ஆண்டவராகிய இயேசு தன்னுடய ஊழிய நாட்களில் இரண்டு முறை கண்ணீர் விட்டதாக வேத வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன அதை குறித்து இயேசு கண்ணீர்விட்ட இரண்டு சம்பவங்கள்! என்ற திரியில் நாம் ஏற்கனவே விளக்கியிருந்தாலும் மேலேயுள்ள யோவான் 11.35 சம்பவத்தில் லாசருவின் மரணத்தினிமித்தம் இயேசு கண்ணீர்விட்ட நிகழ்வை வாசிக்கும்போது, ஏதோ இன்னும் அதில் தியானிக்க வேண்டிய பல காரியங்கள் அடங்கியிருப்பதாகவே எனக்கு தெரிகிறது.
யோவான் 11: 14. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; 17. இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். 21. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். 33. அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: 34. அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்; 35. இயேசு கண்ணீர் விட்டார்.
கண்ணீர்விட காரணம்என்ன? மரணத்தின் அதிபதியை தன் மரணத்தால் ஜெயிக்க வந்தவர் அவர்! மரணத்தை பற்றி நன்றாகவே அறிந்தவர். அவர் மரித்த லாசருக்காக கண்ணீர் விட்டாரா? அல்லது அங்கு கூடி யிருந்தவர்கள் கண்ணீர் விட்டதிநிமித்தம் தானும் கண்ணீர் விட்டாரா எந்த ஒரு காரியத்தையும் ஆவிக்குரிய பிரகாரமாக பார்த்து எந்த ஒரு காரியத்தின் உள்ளான நிலையையும் எளிதில் அறிந்து கொள்ளும் இயேசு, அங்கு அவர்களது துக்கத்தைபார்த்து அவர்களோடு சேர்ந்து கண்ணீர்விட காரணம் என்னவென்பதை நான் மீண்டும் மீண்டும் தியானிக்கையில் அது எனக்கு புரியாத ஒரு பெரும் புதிராகவே இருக்கிறது.
பொதுவாக உலகில் மனுஷர்கள் கண்ணீர் விடுவதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும் ஒரு மனுஷன் கண்ணீர்விடுகிறான் என்றால் அந்த இடத்தில் அவனால் செய்வதற்கு எதுவும் இல்லை, அதாவது அவனால் நடந்த அந்த சம்பவத்தை அல்லது அங்குநடந்த காரியத்தை சரிசெய்ய முடியவில்லை அல்லது அவன் எதற்க்காக அழுகிரானோ அந்த காரியம் அவனது செயல்திறனுக்கு மீறி செய்யப்படுகிறது அவனால் அங்கு அவனால் எதுவும் செய்ய முடியவில்லை எனவே கண்ணீர் விடுகிறார் என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
உதாரணமாக மனுஷர்கள் கீழ்கண்ட பல காரியங்களுக்காக கண்ணீர் விட நேரிடலாம்: நெருங்கியவர்கள் மரணம்/ உடலை வாட்டும் வியாதி/ தாங்கமுடியாத வலி, நீக்க முடியாத மன வேதனை, பணம் மற்றும் பொருள் இழப்பு போன்ற ஏதாவது ஒரு காரியத்துக்காக மனுஷர்கள் கண்ணீர் விடலாம். ஆனால் கண்ணீர் விடுவதற்கான மேலேயுள்ள எந்த ஒரு காரியத்தையும் சம்பந்தபட்டவர் உடனே நிவர்த்தி செய்ய அல்லது மறு சீரமைக்க முடிந்தது என்றால் அவர் கண்ணீர் விடாமல் உடனே அந்த காரியத்தை தன்னுடய பெலத்தால் சீரமைத்துவிடுவார் என்பது அனைவரும் அறிந்த ஓன்று. எனவே நடந்தஒரு காரியத்தை சீரமைக்க முடியாதவர்கள் மாத்திரமே கண்ணீர் விட்டு கொண்டு இருப்பார்கள்.
ஆனால் இந்த லாசருவின் மரண விஷயத்தில் அப்படிஒரு நிலை இல்லை! மரித்த லாசருவை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடனே இயேசு அங்கு வந்திருக்கலாம் மேலும் அவரது வார்த்தைக்கு பிதா எப்பொழுதும் செவிகொடுப்பார் என்றும் அவர் நினைத்தால் மரித்த அந்த லாசருவை உடனே எழுப்பிவிட முடியும் என்பதுவும் இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். ஆகினும் இங்கு இயேசு கண்ணீர் விடுகிறார்! எனவே இங்கு இயேசுவின் கண்ணீர்என்பது ஒரு சாதாரண மனுஷனின் கண்ணீர்போல இயலாமையால் உண்டான கண்ணீர் அல்ல! எல்லாமே செய்ய முடிந்திருந்தும் இங்கு "இயேசு கண்ணீர் விட்டார்" என்று வசனம் கூறுகிறது!
எனவே இயேசுவின் அந்த கண்ணீர் மூலம் நாம் என்ன அறிந்துகொள்ள முடிகிறது? அவர் ஏன் கண்ணீர்விட்டார்? அதன் மூலம் நமக்கு சொல்லப்படும் பாடம் என்ன? என்பதை அறிந்த சகோதரர்கள் இங்கு எழுதலாம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனவே இயேசுவின் அந்த கண்ணீர் மூலம் நாம் என்ன அறிந்துகொள்ள முடிகிறது? அவர் ஏன் கண்ணீர்விட்டார்? அதன் மூலம் நமக்கு சொல்லப்படும் பாடம் என்ன? என்பதை அறிந்த சகோதரர்கள் இங்கு எழுதலாம்!
சகோதரரே இங்கு நான் அரிந்த கொண்ட மற்றும் புரிந்து கொண்ட காரணத்தை பதிவிடுகின்றேன்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கண்ணீர் விட்டதிற்கு
காரணம் லாசரு மரிப்பதர்காக மட்டும் அல்ல
ஏனென்றால் லாசரு மரிப்பதை அவர் முன்பே அரிந்து இருந்தார்
யோவான் 11:
4. இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்
அதே போல லாசருவை உயிரோடு எழுப்புவதையும் ஆண்டவர்
அரிந்து இருந்தார்
11 . நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்
இப்படி முன்பே அரிந்து இருந்த இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்பதை ஆராய்ந்தால்
யோவான் 11:
33. அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
ஆம் நண்பர்களே மரியாள் அழுகின்றதையும் அவளுடன் சேர்ந்து யூதர்கள் அழுகின்றதையும் ஆண்டவராகிய இயேசு பார்த்து அவர்கள் புலம்பி அழுகின்ரத்தை பார்த்து தாங்க முடியாமல் முதலில் தன்னுடைய ஆவியினாலே கலங்கி பின்பு லாசருவை பார்த்த உடன்
34. ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்;
பார்த்த உடன் ஆவியிலே கலங்கியவர் இப்பொழுது மாம்சத்தில் அழுதுவிட்டார்
35. இயேசு கண்ணீர்விட்டார்
எனக்கு தெரிந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரியாள் மற்றும் ஜனங்கள் அழுகின்ரதை பார்த்து தன்னால் பொறுக்க முடியாமல் கண்ணீர் விட்டு இருப்பார்
லாசருவை உயரோடு எழுப்புவது என்பது அவருக்கு தெரிந்து இருந்தும் இவர்கள் புலம்பி அழுவதை பார்த்து அவரும் அழுதுவிட்டார் என்பது தான் என் கருத்து..
இதில் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்றால் இயேசு கிறிஸ்துவின் இரக்க குணத்தையும் மனிதன் மேலுள்ள அன்பையும் தெரியபடுத்துகின்றது
அவர் கடவுளாக இருந்தாலும் சகலத்தையும் அறிந்தாலும் மனிதன் வேதனை படுவதையும் அவர்கள் அழுவதையும் துன்பபடுவதையும் அவரால் தாங்க முடியாது என்பதை தெரியபடுத்திகின்றது
மேலும் நண்பர்களின் கருத்தை அரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றேன்..............
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 29th of November 2011 06:39:54 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
EDWIN SUDHAKAR wrote:அவர் கடவுளாக இருந்தாலும் சகலத்தையும் அறிந்தாலும் மனிதன் வேதனை படுவதையும் அவர்கள் அழுவதையும் துன்பபடுவதையும் அவரால் தாங்க முடியாது என்பதை தெரியபடுத்திகின்றது.
அன்பு நண்பர் எட்வின் அவர்களே,
இந்த தளத்தின் நிர்வாகி இயேசுவை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளுகிறாரா, ஏனெனில் பிதா இயேசுவில் இல்லை என்று மற்றொரு திரியில் எழுதியிருக்கிறாரே..?
எனவே இயேசுவின் அந்த கண்ணீர் மூலம் நாம் என்ன அறிந்துகொள்ள முடிகிறது? அவர் ஏன் கண்ணீர்விட்டார்? அதன் மூலம் நமக்கு சொல்லப்படும் பாடம் என்ன? என்பதை அறிந்த சகோதரர்கள் இங்கு எழுதலாம்!
திரு.சுந்தர் அவர்களே,
இயேசு கண்ணீர் விட்டார் என்று இருக்கிறதே தவிர ஏன் கண்ணீர் விட்டார் என்று அங்கே இல்லை. இப்படி இல்லாத ஒன்றைக் குறித்து தேடும் காரணத்தினாலேயே பல்வேறு உபதேச குழப்பங்கள் ஏற்படுகிறது. எனவே எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதிருங்கள் என்று வேதம் சொல்லுகிறது.வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் என்று ஆண்டவர் சொன்னது இதுவல்ல என்று கருதுகிறேன்.
உதாரணமாக நான் இதுகுறித்து சொல்லும் கருத்தை ஆண்டவர் அங்கீகரிப்பாரா ? அவர் அங்கீகரித்ததை எவ்வாறு நான் உறுதிபடுத்திக்கொள்ளமுடியும் ? ஒருவேளை பெரும்பாலான மனிதர்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்தை ஆண்டவர் புறக்கணித்தால் ? பெரும்பாலான மனிதர்கள் ஏற்றுக்கொண்டு என்னைப் புகழும் மாயையில் நான் தேவனுக்கு விரோதியானால் ? நான் ஏன் கண்ணீர் விட்டேன் என்று நீங்கள் சொல்லுவது எப்படி உண்மையாக இருக்கும், கொஞ்சம் யோசியுங்களேன் !
இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்று நீங்கள் யோசிப்பது தவறல்ல,அவர் ஏன் கண்ணீர் விட்டார் என்று கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பதே தவறு. அனைத்து சர்ச்சைகளுக்கும் இதையே அளவுகோலாக எடுத்துக்கொள்ளலாம். நாம் வேதத்தை வேதமாகப் படித்து ஒன்றும் அறியாத பேதைகளைப் போல இருந்துவிட்டால் நம்முடைய இரட்சிப்புக்கு அதாவது கடைசிகால சரீர மீட்புக்கு ஏதேனும் பங்கம் வந்துவிடுமா என்ன ?
சரி, நீங்க மிகவும் ஆர்வத்துடன் கேட்பதால் நானும் முயற்சிக்கிறேன். எப்போதுமே குறிப்பிட்ட வசனத்தின் பின்னணியையும் நோக்கத்தையும் அறிய அல்லது ஆராய அந்த வசனத்தின் சூழலையே முதலாவது கவனத்தில் கொள்ளவேண்டும் எனும் விதிமுறையின் படியும் வழக்கத்தின்படியும் வசனம் சொல்லப்பட்ட சூழலையும் அந்த வசனத்தைத் தொடரும் வசனங்களையும் கவனித்தால் அடுத்த ரெண்டு வசனங்களில் சில காரியங்கள் இருக்கிறது.
”இயேசு கண்ணீர் விட்டார்.
அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!
அவர்களில் சிலர் குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.”(யோவான்.11:35-37)
மேற்காணும் வசனத்தின்படி பார்வையாளரின் கூற்றுப்படி அவர் லாசருவின் மீது வைத்திருந்த நேசம் வெளிப்படுகிறது.அவர் கண்ணீர் விடவும் அதுவே காரணமாக இருக்கிறது.அதே நேரத்தில் அவரை குறைகூறும் மக்களின் கருத்தும் இங்கே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் லாசருவுக்காக இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்று வேதத்தில் எங்குமே இல்லாத நிலையில் அதுகுறித்து ஆராய்வது வரம்புமீறிய செயலாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
பொதுவாகவே ஒருவர் கண்ணீர் சிந்தும்போது இயல்பாகவே கண்ணில் நீர்சுரப்பது மனித இயல்பு.நாமும் கூட சில துக்கவீட்டுக்கு போகும்போது ஆண்களாக இருந்தாலும்கூட எல்லோரும் அழும்போது நம்முடைய கண்களும் கலங்கும். அவ்வாறே ஆண்டவரும் கண்ணீர் சிந்துகிறார்.ஆண்டவர் கண்ணீர் சிந்தியது இயலாமையினால் அல்ல,அவர் உணர்வுள்ளவர் என்பதே காரணம்.சிலர் சொல்லலாம்,இயேசு கண்ணீர் விட்டதால் அவர் மனிதனே என்பதாக.அவர் தன்னை தேவனாக நிரூபிக்க அழாதிருக்கவேண்டுமோ ? தேவன் அழக்கூடாது என்பது ஒன்றும் விதிமுறையல்ல. ஏனெனில் பிதாவாகிய தேவனும்கூட கலங்கியதான சம்பவங்கள் வேதத்தில் பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.ஏனெனில் அவர் உணர்வுள்ளவர், துக்கப்படுகிறவர், பெருமூச்சுவிடுகிறவர்...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த திரியின் பாதிப்பில் நான் இன்று ஒரு குறுஞ்செய்தி (SMS) அமைத்து எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினேன்.அதை இங்கே நண்பர்கள் விரும்பினால் பகிர்ந்துகொள்கிறேன்.
"Jesus wept."-(John.11:35) >To wipe away ur tears
>To take away ur stones
>To keep u away from evil
Sing loudly,
He is Lord,
He is risen4rm d dead..,
(தற்போது குறுஞ்செய்தி கட்டணங்கள் மிகவும் கூடிவிட்டபடியினால் அதிக பட்சம் 153 எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தமுடியும்.எனவே நான் அதனை இயன்றமட்டும் சுருக்கி அதிகமானோர்க்கு அனுப்ப வேண்டியதாகிறது.)
HMV wrote:இந்த தளத்தின் நிர்வாகி இயேசுவை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளுகிறாரா, ஏனெனில் பிதா இயேசுவில் இல்லை என்று மற்றொரு திரியில் எழுதியிருக்கிறாரே..?
சகோதரரே வேறு ஒரு இடத்தில் எழுதியிருந்தால் அங்கேயே தங்கள் கேள்வியை முன்வைக்கலாமே! எனக்கும் என்ன எழுதியிருக்கிறேன் என்று அறிந்துகொள்ள எதுவாக அமையும். தாங்கள் மட்டுமல்ல அனேக விசுவாசிகள் இயேசு யார் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்! தங்களுக்கு மிக சுருக்கமாக சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்
தேவன் "ஆதியில் இருந்தே தன்னோடு கூட இருந்த ஜீவ வார்த்தையை மாம்சமாக்கினார்" அவரே இயேசு!
யோவான் 1:1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:14அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்;
I யோவான் 1:1ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
இவ்வாறு மாம்சமாக வந்த அந்த ஜீவ வார்த்தைக்குள் தேவனே
தேவன் ஒருவரே!ஆனால் பாவத்தில் வீழ்ந்த மனுஷர்களை மீட்கும் திட்டத்தில் இருவரும் தனிதனி! அதாவது ஒருவர் பிதா இன்னொருவர் குமாரர்! ஆகினும் இவரே அவர்! அவரே இவர்!
நான் எழுதும் உண்மையை புரிந்துகொள்ளாமல் என்மேல் தேவையற்ற குற்றசாட்டுகளை இங்கு எழுத வேண்டாம்!
-- Edited by SUNDAR on Wednesday 30th of November 2011 09:04:09 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
HMV wrote : ------------------------------------------------------------------------------- SUNDAR wrote: --------------------------- எனவே இயேசுவின் அந்த கண்ணீர் மூலம் நாம் என்ன அறிந்துகொள்ள முடிகிறது? அவர் ஏன் கண்ணீர்விட்டார்? அதன் மூலம் நமக்கு சொல்லப்படும்
பாடம் என்ன? என்பதை அறிந்த சகோதரர்கள் இங்கு எழுதலாம்!
---------------------------
திரு.சுந்தர் அவர்களே,
இயேசு கண்ணீர் விட்டார் என்று இருக்கிறதே தவிர ஏன் கண்ணீர் விட்டார் என்று அங்கே இல்லை. இப்படி இல்லாத ஒன்றைக் குறித்து தேடும் காரணத்தினாலேயே பல்வேறு உபதேச குழப்பங்கள் ஏற்படுகிறது.
ஐயா Hmv : தாங்கள் சொல்லுகிறதை பார்த்தால் யாருமே எதையுமே.... எதைபற்றியும் தெரிந்து கொள்ளவேண்டாம் என்று சொல்லுகிறேர்களா..அல்லது சகோ: சுந்தர் மாத்திரம் எதையும் சொல்ல கூடாது என்று சொல்லுகிறேர்களா..
HMV wrote : -------------------------------------------------------------------------------
இயேசு ஏன் கண்ணீர் விட்டார் என்று நீங்கள் யோசிப்பது தவறல்ல,அவர் ஏன் கண்ணீர் விட்டார் என்று கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பதே தவறு.
ஐயா Hmv :இந்த பதிவில் சகோ: சுந்தர் எங்கே தான் கண்டுபிடித்ததாக சொல்லி இருக்கிறார். நீங்களாகவே சொல்லிவிட்டு குற்றம் கண்டுபிடிகிறேர்களே.....
தாங்கள் ஏன்தான் சகோ: சுந்தர் எதை எழுதினாலும் எதாகிலும் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கிறேர்களே ஏன் என்று எனக்கு புரியவில்லை..
ஐயா Hmv :சகோ: சுந்தர் எழுதிய வசனத்தின் நிமித்தமோ அல்லது அவருடைய போதகத்தின் நிமித்தமோ.. யாருக்காகிலும் இடறல் ஏற்பட்டால் தாங்கள் சொல்கிறது நியாயம்...
ஆனால் அநேகருக்கு அது கிறிஸ்துவில் வளருவதற்கும் அவரில் நிலைத்திருபதற்கும் உறுதுணையாய் இருக்கும்போது தாங்கள் ஏன் ஓயாமல் குற்றம்பிடிகிறேர்கள் என்று எனக்கு புரியவில்லை............
-- Edited by Stephen on Wednesday 30th of November 2011 09:25:12 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )