நமது தளத்தில் புதிதாக வருகை தந்து பதிவுகளை தந்திருக்கும் அன்பு சகோதரர் JOHN12 அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
ஆவிக்குரிய நிலையில் வளர்வதற்கு தாங்கள் இந்த தளத்தை தேர்ந்தெடுத்ததற்காக ஆண்டவருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். தேவையான கருத்துக்களை எடுத்துகொள்ளுங்கள் தேவையற்றதை விட்டுவிடுங்கள். நாங்களும் தங்களிடம் இருந்து அறிவதற்குரிய காரியங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தாங்கள் விரும்பினால் தங்களை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தையோ அல்லது சாட்சியையோ இந்த திரியில் பதிவிட்டால் தங்களை பற்றி நாங்கள் அறிந்து கொள்வதர்க்கு எதுவாக அமையும்.
தமிழில் எழுதுவது சுலபம்! அதற்க்கு கீழ்கண்ட சுட்டியை தாங்கள் பயன்படுத்தலாம்.
கருத்து ஒதுபோனால் போதகர்.. ஒவ்வாமல் போனால் கள்ளபோதகர்..இப்படியான நிலை நமிடையே மாறட்டும்..அனலோடு வேதம் கற்போம் விவாதிப்போம் ...
நான் முன்பே கூறியபடி கற்றுகொள்ளவே இத்தலத்திற்கு வந்தேன்.. எனக்கு இடறல் இல்லாமல் தெரிந்த கருத்துகளை வெளிபடுதுகிறேன்.. அவ்வளவே...
சகோ. ஜான்12 அவர்களுக்கு கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். தங்களின் எழுத்துக்களை பார்க்கும்போது தாங்கள் வேத வசனங்களை அடிக்கடி தியானித்து ஆவியில் வைராக்கியம் உள்ள ஒரு கிறிஸ்த்தவர் என்பதை என்னால் அறிய முடிகிறது.
தேவன் எல்லோருக்கும் எல்லா உண்மையையும் தெரிவிப்பதில்லை. ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் அந்த கம்பனி பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியாது. ஆகினும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு அதிக உண்மைகள் தெரிய வாய்ப்புண்டு. அதுபோல் தேவனும் தனக்கு கீழ்படிந்து நடந்து தன்னிடம் கேட்பவருக்கு, கேட்பவரின் வாஞ்சக்குஏற்ப உண்மையை அறிவிக்க கூடியவர் என்பது உண்மை! அனால் நம்முடய நோக்கம் என்ன வென்பதின் அடிப்படையிலேயே நமக்கு கிடைக்கும் பதிலும் இருக்கும்.
உதாரணமாக ஆசீர்வாதமாக வாழ வேண்டும் என்று தேவனிடம் பணம் கேட்பவனுக்கும் அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தேவனிடம் பணம் கேட்பவனுக்கும் தேவனிடம் இருந்து கிடைக்கும் பதில் வெவ்வேறாக இருக்கும். இருவரும் கேட்ப்பது பணம்தான் ஆனால் நோக்கம் வேறாக இருப்பதால் தேவனின் பதிலும் வேறாக இருக்கும்.
தேவன் அவரவருக்கு ஒரு ஓட்டத்தை நியமித்திருக்கிறார் அதற்க்கு ஏற்ப ஞானத்தையும் கொடுத்திருக்கிறார். தங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாமல் இருக்கமால் எனக்கு தெரிந்தது தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தாங்கள் புரிதலையோ அல்லது தாங்கள் போன்ற கிறிஸ்த்தவ சகோதரர்களின் கருத்துக்களையோ நான் மறுக்க வில்லை நிச்சயம் மதிக்கிறேன் தங்களிடம் தேவன் பேரில் விசுவாசம், வேத வசனங்கள் குறித்து வைராக்கியம், தேவனை பற்றிய உயர்ந்த எண்ணம் எல்லாம் அதிகமாக இருப்பதை நான் உணர்கிறேன். அதற்காக என் தேவனை நான் துதிக்கிறேன்.
அனால் தங்கள்போல பல கிறிஸ்த்தவர்கள் மற்றும் பாஸ்டர்களிடம் பலமுறை கலந்தாலோசித்து "பதில் தெரியவில்லை" என்ற நிலையில் இருக்கும் பல கேள்விகளுக்கு என்னால் முடிந்த அளவு தேவனிடம் விசாரித்து தியானித்து அறிந்ததை இங்கு எழுதுகிறேன். அதற்க்கு முக்கிய காரணம் என்னுடய இந்து நண்பர் ஒருவர் என்னை பதிலளிக்கும் படி கேட்ட பல ஆதியில் இருந்து நடந்த சம்பவம் பற்றிய காரியங்களே. தாங்கள் என்னுடய கருத்தில் ஒன்றை எடுத்து தவறு என்று தீர்த்தால் அதன் தொடர்ச்சியாக வசனத்தின் அடிப்படை யில் பல கேள்விகளும் அதை தொடர்ந்து மன வருத்தங்களுமே உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் நடப்பு என்பது ஒன்றின் தொடர்ச்சியே இன்னொன்று!
நான் பொதுவான கிறிஸ்த்தவ விசுவாசத்துக்கு எவ்விதத்திலும் எதிரானவன் அல்ல! அனால் வேத வசனங்கள் குறித்த என்னுடய புரிதல்கள் தவறு என்று தங்கள் போன்ற பல கிறிஸ்த்தவ சகோதரர்களால் தீர்மானிக்கபட்டுள்ளது. நான் என்னுடய புரிதல்களுக்கு அனேக வசன ஆதாரங்கள் வைத்திருப்பதாலும், என்னுடய கருத்துக்கள் அனைத்துமே எந்தஒரு மனுஷன் சொல்லியும் அறிந்ததுமாக இல்லாது, நானே அழுது மற்றாடி இடைவிடாது தியானித்து தேவனிடம் இருந்து அறிந்த காரணத்தாலும் அநேகரின் கருத்துக்கள் என் கருத்தோடு ஒத்து போவதில்லை இங்கு யாருடைய புரிதல் சரி யாருடைய புரிதல்கள் தவறானது என்பதை காலம் வரும் போது மட்டுமே அறிய முடியும்.
எனவே நாம் முடிந்த அளவு சர்ச்சைக்குரிய காரியங்களை குறித்து அதிகம் விவாதிக்காமல் பக்தி விருத்திக்கான பொதுவான நல்ல கட்டுரைகளை மாத்திரம் தொடர்ந்து பதிவிடலாம் என்று கருதுகிறேன். ஏனெனில் சில காரியங்களை பற்றி திரும்ப திரும்ப விவாதித்து எந்த முடிவும் ஏற்ப்படாமல் கால விரயம் மற்றும் மன கஷ்டங்களே ஏற்ப்படுகிறது. தங்களை பற்றிய ஒரு நல்ல எண்ணத்தை ஆண்டவர் என்னுடய மனதில் ஏற்ப்படுத்தியதால், தங்களிடம் அதிகம் விவாதிக்க விரும்பாமல் சர்ச்சைக்குரிய காரியங்கள் குறித்து அதிகம் எழுத விரும்பாமல் இந்த கருத்தை இங்கு பதிவிடுகிறேன்.
தாங்கள் அறிந்த அல்லது தங்களுக்கு தேவனால் வெளிப்படுத்தபட்ட பக்தி விருத்திக்கான எந்த காரியமானாலும் இங்கு எழுதலாம். பிறருக்கு இடரலை ஏற்ப்படுத்தும் காரியங்கள் இருந்தால் அது எவ்வாறு இடரலை ஏற்ப்படுத்தும் என்பதை வசன ஆதாரத்தோடு சுட்டலாம். உடனே அது நீக்கப்படும்!
ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக.
அன்புடன்
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோ.சுந்தர் அவர்களே.. தளத்தை நல்ல முறைகளில் ஒழுங்கு படுத்த முயல்கிறீர்கள்..கர்த்தர் உங்களுடன் இருப்பாராக..
எல்லாருக்கும் எல்லாம் நிச்சயம் புரிந்துவிடாது..
மாற்கு 4:9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்.
கேட்க காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று நம் தேவன் போதிக்கிறதை அறிவோமே.. நாம் அடுத்தவரை நிச்சயம் வற்புறுத்த தேவையே இல்லை.. ஆனால் சுவிஷேசம் சொல்வோம்..
you wrote ///தாங்கள் என்னுடய கருத்தில் ஒன்றை எடுத்து தவறு என்று தீர்த்தால் அதன் தொடர்ச்சியாக வசனத்தின் அடிப்படை யில் பல கேள்விகளும் அதை தொடர்ந்து மன வருத்தங்களுமே உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் நடப்பு என்பது ஒன்றின் தொடர்ச்சியே இன்னொன்று!////
வசனங்கள் அநேகம் உண்டு.. அநேகர் தங்கள் விருப்பத்தின்படி வசங்களை முன் நிறுத்தி தேவனுடைய பிரசன்னத்தில் நடுநிலை மனதோடு வேதம் கற்றுகொள்ளவதில்லை..இதனால் வசனத்தை இச்சை போல் துணிகரம் கொண்டு வளைக்கவும் செய்கின்றனர்..
நாம் வசனத்தை பற்றிய விசுவாசத்தை தேவனிடத்தில் கற்று பெரும் பொது வருத்தம் தேவை இல்லை சகோதரரே.. அதற்கு அவசியமுமும் இருக்காது..நாம் அவருடைய மகிமையை தேடாமல்,நம் மகிமையை பெரிதென எண்ணி தவறான நம்பிக்கை கொள்ளகூடாது.அவ்வாறு இருந்தால் உண்மை ஊழியர்களாய் நாம் இருக்க முடியாது
என் புரிதலின் படி,
புதிய விசுவாசத்திற்கும் புதிய மனம் வேண்டும்.. பழைய மனிதனால் புதிய வெளிப்பாடுகளை பெறமுடியாது...
மத்தேயு 9:17 புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதுமில்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்; அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
வெளியரங்கமான ரகசியம் இல்லை என்று வேதம் சொல்கிறது..
மறைபொருளை வெளிபடுத்தும் தேவன் நம் எல்லோரோடும் இருப்பாராக...
சகோதரர் ஜான்12 அவர்களின் பொறுமையான பதில்கள் என்னை மிகவும் கவருகிறது. ஆரோக்கிய உபதேச கிறிஸ்த்தவர்கள் என்பப்படுகிரவர்கள் யாரும் இந்த தளத்துக்கு வந்து எழுதவோ தங்கள் விசுவாசத்தையோ முன்வைக்க விருப்பம் இல்லாமல் இருப்பதோடு தங்கள் எதிர்ப்பை இடக்காகவும் கேலியாகவும் பதிவிட்டு பின்னர் மனமடிவுகள் உண்டாகும் நிலைக்குள் கடந்து செல்லும் நிலையில், தங்கள் போன்றவர்களின் நிதானமான ஆழமான பதிவுகள் வரவேற்கதக்க ஒன்றே.
நான் முறையாக வேதாகம கல்லூரியில் பயின்ற்றவனோ அல்லது எந்த உபதேசப்பிரிவின் கீழ் இருந்தவனோ அல்ல. கோவிலுக்கு கிடா வெட்டும் இந்துவாக இருந்த எங்கள் குடும்பத்தில் என் தம்பியை தேவன் முதலில் பிரித்தெடுத்தார். அவன் அப்படியே மாரநாத சபையில் அனேக நாட்கள் கர்த்தரின் வேலைக்காரனாகவும் பாஸ்டரின் வேலைக்காரனாகவும் இருந்து தேவனின் பற்றி பயின்று தற்போது ஒரு தனி சபையின் பாஸ்டராக இருக்கிறான்.
அதை தொடர்ந்து சுமார் 5 வருடங்களுக்கு பிறகு, யார் சொன்ன சுவிசேஷத்தையும் கேட்காமல், மும்பையில் பாவ சேற்றில் உழன்று கொண்டிருந்த என்னை தேவன் எதிர்பாராத விதமாக அபிஷேகித்தது பவுலுக்கு நேர்ந்த சம்பவத்துக்கு ஒப்பாகவே இருந்தது. ஆனால் பவுலை சந்தித்தது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து, என்னை அபிஷ்கித்தது தேவ தேவ ஆவியானவர். அதன்பின்னர் நானே வேதத்தை ஒரு வெறியோடு நான்கு முறை முழுவதும் படித்தேன். தேவன் என்னோடு
பேசினார். அனேககாரியங்களை வெளிப்படுத்தினார். எனது வீட்டுக்கு பல
பாஸ்டர்கள் மற்றும் ஊழியர்கள் வருவார்கள் அவர்களுடன் எல்லாம் நான் அமர்ந்து அதிக நேரம் சம்பாஷிப்பேன் எனது தம்பியுடனும் நான் பல காரியங்கள் குறித்து விளக்கம் கேட்பேன். பல கருத்துக்கு தெளிவான விளக்கம் கொடுக்கும் அவர்கள் சில அடிப்படை கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அது மறைபொருள் அதை ஆராயக்கூடாது என்று சொல்லி விடுவார்கள்.
சரியான ஆரம்பம் தெரியாத ஒருநிலையில் அதன் முடிவை கணிப்பது சுலபம் அல்ல! அதுபோல் அஸ்திபாரத்தை ஆராயாத நிலையில் கட்டிடத்தின் உறுதி குறித்து பேசுவது சாத்தியம் இல்லை! என்று நான் எண்ணியதால் எனக்கு பதில் தெரியாத எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்தால் மட்டுமே ஒரு முழுமையான விசுவாசத்துக்குள் நடக்க முடியும் என்ற கருதினேன்.
இந்நிலையில் தேவன் சொல்லிய இந்த வசனம் என்னை அதிகம் கவர்ந்தது:
எரேமியா 33:3என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
அத்தோடு
சங்கீதம் 91:15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்;
"நான் மறு உத்தரவு அருளிசெய்வேன்" என்றும் தேவன் சொல்வதால், தேவனின் பாதத்தில் சென்று அமர்ந்து உண்மையை தெரிவிக்கும்படி அதிகமாக மன்றாடினேன். ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் எப்பொழுதும் அந்த வசனம் பற்றிய தியானத்தில் தேவனை கேட்டு கொண்டே இருப்பேன் ஓரிரு நாளில் தேவன் என் மன எண்ணத்திலோ அல்லது ஒரு சம்பவத்தின் மூலமோ அல்லது வேறு ஒரு நபர் மூலமோ உண்மையை உணர்த்துவார்.
இவ்வாறு எனக்கு இருந்த சந்தேகங்கள் எல்லாவற்றையும் தேவனை கேட்டு தெரிந்து கொண்டாதாலும் கிறிஸ்த்தவத்தில் எனக்கு பல பிரிவு சகோதரர்களுடன் தொடர்பு இருப்பதால் ஒருவர் சொல்லும் கருத்தை இன்னொருவர் மறுப்பதாலும் நான் மனுஷர்களிடம் கருத்து கேட்கும் நிலையை முற்றிலும்தவிர்த்து எல்லா சந்தேகங்களையும் தேவனிடமே
கேட்கும் ஒரு நிலைக்குள் சென்று விட்டேன். நானும் ஒரு குறிப்பிட்ட சபைக்கு போகிறவன்தான் ஆனால் பொதுவான கிறிஸ்த்தவ விசுவாசம் என்னவென்பது கூட எனக்கு சரியாக தெரியாது. அத்தோடு அதைபற்றி அறிந்து கொள்ளவும் எனக்கு ஆவல் இல்லை.
ஆண்டவர் என்னிடம் "உன்னுடைய விசுவாசம் பற்றி கேட்பவர்களுக்கு மட்டும் விளக்கம் சொல் மற்றபடி பொதுவான கிறிஸ்த்தவர்களிடம் விவாதம் பண்ணாதே"என்பதுபோல் சொல்லி பலமுறை கடிந்துகொண்டு சொல்லி அதற்க்கு காரணத்தையும் சொல்லி விட்டதால் தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் எழுதிய நான் அங்கிருந்து விலகிவந்து இங்கு எழுதுகிறேன்.
நான் தங்களின் எந்த கருத்தையும் எதிர்க்க விரும்பவில்லை, ஆனால் என்னை நம்புவதும் நம்பாததும் தங்கள் விருப்பம். எனது கருத்துக்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தாராளமாக கேட்கலாம் அத்தோடு தேவன் தெளிவாக உணர்த்தினால் அன்றி தங்களின் கருத்துக்கள் எதையும் விட்டுவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
தங்களை நான் மதிக்கிறேன்! எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
அன்புடன்
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னை பற்றிய தங்களின் நினைவுகளை பதிந்துள்ளீர்கள்.கர்த்தருக்கு மகிமை உண்டாகுக.
கர்த்தரையும் அவர் காண்பிக்கும் ஆட்களையும் தவிர நான் சுயமாக எவரையும் நம்ப மனம் இல்லை.நம்ப யாரையும் விடுகிரதுமில்லை!!
நம்முடைய தேவன் நமக்கு வெளிபடுதியவாறே நம்மில் எத்துனை பேர் கருத்துகளை பதிகிறோம்.நம் அறிவு குறைவுள்ளதே!!
அனேக சபைகளில் இன்று அனலட்ற,அவலட்சணமான மனித கற்பனைகள் தேவனுடைய இடத்தில வைக்கபடுகின்றன..
நான் பரலோகத்திற்கு எழும்பினேன்,ஆத்மா கீழே இறங்கிற்று,ஆவி மேலே எழும்பிற்று,சரீரம் செத்தவனை போல் விழுந்திற்று என அப்போஸ்தலர்களை போல தங்களை கிறிஸ்துவின் சாயலாக காண்பிப்பார்கள்.
ஆனால் சொந்த வாழ்கையில் இவர்களுக்கு தேவமகிமை இருக்காது,ஊழியத்திலும் இருக்காது..இவர்களுக்கு கனவே தேவன்..
தாவீது இதனால் தான் சங்கீதம் 34:8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;
என்கிறார்..
கனவில் எப்படி ருசிப்பது..நானும் அனேக ஊழியர்களை கண்டிருக்கிறேன்..சொந்த வார்த்தைகளை பேசி வெளிப்பாடு என்பார்கள் சகோதரரே..
ஒவ்வொரு நேரத்திலும் என் தேவன் இவர்களுக்கு வெளிப்பாடுகளை கொடுப்பதை தவிர வேறு வேலை அற்றவராக இருக்கிறார் என எண்ணிகொள்ளுகிறார்கள் போலும்!!
ஆவியானவரை காண முடியாது என அநேகர் வியாக்கியானம் செய்து இன்றைக்கு போதிகிரார்கள்.அவர் வெறும் வல்லமை என்கிறார்கள்.
ஆவியானவருக்கு உருவம் உண்டு..அதனால் தான் வேதத்தில் பின்வரும் வசனம் எழுதபடவேன்டியாதாயிற்று..
யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
நம் சுவாப பலவீனங்களில் பிசாசானவன் நுழைந்து தவறான வெளிப்பாடுகளை தந்து குருட்டாட்டம் பிடிக்க செய்கிறான்..இதனால் தான் நம் தேவன் நம்மில் தமது முகத்தை பிரகாசிக்க செய்வதும்,மன கண்களை பிரகாசிக்க செய்வதும் அவசியமாகிறது..
நம் தேவன் நமது கற்பனைகளுக்கும் தாங்கள் கூறுவது போல அப்பற்பட்டவரே..
அனைவரும் பொதுவான கிறிஸ்துவர்கள் தான் சகோதரரே!! நான் என்னை விஷேத்திவன் என எண்ணினால் அநேகருக்கு நான் இயேசு கூறியபடி உடன் வேலைகாரனாக இருக்கவேண்டும்..நான் இன்னும் அந்த நிலையில் இல்லை...
தேவனுடைய நுகத்தை சுமக்காமல் நான் என்னை தேவனது பார்வையில் விசேஷிதவன் என கூரிகொள்வதும் தவறு தானே!!
ஆசாரியர்களின் வாயில் தேவனுடைய வார்த்தைகளை தேடுவார்கள் என வசனம் உள்ளது.தேவன் நம்மை ராஜாக்களும்,ஆசாரியர்களுமாகினார் என்பதாகவும் வசனம் உள்ளது..
ஆனால் நிறைய சபைகளில் அவர்கள் அறியாமலே மனித கற்பனைகள் தேவனுடைய இடத்தை பிடித்து கொண்டன.
போதகர்கள் வாயிலும் தவறான வசன வியாக்கியானம்,தவறான போதகம்,மனித கற்பனை,மாய்மால அழுகை போன்றவை காணபடுகின்றன.வசனம் காணபடுகிரதில்லை .
இவர்களில் சிலர் பரிசுத்த ஆவி இறங்கி வரவும் கட்டளை கொடுகிறார்கள்!!-ஆச்சர்யம்!!
தங்களுக்காக நிச்சயம் ஜெபிக்கிறேன். சகோதரர் என்னுடன் இந்த பாரத்திற்க்காக ஜெபியுங்கள்.தங்களுடன் இக்கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தோன்றியது.ஆகவே பகிர்ந்தேன்.
நம்மால் கூடுமானவரை அழிவின் அக்கினியில் இருந்து சகோதரர்களை மீட்போம்.அது தேவனுக்கு சித்தம்.
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!
-- Edited by JOHN12 on Tuesday 21st of February 2012 02:04:23 PM