(சகோதரர் அவர்களே தங்களின் கேள்விக்கு ஒரு விரிவான பதிலை எழுதவேண்டும் என்று விரும்பி இருந்தேன் ஆனால் வேலை பளு விநிமித்தம் தடை ஏற்ப்பட்டுவிட்டது. ஆகினும் தங்களின் புரிதலுக்காக ஒரு சிறிய ஹிண்ட் தருகிறேன் அதை முடிந்த அளவு டெவலப் பண்ணி கொள்ளுங்கள்.)
திருச்சபை ஓர் முன்னுரை.
திருச்சபை என்பது ஒரு இடத்தையோ அல்லது கட்டிடத்தையோ குறிக்காமல், ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பை பெற்ற விசுவாசிகளை ஐக்கியத்தையே குறிக்கிறது. சபையை பற்றி வேதம் குறிப்பிடுகையில் "தேவன் தான் சுய இரத்தத்தால் சம்பாதித்தது" என்று கூறுவதால், திருச்சபையில் அங்கம் வகிப்பது என்பது அவசிய மானதும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும், காரணம் இரட்சிக்க பட்ட மக்களை கர்த்தர் சபைக்குள் கொண்டுவந்து மீட்பதுதான் தேவனின் திட்டம். மேலும் சபையானது கிறிஸ்த்துவின் சரீரமாக இருப்பதால் கிறிஸ்த்துவே சபைக்கு தலையாக இருந்து சபையை பாதுகாத்து போஷித்து நடத்துகிறார்.
ஒரு சபைக்குள் வாலிபர்கள், கன்னிகைகள், ஸ்திரிகள், முதிர்வயதினர் ஆகியவர்களோடு உடன்வேலைக்காரர்கள் போதகர்கள், தீர்க்க தரிசிகள், மூப்பர்கள் போன்ற பல்வேறு அங்கத்தினர்கள் இடம்பெற்றிருந்தாலும் திருசபையில் ஒரு வாலிபரின் பங்கு என்னவென்பதை மட்டும் நாம் ஐந்து தலைப்புகளில் பார்க்கலாம்.
1. சபை வளர்ச்சியில் வாலிபரின் பங்கு,
சபை வளர்ச்சியில் வாலிபர்களின் பங்கு என்பது மிக முக்கியமானது. சபையின் வளர்ச்சிக்காகவும் சாத்தானின் கிரியைகள் சபைக்குள் இடம் பெறாமல் தடுப்பதர்க்காகவும் சபைக்காக மன்றாடி ஜெபிபதொடு தங்களால் முடிந்த அளவு தாராளமாக விருப்பத்தோடு கொடுப்பதற்கும் முன்வருதல் அவசியம்.
2. சபை கூடுதலில் வாலிபரின் பங்கு
சபை கூடுதலில் வாலிபர்கள் தவறாமல் பங்கு கொள்வது அவசியம் என்பதோடு ஆராதனை நேரங்களில் பாட்டு பாடுதல், ஜெபித்தல், வேதம் வாசித்தல் மற்றும் விசுவாசிகளை ஆவிக்குள்ளாக வழிநடத்துதல் போன்ற ஆவிக்குரிய காரியங்களில் போதகர் மற்றும் மூப்பர்களுக்கு உதவியாய் இருப்பது அவசியம்.
3. ஆத்தும ஆதாயத்தில் வாலிபரின் பங்கு.
ஆத்தும ஆதாயம் என்பது எல்லா விசுவாசிகளின் மேலும் இருக்கும் கடமை என்றாலும் வாலிபர்களுக்கு அதில் விசேஷ பங்கு உண்டு.
தாங்கள் அடிக்கடி சந்திக்கும் நபர்களிடம் ஆண்டவரை பற்றி சொல்வதோடு கைப்பிரதி வழங்குதல் போன்ற ஊழியங்களை செய்து
ஆத்தும ஆதாயம் செய்யலாம்.
4. சபை பராமரிப்பில் வாலிபரின் பங்கு
சபையின் பராமரிப்பு காரியங்களாகிய ஆராதனை ஒழுங்குகள், சபை பராமரிப்பு காரியங்கள் மற்றும் திருவிருந்து ஆராதனை போன்றவை களுக்கு தாங்களாக முன்வந்து தங்களால் இயன்ற அளவு பணிகளை தேவனுக்காக செய்தல் அவசியம்
திருச்சபைக்குள் இருக்கும் வாலிபர்கள் தங்களை விட மூத்த விசுவாசிகள் மற்றும் போதகர்கள் மூப்பர்களுக்கு கீழ்படிதலோடு நடப்பதோடு, அவர்களுக்கு தேவையான எல்லா காரியத்திலும் உதவி செய்ய முன்வரவேண்டும். செய்யும் காரியங்களில் முறுமுறுப்பில்லாமல் அன்போடும் தேவனுக்கு செய்யும் பணியாகவும் கருதி செய்தல் அவசியம். காலம் வரும்போது தேவனே அவர்களை உயர்த்துவார்.
முடிவுரை:
சபையை பற்றி ஆண்டவராகிய இயேசு பேதுருவிடம் குறிப்பிடுகையில்
"இந்தக்கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை". என்ற மேன்மையான வாக்குதத்தை கூறியிருக்கிறார். அதாவது சபைக்குள் இருக்கும் ஒருவரை பாதாளம் மேற்கொள்ள முடியாது அவர் மரித்தபின் பாதாளத்தில் இறங்குவது இல்லை. மற்றவர்களோ மரித்தபின் வேதனை மிகுந்த பாதாளத்தை சென்றடைகின்றனர்.
மேலும்"திருச்சபை"என்பது இந்தபூமியில் தற்போது இருக்கும் எந்தஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தையும் குறிக்காது, பரலோகத்தில் தேவனின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதபட்ட மொத்த தேவ பிள்ளைகளின் கூட்டத்தையே குறிக்கும், அவர்கள் இந்தஉலகத்தில் வெவேறு பிரிவான சபைகளில் இருக்க வாய்ப்பிருக்கிறது எனவே எந்த ஒரு சபை பிரிவையும் நாம் அற்பமாக எண்ணாமல் அன்போடும் சகோதர சிநேகத்தொடும் நடந்துகொள்வது அவசியம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)