மத்தேயு7 அதிகாரம்:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
வேதம் தெளிவை சொல்லுகிற படி ... தேவ சித்தம் செய்யாமல் பரலோகம் செல்ல இயலாது.. எனவே சகோதர சகோதரிகளே நாம் தேவ சித்தம் என்றல் என்ன ?தேவ சித்தம் செய்வது எப்படி? எனபதை விவாதிப்பது மிக நல்லது ... அனைவரின் ஜீவியத்திற்கும் பிரயோஜனமாய் இருக்கும்....
மத்தேயு7 அதிகாரம்:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
வேதம் தெளிவை சொல்லுகிற படி ... தேவ சித்தம் செய்யாமல் பரலோகம் செல்ல இயலாது.. எனவே சகோதர சகோதரிகளே நாம் தேவ சித்தம் என்றல் என்ன ?தேவ சித்தம் செய்வது எப்படி? எனபதை விவாதிப்பது மிக நல்லது ... அனைவரின் ஜீவியத்திற்கும் பிரயோஜனமாய் இருக்கும்....
சரியான ஒரு வழிகாட்டுதலை முன் வைத்துள்ளீர்கள் சகோதரரே.
ஆண்டவராகிய இயேசு "பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்" என்றுமிக தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்நிலையில் பிதாவின் சித்தம் என்ன அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை நாம் அறிதல் அவசியம்.
இந்த தளத்தில் ஏற்கெனவே நாங்கள் தேவனின் சித்தம் குறித்த கருத்துக்களை தியானித்து பதிவிட்டுள்ளோம். அவற்றிக்கான தொடுப்புகளை இங்கே தருகிறேன்.
1) நாம் தேவ சித்தம் அறிந்து கொள்வதே தேவனுக்கு சித்தம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் ,..
எபேசியர் 5:17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
2)எங்கும் எல்லா விதத்திலும் அன்பு செய்வது தேவ சித்தம்
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.மத்தேயு5:44
I யோவான் 2:10 தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.
3)விசுவாசிப்பது தேவனுக்கு சித்தம்:
விசுவாசிக்காமல் கர்த்தருக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்று வேதம் சொல்கிறது...
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
அவன் கர்த்தர் தனக்கு சொல்லிய இடத்திற்கு போகும்படிக்கு தன் வீட்டை விட்டு புறப்பட்டான்!!
ஆனால் யோனத்தான் தன் நண்பன் தாவீது ராஜாவாக அபிஷேகபட்டவன் என அறிந்தும்,..
நீர் ராஜாவாய் இருப்பீர் , நானா உமக்கு இரண்டாவதாய் இருப்பேன் என உடன்படிக்கை செய்த பின் தாவீதுடன் தரித்திருந்து துக்கம் அனுபிபதை விடுத்தது ,காட்டில் அவனுடன் இருக்க விருப்பம் இன்றி அரன்மனைக்கு போனான். தாவீதுடன் துன்பம் அனுபவிக்க அவனுக்கு கடினமாய் இருந்தது.. அவன் உடன்படிக்கை உத்தமமாய் இருந்தாலும், அவன் ஐஸ்வர்ய இச்சை மற்றும் அவிசுவாசம் உடன்படிக்கையை முறித்து அவனை சவுளுடன் மரிக்க வீழ செய்தது ..பின் வரும் வசனங்களை கவனிக்க...
I சாமுவேல் 18:3 யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள்.
I சாமுவேல் 23:18 அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.
4)நீதியின் நிமித்தம் கட்ட படுவதும் அடிக்க படுவதும் தேவனுக்கு சித்தம்..
அப்போஸ்தலர் 21:13,14. அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்..
II தெசலோனிக்கேயர் 1:12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
1)ஜபங்களின் வாயிலாக தேவசித்தம் அறிந்து கொள்ள முடியும்..
அப்போஸ்தலர் 22:17 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
மத்தேயு 6:6 நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
2)வேத தியானத்தின் போது தேவசித்தம் அறிந்து கொள்ள முடியும்..
ஆதியாகமம் 24:63 ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான். ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது,ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள்.
சங்கீதம் 39:3 என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
3)நற்கிரியை செயும் போது தேவசித்தம் வெளிப்படும்(உபசரிப்பு )..
எபிரெயர் 13:2 அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
I பேதுரு 4:9 முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
ஊழியர்கள் மற்றும் தேவ தூதர்கலை உபசரிக்கும் பொது தேவ சித்தம் வெளிப்படும்
4)கண்கள் திறகப்படும்போது தேவசித்தம் வெளிப்படும்
எண்ணாகமம் 24:3 அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
எண்ணாகமம் 24:4 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும் போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது,
எண்ணாகமம் 24:15 அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
எண்ணாகமம் 24:16 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;
இங்கு தேவசித்தம் இஸ்ரவேலரை ஆசிர்வதிப்பதே என்று பிலயாம் கண்டுகொண்டான்
5)தீர்கதரிசனத்தின் போது தேவசித்தம் வெளிப்படும் ..
I இராஜாக்கள் 16:13கர்த்தர்தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.
I இராஜாக்கள் 20:13 அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
6)அடையாளங்களின் மூலம்தேவ சித்தம் வெளிப்படும் ..
சங்கீதம் 74:9 எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
I சாமுவேல் 2:34 ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள்.
I சாமுவேல் 10:7 இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார்.
மத்தேயு 16:3 உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
7)பரிசுத்த ஆவியானவரால் நிறையும் போது தேவசித்தம் வெளிப்படும்
அப்போஸ்தலர் 2:33 அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.(ஆதியாகமம் 19 :19 ,20 )
இதனால் தான் ஏசுவும் நீங்கள் குழந்தையை போல மாற விடில் விண்ணரசில் நுழய மாடீர்கள் என்றார்.
அப்போஸ்தலர் 1:8பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
9)ஊழியர்களால் தேவசித்தம் வெளிப்படும்:
1சாமுவேல்28:15. சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
10)தரிசனம் மற்றும் சொப்பனங்களால் தேவசித்தம் வெளிப்படும்
I சாமுவேல் 3:21கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.
ஆதியாகமம் 20:3 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
ஆதியாகமம் 20:7 அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.
ஆதியாகமம் 37:5 யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
-- Edited by JOHN12 on Wednesday 7th of December 2011 11:31:51 AM