இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலுவையை சுமக்க யாரும் தயாராக இருபதில்லை ஏன்?


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
சிலுவையை சுமக்க யாரும் தயாராக இருபதில்லை ஏன்?
Permalink  
 


சிலுவையை சுமக்கயாரும் தயாராக இருபதில்லை ஏன்?

இந்த தலைப்பு கிறிஸ்துவுக்குள் உள்ளவர்களை பற்றியது. பொதுவாக கிறிஸ்துவர்கள் பாடு அனுபவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்ககு ஆதாரமாக  வேதத்தில் பின் வரும் வசனங்கள்  ஒண்டு....

 லூக்கா 14:27தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

மத்தேயு 10:38தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

 

இங்கு சிலுவை என்று சொல்லபடுவது பாடுகளை குறித்தே ஆகும். ஆகையால் புதிய எற்பாடு நியமத்தின்படி ஒருவன் கண்டிப்பாக கிரிஸ்துவுக்குள்  பாடு அனுபவித்தே ஆக வேண்டும்.

 

அனால் இன்றைய கிறிஸ்துவர்கள்(என்னையும் சேர்த்து), யாவரும் பாடு அனுபவிக்க தயாராக இல்லை. இதற்கு காரணம் அனைவரும் என்றும் , மனதை  freeஆக வைத்து கொள்ளவே விரும்புகின்றனர்.

 

இந்த நிலையை நாம் சிலுவையை(அதாவது பாடுகளை) , சுமந்து கொண்டே கூட தொடரலாம்(அதாவதுFREE ஆக இருக்கலாம்). எப்படி என்றால் இயேசு இவ்வாறு கூறுகிறார்.....

 

மத்தேயு 11:30என் நுகம் மெதுவாயும் என்சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

 

ஆகையால் புதிய ஏற்பாடு நியமத்தின்படி நாம் அவரது சிலுவை அல்லது சுமையை(ஆத்துமா அழிந்துபோகிறது என்ற பாரம்), சுமந்தால் நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளை அவர் ஒன்றும் இல்லாமல் மற்றுவததொடு, நம்முடைய தேவைகளை சந்திக்க வல்லவராய் இருக்கிறார்.

 

ஆகையால் அவரை பின்பற்றி, அவருடைய பாரத்தை சுமந்து அவரது சீஷராக இருப்போம்.

 

                         திரியேக தேவனுக்கு

                 ஸ்தோத்திரம் .

 

 



-- Edited by Sugumar S T on Wednesday 2nd of November 2011 04:16:42 PM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
RE: சிலுவையை சுமக்க யாரும் தயாராக இருபதில்லை ஏன்?
Permalink  
 


சிலுவையை சுமப்பது என்றால், மேலும் எனென்ன அடங்கும் என்பதை தெரிந்தவர்கள் விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்..


__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சிலுவையை சுமக்க யாரும் தயாராக இருபதில்லை ஏன்?
Permalink  
 


Sugumar S T wrote:
சிலுவையை சுமப்பது என்றால், மேலும் எனென்ன அடங்கும் என்பதை தெரிந்தவர்கள் விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்..

சகோ. சுகுமார் அவர்களே நல்லதொரு விளக்கம் மற்றும் கேள்வியை முன்வைத்தீர்கள். ஒரு கிறிஸ்த்தவர் இப்படியெல்லாம் ஆழமாக  சித்தித்தால் நிச்சயம் அனேக உண்மைகளை தேவன் தெரிவிக்க வாய்ப்புண்டு.

ஆண்டவராகிய இயேசு சிலுவையில் என்னென்னத்தை எல்லாம் சுமந்தார்என்பதை அறிந்துகொண்டார் அவர் நம்மை எதை சுமக்க சொல்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.    

ஏசாயா 53:11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

நமது அக்கிரமங்களையும் பாவங்களையுமே இயேசு சிலுவையில் சுமந்தார் அந்த அக்கிரமங்களாகிய பாவங்களே அவருக்கு மரணத்தை கொண்டுவந்தது. இந்த கருத்தின் அடிப்படையில் கீழ்கண்ட வசனங்களை ஆராய்ந்தால்.

லூக்கா 14:27தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

இயேசு சுமந்தது உலகத்தின் பாவம்! ஆனால் இங்கு இயேசு "தன் சிலுவை" என்று சொல்வது அவரவர் பாவத்தையும் அக்கிரமத்தையும் குறிக்கிறது. அவரவர் செய்த பாவங்களையும் அக்கிரமங்களையும்  மனதார ஏற்றுக்கொண்டு அவற்றை அறிக்கையிட்டு விட்டுவிட்டு, அதற்க்குபின் தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு  ஏதாவது தண்டனை இருக்குமானால் அதையும் சுமதுகொண்டு அவரது வார்த்தைகளின்படி வாழ்ந்து அவரை பின்பற்ற வேண்டும் என்பதையே வசனம் இங்கு குறிப்பிடுகிறது.
 
பாவத்தினால் வரும் தண்டனையே சிலுவை என்பதால் அவ்வார்த்தை முக்கியமாக பாடுகளைதான் குறிக்கிறது. இங்கு பாடுகள் எங்கே வருகிறது என்றால் அவரது வார்த்தைகளை வசனங்களை கைகொள்ளு வதாலேயே பாடுகளும்  துன்பங்களும் வருகிறது. 

மத்தேயு 13:21 ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.

இவ்வாறு வசனத்திநிமித்தம்   பாடுகளை அனுபவிக்க விரும்பாதவர்கள் விரைவில் இடரலடைபவர்கள். தாங்கள் சொல்வதுபோல்  வசதியான சுகபோக வாழ்க்கையை விரும்பும்  அநேகர் வேத வசனத்தை கைகொண்டு நடந்து அதனால் வரும்  பாடுகளை அனுபவிக்க சற்றும் விருப்பம் இல்லாதவர்களாக இருக்கறார்கள். இன்றைய  கிறிஸ்த்தவ உலகில் இருக்கும் பெரிய பெரிய போதக ஸ்டார்களே அதற்க்கு சாட்சி.  ஆனால் இவர்களும் கிறிஸ்த்தவர்கள் என்று தங்களை சொல்லி கொள்பவர்கள்தான். இவர்களை பற்றி வேதம் என்ன சொல்கிறது.       

மத்தேயு 7:26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
27.
பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

அதாவது கிறிஸ்த்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லோருமே  அவரவர் கிரியின் அடிப்படையில் கிறிஸ்த்துவுக்குள் தங்களுக்கென்று ஒரு நித்திய வீட்டை கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவர் சொன்ன வார்த்தையின்படி நடந்து அதன் மூலம் வரும் பாடுகளை  அனுபவிக்க விருப்பமில்லாமல் நாங்களும் கிறிஸ்த்தவர்கள் என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள் கட்டும் வீடு ஒருநாளில் முழுவதும் விழுந்து அழிந்து போகும் என்பது உறுதி!

வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

பாடுகளை சகித்து மரண பரியந்தம் உண்மையாக இருப்பவனுக்கே  ஜீவகிரீடம் கிடைக்கும்!               



-- Edited by SUNDAR on Thursday 10th of November 2011 03:41:41 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard