இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இன்றே இப்பொழுதே மன்னிப்பது அவசியம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இன்றே இப்பொழுதே மன்னிப்பது அவசியம்!
Permalink  
 


"தவறுசெய்வது மனுஷகுணம் அதை மன்னிப்பது  தெய்வ குணம்" என்றொரு பழமொழி சொல்வார்கள். அதற்க்கு ஏற்ப தேவன் தனது மிகுந்த இரக்கங்களின்படியே தனது சொந்த குமாரனையே பலியாக கொடுத்து மன்னிப்பின் உயர்ந்த  நிலையை உலகுக்கு  காட்டிவிட்டார்.   இந்நிலையில் அவரிடமிருந்து  மன்னிப்பை  பெற்ற  நாமும் எல்லோரையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் பிறரை மன்னிப்பது அவசியமாகிறது. 
 
ஏன் அவ்வாறு மன்னிக்கவேண்டும், எதற்காக மன்னிக்க வேண்டும், எப்படி மன்னிக்கவேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்!      
 
1.  ஏன் நாம் பிறரை மன்னிக்கவேண்டும்?
 
உங்கள்  தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி பிறருக்கு மன்னியுங்கள்.
 
மாற்கு 11:25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்தி லிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
 
இந்த உலகத்தில் வாழும் எந்த மனுஷனும் ஒருபாவமும் செய்யாமல் வாழவே முடியாது. பாவமானது நம் மாம்சத்தில் குடிகொண்டு இருப்பதால் தெரிந்தோ தெரியாமலோ நாமெல்லாம் அனேக காரியங் களில் தவறுகிறோம். எனவேதான்  யாக்கோபு  என்ற பரிசுத்தவான்  இவ்வாறு  சொல்கிறார்   
 
யாக்கோபு 3:2 நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்
 
ஒருவனும் பூரண பரிசுத்தவான் இல்லை. இந்நிலையில் நாம் செய்யும் தவறான காரியங்களில் எல்லாம் தேவனிடம் மன்னிப்பை பெறுவதற்கு நாம் பிறரின் குற்றங்கள் குறைகள் தவறுகள் எல்லாவற்றையும் மன்னிப்பது அவசியம் என்று வேதம் சொல்கிறது.
 
சிலர் சொல்வார்கள் " எல்லாவற்றையும் நான் மன்னித்துவிடுவேன் ஆனால்  இதை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியாது" என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவ்வாறு ஏதாவது ஒரே ஒரு காரியத்தை  பிடித்துகொண்டு அதை மன்னிக்க சித்தம் இல்லாதவர் களாக இருந்தால் உங்களின் ஏதாவது ஒரு பாவம் மன்னிக்கபட்டாத நிலை ஏற்பாட்டு தான் அடிப்படையில் நீங்கள் இரட்சிப்பை இழக்க நேரிடலாம். நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் தேவன் மன்னித்தால் மட்டுமே நாம் பரலோகம் செல்ல தகுதியுள்ளவர்களாக ஆகமுடியும். மன்னிக்கபடாத பாவம் நம்மோடு இருந்தால் நாம் பரலோகம் செல்லமுடியாது என்றே நான் கருதுகிறேன்.   

2. எதற்க்காக பிறரை மன்னிக்க வேண்டும்? 

கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

எபேசியர் 4:32  ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

பரிசுத்தமான தேவனை நெருங்குவதற்கு  எந்த அருகதையும் இல்லாத பாவியாக இருந்தநம்மை தேவன் தன்னுடய குமாரனை அனுப்பி அவர் மூலம் நம்மை மன்னித்து  இரட்சித்தார். நாம் செய்த நீதியின் அடிப்படை யில் நமக்கு தேவனின் மன்னிப்பும் இரட்சிப்பும் கிடைக்க வில்லை மாறாக தான் குமாரனின் இரத்தத்தின் மூலம் நம்மை மன்னித்தார்.

தீத்து 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

 
இப்படி எந்த தகுதியும் இல்லாத நாமும் தேவனின் இரக்கதிநிமித்தம் கிறிஸ்த்துவுக்குள்  நம்முடய பாவங்கள் மன்னிக்கபட்டு தேவனுடன் ஒப்புரவாகும் நிலையை அடைந்ததால் நமக்கு கிடைத்த மன்னிப்பை செயல்படுத்த அல்லது அல்லது அந்த மன்னிப்பில் நிலைத்திருக்க  நமக்கு கிடைத்த அதே மன்னிப்பை நாம் பிறருக்கும் காட்டி, பிறரை மன்னிப்பது அவசியமாகிறது  
 
3.  எப்படி நாம் மன்னிக்க வேண்டும்?
 
கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
 
கொலோ3:13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
 
கிறிஸ்த்து நமக்கு எப்படிபட்ட மன்னிப்பை வழங்கியிருக்கிறார்?
 
ரோமர் 5:7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 
 
ஆனால் ஆண்டவராகிய இயேசுவோ, நாமெல்லாம் பாவிகள் என்று அறிந்திருதும், நம்மாக  ஜீவனை தர ஆயத்தமாகி அதன் மூலம் நம்மை மன்னித்தார். இந்த மன்னிப்பின் தன்மையை நாம் ஆராய்ந்து அளந்து அறிந்துவிட முடியாது. இங்கு ஆண்டவர் நம்மை அடுத்தவர்களுக்கு அதேபோன்று  ஜீவனைகொடு என்று சொல்லவில்லை, மாறாக அவர்கள் பாவம் அல்லது தவறே செய்திருந்தாலும் அவர்கள் பாவியாகவே இருந்தாலும், இயேசு மன்னித்ததை போன்று  எந்த  நிபந்தனையும் இல்லாத முழு மன்னிப்பை நாம் பிறருக்கும் வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.   
 
எனவே அன்பானவர்களே! யார்? எப்பொழுது? எதற்க்காக என்ன  செய்தார்கள்? என்பதை எல்லாம் திரும்ப திரும்ப யோசித்து "இப்படி பேசிவிட்டான்"  "இப்படி செய்துவிட்டானே" என்று எண்ணி  அவர்களை மன்னிக்க சித்தமில்லாமல்  இருக்காமல், இந்த கட்டுரையை படிக்கும்  இப்பொழுதே உங்கள் ஆழ் மனதில் யார்மீதாவது கசப்பு வைராக்கியம் கோபம்  இருக்கிறதா என்பதை உடனே  ஆராய்ந்து, எல்லோரையும் உடனடியாக முழுமையாக் மன்னியுங்கள். தேவனிடம் இரக்கம் மற்றும் மன்னிப்பை பெறுங்கள்!

 மத்தேயு 6:14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.

 



-- Edited by SUNDAR on Thursday 10th of November 2011 11:03:37 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard