இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிரம்மாண்டமான தேவன்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
பிரம்மாண்டமான தேவன்
Permalink  
 


விண்ணை படைத்தவரே விண்ணில் மேல் இருப்பவரே உம்  நாமம்  நாடிவருபவனை 
மார்போடு  அணைப்பவரே
 
 
 
பூமியின் மனிதன் சூரியனுக்கு கட்டளையிட முடியுமோ  
என்ன ஆச்சரியம் உம துணை கொண்டு  மனிதன் அதையும் செய்து முடித்தான்
 
 
 
கடல் நீர் பூமியை மூடிப்போடும் உம் அருள் இருந்தால் கடல் கூட ஒரு சாதாரண கோளுக்கு
கீழ் படியும்
 
 
 
பிரம்மாண்டமான தேவரீர் நீர் ஒரு சிறு பாலகன் மூலம் இது  போல் அல்ல இதை விட அருமையான
ஒரு பூமியை உருவாக்குவீர் வல்லவரே
 
 
தேவனே நீதியும் நியாயமும் உம் பாதத்தை தடவி கொண்டு இருக்கும்
கர்த்தாவே  ஒழுக்கம் உம்மிடத்தில் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டு இருக்கும் 
 
 
 
இரட்சகனே சாத்தான் என்ன உமக்கு முன் ஒரு பொருட்டே அல்ல  
தீவுகளே உமக்கு முன் ஒரு அணு என்றால் இவன் என்ன ஒரு சிறு பொருள் 2 வயது
குழந்தையை கொண்டு கூட நீர் அவனை நொறுக்கி  விட முடியும் உம் சாயல் மேல் உள்ள 
அன்புக்காக   பொறுமையாய்  இருக்கின்றீர்
 
 
 
எல்லோருக்கும் அப்பனே உம் முகம் காண சீக்கிரமாய் வந்து அழைத்து கொண்டு போவீராக
உம்  வருகைக்காக   ஆவலுடன் காத்து கொண்டு இருப்பேன் உம்மை காண்பதற்காக
 
 
 
By .
EDWIN  SUDHAKAR    


-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 23rd of November 2011 07:34:22 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard