இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்நியபாஷையும் என் அனுபவமும்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
அந்நியபாஷையும் என் அனுபவமும்
Permalink  
 


சகோதரர்களே நாம்  அந்நியபாஷை பேசும்  பொழுது நம் வாழ்வில் நடக்கும் காரியங்களை எனது அனுபவங்களை  கொண்டு
நான் விளக்க நினைக்கின்றேன்
 
 
நாம் அந்நியபாஷை பேசுவதால் நமக்கு ஏற்படும் காரியங்களை கிழே குறிப்பிட்டு உள்ளேன்
 
 
 
(1 ) தேவனோடு இரகசியம் பேசலாம்
(2 ) தேவனுடைய  பெலன்  நம்முடன் இருக்கும்
(3 ) தேவனுடைய  பிரசன்னம் நம்முடன் இருக்கும்
(4 ) பரிசுத்தத் ஆவியானவர் ஏவுதலும் உணர்த்துதலும் எப்பொழுது இருக்கும்
 
 
 
(1 ) தேவனோடு இரகசியம் பேசலாம்
 
 
நாம் அந்நியபாஷை பேசும் பொழுது  அந்த பாஷையின் அர்த்தம் பெரும்பாலும்  நமக்கு  தெரியாது ஆனால் உண்மையாகவே
நாம் நமக்கு இருக்கும் பொல்லாத குணங்கள் மற்றும் நமக்கே தெரியாமல் இருக்கும் சில அசுத்த காரியங்களை பரிசுத்த ஆவியானவர் தாமே நம் வாயினால் தேவனோடு மன்றாடி நமது பரிசுத்த வாழ்க்கைக்கு தேவையானதை நாம் பெற்று  கொள்ள உதவி செய்கின்றார் இதில் இன்னும் மறைவான காரியங்கள் 
பல உண்டு 
 
 
 
1  கொரிந்தியர் : 12
 
2. ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்
 
 
 
 
(2 ) தேவனுடைய பெலன்  நம்முடன் இருக்கும்
 
 
நாம்  அந்நியபாஷை அதிகம் பேசும்பொழுது தேவனுடைய பெலன் நம்மில் அதிகமாய் இருப்பதை  உணரமுடியும்
அதாவது அதை தெம்பு என்று கூட கூரலாம் அந்த அளவுக்கு இருக்கும் மற்றும் எந்த தேவைகள் இருந்தாலும் அந்த தேவைகள் நமக்கு ஒரு கவலையாகவே தெரியாது
 
 
1  கொரிந்தியர் : 12
 
2 . அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்
 
 
 
(3 ) தேவனுடைய  பிரசன்னம் நம்முடன் இருக்கும்
 
 
நான் ஒரு முறை இரவு நேரத்தில் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து அந்நியபாஷை பேசிக்கொண்டு இருந்தேன் அடுத்த நாள் காலையில் நான் வேலைக்கு சென்று ஒரு சகோதரிக்கு இயேசு கிறிஸ்து பற்றி சொல்லும் பொழுது அந்த சகோதரி சுருண்டு மயங்கி விழுந்தார்கள்
 
 
நான் மிகவும் பயந்து உங்களுக்கு என்ன ஆனது என்று கேட்ட பொழுது நீங்கள் பேச பேச எனக்கு தலை சுற்றியது என்று கூறினார்கள் தேவனுடைய பிரசன்னம் ஆவிகளை நடுங்க வைக்கும்  மற்றும் தேவனுடைய பிரசன்னம் நம்முடன் இருந்தால் நம்முடைய முகம் பிரகாசமாய் இருப்பதை  காண முடியும்
 
 
 
(4 ) பரிசுத்தத் ஆவியானவர் ஏவுதலும் உணர்த்துதலும் எப்பொழுது இருக்கும்
 
 
நாம் அந்நியபாஷை அதிகமாக பேசு பொழுது நமக்குள் அதாவது நம் இருதயத்துக்குள்  ஏற்படும் மாற்றங்கள் அதிகமாய் இருக்கும்
நான் பாவம் செய்கின்ற சூழ்நிலைகள் வரும் பொழுது எனக்கு பரிசுத்த ஆவியானவர் சிக்னல் கொடுத்து விடுவார்
 
 
அதாவது எனக்கு உணர்த்தி விடுவார் எனக்கு அது என்னவென்று தெரியாது ஆனால் நாம் ஜாக்கிரதியாய் இருக்க வேண்டும் என்று  மட்டும மனதில் நினைத்து கொண்டு அந்த பிரச்சனையை  ஜெய்த்து இருக்கின்றேன் அதே போல அதிக நேரம் ஜாக்கிரதையாய் இருப்பேன் அதிகநேரம் அவருடைய ஏவுதலுக்கு கீழ்படியாமல் போய்விடுவேன்
 
 
 
1  கொரிந்தியர் : 14 
 
 
39 . அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்
 
 
 
ஆம் சகோதர்களே நாம் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டு இருப்பது நமக்கு மிகவும் நல்லது தான் அதைவிட   அதிகமாக அவரை சும்மா விடாமல் அலட்டி கொண்டே இருக்க வேண்டும் நீங்கள் அந்நியபாஷை மூலமாகவும் அப்படி செய்யலாம் சாதாரணமாக கூட அப்படி செய்யலாம்
 
 
அதற்காக அந்நியபாஷை வரம் இருந்தால் மட்டும் போதாது அதுனுடன் சேர்ந்து பரிசுத்தமும் இருக்க வேண்டும் ஏனென்றால் வேதம் சொல்கின்றது
 
வேதத்தை கேளாதபடி தன செவியை விளக்குகின்றவனுடைய ஜெபம் எப்படி இருக்கும் அருவருப்பாய் இருக்கும் இந்த வார்த்தையை எல்லா இடத்திலும் போட்டு கொள்ளுங்கள்
 
அதாவது வேதத்தை கேளாத படி தன செவியை விளக்குகின்றவனுடைய அந்நியபாஷை அருவருப்பாய் இருக்கும்
 
 
வேதத்தை கேளாத படி தன செவியை விளக்குகின்றவனுடைய போதனைகள்  அருவருப்பாய் இருக்கும்
 
 
ஆம் சகோதர்களே இப்படியே நாம் என்ன செய்தாலும் இந்த வசனத்தை முன்பு எடுத்து கொள்ள வேண்டும்
 

அந்நியபாஷை பற்றி அனுபவம் இருப்பவர்கள் தங்களுடைய  அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே.....



-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 30th of November 2011 09:35:26 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

அந்நியபாஷையில்  பற்பல பாஷைகளை பேசுதல்  
 
 
சிலர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற உடனே அந்நியபாஷை பேசும் பொழுது ஒரே ஒரு பாஷையை மட்டும் கடைசிவரை  பேசிக்கொண்டே இருப்பார்கள் அவர்களது பாஷையை கேட்டால் எப்பொழுது ஒரே மாதிரியாக தெரியும்
 
 
 
சகோதர்களே நான் ஒரே பாஷை என்று சொன்ன உடனே நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் அதுவும் விசேஷித்த மானதே
நான் பற்பல பாஷையை  குறித்து தான் பேசிகின்றேன்  
ஏனென்றால் நாம் பற்பல பாஷைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று சொல்லவே இங்கு பதிவிடுகின்றேன்
 
 
 
நான் ஆரம்பத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷகம் பெற்றுக்கொள்ளும் பொழுது  எனக்கு ஒரே ஒரு பாஷை மட்டும் தான் பேசி கொண்டே இருப்பேன் ஆனால் நான் அந்நியபாஷையை  எப்பொழுதும் விடாமல் பேசி கொண்டே இருப்பதினால் எனக்கு பற்பலபாஷைகள் வந்து  
கொண்டே இருக்கும் என் ஆவியும் பயங்கர அனலாக இருப்பதை  உணர்ந்து இருக்கின்றேன் என்னுடன்  
தேவன் இருக்கின்றார் என்பதை திட்ட தெளிவாக அறிந்து இருக்கின்றேன்
 
 
 
அதன் பின் நான் பற்பல பாஷைகளை  பேச வேண்டும் என்றால் நான் என்னை கொஞ்சம் அனலாக்கினால் போதும் பல பாஷைகள் என் வாயில் இருந்து வரும் ஆனால் வியாக்கினம் தான் எனக்கு தெரியாது ஆனால் பயங்கரமான வல்லைமை நமக்குள் இருப்பது போல இருக்கும்
 
 
 
நாம் பற்பல பாஷைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நம்மிடம் ஒன்றே ஒன்று தான் இருக்க வேண்டும்
வாஞ்சை இந்த வாஞ்சை எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை அனால் நான் எப்படி பெற்றுகொண்டேன் என்பதை சொல்கின்றேன் உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து  கொள்ளுங்கள்
 
 
நான் குளிக்கும் தண்ணீரில்  கையை வைத்து அந்நியபாஷை பேசுவேன் சாப்பிடும் ஆகாரத்தில் கைகளை வைத்து அந்நியபாஷை பேசுவேன் அதாவது எப்பொழுது எந்த கூட்டதிருக்கு சென்றாலும் அந்நியபாஷை தான் பேசி கொண்டே இருப்பேன்
 
 
நான் செய்தது போலவே நீங்களும் செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை உங்கள் வாஞ்சை எப்படி இருக்கின்றதோ அப்படியே நீங்கள் செய்யுங்கள்
 
 
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை உற்றுவேன் என்று தேவன் நமக்கு சொல்லியிருக்கின்றார் வாஞ்சையோடு கேட்பவர்களுக்கு நிச்சயம் உற்றுவார்
 
 
சகோதர்களே நான் இங்கு என் பெருமைகளை எழுத வேண்டும் என்று எண்ணி எழுதவில்லை அப்படி எண்ணி இருந்தால்
இந்த தளத்தில் எப்பொழுதோ இதை குறித்து எழுதி  இருப்பேன் என் அனுபவத்தில் இருந்து நான் உணர்ந்ததை  தான் எழுதியுள்ளேன் சிலருக்கு ப்ரோஜினமாய் இருக்கும்
என்ற நம்பிக்கையில் இவைகளை குறித்து இங்கு எழுதிகின்றேன்
 
 
காரணம் சாத்தானின் தந்திரங்களை நாம் ஜெய்க்க வேண்டும் என்றால் பரிசுத்த பெலன் நமக்கு வேண்டும் அந்த பெலன் இப்படி வருவதால் இங்கு இவைகளை குறித்து எழுதிகின்றேன்.........


-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 22nd of November 2011 06:11:47 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அந்நிய  பாஷை வரத்தை பற்றிய தங்கள்  அனுபவமும் கருத்துக்களும் அருமை!
 
நாம் பேசும் அனேக அந்நிய பாஷைகளில் பொருள் நமக்கு புரிவதில்லை என்றாலும் நாம் பேசும்போது நமக்குள் ஆவியானவரின் அனல் மூட்டப்படுவதை உணர முடியும். தொடர்ந்து நீண்ட நேரம் ஜெபத்தில் தரித்திருக்கவும் உதவும்.
 
என்னை பொறுத்தவரை தொடக்கத்தில் இருந்தே  நான் அதிகமாக அன்னியபாஷை பேசுவது இல்லை. ஜெபத்தின் ஆராம்பத்தில் சிறிது நேரம் மனதை ஒருநிலை படுத்தவே  அந்நியபாஷை பேசுவது வழக்கம். பின்னர் மனது ஒருநிலையானபின்  அமைதியாக இருந்து ஜெபிக்கவே விரும்புவேன். சோர்வு வரும் நேரம் மீண்டும் அந்நிய பாஷையை பேசி அனல்மூட்டிகொள்வது உண்டு! 
 
அந்நியபாஷை என்பது ஆவியானவரின் ஒரு வரம் என்றாலும் அந்நிய பாஷை பேசினால்தான் பரிசுத்த ஆவியானவர் வந்துள்ளார் என்று கருதுவது தவறு என்றே கருதுகிறேன். 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.சுதாகர் அவர்களே செறிந்த கருத்துகளுக்காக நன்றி..

உங்கள் வழிகாட்டுதலக்கு  நன்றி

--------------------------------------------------------------------------------

பெந்தகோஸ்தே அனுபவம் பின்வருமாறு தெரிவிக்க பட்டுள்ளது...

எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

அப்படியிருக்க நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?

பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.(அப்போஸ்தலர் 2:7-11 )

ஆக பெந்தகோஸ்தே நாளில் இவர்கள் பேசியது தேவ தூதர்களின் பாஷையோ அல்லது பொருள் புரியாத பாஷையோ அல்ல ... மாறாக மாற்று பாஷைகளில் பேசினார்கள்..

 

மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.(I கொரிந்தியர்14 :21,22)

 மேலும்....

 

அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.

உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.

ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான்.

அந்தப்படி, அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன்.(I கொரிந்தியர்14 :9-13.) 

இவ்வசனங்களில்,அன்னியபாஷை தெளிவனதாய் இருக்க வேண்டும்... பொருள் இல்லாத, கூற படாத உளறலை அந்நிய பாஷை என வேதம் குறிப்பிடவில்லை.. மாறாக பக்தி விருத்தியின் கருவியாக குறிப்பிடுகிறது.

மற்றும்

இப்படியிருக்க செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.

இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.

(I கொரிந்தியர்14 :15,16)

ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?

எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான்.

(I கொரிந்தியர்14 :23,24)

'கல்லாதவன்' விசுவாசிஆகவோ அவிசுவாசிஆகவோ இருக்கவோவேண்டிய அவசியம் இல்லை.. கல்லாதவன் விசுவாசியாக இருக்க முடியாது என்று வேதத்தில் சொல்லபடவில்லை.. அப்படி இருக்க.. நிச்சயம் 'இந்த கல்லாதவன்' சபைக்கு புதிய அல்லது சபை ஒழுக்கத்துக்கு புதிய அல்லது வேற்று மொழிகளை கள்ளதவரகவோ இருக்க வேண்டும்..

மேலும்....

அன்னிய பாஷை அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் கொடுக்கப்பட்டுள்ளது...உதரணத்திற்கு

மாற்று பாஷை தெரிந்திருக்க வாய்ப்பில்லாத ஒருவர், ஜப வேளையில் திடீர் என்று ஒரு சபைக்கு புதிதாய் வந்துள்ளவர் முன் அவரது ஜென்ம பாஷையில் பேசும்போது அன்னிய பாஷை பேசுபவர், புதியவருக்கும் மற்ற சபைனருக்கும் பக்தி விருத்திக்கு கருவியாகிறார்.  

விசுவாசிகளுக்கு அடையளமாக கொடுக்கபட்ட தீர்க்கதரிசன வரத்தை பெற்ற உண்மை திர்க்கதரிசிகளுக்கு விரோதமாக சத்ருவின் கள்ளதீர்க்கதரிசிகளின் கிரியை எப்படி இருக்கிறதோ,

அப்படியே அந்நிய பாஷை பேசுகிறேன் என்ன்று சொல்லி உளரும் சில ஊழியர்களும்,அவிசுவாசிகளும் உள்ளனர்.. இவர்கள் வயிற்றிற்காக ஊழியம் செய்து தேவ மகிமையை அலட்சியம் செய்கின்றனர்!!

எப்போதும் இவ்வாறாக செய்து புதிய விசுவாசிகள் சபைக்குள் நுழையாத படி செய்து முகம் சுளிக்க செய்கின்றனர்,சபை வளர்ச்சியை கெடுத்து போடுகின்றனர் .. ஏலியின் புத்திரர் கர்த்தரின் பலியை இஸ்ரவேலர்  அருவருக்க செய்ததை போல இவர்களும் செய்கின்றனர்.. 1 சாமுவேல்2  -12 : 17

இத்துடன் உலக பிரசித்தி பெற்ற ஊழியரின் அன்னிய பாஷை பேசும் விதத்தினை வேத வசனங்களுடன் ஒப்பீடு செய்யும் ஒரு வீடியோவை இணைத்துளளேன்..(கீழே சொடுக்கவும் )   

http://www.worldslastchance.com/videos/wlc-videos/all/english/latest/30#play22

 

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.(தீத்து 2:14,15)

 

 


 



-- Edited by JOHN12 on Monday 5th of December 2011 07:11:46 PM



-- Edited by JOHN12 on Tuesday 6th of December 2011 03:34:31 PM



-- Edited by JOHN12 on Wednesday 7th of December 2011 11:26:20 AM

__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

http://www.jamakaran.com/tam/2011/august/aaviyaanavar.htm

// சரி, நீ பேசும் பாஷையில் உனக்கு திருப்திதானா? நீயே சொல்! பாஷையில் நீ கர்த்தரிடம் பேசியது என்ன? அல்லது உனக்கு பதிலாக ஆவியானவர்தான் பாஷைமூலம் உன் வாய்வழியாய் பேசினார் என்று எல்லாரும் கூறுவார்களே, அப்படியே வைத்துக்கொண்டாலும் உன் வாய் வழியாய் ஆவியானவர் பேசியது உனக்கு விளங்கினதா? என்றேன். அப்பப்பா! என்னை குழப்பாதீர்கள்! ஆவியில் நிறைந்து பாஷைகள் பேசி நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றாள். அதன்பின் என் மனைவியின் உற்சாகத்தை கெடுக்க நான் விரும்பவில்லை. அநேக நாட்கள் கர்த்தரின் பாதத்தில் இவைகளைக்குறித்து மிகவும் யோசித்தேன். என் சபையைச் சேர்ந்த சில குடும்பங்களோடு இவைகளைக்குறித்து பேசி பகிர்ந்துக்கொண்டேன். நீண்ட நாட்கள் நாங்கள் கூடி அடிக்கடி இதைக்குறித்தே பேசிக்கொள்வோம்.//

http://chillsam.activeboard.com/t46195379/topic-46195379/



-- Edited by HMV on Wednesday 7th of December 2011 09:48:54 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

பவுல் கூறியதை போல அந்நிய பாஷையை காட்டிலும் விசுவாசிகளுக்கு அடையாளமான தீர்க்க தரிசன வரத்தை நாடுவதே சால சிறந்தது..

அந்நிய பாஷையை வியாக்கியானம் செய்யும் வரம் கிடைக்காத வரைக்கும் அன்னிய பாஷை பேசும் வரத்தால் பக்தி விருத்தி ஏற்படாது என்பது என் தாழ்மையான கருத்து..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard