என் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய கற்பனைகள் கட்டளைகள் போன்றவற்றை கைகொள்ளுகின்ர யாவரோடும் நீர் உம முகத்தை மறைக்காமல் பேசுவீராக.
ஏவுவது உணர்த்துவது என்பது அல்ல நீர் வேதத்தில் உம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளிடத்தில் பேசினது போலவே இன்றும் எங்களோடு பேசும் ஏனென்றால் அந்த காலத்தை விட இந்த காலம் பயங்கரமான பாவத்தின் காலமாய் இருக்கின்றது
நீர் அவர்களிடம் பேசியதை விட அதிகமாக எங்களிடம் பேசி எங்களுக்கு பெலத்தையும் ஒரு தைரியத்தையும் தரும்படியாக கேட்கின்றேன் கர்த்தாவே
சிலர் சொல்கின்றார்கள் 5 மணி நேரமோ அல்லது பல மணி நேரமோ ஜெபித்தால் தேவன் நிச்சயம் பேசுவார் என்று சொல்கின்றார்கள் மற்றும் இந்த திட்டத்தில் பங்காளராக இருந்தாலோ அல்லது இந்த கூட்டதிற்கு வந்தாலோ தேவன் நிச்சயம் ஆசிர்வதிப்பார் சுகத்தை தருவார் என்று சொல்கின்றார்கள்
தேவனாகிய கர்த்தாவே நாங்கள் எத்தனை இடத்தில் பங்களாராக சேருவது எத்தனை கூட்டகளில் கலந்து கொள்வது நேரம் போதாதே கையில் பணமுமிருக்காதே
சொல்லுங்கள் என் தேவனே நீங்கள் அதிக நேரம் ஜெபிப்பதிதான் எதிர்பார்க்கின்றீர்களா
சொல்லுங்கள் தேவனே பங்காளர் திட்டத்தில் சேர்ந்தால் தான்சுகத்தையும் ஆசிர்வாதத்தையும் தருவீர்களா
ஆம தேவனே எனக்கும் அப்படி தான் இந்த உலகத்தில் தெரிகின்றது
கற்பனைகள் உம்முடைய கட்டளைகள் போன்றவற்றை கை கொண்டு நடந்தால் தேவனே அவர்களிடம் பேச தாமதிக்கின்ரீர்
பழைய ஏற்பாட்டு காலத்தில் நீர் ஒரு மனிதனோடு கூடவே இருந்ததில்லை
ஆனால் புதி ஏற்பாட்டு காலத்தில்நீர் கூடவே பரிசுத்த
ஆவியானவரை இருக்கின்றீர் கூடவே இருக்கின்ற என் தேவன் பேசாமல் இருப்பது
என்னதேவனே
சங்கீதத்தில் பரிசுத்தஆவியானவர் போதிப்பார் ஆலோசனை சொல்வார்
என்று கூறப்பட்டுள்ளது அனால் ஏனோ என் தேவனே
என்னிடத்தில் வெளிப்படையாய் பேச மறுக்கின்றீர் தேவனே நீர் பேசாமல் இருப்பதிற்கு என்னிடம் ஏதாவது தவறு நிச்சயம் இருக்கலாம்
தேவனே யார்மூலமாவது நீர் என்னிடம் சொல்லி அனுப்பலாமே பின்பு நான் எப்படி அந்த தவரை உணர முடியும்
ஒருவேளை நீர் யாரோடு பேச அழைத்து இருக்கின்றீரோ அவர்களிடம் மட்டும் தான் பேசுவீரோ அல்லது தேவன் யாரை முன் குரித்தாரோ அவர்களிடம் மட்டும் தான் பேசுவீரோ தெரிய படுத்துவீரோ........
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 18th of November 2011 05:01:43 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
சகோதரரே தங்களின் இந்த வார்த்தைகள் உண்மையில் மனதை உருக்குவதாக இருக்கிறது. என்னுடய தற்போதைய நிலையில் நீங்கள் கேட்கும் அனேக கேள்விகளை நானும் கேட்கும் நிலையில் இருக்கிறேன்.
வேதத்தை எழுதி கொடுத்துவிட்டார் ஆனால் அதை புரிவதற்கோ போதிய ஞானம் நமக்கு இல்லை.
ஒரு வசனத்தின்படி நாம் நடந்தால் அந்தோ அதற்க்கு எதிர் வசனம் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது.
போதித்து நடத்துவதற்கு கொடுக்கபட்டுள்ள ஆவியனவரோ அனேக நேரங்களில் மௌனமாகி விடுகிறார்.
ஒரே வேத புத்தகத்தை வைத்துகொண்டு ஓராயிரம் சபை பிரிவுகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகங்கள்.
எது உண்மை? எது பொய்? யார் கள்ள உபதேசம்? யார் நல்ல உபதேசம்? என்பதை எத்தனைதான் ஆராய்ந்தாலும் அறிய முடியவில்லை.
நல்ல உபதேசம் என்று நாம் கருதும் சிலரின் நடபடிகளை பார்த்தால் சாதாரண உலக மனுஷர்களைவிட கேவலமாக இருப்பதால் அவர்களை ஏற்க்க முடியவில்லை.
மனுஷர்களை நம்பாமல் தேவனிடம் விசாரித்து உண்மையை அறிய நினைத்தாலும் சில நேரங்களில் தேவன் மௌனமாகி விடுகிறார். சத்துருக்கள் தலை கால் தெரியாமல் ஆட்டம் போட அனுமதித்து விடுகிறார்.
சபைகளில் கொடுக்கப்படும் செய்திகளில் கார சாரம் இல்லை ஆவியானவரின் அசைவாடுதல் இல்லை.
எங்கு பார்த்தாலும் வஞ்சகர்கள் / கபடஸ்தர்கள்/ வேடதாரிகள் காணிக்கை பிடுங்கிகள்!
சங்கீதம் 74:3 பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
சரியான பாதையில் சரியாக நடத்தும்படி ஆண்டவரைநோக்கி அழுது முறையிடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை சகோதரரே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//எது உண்மை? எது பொய்? யார் கள்ள உபதேசம்? யார் நல்ல உபதேசம்? என்பதை எத்தனைதான் ஆராய்ந்தாலும் அறிய முடியவில்லை. வேதத்தை எழுதி கொடுத்துவிட்டார் ஆனால் அதை புரிவதற்கோ போதிய ஞானம் நமக்கு இல்லை.
ஒரு வசனத்தின்படி நாம் நடந்தால் அந்தோ அதற்க்கு எதிர் வசனம் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது.
போதித்து நடத்துவதற்கு கொடுக்கபட்டுள்ள ஆவியனவரோ அனேக நேரங்களில் மௌனமாகி விடுகிறார்.//
ஐய்யகோ.....! அனைத்தும் அறிந்த தாங்களே இப்படி எழுதினால் வெளிச்சத்திற்கு நாங்கள் எங்கே போவோம்??? எனக்கு தெரிந்த வரையில் சகோ.சுந்தரை போல தேவனுடம் நேரடி தொடர்புடைய யாரையும் அறியேன் 'எல்லாம்' தெரிந்த நீங்களே இப்படி எழுதலாமா? வேதம் எதற்கு? நீங்கதான் நேரடியாக , சுடச்சுட தேவனிடம் இருந்து கேட்டு எழுதுகிறீர்களே!
"பிதா வேறு சோதிகளின் பிதா வேறு" "தேவனிடம் சேருவதற்கு நான்கு வழிகள் இருந்தன" "மரணமே இல்லாமல் வாழலாம்"
இன்னும் இது போல அனேக முத்துகள் நேரடியாக 'தேவனிடம்' இருந்த வந்தவை அல்லவா?
HMV , ஐயா. அன்பு மற்றும் ஜான் போன்ற ஆவியில்லாத அறிவிலிகளை புறம்தள்ளிவிட்டு தொடர்ந்து எழுதுங்கள் உங்களுக்கு துணையாக சகோ. எட்வினும் தங்களுடைய 'மறு' அவதாரமாகிய சகோ. நேசனும் இருப்பார்கள்!!
மேற்கண்ட வரிகளை வாசித்தபோது நமக்கு அருமையான நண்பர் சுந்தர் அவர்களின் ஞாபகமே வந்தது;ஒருவேளை அதே ஊர்க்காரர் என்பதால் பாலாசீர் லாறி அவர்களின் பாதிப்பும் இன்னும் அதே ஊரைச் சேர்ந்த யாகவா முனிவரின் பாதிப்பும் சுந்தர் அவர்களிடம் இருக்கிறதோ என்று யோசிக்கிறேன்.
சுந்தர் அவர்களிடம் பேசும் அதே ஆவி மேற்கண்ட மனிதர்களிடமும் பேசியது;அவர்கள் மூலம் அற்புத அதிசயங்களைச் செய்தது. சுந்தர் அவர்களின் தன்னடக்கம் காரணமாக இங்கே இரகசியமாக பணிபுரிகிறார், ஒருவேளை அவருக்கு கோபம் வந்துவிட்டால் அவரும் ஒரு முனிவரே..!
