இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எந்த வேலையை இந்த உலகுக்காக இனிச் செய்யலாம்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
எந்த வேலையை இந்த உலகுக்காக இனிச் செய்யலாம்?
Permalink  
 


தீபாவளிக்கு  முந்தைய  நாளான கடந்த செவ்வாய் கிழமையன்று எனது அலுவலக வேலையை முடித்துவிட்டு சுமார் எட்டு மணியளவில் நான்  வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன். போகும் வழியில் வசதி வாய்ந்தவர்களின் குடியிருப்பு பகுதி யொன்று உள்ளது. அதன்வழியே நான் கடந்து செல்லும்போது, பல பணக்கார வீட்டு பிள்ளைகள்  தாங்கள் பெற்றோர்  குடும்பத்தினரோடு தாங்கள் வீட்டின் முன்னுள்ள விசாலமான இடத்தில் பட்டாசுகளை வெடித்தும் மத்தாப்புகளை கொளுத்தியும் சந்தொசபட்டு களிகூர்ந்துகொண்டு இருந்தார்கள்.
 
அதை பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது "இந்த உலகத்தில்  உள்ள எல்லோருமே இதுபோன்று மகிழ்ச்சியாக ஒவ்வொருநாளும்  தங்கள் குடும்பத்தோடு சந்தோசபட்டு களிகூர்ந்து வாழ்ந்தால் இந்த உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கும்" என்று கற்ப்பனை பண்ணி பார்த்தேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. "எல்லோரும் எப்போதும்  சந்தோஷமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு தேவையானது எல்லாமே நிறைவாக கிடைக்கவேண்டும்" என்பதே நான் அன்றும் இன்றும் ஆண்டவரிடம் வேண்டும் முக்கிய வேண்டுகோள். எனக்கு எது கிடைக்கிறதோ இல்லையோ நான் பார்க்கும் மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தரும் நிகழ்வு என்று எண்ணுகிறேன்.
 
இவ்வாறு மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த வசதியுள்ளவர்கள் இருக்கும் இடத்தை  கடந்து மவுண்ட் ரோட்டுக்கு வந்தேன். அங்கோ  தங்குவதற்கு இடமில்லாத சில ஏழை பெற்றோர்கள் ரோட்டில் இருந்த பஸ் ஸ்டாப்பில் பிளாஸ்டிக் பைகளை வைத்து சற்று அடைத்து மழைக்கு அங்கே ஒதுங்கி தங்கியிருந்தனர். அங்கும் நான் பார்த்த பணக்காரவீட்டு பிள்ளைகளின் வயதுக்கொத்த சிறுபிள்ளைகள் சிலர்  இருந்ததை பார்த்த எனக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்ப்பட்டது.
 
ஒருபுறம் கார் வசதி என்று செல்வாக்கோடு வாழ்ந்து மிகப்பெரிய வீடுகளை கட்டி வைத்து உள்ளே ஓரிருவர் மாத்திரம் இருக்கும்நிலை இன்னொரு பக்கமோ தங்குவதற்கு இடமில்லாம் ரோட்டில் சிறு பிள்ளைகளோடு தங்கும் நிலை! இது என்ன ஆண்டவரே?  ஒரு பாவமும் அறியாத இந்த சிறு பிள்ளைகளுக்கு ஏன் இப்படியொரு நிலை? நீர் படைத்த இந்தபூமியில் இவ்வளவு ஏற்றதாழ்வுகள் எதற்கு ஏன் இந்த உலகத்தில் இப்படி நடக்கிறது? உங்களால் ஒன்றுமே செய்ய முடிய வில்லையா? ஏன் இப்படி ஒரு ஏற்ற தாழ்வை அனுமதிக்கிறீர்?
 
ஆண்டவராகிய இயேசு பாவங்களுக்காக மரித்து உயிர்த்து இரண்டாயிரம் வருடங்களுக்குமேல் ஆகிவிட்ட நிலையில்  இந்த நிலைமை இனி எப்பொழுது மாறும்? என்ற அனேக கேள்விகள் எனக்குள் எழுந்தது.
 
எல்லாவறையும் ஆண்டவரிடம் முறையிட்டவாறு கலங்கிய கண்களோடு போய் கொண்டிருந்த என்னை இனம்புரியாத சோகம் வந்து ஆட் கொண்டது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆண்டவர் என்மனதில் பேச ஆரம்பித்தார்  "மனுஷனாக இருக்கும் நீயே  இவர்களுக்காக இவ்வளவு கலந்குகிறாயே, இவர்கள் எல்லோரையும் உண்டாக்கிய நான் இவர்களுக்காக எவ்வளவு பரிதபிக்கிறேன் என்பது உனக்கு தெரியுமா? 
 
யோனா 4:11  நான் பரிதபியாமலிருப்பேனோ
மத்தேயு 15:32  ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன் 
 
சமநிலையாய் இருந்த அனைத்தையும் சத்துரு கெடுத்துபோட்டான். சமநிலையை காக்கவேண்டிய மனுஷர்களோ சாத்தனோடு சவகாசம் வைத்து கொண்டார்கள். ஒரு மனுஷன் அதிகமதிகமான இன்பத்தைநோக்கி ஓடுகிறான் அதே அளவுக்கு கொடிய துன்பம் அவனைபோன்ற இன்னொருவனை  தாக்குகிறது. எந்த ஒரு மனுஷன் துனபத்தின் உச்சிக்கு சென்றாலும் சத்துருக்கு சந்தோஷமே! ஆனால் நானோ ஒவ்வொருவருக்காகவும் பரிதபிக்கிறேன். இன்பத்தை நோக்கி ஓடுவதை ஒருவன் தவிர்த்தால் துன்பத்தையும் தவிர்த்துவிட முடியும். 
 
நான் படைத்த இந்த ஜனங்களுக்காக என்னையே நான் தந்துவிட்டேன். மதியற்ற இந்த ஜனங்களோ என்னை அறியாது இருக்கிறார்கள் 
 
எரேமியா 4:22 என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள் 
 
மதியுள்ளவர்களாக இருந்து என்னை அறிந்து  ஆவியைபெற்ற  அனேக ஜனங்களோ  பித்தம் கொண்டவர்களாகிபோனார்கள்    
 
ஓசியா 9:7  தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.
 
பிறகு அப்படி  இந்த நிலைமையை மாற்றமுடியும்?. செய்யவேண்டியதை எல்லாம் செய்து சொல்லவேண்டிய எல்லாவற்றையும் எழுதிகொடுத்து விட்டேன். அவர்களை நடத்தி செல்ல என்னுடைய ஆவியின் பெலத்தையும் இவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். இன்னும்  இவர்களுக்கு செய்யாத  என்னத்தை நான் இவர்களுக்கு செய்வது? 
 
ஏசாயா 5:4 நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்?
 
என்று சொல்லி  அக்கலாயத்துகொண்டார்!  அவர் என்னையும் சேர்த்துதான் இவ்விடத்தில் குறிப்பிட்டார் என்பதை அறிந்து  மிகுந்த துக்கத்தில் என்னை நானே வெறுத்து அழுதுக்கொண்டே வீடுபோய் சேர்ந்தேன்.   
 
அன்பான சகோதர சகோதரிகளே! இந்த உலகத்தின் சகல துன்பங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும்  மாற்றுவதற்கு  தன் பக்கத்தில், இருந்து செய்ய வேண்டிய அனைத்து காரியங்களும் தேவன் ஏற்கெனவே செய்து முடித்துவிட்டார். நமக்கு அருளபட்டுள்ள ஆவியின் பெலத்தை கொண்டு  மனுஷர்கள் பக்கத்தில் இருந்து செய்யவேண்டிய காரியங்களே இன்னும் பாக்கியிருப்பதாக நான் உணர்கிறேன். 
 



-- Edited by SUNDAR on Thursday 27th of October 2011 09:06:48 PM



-- Edited by SUNDAR on Friday 28th of October 2011 01:31:10 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
RE: தேவன் தன்னையே இந்த் உலகுக்காக கொடுத்துவிட்டார்!
Permalink  
 


நீங்க புத்தர் மாதிரிங்க... அதான் அதிகமாக கவலைப்பட்டிருக்கீங்க...அக்கினியும் கந்தகமும் சம்பந்தப்பட்ட காரியத்தில் விலகியிருக்கும் மக்களே புத்திசாலிகள், நீங்க எப்படி? 

ஆனா,இந்த உலகமே தீக்கிரையாக வைக்கப்பட்டிருப்பதை வேதம் தெளிவாக எடுத்துச்சொல்லியும் சிலர் இந்த பூமியையே சொர்க்கமாக கடவுள் மாற்றப்போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

HMV wrote:

நீங்க புத்தர் மாதிரிங்க... அதான் அதிகமாக கவலைப்பட்டிருக்கீங்க...அக்கினியும் கந்தகமும் சம்பந்தப்பட்ட காரியத்தில் விலகியிருக்கும் மக்களே புத்திசாலிகள், நீங்க எப்படி?  


துன்பபடுகிரவர்களுக்காக இரக்கம் காட்டவும் கண்ணீரில் வாழ்கிறவர்களுக்காக  கருணை காட்டவும் ஒரு புத்தனாகவோ அல்லது காந்தியாகவோதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை.  சாதாரண மனுஷத்தன்மையுள்ள மனுஷன் எவனும் பிறருக்காக இரங்குவான். ஆனால் மதம் என்ற போர்வைக்குள் மனுஷதன்மையை தொலைத்துவிட்ட பலருக்கு இது புரியப்போவது இல்லை. 

இரக்கபடுகிறவர்கள்தான் இரக்கம்பெறுவார்கள்! இரக்கமுள்ளவருக்குத்தான்
இரக்கமான தீர்ப்பு கிடைக்கும்! இரக்கம் இல்லாதவர்களுக்கு அதற்க்கு ஏற்ற தீர்ப்புதான் கிடைக்கும்
 
அவரவர் வசதிப்படி எதுவும் கிடைக்காது. எனவே அவரவர் தப்பித்துகொள்ள,  பிறரிடம் இரக்கம் காட்டி தேவனிடம் இரக்கத்தை பெற முயற்ச்சிப்பது நல்லது.
 
தங்களை எந்த ஆவி ஆட்கொண்டுள்ளது என்பது எனக்கு புரிகிறது. ஆண்டவர் தாமே உங்களுக்கு பதிலளிக்க ஜெபிக்கிறேன்.   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
எந்த வேலையை இந்த உலகுக்காக இனிச் செய்யலாம்?
Permalink  
 


HMV: 
*****************************************************************************************************
ஆனா,இந்த உலகமே தீக்கிரையாக வைக்கப்பட்டிருப்பதை வேதம் தெளிவாக எடுத்துச்சொல்லியும் சிலர் இந்த பூமியையே சொர்க்கமாக கடவுள் மாற்றப்போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
***************************************************************************************************
 
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு பலமாடி  ஸ்டோர்ஸ்   ஓன்று தீப்பிடித்து எரிந்து  முழுவதும் நாசமாகி கரியாகிவிட்டது.  அனால் அடுத்து சில மாதங்க ளுக்குள்  அந்த ஸ்டோர் புதுப்பிக்கபட்டு இப்பொழுது  அது முன்பைவிட வெகுஅழகாக ஜொலித்து கொண்டு இருக்கிறது. 
 
சாதாரண மனுஷர்களே எரிந்துபோனத்தை சில நாட்களுக்குள் புதுப்பித்துவிடுகிறார்கள். மனுபுத்திரருக்காக கொடுக்கபட்ட  பூமியை  அது எரிந்துபோனாலும் புதுப்பித்து, உலர்ந்த எலும்புகளை ஒன்றாக்கி உயிர்கொடுத்து அனைத்தையும்   இறைவனால் புதுப்பிக்க முடியுமே   
   
ஏசாயா 65:17.இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்;  .
 
இதில் என்றென்றைக்கும் என்றசொல் நிதியத்தை  குறிப்பதாகவும் "புதிய பூமி" என்ற சொல் இந்த பூமி புதுப்பிக்கப்டுவதையே குறிக்கும் என்று  நான் எண்ணுகிறேன்.
 
தேவனால் கூடாதது எதுவும் இல்லை.  
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard