ஒருமனிதன் ஆசீர்வாதம் பெறுவதிலோ அவனுக்கு ஐஸ்வர்யத்தையும் ஆச்சீர்வாதத்தையும் சம்பாதித்து அவன் அருமையான ஒரு வாழ்க்கை வாழ்வதிலோ ஆண்டவருக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் கிடையாது. தம்மைவிசுவாசிக்கும் மக்களை அதிகமாக ஆசீர்வதிப்பதே தேவனுக்கு பிரியம் என்பதை நாம் அறியமுடியும்!
அதாவது தான் உண்டாக்கிய மனுஷர்கள் எல்லோருமே எல்லா வற்றிலுமே சுகமாக வாழ்ந்து சுகித்திருக்க வேண்டும் என்றுதான் தேவன் வாஞ்சிக்கிறார். அதன்படி எல்லாவிதமான ஆசீர்வாதங் களையும் அவர் நித்தியத்தில் நமக்காக வைத்து வைத்திருக்கிறார்.
ஆனால் இந்த கடைசிகால உலகத்தை பொறுத்தவரை அந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் காலம் இதுவல்ல என்பதே என்னுடய கருத்து. இந்த கடைசி காலத்தில் நாம் சேர்த்துவைக்கும் ஒவ்வொரு பொக்கிஷமும் நமக்கு நன்மைகளை தருவதைவிட அது நமக்கு எதிரான சாட்சிகளாகவே இருக்கும் என்று வேதம் சொல்கிறது!
யாக்கோபு 5:3உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
இது ஒரு சாதாரண வசனம் அல்ல! இதை ஆழ்ந்து தியானித்தால் நாம் இந்த காலத்தில் பொக்கிஷம் சேர்ப்பதை நிச்சயம் விரும்பமாட்டோம். நம் போன்ற எத்தனையோ சக மனுஷர்கள் ஆண்டவரை அறியாமல் அழிந்து பாதாளத்தை நோக்கி போய்கொண்டு இருக்கையில் அவர்களுக்காக பரிதபித்து தேவன் காட்டியவழியில் எல்லாவற்றையும் இழக்க துணிந்து இயேசுவுக்கு பின்செல்லாமல், நாம் சுகமாக சம்பிராதயமாக வாழ்ந்தால் நாளை நிச்சயம் நம்மேல் பழிவிழும் என்றே நான் கருதுகிறேன்.
எஸ்தர் 4:14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே,யாருக்குத் தெரியும்,
இந்த காலத்தில் நம்மிடம் இருக்கும் பொக்கிசங்களை பயன்படுத்தி அநேகரை ஆண்டவருக்குள் திருப்புவதக்காகவே நமக்கு சில பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேவன் அருளியிருக்கிறார். அதை நாம் ஆண்டவருக்காக பயன்படுத்தாமல் நமது சுயநலனுக்காக பயன் படுத்தினால் நிச்சயம் நம்மேல் நாளை கேள்வி எழும்பும். அதையே நாம் ஆண்டவராகிய இயேசுவும் நமக்கு சொல்கிறார்!
எனவே சகோதரர் அவர்களே! இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களை அல்லது செல்வங்களை மனுஷனுக்கு அள்ளி கொடுப்பது தேவனுக்கு பிடிக்காத காரியம் அல்ல! பிடிவாதமாக சிலர் உலக ஆசீர்வதத்துக்காக ஜெபிக்கும் போது தேவன் அதையும் அவர்களுக்கு கொடுக்கத்தான் செய்கிறார். ஆனால் அவ்வித உலக ஆசீர்வாதங்கள் இந்த கடைசிகால உலகத்தில் ஒருமனுஷன் சுகித்திருப்பதர்க்கு அவர்களுக்கு வழி காட்டுவதைவிட அவர்களின் இடருதலுக்கு கண்ணியாக அமையும் என்பதால் தேவன் தயங்குகிறார் என்பதே எனது கருத்து!