடிப்படையிலேயே அவ்வாறு எழுதினேன். தங்களிடம் வேறு ஏதாவது கருத்து இருந்தால் தெரிவியுங்கள் அதைகுறித்து ஆராயலாம். ஆனால் நமக்கு ஒருவசனம் ஒத்துவரவில்லை என்றால் அதற்க்கு முன்னும் பின்னும் வார்த்தைகளை சேர்ப்பது சரியான ஒரு காரியம் அல்ல. அதற்க்கு பதில் சொல்லும் வேறு வசனம் மூலம் மட்டுமே நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்./////
நான் எதையும் மறுக்கவில்லை "ஒரு வசனம் எல்லாவற்றையும் என்று சொன்னால் அது எல்லாவற்றையும்தான் குறிக்கும்"
சொல்ல பட்ட வசனத்தை நம்மால் கூட்டவோ குறைக்கவோ முடியாது/ கூடாது என்பதே இந்த திரியில் எனது கருத்தே தவிர எதற்கும் வரையறை நிர்ணயிக்க நான் பெரிய ஆள் அல்ல! வசனத்தை நமக்கு ஏற்றபடி மாற்றுவதற்கு பதில், நமது செய்கைக்கு ஆதரவாக இருக்கும் வேறு வசனத்தின் அடிப்படையில் சில காரியங்களை பயன்படுத்திக் கொள்ள நமக்கு தேவன் அனுமதி வழங்கலாம் என்பதையே இந்ததிரியில் நான் வலியிறுத்தி வருகிறேன்.
அடுத்து, "ஒரு மனுஷன் மரணத்தை காணாமல் வாழ இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு வாழவேண்டும்" என்ற உண்மையை வசனத்தின் அடிப்படையில் நமக்கு தெரிந்த சில காரியங்களை வலியிறுத்தி நம்மால் போதிக்கதான் முடியும். ஆனால் அந்த உயர்ந்த நிலையை எட்டுவதற்கு தேவன் நம்மை கையில் எடுத்து நடத்தினால் மட்டுமே முடியுமே தவிர, நாமே இங்கு ஒரு முழு வரையறையை நிர்ணயிப்பது தீர்மானிப்பது ஒன்றுக்கும் உதவாது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)