ஐய்யகோ.....! அனைத்தும் அறிந்த தாங்களே இப்படி எழுதினால் வெளிச்சத்திற்கு நாங்கள் எங்கே போவோம்??? எனக்கு தெரிந்த வரையில் சகோ.சுந்தரை போல தேவனுடம் நேரடி தொடர்புடைய யாரையும் அறியேன் 'எல்லாம்' தெரிந்த நீங்களே இப்படி எழுதலாமா? வேதம் எதற்கு? நீங்கதான் நேரடியாக , சுடச்சுட தேவனிடம் இருந்து கேட்டு எழுதுகிறீர்களே!/
வாருங்கள் சகோ ஜான் அவர்களே எங்கே ஆளை காணவில்லை என்று எதிர்பார்த்தேன்.?! நல்ல சமயம் கிடைத்திருக்கிறது பயன்படுத்தி கொள்ளுங்கள்
இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தி தேவனை முகம்முகமாக அறிந்த மனுஷனாகிய மோசெ ஒரு கட்டத்தில் தேவனிடம் இவ்வாறு புலம்புகிறான்:
யாத்திராகமம் 17:4மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
அவன் மட்டுமல்ல தேவனின் வார்த்தைகளை நேரடியாக கேட்ட சங்கீதக்காரன், சாலமோன், யோபு, எலியாவில் இருந்து, தேவனின் வாயாக இருந்து பேசிய பல தீர்க்கதரிசிகளில் தேவனிடம் சென்று புலம்பாத தேவ மனிதர்கள் மிக சொற்பமே.
கர்த்தரின் வார்த்தையை நேரடியாக பெற்ற எரேமியா இவ்வாறு புலம்புகிறான்:
எரேமியா 20:14நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.
வானத்தில் இருந்து அக்கினி இறங்கபன்னிய எலியா இவ்வாறு
புலபுகிறான்
இராஜாக்கள் 19:4அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல.
மனுஷர்களால் அதிகம் நெருக்கபடவும் சில காரியங்களிநிமித்தம் வேதனை படவும் நேரிடும்போது கர்த்தரிடம்சென்றே புலம்ப வேண்டும் வேறு யாரிடம் சென்று புலம்புவது?
தேவனிடம் செற்று புலம்பாத ஒரே ஒரு ஆள் சாத்தான்தான்! அவன் எப்பொழுது தேவ சந்நிதி சென்றாலும் யார் மீதாவது குறை சொல்வதற்கோ அல்லது குற்றம் சொல்வதர்க்காகவோதான் செல்வான். மனுஷர்களாகியா எமக்கு தேவனிடம் சென்று புலம்புவதை தவிர வேறு வழி தெரியவில்லை சகோதரரே!
John wrote: //////பிதா வேறு சோதிகளின் பிதா வேறு" "தேவனிடம் சேருவதற்கு நான்கு வழிகள் இருந்தன" "மரணமே இல்லாமல் வாழலாம்"
இன்னும் இது போல அனேக முத்துகள் நேரடியாக 'தேவனிடம்' இருந்த வந்தவை அல்லவா?/////
மனுஷன் மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆவதற்கு வழி இருக்கிறது என்பதை குறித்து அனேகவசனங்கள் சொல்லபட்டுள்ளது அவற்றில் 9 வசனத்தை இங்கே தருகிறேன்
1. ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகள் உண்டு (சங்:68:20)
2. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அங்கே மரணம் இல்லை (நீதி: 12:28)
3. அவர் (கர்த்தர்) மரணத்தை ஜெயமாக விழுங்குவர் (ஏசா:25:8)
4. அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; (ஓசி 13:14)
5. என் கட்டளைகளின் படி நடந்து, என் நியாயங்களை கைக்கொண்டு உண்மையாக இருப்பானாகில் அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் (எசே:18:9)
6. ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை யோவான் 8:51
7.உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்(யோ:8:26)
8. தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்பிப்பார் (ரோ: 8:11)
9. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; Iகொரி 15:51
இப்படி அனேக வசனங்களை ஆதாரமாக தந்து மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆகமுடியும் என்று சொன்னாலும் அதை நம்ப மறுக்காமல் "நான் செத்துதான் போவேன்" என்று பிடிவாதம் பிடிக்கும் தாங்கள் போன்றவர்களுக்கு ஓரிரு வசன ஆதாரம் உள்ள காரியங்களை எப்படி விளக்குவது என்பது புரியவில்லை சகோதரரே.
தேவனின் வார்த்தைகளின் வல்லமை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை அதன் மீது போதிய விசுவாசம் இல்லை அல்லது இயேசுவின் வார்த்தைகள்படி என்னால் வாழ முடியவில்லை என்று என்று கூறுங்கள் அதை ஒத்துக்கொள்ளலாம். என்னுடய கருத்தையும் வேத வசனங்களையும் குறைகூறாதீர்கள் அல்லது அதை புரட்டி புரட்டி பொருள் கொள்ள துணியாதீர்கள் அது தங்களுக்கே கேட்டை விளைவிக்கும்.
எப்படி என்று கேட்கிறீர்களா?
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லையோவான் 8:51
என்ற ஒரே ஒரு வசனத்தை எடுத்துகொள்ளுங்கள். இந்த வசனத்தில் சொல்லபட்டிருப்பது நான் சொல்லுவது போல் முதல் மரணத்தை குறிக்கிறது என்றால் ஒருவேளை இயேசு மலைப்பிரசங்கத்திலும் மற்ற இடங்களிலும் சொல்லியிருக்கும் ஒருசில வார்த்தைகளை கைகொள்ள முடியவில்லை என்றாலும். உங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று பிச்சை கொடுக்க முடியவில்லை என்றாலும்கூட தாங்கள் முதல் மரணத்தில் மரித்து இரண்டாம் மரணத்தில் தப்பித்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
இல்லை இதை நான் நம்பவில்லை, இயேசு இரண்டாம் மரணத்தை குறித்துதான் இங்கு சொல்லியிருக்கிறார் என்று தாங்கள் விசுவாசித்தால் உடனடியாக உங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்கு கொடுத்துவிட்டு, கையில் ஒன்றும் இல்லாமல் நாளையை பற்றி கவலைபடாமல் வாழ்வதற்கு உடனடியாக பிரயாசம் எடுங்கள் இல்லையேல்,
தங்களின் விசுவாசப்படி எப்படியாகிலும் முதல் மரணத்தை அடைந்தே தீருவீர்கள்
அடுத்து தங்களின் விசுவாசப்படியே இயேசுவின் நியாயம் தீர்க்கும் வார்த்தைகள் அடிப்படையில் அவரது கட்டளைகளில் சிரிதொன்றை கைகொள்ளாமல் நீங்கள் மீறி நடந்தாலும் நீங்கள் இரண்டாம் மரணத்தையும் சந்திக்க நேரிடும் என்பதை வருத்ததுடன் தெரிவித்துகொள்கிறேன்.
///HMV , ஐயா. அன்பு மற்றும் ஜான் போன்ற ஆவியில்லாத அறிவிலிகளை புறம்தள்ளிவிட்டு தொடர்ந்து எழுதுங்கள் உங்களுக்கு துணையாக சகோ. எட்வினும் தங்களுடைய 'மறு' அவதாரமாகிய சகோ. நேசனும் இருப்பார்கள்!!///
இவர்கள் மட்டும் அல்ல சகோதரரே இன்னும் இங்கு அதிகம் பங்களிக்க முடியாத பலர் இங்குள்ள கருத்துக்களை விசுவாசிக்கின்றனர். இதுபோக நான் எதுவும் எழுதாமல் இருந்தால் என்னை செல்லில் அழைத்து விசாரிப்பவர்களும் இருக்கிரார்கள். இங்கு எண்ணிக்கை முக்கியம்அல்ல. நிறைய கூட்டம் சேர்கிறது என்பதற்காக சாது சொல்வதையோ அல்லது பால் தினகரன் சொல்வதையோ பலர் ஏற்றுக்கொள்வது இல்லையே.
இங்கு நான் புதிதாக எதையும் போதிக்கவில்லை நீங்கள் இருக்கிற அதே நிலையில் இயேசுவின் வார்த்தைகளை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் கைகொண்டு வாழ பிரயாசம் எடுங்கள் என்பதே எனது போதனை
எனவே எங்கு எது அப்படி எழுதப்பட வேண்டுமோ அது நிச்சயம் எழுதப்படும் அதைப்பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம். எதற்க்க மனதிருந்தால ஏற்றுக்கொள்ளுங்கள் விளக்கம் வேண்டுமென்றால் விசுவாசத்துடன் கேளுங்கள். இல்லை எல்லாமே தங்களுக்கு ஒரு ஜோக் போல தெரிந்தால் சிரித்துவிட்டு போங்கள். அவ்வளவுதான்
-- Edited by SUNDAR on Thursday 24th of November 2011 03:47:14 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)