இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தள சகோதரர்களுக்கு ஒரு அறிவிப்பு!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தள சகோதரர்களுக்கு ஒரு அறிவிப்பு!
Permalink  
 


கர்த்தரின் பெரிதான கிருபையால் செயல்படும்  இந்த தளம் கடந்த இரண்டு வருடங்களாக ஆண்டவரின் வார்த்தைகளை அனைவருக்கும் அறிவித்து வருகிறது. இதில் பல சகோதரர்கள் தாங்கள் பங்களிப்பை தொடர்ந்து ஆற்றி வருவதோடு பங்களிக்க முடியாத பல சகோதரர்கள்  இங்குள்ள கருத்துக்களை வாசித்தும் ஊக்குவித்தும் வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்!  
 
ஆண்டவரின் வார்த்தைகளை குறித்து வாக்குவாதமும் விவாதமும் பண்ணுவது நமது நோக்கமல்ல என்றாலும் உண்மைகள் சாத்தானால் ஒழிக்கப்பட்டு போவதை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், உலக காரியத்தில் அதிகம் ஈடுபடுவதைவிட  நம்மால்முடிந்தவரை தேவனின் வார்த்தைகள் பற்றிய தியானத்திலேயே இருப்பது நல்லது என்ற நோக்கிலும்   நாமறிந்த  காரியங்களை  இங்கு எழுதி வருகிறோம். இங்கு எழுதப்படும் கருத்துக்களுக்கு பலமுகங்களில் எதிர்ப்புகள் இருந்தாலும்  (அப் 7:52) தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? என்ற வார்த்தையின் அடிப்படையில் தேவனின் வார்த்தைகளை எடுத்து சொன்ன எல்லா தீர்க்கத்ரிசிகளுமே பலவித துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதால் அதை நாம பெரிதாக எடுத்துகொள்வது இல்லை.
  
என்னைபற்றி நான் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு எதுவும் இல்லை. 1992 ம் வருடம் ஆண்டவர் என்னை ஆறு நாட்கள் முற்றிலும் அபிஷேகித்து நடத்தி சில உண்மைகளை தெரிவித்தார். அப்பொழுது ஆண்டவரை அறிந்துகொண்ட நான் நேரம் கிடைக்கும்போது வேத வசனங்களை தியானித்து இங்கு எழுதி வருகிறேன்.  நாம் இங்கு யாரை பற்றியும் பெரிதாக குறைசொல்லி எழுதுவது இல்லை. காரணம்
ஒவ்வொருவர் சொல்லும் கருத்துக்களிலும் ஓரளவு  உண்மையும் ஓரளவு தவறும்  கலந்து இருப்பதால் யாரையும் பொத்தம் பொதுவில்  தவறானவர்கள் என்று சொல்ல நமக்கு மனமில்லை. யாரையும்  குற்றவாழி என்று தீர்க்கவும் நமக்கு விருப்பம் இல்லை.  அனால் நான் இங்கு எழுதுவது ஏனோ பல திரித்துவ ஞானிகளுக்கு முற்றிலும் பிடிப்பது இல்லை. நாம் வசனத்துடன் எழுதினாலும் கேட்கமாட்டேன் என்கிறார்கள் வசனம் இல்லாமல் எழுதினாலும் வசன ஆதாரம் வேண்டும் என்று சொல்கிறார்கள். சரி அதை விடுகிறோம்.
 
நாம் அனைவருக்கும் சகோ. சில்சாம் பற்றி ஓரளவுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்  இதற்க்கு முன் நம்முடய தளத்தில் மட்டுமல்ல பல தளங்களில் பங்களிப்பை கொடுப்பதும் பின்னர் எல்லா பதிவையும் நீக்கிவிட்டு ஓடுவதுமாக  இருக்கும் அவரை எனக்கு தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் இருந்தே தெரியும். இங்கும் இடையிடையே புகுந்து ஏதாவது பயனற்ற காரியங்களை எழுதிய அவர்,  சில சாப வார்த்தைகளை உபயோகித்ததின் நிமித்தம் இந்த தளத்தில் இருந்து நீக்கபட்டார். அதுகுறித்த விளக்கத்தை கீழ்கண்ட திரியில் அறிந்துகொள்ளலாம்.
சகோ. சில்சாம் அவர்களின் பதிவுகள் பற்றி!  அவரை தவிர வேறு யாரையும் நாம் தளத்தில் இருந்து நீக்கியது இல்லை என்றே கருதுகிறேன்.
 
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நம்முடய தளத்துக்குள் புகுந்து மாற்றுபெயரில்  கருத்துக்களை எழுதிவரும் சகோ. HMV என்பவர்  ஏறக்குறைய சகோ.சில்சாமின் கருத்துக்களை அப்படியே  பிரதிபலித்து எழுதினாலும் தன்னை வேறு ஒருவர் என்று கூறிக்கொண்டு அதே பாணியில் என்னை நேரடியாக தாக்குவதிலேயே குறிகொண்டு எழுதுகிறார். சகோ. சில்சாமின் முக்கிய  நோக்கமும் சுந்தர் நல்லவர் இல்லை என்பதை சொல்வதே.  அதேபோல் சகோ. HMV யின் நோக்கமும் சுந்தர் விஷமுள்ளவர் என்று நிரூபித்து அவரை எதாவது
ஒரு விதத்தில் குற்றப்படுத்திவிட வேண்டும் என்பதிலேயே  குறியாக
இருப்பது தெரிகிறது. (நான் நல்லவன் என்று எங்கும் நான் சொல்லவில்லை)
 
இவர் ஒருபக்கம் சிலருக்கு ஒத்து ஜால்ரா அடிப்பதுபோல் எழுதினாலும் இன்னொருபக்கம் அவர்களைப்பற்றிய தவறான கருத்துக்களை பரப்புகிறவர்.சமீபத்தில்  சகோதரர் அன்பு எழுதிய கருத்து அதிகமாக ஒத்து பேசிய இந்த HMV என்பவர் நமது தளத்தில் பங்களிக்கும் சகோ. எட்வின் அவர்களுக்கு தனி மடலில் அனுப்பிய ஒரு செய்தி இதோ:  
 
 ////அரைவேக்காட்டு எட்வின் அவர்களே, நீங்கள் திரு.சுந்தர் அவர்களின் மாயமான உபதேசத்தில் சிக்கி சீரழிந்து போகாதிருக்க உங்களுக்காக பாரத்துடன் ஜெபிக்கிறேன்.அதற்கான அன்பு ஒன்றும் யோக்கியமில்லை, அவர் இயேசுவானவர் தூதன் மாத்திரமே அவரைத் தொழுவது கூடாது என்ற கொள்கையையுடையவர்.நீங்கள் விரும்பினால் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
அன்புடன்,

HMV///

நான் என்னவிதமான  மாயமான உபதேசம் செய்கிறேன் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் சகோ. எட்வின் இவரிடம்  தொடர்பு கொண்டு பேசிய போது  "நான் ஏதோ சிவபெருமானின் அவதாரம்" என்று சொன்னதாக ஏதேதோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி  அவரை  குழப்ப முயர்ச்சித்திருகிறார். இவர் சொல்லும் கருத்தில் ஒரு சரியான பொருளும் இல்லை என்றாலும், சக சகோதரர் ஒருவரை எந்த முகாந்திரமும் இல்லாமல் எடுத்த எடுப்பில் அரைவேக்காடு என்று அழைக்கும் விதமே அவரை பின்பற்ற லாயக்கற்றவர் என்பதை சுலபமாக நமக்கு உணர்த்துகிறது.

அடுத்தவரை குறை  சொல்வதற்கும் பழிப்பதற்கும்  பரியாசம் பண்ணுவதற்கு பெரிய ஞானம் நமக்கு தேவை இல்லை.அதிலும் மாற்றுபெயருக்குள் நுழைந்துகொண்டு எழுதுவது பெரிய காரியமே அல்ல.  ஆனால ஆவிக்குரிய ஒரு கிறிஸ்த்தவனுக்கு அது ஆழகல்ல. எனவே நான் யாரையும் எவ்வித மரியாதை குறைவாகவும் பரியாசம்  பண்ணியும் எழுத விரும்பவில்லை.       

மற்ற சகோதரர்கள் எழுப்பும் எவ்வித கேள்வியானாலும் நமக்கு பாரமாக இருப்பதில்லை ஆனால் இவர் இடையில் இடையில் புகுந்து தனிப்பட்ட முறையில் காரணமின்றி எழுதும் வார்த்தைகள் எனக்கு மிகவும் இர்ரிடேட் ஆக  இருப்பதால் இவர் போன்றவர்களை கர்த்தர் ஏன் இங்கு  அனுமதிக்கிறார் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. சிலரின்  நோக்கம் நம் தளத்தின் செயல்பாடுகளை முடக்குவதுதான் என்றாலும் நாம் எல்லோருடய  கூற்றையும் எதிர்மறையாகவே  எடுத்து கொள்வது இல்லை . எவர் சொல்வதிலும் ஒரு சிறு பிள்ளை சொல்வதிலும் உண்மை இருக்ககூடும். ஏன் சாத்தான்கூட சில வேத வசனங்களை  நமக்கு சுட்டிகாட்டி உணர்த்த முடியும் என்று கருதுகிறவன் நான். 

நாம் இங்கு செய்யும் வேலை கர்த்தருடையது! கர்த்தர் இந்த தளத்தை காக்காவிட்டால் நாம் இதை காவல் காப்பது என்பது முடியாத காரியம்!

எனவே அன்பானவர்களே இதுபோன்ற இடைஞ்சல்களை ஆண்டவர் ஏன் அனுமதிக்கிறார் என்ற உண்மையை அறிந்து அதை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒரிருநாளோ அல்லது ஒரிருவாரமோ பதிவுகளை நிறுத்திவைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். உண்மை எது வென்பதை சரியாகஅறியாமல் நான் எதையும் எழுத விரும்பவில்லை. ஆகாயத்தில் சிலம்பம் பண்ண எனக்கு விருப்பம் இல்லை!  

வேறுபல சகோதரர்கள் எழுப்பியுள்ள சில நல்ல கேள்விகளுக்கு எனக்கு உடனடியாக பதில் தர முடியாமைக்கு வருந்துகிறேன். கர்த்தருக்கு சித்தமானால் நாம் நிச்சயம் பதில் தருவேன்.  

தள சகோதரர்கள் எனக்காக ஜெபித்துகொள்ளுங்கள் என்று தாழ்மை யுடன் கேட்டுகொள்கிறேன். நான் மீண்டும் இங்கு எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் குழப்பங்களை உண்டாகும் தேவையற்ற தடைகள் நீக்கும்படி ஜெபிப்பதோடு "நான் எழுதுவதில் உண்மை இருக்கிறது என்றால் மட்டுமே என்னை எழுத அனுமதிக்கும்படி" தேவனிடம் வேண்டிகோள்ளுங்கள். என்னிடம் இருக்கும் விஷம் எந்த ஒரு மனுஷனையும் பாதிக்கும்பட்சத்தில் நான் எதையும் இங்கு எழுதாமல் இருப்பதே நல்லது என்றே நான் கருதுகிறேன்.

ஆண்டார் தாமே நம் அனைவரையும் அவரது  சித்தப்படி சரியான பாதையில் நடத்துவாராக! ஆமென்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

 

இது நான் நண்பர் எட்வின் அவர்களுக்கு எழுதியுள்ள மடல்.... இதையும் யாராவது களவாடி எடுத்து வெளியிடுவதற்கு முன்பதாக நானே வெளியிடுகிறேன்....

கர்த்தருக்குள் அன்பான எட்வின்,

நான் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய மடலை பகிரங்கமாக வெளியிட உதவிசெய்திருக்கிறீர்கள், இது நியாயமா ?

http://www.lord.activeboard.com/t46389983/topic-46389983/

அப்படியானால் உங்களுக்கு ஆண்டவருடைய காரியங்களைவிட ஒரு தனி மனிதனின் நட்பே பிரதானமாகத் தெரிந்திருக்கிறது.நான் உங்களோடு பேசிய அனைத்தையும் நிரூபிக்க ஆயத்தமாக இருக்கிறேன்.ஆனாலும் நீங்கள் மாயமான உபதேசத்தையே நம்புவேன் என்று உறுதியாக இருந்தால் உங்களை நம்பி என்னால் ஒன்றும் செய்யமுடியாது.யார் எப்படி போனால் எனக்கென்ன என்று யோசிக்கமாட்டீர்களா,சுந்தருக்கும் எனக்கும் என்ன தனி விரோதம் என்பதையாவது யோசிக்கமாட்டீர்களா ? சுந்தர் சிவபெருமானின் அவதாரம் என்பது மட்டுமல்ல,இயேசுவுக்குப் பிறகு பிறந்திருப்போர் அனைவருமே இயேசுவுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்தவர்களே,அவர்கள் இயேசுவின் இரத்தத்தால் உண்டான பாவ மன்னிப்பின் நன்மையை பெறும் வண்ணமாக அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் நம்புகிறார்.இதையும் இல்லையென்று அவர் மறுப்பாரானால் அவர் முழுவதும் மோசடியானவர் என்றே அர்த்தம்.ஏனெனில் இதற்கெல்லாம் நான் ஆதாரம் வைத்திருக்கிறேன்.நீங்கள் இதையெல்லாம் அவரிடம் நேரடியாகக் கேட்பதைவிட சுற்றி வளைத்து ஏதோ சந்தேகம் கேட்பது போல அப்பாவியாக கேட்டால் மட்டுமே மனந்திறந்து சொல்லுவார்.இது அவருடைய பாணியாகும்.நீங்களோ என்னைப் போட்டுகொடுப்பதுபோல நேரடியாகக் கேட்டதால் மிக எளிதாக மறுத்துவிட்டார்.இதுபோல பத்துக்கும் மேற்பட்ட வேதத்துக்கு விரோதமான கொள்கைகளை அவர் வகுத்து வைத்துள்ளார்.இன்னும் புத்தர் முகமது எல்லாருமே இறைவனால் அனுப்பப்பட்டவர்களே என்று எழுதியதெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லை போலும்.பாதாளத்தில் இரண்டு செக்‌ஷன் இருப்பதாக எழுதியது உங்களை பாதிக்கவில்லை.மேல் தட்டில் காமராஜர் போன்ற நல்லவர்கள் இருக்கிறார்கள்.,கீழ்தட்டிலோ கெட்டவர்கள் அவதிப்படுகிறார்கள் என்று எழுதியது உங்களுக்கு சம்மதம் போலும்.இப்படி வேதம் சொல்லாத கற்பனையான பல காரியங்களை ஆவியானவர் வெளிப்படுத்தினார் என்ற பெயரில் எழுதி கிறிஸ்தவ இணையத்தை மாசுபடுத்திவரும் காரணத்தினாலேயே என்னைப் போன்றோர் இவரை எதிர்க்கிறோம்.எங்களை காரணமில்லாமல் பகைக்கிறார்.நான் உங்களிடம் சொன்னதுபோல 9ல் சரியாக இருந்து ஒன்றில் தவறினாலும் ஏற்பது இயலாத காரியம்.முழுவதும் சரணாகதி அடைவதே சிறந்த வழியாகும்.யோசியுங்கள்.

உங்களுடைய அனுமதியில்லாமல் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தை திருடியெடுத்து அவர் வெளியிட்டிருந்தால் அது நம்பிக்கை துரோகம்.நீங்கள் அதற்கு என்ன சமாதானம் சொல்லுவீர்களோ... காத்திருக்கிறேன்.

அன்புடன்,”HMV”


  • ஐயா சுந்தர் அவர்களே, உங்களால் முடிந்த எல்லா குழப்பத்தையும் செய்துவைத்துவிட்டீர்கள், இதற்கு மேல் செய்ய உங்களிடம் என்ன இருக்கிறது, என்று நினைக்கிறீர்கள்..? நீங்கள் எரேமியா போன்ற தீர்க்கர்களின் வரிசையில் வைக்கப்பட்டாலும் கூட இப்போது உங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது சிரமம் ஐயா..?( நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறதாம்...biggrin )
  • நான் எனக்காக எதுவும் எழுதவில்லை, ஆனால் நீங்களோ உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் காத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவு. என்னைப் போல உங்களை எதிர்த்து எழுதுவோரை சாத்தானின் கூட்டத்தார் என்கிறீர்களே அது தூஷணமில்லையா ஐயா ?
  • பரிசுத்த வேதாகமத்தின் முதல் இரண்டு அதிகாரமும் வெவ்வேறு காலத்துக்குரியது என்று எழுதியதிலிருந்தே உங்களை எதிர்த்து எழுதுகிறேன்.நான் எழுதுவதை சகிக்காமல் என்னை சில்சாம் என்பவருடன் ஒப்பிடுகிறீர்கள், ஆனால் என்னைப் போன்ற ஓராயிரம் பேர் சிரித்துவிட்டு விலகிப்போகிறார்கள்,அந்த அளவுக்கு எனக்கு பொறுமையில்லை.எல்லோரும் இணைந்து எழுந்தால் அத்தனை பேரையும் சில்சாம் என்பீர்களோ..?
  • நான் அன்பு அவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாக எங்குமே எழுதவில்லை.ஆனால் அவருடைய அணுகுமுறையை பாராட்டினேன்.நீங்கள் இளைஞர்கள் இருவர் சேர்ந்து வயதான ஒருவரை சிறுமைப்படுத்துவதைக் கண்டித்தேன்.அதன் காரணமாகவே எட்வின் அவர்களை அரைவேக்காடு என்றேன்,அதில் என்ன தவறு, நீங்கள் இரு அரைவேக்காடும் சேர்ந்தால் ஒன்றாகி (1/2 + 1/2 = 1) விடுகிறதே, ஏன் வருந்துகிறீர்கள் ?


