இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவங்களுக்கான மன்னிப்பின் மூன்று நிலைகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பாவங்களுக்கான மன்னிப்பின் மூன்று நிலைகள்!
Permalink  
 


சகோ: SANDOSH Wrote:
/////நீங்கள் மன்னித்தது இயேசு கிருஸ்து மன்னித்தது போன்று அதிகாரபூர்வமானதா, அல்லது அவர்கள் உங்களுக்கு செய்த தப்பிதங்களை மன்னிக்கிறீர்களா? என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை.
அதிகாரபூர்வமானது என்றால் அப்படி மன்னிக்க நமக்கு ஏதாவது தகுதி வேண்டுமா? அல்லது எல்லா மனிதர்களும் அதை செய்யலாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
.////
 
பொதுவாக பாவமே செய்யாத மனுஷன் ஒருவனும் இந்த பூமியில் இல்லை. நம்முடைய  மாம்சத்திலே தீமை செய்யும் ஒரு பிரமாணமும் குடிகொண்டிருக்கிறது. எனவே இந்த உலகில் வாழும் யாருமே ஒரு பாவம்கூட  செய்யாமல் இருக்க முடியாது.  எனவேதான் பரிசுத்த வானாகிய பவுல் இவ்வாறு சொல்கிறார்:
 
ரோமர் 7:21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.
ரோமர் 7:19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்
 
எனவே நாம்  என்னதான நன்மை செய்ய விரும்பினாலும் அனேக நேரங்களில் அதை செய்யமுடியாமல் தவறிவிட வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு  தவறியோ தெரிந்தோ செய்யும் பாவங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடாமல், அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன்  இரக்கம் பெறுவான் என்று வேதம் சொல்கிறது. 
 
ஒருவருடய பாவங்களுக்கான மன்னிப்பு முழுமை அடைவதற்கு மூன்று நிலைகளை அது கடக்கவேண்டியுள்ளது
 
1. பாவத்தினால் நேரடியாக  பாதிக்கபட்டவர்களின் மன்னிப்பு 
2. பாவத்தால் ஏற்ப்பட்ட அநியாயத்தை பார்த்து கொதிக்கும் மூன்றாம் மனுஷனின் மன்னிப்பு.     
3. தேவனிடமிருந்து மன்னிப்பு.
 
இந்த  மூன்றுவித மன்னிப்பும் முழுமை அடைந்தால் மட்டுமே ஒருவர் சரியான மன்னிப்பை பெறமுடியும்! அவ்வாறு தெரிந்தோ தெரியாமலோ  பாவம் செய்த ஒருவனை மன்னிப்பதில் கிரிஸ்த்தவர்களாகிய நமது பங்கு என்னவென்பதை மாத்திரம் இங்கு பார்க்கலாம்.       
 
1. பாவத்தினால் நேரடியாக  பாதிக்கபட்டவர்களின் மன்னிப்பு 
 
ஒரு மனுஷன் தான் செய்த பாவத்துக்கான மன்னிப்பை பெறுவதற்கு முதல் முதலில் அந்த பாவத்தால் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ பாதிக்கபட்டவர் மன்னிப்பு என்பது மிகவும்  அவசியம். கிறிஸ்த்தவர்களாகிய   நாம் நமக்கோ அல்லது நம்முடைய குடுபத்துக்கோ அல்லது நமக்கு வேண்டியவர்களுக்கோ நேரடியாக ஒரு அநியாயத்தை செய்தவரை மனதார  மன்னிக்க வேண்டியது அவசியம்.  "மன்னிக்க முடியாது அவன் தண்டனை அடைந்தே ஆக வேண்டும்" என்று உலகத்தார்  பிடிவாதமாக இருக்கலாம் நீதிமன்றம் போகலாம். ஆனால  நாமோ  யாரிடமும் கசப்போ கோபமோ வைக்க கூடாது  என்று வேதம் சொல்கிறது.
 
மத்தேயு 5:23. நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில் 24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
 
எபேசியர் 4:32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும்
இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
 
முதலில் யார்மீது கசப்பும் கோபமும் இருக்கிறதோ அவர்களை மனதார மன்னித்துவிட்டு ஒப்புரவாகி பின்னர்தான் காணிக்கையை செலுத்த வேண்டும் என்று வேதம் சொல்கிறது. அத்தோடு எந்த தகுதியும் இல்லாத பாவியாகிய நம்மை கிறிஸ்த்துவுக்குள் தேவன் மன்னித்ததுபோல நாமும் ஒருவரை ஒருவர் மன்னிக்கவேண்டும் என்று வேதம் சொல்கிறது. நம்மை துன்பபடுத்துகிரவர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கும் வெறும் மன்னிப்பை கொடுத்தால்   மட்டும் போதாது அவர்களுக்கு ஜெபம்பண்ணவேண்டும் என்றும் வேதம் சொல்கிறது.
 
மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்
 
யாரையுமே நாம் பகைக்கவோ அல்லது ஒதுக்கவோ முடியாது. அதே போல் நாம் ஆண்டவராகிய யேசு  தன்னை சிலுவையில் அறைந்தவர் களையும் கூட மன்னித்து அவர்களுக்காக தேவனிடம் ஜெபித்து ஒரு முன்மாதிரியை வைத்து சென்றுள்ளார். அதன் அடிப்படையில் நமக்கு கொடிய துன்பங்கள் செய்தவர்களையும்கூட நாம்  மன்னிப்பது அவசியமாகிறது.  
 
லூக்கா 23:34 அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.  .
 
இங்கு இயேசுவை சிலுவையில் அடித்தவர்கள் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்கவோ அல்லது அவரை சிலுவையில் அடித்ததர்ககாக மனஸ்தாபமோ படவில்லை ஆகினும் அவர்களுக்காக இயேசு  தேவனிடம் மன்றாடுகிறார். அதேபோல் செய்வதே ஒரு உயர்ந்த தெய்வீக அன்பை உலகுக்கு காட்டும். மேலும் ஒருவரை மனபூர்வமாக மன்னித்தால் மட்டுமே அவரகளுக்காக ஜெபிக்கவும் வேண்டுதல் செய்யவும் முடியும். எனவே அரைகுறை மன்னிப்பு எல்லாம் சரியானது அல்ல!  
 
மாற்கு 11:25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
 
ஒருவர் பேரில் அவர் நமக்கு எதிராக  செய்த பாவத்தை குறித்தோ  அல்லது வேறு எதை குறித்தோ குறை இருக்குமாயின், நம்முடிய தப்பிதங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு நாம் அதை மன்னிக்க வேண்டும் என்று வசனம் சொல்கிறது. இங்கு முக்கியமாக நாம் அறிய வேண்டியது நாம் பெரிய பரிசுத்த இல்லை! எனவே நாம் பிறரை மன்னித்தால் மட்டுமே நமது தப்பிதம் மன்னிக்கப்படும் இல்லை என்றால் மன்னிக்கபடாது என்பது உறுதி.
 
2. பாவத்தால் ஏற்ப்பட்ட அநியாயத்தை பார்த்து கொதிக்கும் மூன்றாம் மனுஷனின் மன்னிப்பு.  
 
அதாவது  ஊரில் அல்லது நாட்டில் நடந்த ஒரு கொடுமையான செய்தியை  கேள்விபட்டு, கொதித்து "இப்படிபட்ட பாவம் செய்யும் மனுஷர்களை  எல்லாம் நிற்கவைத்து சுடவேண்டும்" என்று தீர்த்து,
அவனை மன்னிக்க சித்தமில்லாமல் இருக்கும்  மூன்றம் மனுஷன் இதில் அடங்குவான். அவனுடய மன்னிப்பையும் பெறுவது  அவசிய மாகிறது. இல்லையேல் நேரடியாக பாதிக்கபட்டவனிடம் இருந்து தப்பி வந்தால் இந்த மூன்றாம்  மனுஷர்கள் அவனை தண்டிக்க நேரிடும்.   
 
இப்பொழுது இந்த மூன்றாம் மனுஷன் நிலையில் நாம் இருதாலும் நாம் அவர்களுக்கு மன்னிப்பை அளிக்க தயாராக இருக்கவேண்டும்!    
 
இந்த உலகில் தன் பார்வைக்கு நீதிமானாக இருக்கும் அனேக சுய நீதிமான்களை நாம் பார்த்திருக்கலாம். அதாவது ஒருவனிடம் அடிபட்ட வன் கூட அடித்தவனை மன்னித்து விட்டுவிடுவான் ஆனால் இந்த சுய நீதிமான்கள் அவர்களை விட விரும்புவது இல்லை. 
 
ஒருநாள் எங்கள் உரில் உள்ள ஒரு பெண்ணை பக்கத்து ஊர்கார பையன்
ஒருவர் எதோ சொல்லிவிட்டான். சம்பந்தபட்ட பெண்ணின் தாய் தகப்பன் அவனை மன்னித்துவிட்டனர். ஆனால் இந்த மூன்றாம் மனுஷர்களோ  அந்தபையன பிடித்து அடிஅடி என்று அடித்து ஒரு தூணில் கட்டிவைத்து அவனது தாய் தகப்பனுக்கு சொல்லியனுப்பி பின்னர் விடுவித்தனர்.
 
இங்கு கட்டிவைத்து அடித்ததில் பலபேர் தாங்களும் சினிமா தியேட்டர்களில் வேறு பெண்களை நோக்கி ராக்கெட் விடுகிறவர்களும் ஏதாவது பொருளை எரிகிரவர்களும் ஆவர்கள். ஆனால் அடுத்தவர் அதே தவறை வேறொருவர் செய்யும்போது அவர்களை உடனே நியாயம் தீர்க்க தயாராக இருப்பார்கள்.
 
இப்படிபட்ட ஒரு சம்பவம்தான் விபச்சார ஸ்திரியை இயேசுவின் முன் கொண்டுவது நிறுத்திய பரிசேயர்களின் சம்பவத்திலும் நடந்தது.  
 
இங்கு விபச்சாரம் செய்த ஸ்திரியை  இயேசு எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் அவளை மன்னித்து அனுப்பிவிட்டார். அவரின் மாதிரியை
பின்பற்ற விரும்பும் நாமும்  யாருக்கும் எந்தவிதமான பாவம் செய்த வனையும் மன்னித்து தேவ மன்னிப்பின் உயர்ந்த நிலையை உலகுக்கு காட்டுவது அவசியம்.  
 
இங்கும் கூட நாம் என்னதான் நீதிமானாக நடக்க முயன்றாலும் நாம் பரிசுத்தர் அல்ல நம்மை பரிசுத்தபடுதுகிறவர் தேவனே என்ற உண்மையை அறிந்த எவருமே நம்போல உள்ள பிற மனுஷர்களை மன்னிக்க தயங்க மாட்டான்.
 
3.தேவனிடம் இருந்து மன்னிப்பை பெறுதல்:
 
நாம் என்னதான் ஒரு மனுஷனின் பாவத்தை முழுமையாக மன்னித்தாலும் பரிசுத்தராகிய தேவன் அந்த மனுஷனின் பாவத்தை மன்னிக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த மனுஷனின் பாவம் முழுமையான மன்னிப்பை பெரும்.   
 
ரோமர் 4:7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
 
நம்முடய மன்னிப்ப்பும் வேண்டுதலும்  அந்த குறிப்பிட்ட மனுஷனுக்கான ரெக்கமென்டேசன் போன்றது தான். மற்றபடி தேவன் ஒருவரின் பாவத்தை மன்னிக்கவில்லை என்றால் அவன் பரிசுதப்படவே  முடியாது. ஒரு மனுஷனை பரிசுத்தபடுத்துவது கர்த்தர் ஒருவரே!
 
யாத்திராகமம் 31:13  ; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான்  
 
என்ற வார்த்தையின்படி ஒருமனுஷனை முற்றிலும் கழுவி மன்னித்தல் என்பது தேவன் ஒருவராலேயே ஆகும்  
 
நான் ஒரு சிறிய உதாரணத்தை கூறுகிறேன்:
 
பெரிய கம்பனிகளில் ஒரு செக் எழுதும் முறையைபார்த்தால் முதலில் ஒரு அலுவலர் பில்களை எல்லாம் சரிபார்த்து தனது கையொப்பமிட்டு இன்னொருவருக்கு அனுப்புவார் அந்த இரண்டாம் நபர் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து கையொப்பமிட்டு காசோலையை எழுதி  முதலாளியிடம் அனுப்புவார். முதலாளில் அந்த இரண்டு பேரின் கையொப்பத்தின் அடிப்படையில் அந்த காசோலையில் கையெழுத் திடுவார். இங்கு இறுதியாக காசோலையில் கையெழுத்திடும்  முதலாளியின் கையொப்பமே மதிப்புள்ளது  என்றாலும் அவர் மற்ற
இரண்டு நபர்களின் சரிபார்த்தலை கருத்தில் கொண்டு, அதை அனுமதிகவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் உண்டு. இடையில் உள்ள மற்ற இருவரின் கை எழுத்து ஒருவகையில் எந்தபயனும் அற்றது என்றாலும் அவருக்கு நியமிக்கபட்ட பணியை அவர்கள்
செய்கின்றனர்.
 
அதேபோல் என்னுடய மன்னிப்பும் வேண்டுதலும் எந்த பயன் அற்றதாகவும் இருக்கலாம் சிலநேரம் தேவன் அதை கருத்தில் எடுத்து மன்னிக்கலாம் அனால்  தேவனே இறுதி நியாயாதிபதியும் பாவங்களை 
மன்னிக்க தகுதியுள்ளவருமாக இருக்கிறார். நமக்கு அவர் சொல்லும் வார்த்தை  உங்கள் தப்பிதங்கள் மன்னிக்கப்பட நீங்கள் பிறரை மன்னியுங்கள் என்பதும் நீங்கள் குற்றவாழியாக  தீர்க்கபடாதிருக்க மற்றவர்களை குற்றவாழியாக தீர்க்கதிருங்கள் என்பதுமே.  மனுஷர் களாகிய நம்மில் எவருக்கும் யாரையும் நியாயம்தீர்க்கும் அதிகாரம் கொடுக்கபடவில்லை என்றே நான் கருதுகிறேன். மன்னிப்பதர்க்கே கட்டளை இடப்பட்டுள்ளது.
  
மேலும் எந்த அதிகாரத்தின் அடிப்படையிலும் நான் யாரையும்   மன்னிக்வில்லை என் தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும் என்றே நான் பிறரது பாவங்களை மன்னிக்கிறேன்.
 
தவறு செய்த ஒரு மனுஷனை தண்டிப்பதற்குதான்  நமக்கு அதிகாரம் தேவை! அதாவது ஒரு போலிசோ அல்லது நீதிபதி என்னும் அதிகார நிலையில் இருக்கும் ஒருவரே இன்னொருவரை தண்டிக்க முடியும். ஆனால் ஒரு மனுஷனை மன்னிப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் தேவையில்லை. என் கன்னத்தில் அடித்தவனை நான் நிபந்தனை இன்றி மன்னிப்பதற்கும் என்பொருளை திருடியவனை அசீர்வதித்து அவனுக்காக ஜெபிபதர்க்கும் எனக்கு யாரும் அதிகாரம் கொடுக்க வேண்டிய அவசியம்இல்லை என்றே கருதுகிறேன். இரக்கமும் மனதுருக்கமும் இருந்தால் மட்டும் போதும். அதாவது என் பக்கத்தில் இருந்து நான் மன்னித்து விட்டேன்,  மற்றதை தேவன் பார்த்து கொள்வார். அவ்வளவே!  இங்கு நான் மன்னித்ததால் தேவனும் மன்னிக்க வேண்டும் என்பது என்னுடைய  நிரபந்தம் அல்ல அவரை யாரும் நிர்பந்தம் பண்ணவும் முடியாது!
 
"நமக்கு மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராட்டம் இல்லை" என்ற உண்மையை அறிந்தால்  இவ்வாறு மன்னிப்பது ஒரு பெரிய காரியமே அல்ல! 


-- Edited by SUNDAR on Wednesday 23rd of November 2011 09:56:13 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: பாவங்களுக்கான மன்னிப்பின் மூன்று நிலைகள்!
Permalink  
 


சகோதரர் சுந்தர் அவர்களே,

//இங்கு கட்டிவைத்து அடித்ததில் பலபேர் தாங்களும் சினிமா தியேட்டர்களில் வேறு பெண்களை நோக்கி ராக்கெட் விடுகிறவர்களும் ஏதாவது பொருளை எரிகிரவர்களும் ஆவர்கள். ஆனால் அடுத்தவர் அதே தவறை வேறொருவர் செய்யும்போது அவர்களை உடனே நியாயம் தீர்க்க தயாராக இருப்பார்கள்.
 
இப்படிபட்ட ஒரு சம்பவம்தான் விபச்சார ஸ்திரியை இயேசுவின் முன் கொண்டுவது நிறுத்திய பரிசேயர்களின் சம்பவத்திலும் நடந்தது. இங்கு விபச்சாரம் செய்த ஸ்திரியை  இயேசு எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் அவளை மன்னித்து அனுப்பிவிட்டார். //

இந்த சம்பவத்தில் இயேசு கிருஸ்து அந்த பெண்ணை மன்னித்தார் என்று எங்கும் இல்லை. நான் உன்னை நியாயம் தீர்க்கவில்லை என்றுதான் சொன்னதாக உணருகிறேன்.

வேத‌த்தில் இல்லாத‌தை சேர்த்து கொள்வ‌து த‌வறு, என அன்பு அவ‌ர்க‌ளிட‌ம் சொன்ன‌து நீங்க‌ளே. இப்போது ம‌ன்னித்தார் என‌ற‌ வார்த்தையை நீங்க‌ளே சேர்த்து கொண்டீர்க‌ள்.

ம‌ன்னித்த‌ல் என்ப‌தும் நியாய‌ம் தீர்க்காம‌ல் இருத்த‌ல் என்ப‌தும் வேறு, வேறு அர்த்த‌ம் கொண்ட‌ வார்த்தைக‌ளாகும்.



__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

SANDOSH wrote:

சகோதரர் சுந்தர் அவர்களே,

வேத‌த்தில் இல்லாத‌தை சேர்த்து கொள்வ‌து த‌வறு, என அன்பு அவ‌ர்க‌ளிட‌ம் சொன்ன‌து நீங்க‌ளே. இப்போது ம‌ன்னித்தார் என‌ற‌ வார்த்தையை நீங்க‌ளே சேர்த்து கொண்டீர்க‌ள்.ம‌ன்னித்த‌ல் என்ப‌தும் நியாய‌ம் தீர்க்காம‌ல் இருத்த‌ல் என்ப‌தும் வேறு, வேறு அர்த்த‌ம் கொண்ட‌ வார்த்தைக‌ளாகும்.

 அருமையான வரிகள் நண்பரே,நீங்கள் சொல்லுவது முழுவதும் சரியே.இதற்கு இணையாக பவுல் சொன்னதையும் ஒப்பிடலாமென நினைக்கிறேன்...

  • ”ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.” (1.கொரிந்தியர்.4:5)

இந்த வசனத்துக்கு சிலருடைய கண்கள் திறந்திருக்குமானால் இங்கு நடைபெறும் பல விவாதங்களுக்கு அவசியமில்லாமல் போகும்.ஆனாலும் என்ன செய்வது பொழுது போகணுமில்லே... யார் பெத்த பிள்ளையோ இணையத்துக்கு (Internet) பில் கட்டுது.... முழு சம்பளமும் கிடைக்குது... புழுதி கிளப்பிய புண்ணியமும் கிடைக்குது... பிறகென்ன கரும்பு தின்ன கூலியா..?



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard