இன்று காலையில் நான் டிவியில் பார்த்து கேட்ட ஒரு பிரசங்கத்தை இங்கு எழுதிகின்றேன் மிக அருமையான பிரசங்கம்
ஒவ்வொரு மனிதனுடைய இருதயமும் எதிர்பார்க்கும் பிரசங்கம் இந்த பிரசங்கத்தை கேட்டால் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்.
தேவனை விசுவாசித்தால் போதும் அதாவது இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் போதும் நாம் என்ன தவறு செய்தாலும்
தேவன் நம்மை தண்டிக்க மாட்டார் ஏனென்றால் இயேசு நம்முடைய எல்லா பாவங்களுக்காகவும் அடியும் உதையும் வாங்கிவிட்டார்
மறித்து விட்டார் தேவனுடைய கோபம் இனி இயேசுவை ஏற்றுகொண்ட எந்த மனிதன் மேலும் வராது என்ன தவறு செய்தாலும் தேவன் அவனை தண்டிக்க மாட்டார் ஏனென்றால் இது தான் புது உடன்படிக்கை
ஆம் இந்த உடன்படிக்கை ஆப்ராகாமிடம் இருந்தது அப்பொழுது தேவன் என்ன செய்தார் என்று பார்த்தீர்கள் என்றால்
யாக்கோபு கள்ளத்தனம் செய்தான் அவனை தண்டிக்கவில்லை ரூபன் மிக கொடூரமான காரியத்தை செய்தான் அவனை அப்பொழுதே தண்டிக்கவில்லை பார்த்தீர்களா தேவன் அவர்கள் தவரை பார்க்கவில்லை அதே போலதான் இன்றும் இயேசு கிறிஸ்து மரித்ததின் மூலம் நம்முடைய தவறுகளை தேவன் பார்ப்பது இல்லை
தேவன் அதன் பின்பு தான் நீயயப்ரமானம் கொடுத்தார் அப்பொழுது தான் அவர்கள் செய்த நன்மைக்கு ஆசிர்வாதமும் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையும் என்ற ஒரு பிரமாணம் உருவானது அது மோசேவின் பிரமாணம் அப்பொழுது எல்லோரும் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்தார்கள்
இந்த பிரமாணத்தை இயேசு கிறிஸ்து தன் மரணத்தின் மூலம் அழித்து திரும்பவும் ஆப்ரகாமின் பிரமாணத்தை நித்தியமாக கொண்டுவந்தார்
ஆம் சகோதர்களே நீங்கள் என்ன தவறு செய்தாலும் தேவன் உங்களை தண்டிக்கவே மாட்டார் இது உண்மை ஏனென்றால் நாம் செய்கின்ற எல்லா தவறுக்காக தான் இயேசு கிறிஸ்து மரித்து இருக்கின்றார் தேவனுடைய கோபம் இனி நம்மேல் வராது
திரும்பவும் சொல்கின்றேன் நம் தவறுகளை தேவன் பார்ப்பது இல்லை பார்த்து தண்டிப்பதும் இல்லை
இந்த பிரசங்கத்தை குறித்து சகோதரர்களின் விளக்கத்தை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்...........
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 24th of November 2011 01:36:49 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
ஆம் சகோதர்களே நீங்கள் என்ன தவறு செய்தாலும் தேவன் உங்களை தண்டிக்கவே மாட்டார் இது உண்மை ஏனென்றால் நாம் செய்கின்ற எல்லா தவறுக்காக தான் இயேசு கிறிஸ்து மரித்து இருக்கின்றார் தேவனுடைய கோபம் இனி நம்மேல் வராது
திரும்பவும் சொல்கின்றேன் நம் தவறுகளை தேவன் பார்ப்பது இல்லை பார்த்து தண்டிப்பதும் இல்லை
இந்த பிரசங்கத்தை குறித்து சகோதரர்களின் விளக்கத்தை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்...........
சகோதரர்களே இந்த பிரசங்கத்தை குறித்து யாராவது ஒரு நபர் இது தவறு, இல்லை இது தான் உண்மை
என்று எனக்கு விளக்கி சொல்வீர்கள் என்று நினைத்தேன் எதிர்பார்த்தேன் ஆனால் ஒரு நபர் கூட இந்த பிரசங்கத்தை குறித்து எதுவும் எழுதவில்லை
இந்த பிரசங்கத்தை குறித்து மற்றவர்கள் கருத்தை பார்த்த பின்பு நான் இதை பற்றி ஒரு விளக்கத்தை எழுத வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் ஒருவரும் இதை கண்டு கொள்ளவில்லை
சரி இதை குறித்து சில கருத்துகளை விரைவில் பதிக்கின்றேன் ஏனென்றால் இந்த போதனையை
இங்கு பார்த்தும் டிவியில் பார்த்தும்மிக அருமையான
பிரசங்கம் என்று சொல்லி எற்றுகொள்கின்ர மனிதர்களும் உண்டு என்பதால்......
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 29th of November 2011 09:14:49 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
நாம் என்ன தவறு செய்தாலும் தேவன் நம்மை மன்னிப்பார் என்று பழகிவிட்டோம்... அதில் சிறிய திருத்தம் இருக்கிறது...வேதத்தில் தாவீதைக் குறித்து பார்ப்போம்!! 2 சாமுவேல்-11 ஆம் அதிகாரத்தில், தன் தகப்பனும் தாயும் மறந்தபோதிலும்,தேவன் தாவீதை எடுத்து பயன்படுத்தி, அபிஷேகித்து, அரசனாக நிறுத்தினார்,ஆனால் ஒரு கட்டத்தில் தாவீது தன் அயலானுடைய மனைவியுடன் பாவத்தில் ஈடுப்பட்டான்,இந்த பாவத்தை மறைக்க அவள் புறுஷனையும் கொலைசெய்தான். 2 சாமுவேல் 12:9-ல் நார்த்தான் மூலமாக தாவீதுக்கு தன் பாவத்தை உணர்த்தினார். கர்த்தர் தாவீதுக்கு அவன் செய்த பாவத்திற்கு சரியாகவும் அதற்கு நிகராகவும் தண்டனைக்கொடுத்தார்(2 சாமுவேல் 12:9)...தாவீதும் தன் மகனை இழந்தான்...அந்த தண்டனை அனைத்தும் கொடுக்கப்பட்டது.
ஆனால் தேவன் தாவீதிடமிருந்து பரிசுத்த ஆவீயை எடுத்துக்கொள்ளவில்லை, சொன்ன வாக்குத்தத்தங்கள் அனைத்தும் செய்தார்,, ஆனால் தண்டனையும் கொடுத்தார்.
நாமும் "செய்த பாவதிற்கு மன்னிப்பு கேட்டால்,மன்னிப்பு உண்டு" என்று சாதாரனமாக பாவத்தை நினைத்துகொள்கிறோம்....நாம் பாவம் செய்தால், தேவன் நமக்கு அருளிய வாக்குதத்தத்தை நிறைவேற்றுவார் ஆனால், வரக்கூடிய ஆசிர்வாதங்களை தடை செய்வார்.. ஆகவே பாவத்தை அற்பமாக எண்ணாமல் அதின் பாதிப்புகளை உணர்ந்து செயல்படுவோம்!!!!!!
__________________
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்–மாற்கு:1:15

மிக அருமையான சுருக்கமான கருத்து சகோதரரே!
"ஒருவர் கிருபைக்கு கீழ்பட்டிருந்தால் பாவம் அவரை மேற்கொள்ள முடியாது" என்ற கீழ்கண்ட வசனத்துக்கு இசைவாக தாங்கள் கருத்து இருக்கிறது.
ஒரு கிறிஸ்த்தவன் திருடனும் பொருளாசை காரனும் வெறியனும் கொள்ளைகாரனுமாக இருந்தால் அவன் தேவனின் ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியுமா?
இத்கைய கேள்விக்கு பதில் "முடியாது". பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க ஒரு நிபந்தனைதான் இருக்கிறது
யோவான்:6:39,40= 39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
திருடுவதும்,பொருளாசை,மற்றும் பல பாவங்கள் செய்வது பிதாவின் சித்தமா?? இல்லை
பின்வரும் வசனங்களில்,
யோவான்:14:15= நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான்:14:21= என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். யோவான்:14:23=ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
யோவான்:14:24=என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள வசனங்களில், இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்வதான் பிதாவின் சித்தம் என அறிந்துகொள்ள முடிகிறது.திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க,
நீதிமொழிகள் 28:13=தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
மற்றும் தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அந்த வசனத்திலேயே உள்ளது Iகொரிந்தியர்:6:10=திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
நான் வேதத்தில் மிகவும் கற்று தேறினவன் கிடையாது,நான் அறிந்தவற்றில் இத்தகைய கருத்தை கூறியுள்ளேன். ஏதேனும் பிழையிருப்பின் அதை தாங்கள் தெரியப்படுத்தவும்.
__________________
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்–மாற்கு:1:15
jamesdhurai wrote:முடியாது". பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க ஒரு நிபந்தனைதான் இருக்கிறது
யோவான்:6:39,40= 39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.
திருடுவதும்,பொருளாசை,மற்றும் பல பாவங்கள் செய்வது பிதாவின் சித்தமா?? இல்லை
பின்வரும் வசனங்களில்,
யோவான்:14:15= நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான்:14:21= என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். யோவான்:14:23=ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
யோவான்:14:24=என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள வசனங்களில், இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொள்வதான் பிதாவின் சித்தம் என அறிந்துகொள்ள முடிகிறது.திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க,
நீதிமொழிகள் 28:13=தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
மற்றும் தாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அந்த வசனத்திலேயே உள்ளது Iகொரிந்தியர்:6:10=திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
ஆம்! இதே இதே கருத்தைதான் நான் தங்களிடம் எதிர்பார்த்தேன் சகோதரரே! ஆண்டவர் தாமே இந்த காரியங்களை தாங்கள் இங்கு பதிவிட கிருபை செய்தார் என்று கருதுகிறேன்.
I யோவான் 3:9தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
பாவத்தை பாவம் என்று தெரிந்தபின்னும் துணிந்து செய்கிறவன் தேவனால் பிறந்தவன் அல்ல அவன் தேவனின் ராஜ்யத்தை காணமாட்டான் என்று பவுல் சொவதாகவே நான் கருதுகிறேன்.
இதேகருத்தையே நாங்கள் இங்கு முக்கியப்படுத்தி எழுதி வருகிறோம். ஆனால் அதை பலர் ஏற்ப்பது இல்லை இயேசுவை ஏற்றுக்கொண்டு என்ன பாவத்தை துணிந்து செய்தாலும் ஒன்றுமில்லை என்பதுபோல் சிலர் எண்ணுகின்றனர். அவர்களுக்கு புரிந்தால் சரி!
jamesdhurai wrote:
/////நான் வேதத்தில் மிகவும் கற்று தேறினவன் கிடையாது,நான் அறிந்தவற்றில் இத்தகைய கருத்தை கூறியுள்ளேன். ஏதேனும் பிழையிருப்பின் அதை தாங்கள் தெரியப்படுத்தவும்.///
சகோ. ஜேம்ஸ் அவர்களே தேவனின் வார்த்தைகளை பொறுத்தவரை யாருமே முழுமையாக் தேறியவர் கிடையாது. அங்கு வயது வேறுபாடு கிடையாது நாங்களும் பல உண்மைகளை கற்றுக்கொள்ளும் நிலையிலேயே இருக்கிறோம். தங்களுக்குள்ளும் ஆவியானவர் குடிகொண்டு இருப்பதால் தங்களிடம் இருந்து கூட நாங்கள் கற்றுக் கொள்ள அனேக காரியங்கள் இருக்கலாம். அதை எதிர்பார்க்கிறோம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோ : jamesdhurai அவர்களே பிழை என்பது ஒன்றும் உங்கள் வார்த்தையில் கிடையாது இந்த தளத்தில் ஓயாமல் அடிக்கடி போதிக்க படும் கருத்துகளையே நீங்களும் எழுதிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்
என்னை விட சகோ : சுந்தர் அவர்கள் அதிக சந்தோஷபடுவார்கள்
என்று நினைக்கின்றேன் அவருடைய முக்கியமான பிரதான கருத்தே
இதுதான் என்பதை பலமுறை நான் அவருடைய வார்த்தைகளின் பார்த்திருகின்றேன்
ஆம் சகோ : jamesdhurai நீங்கள் குறிப்பிட்டு உள்ள வசனத்தை தான் சொல்கின்றேன்