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோ. சில்சாம் நீங்கள் HMV முக்காட்டை நீக்கிவிட்டு நேரடியாகவே எழுதலாம் நாங்கள் எல்லாம் ஒன்றும் அறியாத பாப்பாக்கள் அல்ல ரொம்ப மிளகாய் அரைக்க நினைக்காதீர்கள். 

HMV wrote:


சுந்தர் சிவபெருமானின் அவதாரம் என்பது மட்டுமல்ல,


தாங்கள் எழுதிய இந்த வார்த்தை எங்கு எப்பொழுது என்னால் எழுதப் பட்டது என்பதை சரியான ஆதாரத்துடன்  எனக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். உங்கள் மாய்மால வித்தைகளை எல்லாம் காண்பிக்காமல் சரியாக குறிப்பிடவேண்டும். மற்ற காரியங்கள் குறித்து நான் பிறகு எழுதுகிறேன்.

இதற்க்கு சரியான பதில்  தாங்கள் குறிப்பிடாவிட்டால் அடுத்தவர் தளத்துக்குள் வந்து துணிகரமாக பொய்களை எழுதி அவதூறு செய்திகளை எழுதிய காரணத்துக்காக தாங்கள் பதிவுகளை நீக்கலாமா?  என்று ஆலோசனை சொல்லுங்கள்.

உமக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை ஆனால் சாத்தானுக்கு என்மேல் நிறையவே விரோதம் இருக்கிறது!  எனவே கேட்ட கேள்விக்கு பதிலை தவிர  வேறு எதுவும் இங்கு எழுதவேண்டாம்.    

 


-- Edited by SUNDAR on Friday 25th of November 2011 08:20:43 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

SUNDAR wrote:

சகோ. சில்சாம் நீங்கள் HMV முக்காட்டை நீக்கிவிட்டு நேரடியாகவே எழுதலாம் நாங்கள் எல்லாம் ஒன்றும் அறியாத பாப்பாக்கள் அல்ல ரொம்ப மிளகாய் அரைக்க நினைக்காதீர்கள். 

HMV wrote:


சுந்தர் சிவபெருமானின் அவதாரம் என்பது மட்டுமல்ல,


தாங்கள் எழுதிய இந்த வார்த்தை எங்கு எப்பொழுது என்னால் எழுதப் பட்டது என்பதை சரியான ஆதாரத்துடன்  எனக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.


 ஐயா, நான் சில்சாம் சொல்லும்போது நம்பவில்லை.இப்போது உங்கள் சுயரூபம் தெரியவந்திருக்கிறது. நீங்கள் என்னை கேட்ட கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் கேளுங்களேன்.நீங்கள் முந்தின பிறவியில் யாராக இருந்தீர்கள் என்பது எனக்கு எப்படி தெரியும் ? நீங்கள் யாரிடமோ சொன்ன காரணத்தினாலேயே அந்த தகவல் எங்கும் பரவியிருக்கிறது.உங்கள் தனி அனுபவத்திலும் பழங்காலத்தில்நன்மை செய்யும் இந்து சாமிகள் இருந்ததாக எழுதியிருக்கிறீர்களே.அவ்வாறே நீங்களும் முற்பிறவியில் குறிப்பிட்ட இந்து சாமியாக இருந்ததாகக் கூறியது உண்மை.ஆனால் அதன் பெயரை கூற நீங்கள் அஞ்சினீர்கள், ஆனால் அதன் அடையாளத்தைக் கூறினதால் நான் புரிந்துகொண்டேன். அவ்வாறு சொல்லவில்லை என்பதை நிரூபிக்கவேண்டியது உங்கள் பணியாகும்.அதே போல நான் HMV அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பும் உங்களையே சாரும்.நான் சாதாரண உறுப்பினர்,என்னை நிர்வாகி என்ற ஆணவத்தினால் மிரட்டி ஒடுக்க நினைக்கும் உங்கள் இரக்கமும் தெய்வீக அன்பும் என்னை வியக்கவைக்கிறது.



__________________
HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

ஒரு நிலையில்லாமல் அவ்வப்போது பல்டியடிக்கும் நீங்கள் எந்த ஆவியினால் நடத்தப்படுகிறீர்கள் என்று நன்றாக புரிகிறது. இந்த திரியின் ஆரம்பத்தில் நீங்கள் செய்த அறிவிப்புக்கும் இப்போதைய அறிக்கைக்கும் எத்தனை பெரிய வித்தியாசம்..! பாவம், நீங்களும் மனுஷந்தானே..!

உங்கள் எச்சரிக்கையின்படி நானாக விலகி ஓடிவிட்டால் ஜெபித்தேன், ஆண்டவர் தீமையை விலக்கினார் என்பீர்கள், நான் தைரியமாக நிற்க முடிவுசெய்தால் என்னை நீக்கிவிட்டு பகடி செய்வீர்கள், என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்களேன்..!

நான் வேண்டி கொண்டபடி என்னை நீக்குவதற்கு முன்பு எச்சரிக்கை விடுத்த உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன். மற்றுமொரு கோரிக்கை என்னை நீக்கினீர்களானால் எனது அனைத்து பதிவுகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கிவிடுங்கள், அப்போது தான் உங்கள் தளம் தூய்மையாக -தெய்வீக மணத்துடன் ஜொலிக்கும்...biggrin



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

 HMV wrote:


ஐயா, நான் சில்சாம் சொல்லும்போது நம்பவில்லை.இப்போது உங்கள் சுயரூபம் தெரியவந்திருக்கிறது. நீங்கள் என்னை கேட்ட கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் கேளுங்களேன்.நீங்கள் முந்தின பிறவியில் யாராக இருந்தீர்கள் என்பது எனக்கு எப்படி தெரியும் ? நீங்கள் யாரிடமோ சொன்ன காரணத்தினாலேயே அந்த தகவல் எங்கும் பரவியிருக்கிறது.உங்கள் தனி அனுபவத்திலும் பழங்காலத்தில்நன்மை செய்யும் இந்து சாமிகள் இருந்ததாக எழுதியிருக்கிறீர்களே.அவ்வாறே நீங்களும் முற்பிறவியில் குறிப்பிட்ட இந்து சாமியாக இருந்ததாகக் கூறியது உண்மை.ஆனால் அதன் பெயரை கூற நீங்கள் அஞ்சினீர்கள், ஆனால் அதன் அடையாளத்தைக் கூறினதால் நான் புரிந்துகொண்டேன். 


 

நான் கேட்டிருக்கும் ஒரே ஒரு கேள்விக்கு  இதெல்லாம் ஒரு பதிலா சகோதரரே?

என் மனசாட்சியில் இருப்பதை அறிந்து  கொள்ளும் அளவுக்கோ அல்லது நான் எங்கு என்ன பேசினாலும் அது  உம்முடைய  காதில்  வந்து  விழுவதற்கு  நீர்  என்ன கடவுளா?   

ஆகினும் நான் இபொழுது சொல்கிறேன் கேழுங்கள் "நான் சிவபெருமானின் அவதாரம்" என்று  யாரிடமும் சொன்னதும் இல்லை அப்படியொரு நினைவு என் மனதில் எழுந்ததும் இல்லை என்பதை கர்த்தருக்குள் நிச்சயமக தெரிவித்து கொள்கிறேன். அந்நிய தேவர்களின் பெயரையே உச்சரிக்க கூடாது என்ற பிடிவாதத்தில்  இருக்கும் என்னைப்பற்றி  இதுபோன்ற பொய்களை துணிகரமாக எழுத  உம்மை தூண்டியது யார்? உள்ளதை உள்ளதென்று சொல்லுங்கள் என்று சொல்லும் தேவன் ஒருநாளும் பொய்சொல்லவோ எழுதவோ தூண்ட மாட்டார் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் தங்களை  தூண்டுவது யார்? தெளிவாக அறியாமல் ஏன் கண்டதையும் வந்து துணிகரமாக எழுதுகிறீர்கள்?

 HMV wrote: /////என்னை நிர்வாகி என்ற ஆணவத்தினால் மிரட்டி ஒடுக்க நினைக்கும் உங்கள் இரக்கமும் தெய்வீக அன்பும் என்னை வியக்கவைக்கிறது.

உங்கள் எச்சரிக்கையின்படி நானாக விலகி ஓடிவிட்டால் ஜெபித்தேன், ஆண்டவர் தீமையை விலக்கினார் என்பீர்கள், நான் தைரியமாக நிற்க முடிவுசெய்தால் என்னை நீக்கிவிட்டு பகடி செய்வீர்கள், என்ன செய்யட்டும் நீங்களே சொல்லுங்களேன்..!////

சகோதரரே என்னுடய மாம்ச பெலத்தை பயன்படுத்தி தங்கள் எழுத்துக்களை நீக்க நினைத்தால் நான் எப்பொழுதோ நீக்கியிருக்க முடியும். நான் அப்படி செய்ய  விரும்ப வில்லை. நான் முடிந்த வரைக்கும் என்னை கட்டுபடுத்தி என்னை ஒடுக்கி தேவனின் சித்தம் நிறைவேர என்னை ஒப்புகொடுக்கவே நினைக்கிறேனேயன்றி எனக்கு அதிகாரம்  இருக்கிறது என்பதற்காகவோ எனக்கு எழுதுவதற்கு ஞானம் இருக்கிரது என்பதற்காகவோ கண்ட வார்த்தைகளையும அள்ளி வீசவோ அல்லது என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும்  வார்த்தைகளை தணிக்கை செய்யவோ நான்  விரும்புவது  இல்லை.  

எங்கள் பாட்டுக்கு ஏதோ எங்களுக்கு தெரிந்த கருத்துக்களை தியானித்து எழுதிகொண்டிருந்த தளத்துக்குள் வந்து  பொய்களை எழுதி குழப்பிவிட்டு நிம்மதி காண்பவர் நீங்கள். இப்பொழுது இந்த தளத்தில் வருகிறவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கும் பங்களிப்பும் குறைந்திருக்கும் அதே நேரத்தில் சகோ.சில்சாம் தளத்தில் ஒரு நான்கு ஐந்துபேர் கூட சேர்ந்திருப்பார்களே?தங்களுக்கு திருப்தி தானே?  சந்தோசமாக போங்கள்!   

HMV Wrote:////மற்றுமொரு கோரிக்கை என்னை நீக்கினீர்களானால் எனது அனைத்து பதிவுகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கிவிடுங்கள், அப்போது தான் உங்கள் தளம் தூய்மையாக -தெய்வீக மணத்துடன் ஜொலிக்கும்...biggrin////

தாங்கள் பதிவுகள் எதையும் நான் நீக்குவதாக எண்ணம் எதுவும் எனக்கு இல்லை சகோதரரே. இதற்க்கு  முன்னர் சகோ. சில்சாம்  பதிந்த பதிவையும் அவரேதான் நீக்கினாரே  அன்றி நான் நீக்கவில்லை.  அன்று சொன்னதையே இன்றும் சொல்கிறேன்  "என்னை பற்றிய அவதூறான வார்த்தைகள் இந்த தளத்தில் இருக்கவேண்டும் என்று கர்த்தர் அனுமதித்தால் அங்கு அங்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை.  அதாவது கர்த்தர் யாரையாவது அனுமதித்து  "சுந்தரை போய் துஷி,  அவனை விஷமி என்றும் கள்ளன் என்றும் சொல்லு" என்று சொன்னால் அவரிடம் நாம் எதிர் கேள்வி கேட்க முடியுமா? அவரிடம் இரக்கங்களுக்கு மற்றாடுவதை தவிர வேறு வழி ஏதும் என்னிடம் இல்லை.

 


-- Edited by SUNDAR on Saturday 26th of November 2011 03:49:48 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

HMV


இனியவர்

Status: Offline
Posts: 53
Date:
Permalink  
 

SUNDAR wrote:
எங்கள் பாட்டுக்கு ஏதோ எங்களுக்கு தெரிந்த கருத்துக்களை தியானித்து எழுதிகொண்டிருந்த தளத்துக்குள் வந்து  பொய்களை எழுதி குழப்பிவிட்டு நிம்மதி காண்பவர் நீங்கள்.

 ஐயா,நீங்கள் பாட்டுக்கு கண்டதையும் எழுதுவதற்கு இது குடும்ப புராணமோ அல்லது இராமாயணமோ மகாபாரதமோ அல்ல,இது தேவ காரியம் அல்லவா ? யார் அப்பாவியைப் போல பொய்களைப் பிணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தேவனும் தேவ மக்களும் அறிவார்கள். இதுவரை ஐயங்களையும் கேள்விகளையும் குறுக்குக் கேள்விகளையும் எழுதியதைத் தவிர வேறு ஏதாவது எழுதினேன் என்று சொல்லுங்கள், உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.

நீங்கள் சிவபெருமானின் அவதாரம் என்று (அந்த சாமியின் பெயரைச் சொல்லாமல்...) சொல்லிக்கொள்ளாவிட்டால் என்னிடம் சவால் விடவேண்டிய அவசியமில்லை, சிம்பிளாக நான் மறுபிறவி என்பதை நம்புகிறதில்லை என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் இப்போதும் நீங்கள் சூழ்ச்சியுடன் பொடிவைத்தே மறுக்கிறீர்களே தவிர நேரடியாக மறுக்கவில்லை. இந்து சாமிகள் ஒருகாலத்தில் வாழ்ந்த மனிதர்களே என்று நீங்கள் நம்புவதையும் மறுக்கிறீர்களா ? அதை எடுத்துச்சொல்லவா,கையில் வேதத்தை எடுத்தீர்கள் ? நீங்கள் முற்பிறவி நினைவுள்ளவர்  என்பதையும் மறுபிறவியில் நம்பிக்கையுள்ளவர் என்பதையும் ஆணித்தரமாக மறுத்துவிட்டு  அல்லது ஒப்புக்கொண்டு மற்றதை பேசுங்களேன்.

நான் ஆதாரமில்லாமல் இதுபோன்றதொரு குற்றச்சாட்டை உங்கள் மீது சுமத்தவேண்டிய அவசியமில்லை என்பதை உளத் தூய்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.எனது ஒரே நோக்கம் நீங்கள் மனமாற்றமடைவதே.உங்கள் கண் திறக்கப்பட்டு கண் திறக்கப்பட்டவன் கட்டுரைக்காக நீங்கள் மனம் வருந்தி (ஆண்டவரிடம்) மன்னிப்பு கேட்டு அதனை நீக்கவேண்டும் என்பதே எனது ஜெபம். மற்றபடி நீங்கள் குழம்பிப்போனவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆகும்.

பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தற்கு நாம் காரணமல்ல, மழை காரணமாகவோ என்னவோ கடந்த வாரம் பார்வையாளர் எண்ணிக்கை பொதுவாகவே குறைந்தே இருக்கிறது.நன்றி.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

HMV wrote:
ஐயா,நீங்கள் பாட்டுக்கு கண்டதையும் எழுதுவதற்கு இது குடும்ப புராணமோ அல்லது இராமாயணமோ மகாபாரதமோ அல்ல,இது தேவ காரியம் அல்லவா ? யார் அப்பாவியைப் போல பொய்களைப் பிணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தேவனும் தேவ மக்களும் அறிவார்கள். 

சகோதரரே! வலை தளங்களில் வரும் கிறிஸ்த்தவர்களை தாங்கள் மிக சாதாரணமாக எடைபோடவேண்டாம். தங்களைபோல எல்லோருக்குமே உண்மையை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் அளவுக்கு பொதிய ஞானம் தேவன் கொடுத்துள்ளார், கூடவே ஆவியானவரும் கிரியை செய்கிறார்   எனவே நாம் என்னதான் பாரப்பட்டு எழுதினாலும் கண்டதையும்  எழுதினாலும் யார்யார் எதை  ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் அதை மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். எனக்கு மிகவும் அறிமுகமான சில சகோதரர்கள்கூட  சில காரியங்களை  எழுத வேண்டாமே என்று என்னை கேட்டுகொண்டதற்குஏற்ப நான் அப்படியே அதை விட்டிருக்கிறேன். அதுபோல்  சில காரியங்களை எழுதுங்கள் என்று சொல்லியும் நான் எழுதாமல் தவிர்த்து வருகிறேன்.

இது தேவ காரியம் என்பதை நானும்  அறிந்து யாருக்கும் இடரலை ஏற்ப்படுத்திவிட கூடாது  என்ற மிகுந்த எச்சரிக்கையுடனேயே  எழுது கிறேன்.  நாங்கள் தவறாக எழுதினால்  அதை சுட்டிகாட்ட ஆவியானவர் இருக்கிறார். மேலும் தள சகோதரர்களும் இருக்கிறார்கள், யாரும் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வது இல்லை.  ஏன் நீங்களே கூட இனிமேல் நான் எழுதும் சம்பந்தபட்ட திரியில் எனது தவறை  தாராளமாக சுட்டிக்காட்டலாம். உங்கள் பயனர் பெயரை நான் தடை செய்ய போவதுஇல்லை. கர்த்தரின் சித்தம் இல்லாமல் யாரும் என்னை தவறுஎன்று கூறமுடியாது. நான் சிலரைபோல எதையும் ஆண்டவரிடம் விசாரிக்காமல் கண்மூடித் தனமாக ஏற்ப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை. யார் என்ன சொனாலும் அதில் என்ன உண்மை இருக்கிறது என்பதையே ஆராய்ந்து அறிந்து கொள்ளவே விரும்புகிறேன்.   

ஆனால் ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில் என்னை நேரடியாக தாக்குவதை விட்டு, சரியான குற்றசாட்டை சரியான முறையில் முன்வையுங்கள். அத்தோடு  என்னுடய கருத்தை தாங்கள் மறுத்தால் தாங்கள் கருத்து என்ன வென்பதை சொல்வதோடு நான் கேட்கும் சில அடிப்படை  கேள்விகளுக்கு எனக்கு பதில் தரவேண்டும். அதற்க்கு பதில் தங்களிடம் இல்லை என்றால் எனது தரப்பை நீங்கள் குற்றம் சொல்லகூடாது. ஏனெனில் எத்தனையோ  சகோதரர்கள் இயேசுவை  பற்றி என்னிடம் சொல்லியும் நான் ஏற்காமல், நான் ஆண்டவரிடமே  என்னுடய மனதில் இருக்கும் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிந்தால் மட்டுமே  உம்மை  ஏற்றுக்கொள்வேன் என்று பிடிவாதத்தின் அடிப்படையில் தேவனிடம்இருந்து காரியங்களை தெரிந்துகொண்டவன்.

எனவே என்னுடைய சந்தேகங்களுக்கு தங்களிடம் சரியான பதில் இருக்கும் பட்சத்தில் நான் தாங்கள் கருத்தை ஏற்க்க தயார்! 
     
HMV wrote:
/////இதுவரை ஐயங்களையும் கேள்விகளையும் குறுக்குக் கேள்விகளையும் எழுதியதைத் தவிர வேறு ஏதாவது எழுதினேன் என்று சொல்லுங்கள், உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.////
 
உங்கள் ஐயங்களையும் குறுக்கு விசாரணையையும் அந்ததந்த சம்பந்தபட்ட திரியில் முன்வைக்கவேண்டும். அப்பொழுது தானே அந்த விவாதம் ஒரு முழுமையான நிலையை அடைந்து எது உண்மை என்பதை அறியும் நிலையை எட்டமுடியும். இனி அதுபோல் தாங்கள் தாராளமாக செய்யலாம்.  ஆனால் எல்லா இடத்திலும் வந்து  என்னை குறிவைத்து எழுதுவது  சரியான நிலை அல்லவே! தாங்கள்  மன்னிப்பு கேட்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. நான் எல்லோரையும் எப்பொழுதுமே  மன்னித்த  நிலையிலேயே இருக்கிறேன். மற்றபடி தாங்கள் அறிந்ததற்கு மேல் ஒன்றும் இல்லை என்று கருத வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.    
 
HMV wrote:
///நீங்கள் சிவபெருமானின் அவதாரம் என்று (அந்த சாமியின் பெயரைச் சொல்லாமல்...) சொல்லிக்கொள்ளாவிட்டால் என்னிடம் சவால் விடவேண்டிய அவசியமில்லை,///
 
சகோதரரே என் மனதில் கூட அப்படியொரு எண்ணம் தோன்றவில்லை என்று நிச்சயமாக எழுதிய பின்னர், பெயரை சொல்லவில்லை அது இது என்று சொல்வதில் எந்த முகாந்திரமும் இல்லை. பெயரை நினைக்காமல் மனதில் சொல்லிக்கொள்ள முடியுமா என்ன?
 
HMV wrote:
////சிம்பிளாக நான் மறுபிறவி என்பதை நம்புகிறதில்லை என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் இப்போதும் நீங்கள் சூழ்ச்சியுடன் பொடிவைத்தே மறுக்கிறீர்களே தவிர நேரடியாக மறுக்கவில்லை. இந்து சாமிகள் ஒருகாலத்தில் வாழ்ந்த மனிதர்களே என்று நீங்கள் நம்புவதையும் மறுக்கிறீர்களா ? அதை எடுத்துச்சொல்லவா,கையில் வேதத்தை எடுத்தீர்கள் ? நீங்கள் முற்பிறவி நினைவுள்ளவர்  என்பதையும் மறுபிறவியில் நம்பிக்கையுள்ளவர் என்பதையும் ஆணித்தரமாக மறுத்துவிட்டு  அல்லது ஒப்புக்கொண்டு மற்றதை பேசுங்களேன்.////
 
நீங்கள் மேலே  சொல்வது எல்லாவற்றையுமே நான் நம்புகிறேன் அதற்க்கு ஏற்ற விளக்கமும் சில இடங்களில்  எழுதியிருக்கிறேன். அதை ஏன் நான் மறுக்கவேண்டும். ஆனால் அவைகளையே  முக்கிய படுத்தி  இங்குபோதனையாக  எழுதிக்கொண்டு இருக்கவில்லை. அந்நிய தெய்வங்களை குறித்து வேதம் சொல்லும் கருத்துக்களை   வசன ஆதாரத்தோடு எழுதியிருக்கிறேன. அந்நிய தேவர்களை வணங்குகிரவர்களை பற்றியும் நம் வேதம் சொல்கிறது என்பதை பிற மதத்தினருக்கு புரியவைக்கவே நான் அவைகளை எழுதியிருக்கிறேன். எப்படியாகிலும் கிறிஸ்த்துவை அவர்களுக்கு அறிவித்துவிட வேண்டும் என்ற வாஞ்சயிலேயே அவ்வாறு எழுதிகிறேன். 
 
இல்லை, நான் எழுதியது தவறு அதை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று தாங்கள் கருதினால் ஒரு தனி திரி ஆரம்பியுங்கள் விவாதிக்கலாம். அதற்கு முதலில் உங்களின் விசுவாசம் என்ன நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதுகுறித்த விளக்கத்தை தெரிவியுங்கள், அதன் பிறகு என்னுடய கருத்துக்களுக்கு விளக்கம் தருகிறேன். நான் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு எனக்கு சரியான விளக்கம் கிடைக்காதவரை எனக்கு ஆண்டவர் தெரிவித்த காரியங்களை நான் நம்புவதில் எந்த தவறும் இல்லை என்றே கருதுகிறேன்.     
 
HMV wrote:
//எனது ஒரே நோக்கம் நீங்கள் மனமாற்றமடைவதே.உங்கள் கண் திறக்கப்பட்டு கண் திறக்கப்பட்டவன் கட்டுரைக்காக நீங்கள் மனம் வருந்தி (ஆண்டவரிடம்) மன்னிப்பு கேட்டு அதனை நீக்கவேண்டும் என்பதே எனது ஜெபம்.  .////
 
நான் மனமாற்றம் அடையவேண்டும்என்று தாங்கள் விரும்புவதர்க்காக என் தேவனை நான் ஸ்தோத்தரிக்கிறேன்!  ஒருவேளை நான் எதுவும் தவறாக எழுதினால் எனக்கு உணர்த்தவும்,  ஆண்டவர் என்னை  மன மாற்றம் அடைய செய்யவும் ஒவ்வொருநாளும் நானும் எனக்காக ஜெபிக்கிறேன். தாங்களும்  எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள். நான் தவறாக இருந்தால் தங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.   
 
ஆனால்  கண்கள் திறக்கபட்டால்தானே உண்மை என்பது என்ன வென்று தெரியும்! அப்படி ஒரு முறைகூட கண்கள் திறக்கபடாத அடைபட்டுப்போன கண்ணையும்  ஆண்டவர் பேசினால் கேட்கமுடியாத மந்த இருதயத்தையும் வைத்துகொண்டு, ஆண்டவரிடம் எனக்காக ஜெபிப்பைதைவிட  தங்கள் கண்கள் திறக்கபட்டு உண்மையை அறிந்து கொள்ள மன்றாடுங்கள்  அதனால் ஏதாவது பயன் கிடைக்கலாம்.
 
மற்றபடி  நான்   முற்றிலும் அனுபவித்து அறிந்து எழுதியிருக்கும் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்ட நிலை....  என்ற கட்டுரையை கர்த்தரின் கட்டளை இல்லாமல்  ஒருநாளும் நீக்கப்படாது,  உம்முடய  எண்ணம் ஒருநாளும் நிறைவேறாது. உங்களுக்கு உண்மைகள் உணரத்தப்பட நான் ஆண்டவரிடம் ஜெபிக்கிறேன்.
 
HMV wrote:
/////மற்றபடி நீங்கள் குழம்பிப்போனவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆகும்///
 
இதுபோல் நேரடி தாக்குதல்கள்தான்  வேண்டாம் என்று சொல்கிறேன் நான் குழம்பி போனேன்னா அல்லது உங்களை சாத்தான் குழப்பி உண்மையை அறியவிடாமல் தடுக்கிறானா? என்பது  ஆண்டவருக்கே தெரியும்.  எல்லோரையும் ஏன் சேர்த்து இழுக்கிறீர்கள்?  நீங்கள் எல்லோருடைய  ரெப்ரேசெண்டேட்டிவா என்ன?    
 
இறுதியாக சகோதரரே ஒருவேளை நான் எழுதும் காரியங்கள் தவறாக இருக்குமாயின் உங்கள் தரப்பில் இருந்து தாங்கள் எச்சரிக்க வேண்டியவைகளை எச்சரித்துவிட்டீர்கள். தங்கள் கடமையை செய்து விட்டீர்கள்  எனவே எனது காரியம் குறித்து தாங்கள் பேரில் இனி எந்த குற்றமும் தேவனின் பக்கம் இருந்து சுமத்தப்படாது. 
 
ஆனால  தேவன் எனக்கு தெரிவித்த இந்த காரியங்கள் அனைத்தும் உண்மையாக இருந்து, 
 
ஆபகூக் 2:2 கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
 
என்ற வசனத்தின் அடிப்படையில், நான் கண்டதையும் கேட்டதையும் உணர்ந்ததையும்  இங்கு எழுதி வைக்கும் காரியத்தில்  தாங்கள் இங்கு  தடை கல்லாக  நின்றால் தேவன் அதை தங்களிடம் விசாரிக்காமல் விடமாட்டார் என்பதை வருத்தத்துடன்  தெரிவித்து  கொள்கிறேன்!  


-- Edited by SUNDAR on Monday 28th of November 2011 05:15:55 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard