இந்த கடைசி காலத்தில் பலவிதமான கள்ள உபதேசங்கள் மற்றும் நூதன கருத்துக்கள் போதிக்கபட்டு வருவதால், இந்த தளத்தில் நாம் கருத்துக்களை எழுதும் நோக்கம் மற்றும் நமது போதனைகளை பற்றி சுருக்கமாக சொல்லிவிடுவது நல்லது என்று கருதுகிறேன்.
நமது தளத்தில் வேதவசனங்களுக்கு பல்வேறு விதமான விளக்கங்கள் வியாக்கீனங்கள் மற்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்ட்டிருந்தாலும் இங்குள்ள அனைத்து செய்திகளையும் மூன்றே மூன்று தலைப்புக்குள் அடக்கிவிடலாம்.
1. தேவன் தன்செய்கையில் எல்லாம் நீதிபரர் அவர் தீமையை வேண்டுமென்று உலகிற்குள் அனுமதிக்கவில்லை.
2. இயேசுவைவை பற்றிய சுவிசேஷம் சொல்லுதலும் அதன் மேன்மையை விளக்குதலும்
3. இயேசுவின் வார்த்தைகள் மற்றும் தேவனின் கற்பனைகளை கைகொண்டு வாழுதல்.
நமது முக்கிய போதனையாகிய இந்தமூன்று தலைப்புகளுக்கும் உரிய ஒருசில வசன ஆதாரங்களையும் இங்கு பதிவிடுவது அவசியம் என்று கருதுகிறேன்.
1. தேவன் தன் செய்கையில் எல்லாம் நீதிபரர் தீமையை அவர் வேண்டுமென்று இந்த பூமியில் அனுமதிக்கவில்லை!
தேவன் நீதியும் செம்மையுமானவர் என்பதும் அவர் தீமையை விரும்பாதவர் என்பதும் அவர் வேண்டுமென்று தீமையை அல்லது சாத்தானை பூமியில் அனுமத்தித்து அல்லது அவரே சாத்தானை உண்டாக்கி மனுஷர்களை சோதித்துகொண்டு இருக்கவில்லை என்பதுவுமே எங்களது பிரதான கருத்து. தீமைக்கும் தேவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
தேவன் நியாயத்திலும் நீதியிலும் பெருத்தவர் மஹா நீதிபரர் அவர் ஒடுக்குவதில்லை!
யோபு 37:23
சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
பலர் தேவன்பற்றிய தவறான கருத்தில், தேவன் ஒருபக்கம் சாத்தானை அனுமதித்து தீமையை செய்ய தூண்டுவதாகவும் இன்னொரு பக்கம்
மனுஷர்களை "தீமை செய்யாதே" என்று எச்சரிப்பதாகவும் கருத்தை கொண்டுள்ளனர். நீதியான தேவன் அப்படி மாறுபாடான காரியங்களை செய்யமாட்டார் என்பதும் தேவனால் மகிமையாக படைக்கபட்ட தேவ தூதன் அவனுடய மீறுதல் மற்றும் அவனுடய மன மேட்டிமையாலே சாத்தானாகி போனானேயன்றி தேவன் வேண்டுமென்று சாத்தானை அனுமதிக்கவில்லை.
2. ஆண்டவராகிய இயேசுவை பற்றிய சுவிசேஷம் அறிவித்தல்!
மனுக்குலத்தின் பாவத்தை போக்க பரிகாரியாக வந்து சிலுவையில் தன் ஜீவனைக்கொடுத்து அழிவுக்கு நேராக இருந்த மனுஷனை மீட்டேடுத்த ஆண்டவாகிய இயேசுவை பற்றிய சுவிசேஷத்தை பிரசங்கிப்பதும் அதன் முக்கியத்துவத்தை எடுத்து சொல்வதும் இந்த தளத்தின் இரண்டாவது முக்கிய நோக்கம் ஆகும். இங்கு சுவிசேஷம் சொல்லப்படும் வழி சற்று வேறாக இருக்கலாம் ஆனால் எல்லா மத சகோதரர்களுக்கும் பதில் சொல்லும் விதத்தில் கருத்துக்கள் எழுதப்படுகிறது.
இயேசுவை பற்றிய சுவிசேஷம் சொல்லுதல் என்பது கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
மாற்கு 16:15பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
இயேசுவை ஏற்றுக்கொள்ளுதலே "தேவனுடய பிள்ளை "ஆவதற்கு முதல் தகுதி என்றும் அவ்வாறு ஏற்றுக்கொண்டவர்கள் மரணத்துக்கு நீங்கி ஜீவனுக்கு உட்படுகிறார்கள் என்பது குறித்தும், இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் மரித்தபின் ஐஸ்வர்யவன் ஒருவன் சென்ற வேதனை மிகுந்த பாதாளம் செல்வதில்லை என்றும் போதிக்கபடுகிறது.
3. இயேசுவின் வார்த்தைகள் மற்றும் தேவனின் கற்பனைகளை கைகொள்ளுதல்!
இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் இருந்து விடுபட்டவர்கள் மீண்டும் பாவவாழ்க்கைக்கு திரும்பாமல் இருப்பதற்கு இயேசுவின் வார்த்தைகளை தாங்கள் வாழ்க்கையில் கைகொண்டு நடக்கவேண்டும் என்பதும் இங்கு பிரதானமாக போதிக்கபடுகிறது. "இயேசுவை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும் அவர் கற்பனையை கை
கொள்ளதவன் பொய்யன்" என்று வசனம் சொல்கிறபடியால் அவர் கற்பனையை கைகொள்ள பிரயாசம் எடுப்பது மிக மிக அவசியமாகிறது.
I யோவான் 2:4அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
மேலும் ஆண்டவராகிய இயேசுவே மிக தெளிவாக சுவிசேஷம் சொல்வதோடு கட்டளைகளை கைகொள்ளும்படி உபதேசம் பண்ண சொல்லியுள்ளார்:
மத்தேயு 28:20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்
மேலும் இயேசுவின்மேல் அன்பாயிருக்கிறேன் என்று சொல்கிறவன் அவரது கற்பனையை கைகொள்ளுவதன் மூலம் மட்டுமே அதை நிரூபிக்க முடியும் என்றும் சொல்லியிருக்கிறார்.
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 14:23இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்
இவை எல்லாவற்றிக்கும் மேலாக இங்கு போதிக்கப்படும் இன்னொரு முக்கிய கருத்து என்னவெனில் மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆகுதல் ஆகும். அப்படியொரு நிலை நமது வாழ்வில் நிறைவேறுவதற்கு நாம் செய்யவேண்டியது நமது மூன்றாவது உபதேசமாகிய இயேசுவின் வார்த்தையை நமதுவாழ்வில் கைகொண்டு நடக்க வேண்டியதுதான் அவசியம் என்பதால் அதை தனியான ஒரு போதனையாக விளக்க விரும்பவில்லை.
இதை தவிர நாங்கள் நூதனமாக எதுவும் போதிக்கவில்லை! தேவன் எனக்கு தந்த வெளிப்பாட்டின் அடிப்படையில் சில கருத்துக்கள் வித்யாசமாக இருந்தாலும், அதை இங்கு சொல்வதற்கு அடிப்படை காரணம் மேலேயுள்ள மூன்று கருத்துக்களின் முக்கயத்துவத்தை நிரூபிக்கதானேயன்றி வேறு எதற்கும் அல்ல!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)