இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தானுக்கான காலம் வரும்முன் தேவனிடம் ஜெபிப்பதில் பயனில்லையா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
சாத்தானுக்கான காலம் வரும்முன் தேவனிடம் ஜெபிப்பதில் பயனில்லையா?
Permalink  
 


தேவன் எப்படி ஆறு நாட்களில் வானம் பூமியை படைத்தாரோ அதே போல் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலத்தை நியமித்து அதன்படி காரியங்களை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் ஆதாம்/ஏவாள் படைக்கப்படும் முன்னரே தேவன் விலக்கிய கனி மரத்தில் குடி கொண்டிருந்து ஆதாம் ஏவாளை வஞ்சித்து துன்பத்தையும் துயரத தையும் உலகுக்குள் கொண்டுவந்த மனுஷ கொலைபாதகனாகிய சாத்தானை முடிவுக்கு கொண்டுவரவும் தேவன் சில கால கட்டங்களை நியமித்திருக்கிறார் என்பதை  வேதம்  நமக்கு  தெளிவாக  சொல்கிறது:  
 
வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.
 
சகரியா 13:2 அந்நாளிலே ........ .......அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
 
ரோமர் 16:20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.
    
சரி! இத்த காலம்  நிறைவேறும்வரை தேவனால் எதுவும்  செய்ய முடியாதா? அதற்க்கு இடையில் அவரிடம் ஜெபிப்பைதினால் பயன் என்ன?  என்பது போன்ற  கேள்விகளை சகோ. சந்தோஷ் எழுப்பி யிருக்கிறார்.
     
இந்த காரியத்தை குறித்து நாம் தெளிவாக புரிந்துகொள்ள பாபிலோனுக்கு சிறைபட்டுப்போன இஸ்ரவேலரின் சம்பவத்தை சற்று ஆராய்வது நல்லது என்று கருதுகிறேன்.
 
இஸ்ரவேலர் செய்த பாவத்தினிமித்தம் தேவன் அவர்களை பாபிலோனியர் கையில் ஒப்புகொடுத்து இவ்வாறு சொல்கிறார்
 
எரேமியா 25:11 இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்
 
எரேமியா 16:13 ஆதலால், உங்களை இந்ததேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை.
 
அவர் சொன்னதுபோலவே அந்த எழுபது வருடமும் இஸ்ரவேலர்கள் பாபிலோனில் அடிமைகளாகி போனார்கள்.  அந்த அடிமை தனத்தை மட்டும்தான் தேவன் மாற்றவில்லையே அன்றி அந்த காலகட்டங்களில் அவரகளின் மற்ற வேண்டுதலுக்கு தேவன் செவிகொடுக்காமல் இருக்க வில்லை. நீங்கள் பாபிலோனிலேயே சிறைகளாக இருந்தாலும் அங்கும் தேவன் பெரிய அதிசயங்களை செய்யமுடியும் அங்கும் தீர்க்க தரிசிகளை எழுப்ப முடியும் என்பதை பல நேரம் அவர் நிரூபித்திருக்கிறார்.
 
எரேமியா 29:15 கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.
தானியேல் போன்ற பரிசுத்தவான்களுக்கு சிறைபட்டுபோன இடங்களிலேயே மகா மேன்மையை உண்டாக்கி கொடுத்தார். சாத்ராக் குழுவினருக்கு  அக்கினியை மேற்கொள்ளும் வல்லமையை கொடுத்து தன்மூலம் தானே தேவன் என்பதை அந்நிய தேசத்திலும் நிரூபித்தார்.
 
அதேபோல் இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில்  சத்துருவாகிச சாத்தானை  பாதப்படியாக்கிபோடும் நாட்கள்வரை இந்தஉலகில் கிரியை செய்வதற்கு தேவன் தம்முடய பரிசுத்த ஆவியானவரை அனுப்பியிருக்கிறார்.  அவர் மனுஷர்களின் உன்னதத்தின் பெலத்தால் நிரப்புவதால் மனுஷர்களின் வார்த்தைகள்  வல்லமை வாய்ந்ததாகவும், நீதிமான்கள் செய்யும் வேண்டுதல்கள் மிகுந்த பலன் உள்ளதாகவும் இருக்கிறது. அத்தோடு தேவன் நமக்கு சத்துருவின் சகல அதிகாரத்தையும் மேற்கொள்ளவும் தகுதியுள்ளவர்களின் பாவங்களை மன்னிக்க்கவும்கூட அதிகாரம் கொடுத்திருக்கிறார்.
 
லூக்கா 10:19 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
 
யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
 
ஆம்! தேவன் தம்முடய ஆவியை மனுஷர்களுக்குள் வைத்ததன் மூலம் இன்று மாற்றுவழியில் அனேக அதிகாரங்களை  மனுஷர்களுக்கு அள்ளி  கொடுத்திருக்கிறார். நாம் அந்த வல்லமை சரியாக புரிந்து கொள்ளாமல், அடுத்தவர்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்க விரும்பாமல் சத்துருவின் அதிகாரங்களை மேற்கொள்ள  விரும்பாமல் அவனது மாயைக்கு அடிபணித்து போகிறோம். 
 
நான் இவருக்கு ஏன் ஜெபிக்க வேண்டும்? பாவிகள் பாவம் செய்யட்டும் நான் மட்டும் தப்பித்து கொள்கிறேன், தேவன்தான் எல்லா தீமைகளை யும்  அனுமதித்து எல்லோரையும் சோதித்து கொண்டு இருக்கிறார்" என்பது போன்று  எண்ணிக்கொண்டு ஏதேதோ செய்து கொண்டு இருப்பதால் சத்துரு தன்னுடய கைவரிகையை காட்டி ஜனங்களை சீரழித்துக்கொண்டு இருக்கிறான் அதற்காக தேவன் மனஸ்த்தாப படாமல் என்ன செய்வார்.  உனக்கு கொடுக்கபட்ட வல்லமையை நீ எப்படி பயன்படுத்தினாய்? என்ற கேள்வி நாளை ஒவ்வொருவரை நோக்கியும் எழ கூடும்!   
 
எனவே தேவனின் கரம் ஒரு நாளும்  குருகிப்போகவில்லை! தேவனுக்கு ஒரே ஒரு வழி மட்டும் இல்லை அவருக்கு பல வழிகளை திறக்க தெரியும். மனுஷர்களின் வேண்டுதல் மற்றும் வாஞ்சை இவற்றின் அடிப்படையிலேயே தேவன் மாற்று வழிகளை திறக்க முடியும்.  இவ்வாறு மாற்று வழிகள் மூலம் தேவன் கிரியை செய்து காரியங்களை நடப்பித்தாலும் அவர் நிர்ணயித்த காலம் வரை சாத்தானின் செயல்பாடுகள் முழுமையாக அழிக்கபாடாது என்பதே எனது கருத்து. அதே நேரத்தில் தேவனிடம் வைக்கப்படும் எந்த ஒரு விண்ணப்பமும் எக்காலத்திலும் வீணாய் போகாது என்பதும் உறுதி!


-- Edited by SUNDAR on Thursday 24th of November 2011 11:12:33 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
RE: சாத்தானுக்கான காலம் வரும்முன் தேவனிடம் ஜெபிப்பதில் பயனில்லையா?
Permalink  
 


சகோதரர் சுந்தர் அவர்களே,

நீங்கள் முன்னர் எழுதியது

//கண்ணீர் என்பது இயலாதவனுக்கு மட்டுமே வரும். காரியங்களை உடனடியாக செய்ய முடிந்தவர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். அப்படி பாவத்தில் அழியும் ஜனங்களை பாத்து தேவன் கண்ணீர் விடுகிறார் என்றால் பாவத்தி பூமிக்குள் அனுமதித்தது யார்?அப்பொழுதே தேவனுக்கு தெரியாதோ இதுபோன்று தான் கண்ணீர் விடும் நிலை வரும் என்பது? 
 
தேவனால் கூடாதது என்று எதுவும்இல்லை அனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் இருக்கிறது அதுபோல் சாத்தானின் முடிவுக்கும் ஒரு காலம் இருக்கிறது அதுவரை  சாத்தானின்  செயல்களிநிமித்தமே  தேவன் கண்ணீர் சிந்துகிறார்.//

இவ்வாறு சொன்ன நீங்கள், இப்போது

//ஆம்! தேவன் தம்முடய ஆவியை மனுஷர்களுக்குள் வைத்ததன் மூலம் இன்று மாற்றுவழியில் அனேக அதிகாரங்களை  மனுஷர்களுக்கு அள்ளி  கொடுத்திருக்கிறார். நாம் அந்த வல்லமை சரியாக புரிந்து கொள்ளாமல், அடுத்தவர்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்க விரும்பாமல் சத்துருவின் அதிகாரங்களை மேற்கொள்ள  விரும்பாமல் அவனது மாயைக்கு அடிபணித்து போகிறோம். //

என்று சொல்கிறீர்கள். அதை முதலிலேயே சொல்லியிருந்தால் சரியாய் இருந்திருக்கும். அதை விட்டு, விட்டு தேவனை இயலாதவர் போல காட்டியிருக்கிறீர்கள். தேவன் எதற்காக வருந்துகிறார்? இப்போதாவது தெளிவாக சொல்லுங்கள்.

1. சாத்தானின் பிடியில் மாட்டி கொண்டார்களே என தன்னால் ஒன்றும் செய்ய இயலாத நிலைமையை நினைத்து வருந்துகிறாரா?

2. நான் இவ்வளவு வல்லமை கொடுத்தும் அதன் பலனை சுதந்தரித்து கொள்ளாமல் அறிவில்லாமல் இருக்கிறார்களே என மனிதர்களின் போக்கை பார்த்து வருந்துகிறாரா? 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard