அமாவாசை காரிருள் எங்கும் கருப்போ போர்வை போல போர்த்திருந்தது, மின்சாரம் இல்லாத காரணத்தால் ஒரு துளி வெளிச்சத்தை கூட காண முடியவில்லை சமீபத்தில் பெய்த மழையால் எங்கும் சேரும் சகதியும் நிரந்த ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்த ஒருமனுஷன் தான் எங்கே மிதிக்கிறோம் அடுத்து என்ன வரப்போகிறது என்பது தெரியாமல் தட்டு தடுமாறி விழுந்து எழுந்து வேதனைபட்டு அந்த இருளில் நடந்துகொண்டு இருந்தார். அவர் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெறும் காரிருள்தான் இருந்தது!
ஆம்! இதுதான் இன்றைய உலக மக்களின் நிலை!
தாங்கள் எதற்கு பிறந்தோம் ஏன் வாழ்கிறோம், தன்னை குறித்த தேவ திட்டம் என்ன? இந்த வாழ்க்கைக்கு பிறகு என்ன நடக்கும் நாம் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற எந்த ஒரு காரியம் குறித்த வெளிச்சமும் இல்லாமல் எந்தனையோ கோடி மக்கள் இந்த உலகில் பிறந்து, மிருகங்கள் போல தாங்கள் மாம்ச தேவையை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்பட்டு மரிக்கிறார்கள்.
இப்படி இருளில் வழிதெரியாமல் பயணிக்கும் மக்கள் ஒரு பேரொளியை கண்டால் எப்படி சந்தோசப்படுவார்கள். அதுபோலதான் அன்று இருண்ட காலத்தில் இருந்த இஸ்ரவேலரிடையே ஆண்டவராகிய இயேசு ஒரு ஒளியாக இந்த பூமியில் தோன்றினார். அவர் இஸ்ரவேலருக்கு மட்டும் அல்ல உலகத்துதை எல்லாம் பிரகாசிக்க செய்யும் ஒளி அவர்தான் எபதை அவரது வார்த்தைகள் மற்றும் வாழ்கையை ஆராய்ந்தால் நாம் சுலபமாக புரிந்துகொள்ள முடியும். ஆண்டவராகிய இயேசு செய்த அனேக காரியங்களை இருளில் இருந்த ஜனங்களுக்கு ஒரு பிரகாசமான ஒளியாகவே இருந்தது, இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று வேதம் சொல்கிறது.
மத்தேயு 4:15இருளில்இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்;
ஆம்! இயேசுவை பின்பற்றும் எவனும் எங்கு போகிறோம் என்ன செய்கிறோம் எபதை அறியாமல் இருளில் நடக்கும் மனுஷனாக இராமல் தன்னை பற்றிய ஒரு நிதாநிப்பை நிச்சயம் கொண்டிருப்பான்
யோவான் 12:46என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
யோவான் 8:12மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
இவ்வாறு எள்ளளவேனும் இருளில்லாத தேவனிடத்தில் இருந்து வந்த ஒளியாகிய கிறிஸ்த்து தான் மட்டும் பிரகாசிபதொடு நின்றுவிடாமல் தன்னை பின்பற்றும் மனுஷர்களை பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு சொல்கிறார்:
மத்தேயு 5:14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
சூரியனின் ஒளியை வாங்கி பிரதிபலிக்கும் சந்திரனை போல உலகத்துக்கு ஒளியாய் வந்த ஆண்டவராகிய இயேசுவின் மகிமையை தன்னுள் கொண்ட ஒவ்வொரு மனுஷனும், உலகத்துக்கு வெளிச்சமாக இருக்க முடியும். அவர்கள் தன்னில் இருக்கும் வெளிச்சத்தின் மூலம் இருளில்இருக்கும் அனேக ஜனங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது ஜீவ ஒளியை நோக்கி திருபுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஆவல்!
கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து பார்க்கலாம்......
-- Edited by SUNDAR on Saturday 10th of December 2011 11:08:42 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)