இந்த உலகத்தில் மனுஷனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே எந்த முயற்ச்சியும் நிபந்தனையும் இல்லாமல் எங்கும் சுலபமாக வரும் அழைப்பு ஓன்று உண்டு என்றால் அது பாவம் விடும் அழைப்புதான். அது ஏழை பணக்காரன் என்று பார்ப்பதில்லை, ஆண்/பெண் என்று பார்ப்பது இல்லை, படித்தவன் படிக்காதவன் என்று பார்ப்பதில்லை! பாவத்தை தேடி நாம் எங்கும் ஓடவேண்டிய அவசியமே இல்லை பாவத்தை செய்ய சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தானாகவே நம்மை தேடிவரும். நம்மில் பரிசுத்தத்தை காத்துகொள்ளதான் நாம் போராட வேண்டுமே தவிர பாவம் செய்வதற்கு பெரிய போராட்டம் எதுவும் தேவை இருக்காது.
வீட்டில், வெளியில், வேலை ஸ்தலத்தில், பயணத்தில், தூக்கத்தில் என்று எல்லா சூழ்நிலைகளிலும் பாவம் செய்வதற்கான அழைப்பு நமக்காகவே காத்திருக்கிறது. நாம் அதை விட்டு எத்தனை முறை விலகி நடந்தாலும் அது நம்மை விடாமல் அழைத்துக்கொண்டே இருக்கிறது. அதில் வீழ்ந்து போனவர்கள் ஆயிரமாயிரம்பேர் என்றாலும் அதை விலக்கிதள்ளி விட்டு ஓடியவர்களும் ஒரு சிலர் உண்டு!
யோசேப்பு! சௌந்தர்யமுள்ள ஒரு இளைஞன். போத்திபார் என்னும்
எகித்திய முதலாளி வீட்டில் அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கும் போது அவனுக்கு பாவத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
ஆதியாகமம் 39:7அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.
அவனுடய எஜமானனின் மனைவியே அவளோடு சயநிக்கும்படி அழைத்தாள். மிகப்பெரிய இடத்து பெண்! ஒருவேளை யோசேப்பு அந்த பாவத்துக்கு உடன் பட்டிருந்தால் அவனுக்கு தேவையானது எல்லாமே கூட கிடைத்திருக்கலாம். ஆனால் யோசேப்போ அந்த பாவத்துக்கு உடன்பட்டாமல் அவனுக்கு நேராக வந்த அழைப்பை நிராகரித்து அவளை விட்டு விலகி ஓடினான்.
ஆதியாகமம் 39:12 , என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.
"நல்லவனுக்கு காலம்இல்லை" என்பதுபோல் செய்யாத குற்றத்துக்காக யோசேப்பு சில காலம் சிறையில் அடைக்கபட்டாலும் காலம் வந்த போது தேவன் அவனை எண்ணிமுடியாத ஒரு பெரிய நிலைக்கு உயர்த்தினார். அவன் மரணம்அடையும் நாள் வரையில் அவன் மகிமை
குறையாமல் வாழ்ந்தான்.
பாவத்தின் அழைப்பை நிராகரித்து எப்படி விலகி ஓடவேண்டும்
என்பதற்கு யோசேப்பு ஒரு நல்ல உதாரணம்!
தாவீது!
மிகப்பெரிய ராஜாவாகிய தாவீதின் காரியத்திலோ நடந்தது வேறு அவனுக்கும் பாவத்திடம் இருந்து அழைப்பு வந்தது. உரியா என்னும் அவனது படை வீரனின் மனைவியாகிய பத்சேபாள் என்னும் உருவத்தில் அவனை பாவம் அழைத்தது!
II சாமுவேல் 11:2ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.
பாவத்தின் கொடூர முகம் தெரியாமல் அற்ப சுகத்துக்காக பாவத்தை அவனே ஆள் அனுப்பி பாவத்தை வீட்டிருக்கு அழைத்து வந்தான்!
II சாமுவேல் 11:4அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்;
அந்தோ அதன் தொடர்ச்சியாக அவளின் கணவனான உரியாவை போர் முனையில் துணிகரமாக கொல்லும் நிலைவரை அவனை அழைத்த பாவம் ஆட்கொண்டு நடத்தியது. முதலில் ஒரு சிறிய காரியத்தை காட்டி அழைக்கும் பாவமானது அதை தொடர்ந்து வரும்
மேலும் பல கொடிய பாவங்களை கட்டாயம் செய்யவேண்டிய நிலைக்குள் நம்மை தள்ளிவிடும். அப்படியே தாவீதும் பாவத்தின் அழைப்புக்கு இணங்கி வீழ்ந்துபோனான்.
பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
என்று சொல்லி அறிக்கையிட்டு அழுது புரண்டு ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு பல தண்டனைகளை பெற்று எப்படியோ அதிலிருந்து
அவன் விடுபட்டது தனி சோக கதை!
பாவத்தின் அழைப்பில் வீழ்ந்து போககூடாது என்பதற்கு தாவீது ஒரு உதாரணமாக இருந்தாலும், பாவம் செய்துவிட்ட எப்படி தன்னை தேவனிடம் தாழ்த்தி அறிக்கையிட்டு மன்னிப்புகேட்டு கெஞ்சி விடுதல ஆகவேண்டும் என்பதற்கு தாவீது ஒரு முன்னுதாரணம் என்றே நான் கருதுகிறேன்!
பொறியில் இருக்கும் சிறியதான ஒரு உணவு துண்டை நாடி வரும் எலியானது எப்படி மாட்டிகொள்கிறதோ அதுபோல் பாவம் சிரிதாக தெரிகிறது என்று அதன் பக்கத்தில் சென்று பார்க்க வேண்டாம். அதை செய்த பிறகுதான் தெரியும் அதற்க்கு பின்னால் இருக்கும் பொறியானது நம்மையே அழித்துவிடும் என்பது. பாவம் இன்பமாக
இருக்கிறது என்று எண்ணி இடறலடைந்து போகவேண்டாம் இறுதியில் அது வேம்பாக கசக்கும்! எனவே பாவம் என்று மனதில் உறுத்தலை ஏற்ப்படுத்தும் எல்லாவித பொல்லாங்கான செய்கையை விட்டும் விலகி ஓடுவது மிக மிக அவசியம்!
I தெசலோனிக்கேயர் 5:22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் மிகவும் பாவத்தின் கட்டுக்களால்க் கட்டப்பட்டுள்ளேன் எனக்காக ஜெபிப்பீர்களா???
உங்களுக்காக நாங்கள் நிச்சயம் ஜெபிக்கிறோம் சகோதரரே ஆனால் Bro. johndanu அவர்களே நீங்கள் நம் சொந்த இரட்சகராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய கரத்தின் கீழ் வந்த பிறகு இன்னும்நான் பாவத்தால் கட்டபட்டிருக்கிறேன் என்று சாட்சி சொல்வது ஒரு சரியான அறிக்கை இல்லையே.
அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். I யோ 1:7
என்று வசனம் சொல்லும், இயேசுவின் இரத்தத்தின் வல்லமையை நீங்கள் அறியவில்லையா ? அதன்மேல் விசுவாசம் இல்லையா? பாவமன்னிப்பின் நிச்சயத்தை
நீங்கள் பெறவில்லையா? அப்படிஎன்றால் மீண்டும் மீண்டும் அதற்காக மன்றாடி பாவங்கள் கழுவப்படுதல் மிகவும் அவசியம்.
நம் தள சகோதரர்கள் ஒவ்வொருவரும் Bro. johndanu அவர்கள் பாவத்தின் பிடியில் இருந்து விடுபடவும் இறைவனின் இரக்கங்கள் அவரை தொட்டு வழி நடத்தவும் அவரவர் தனி பிரார்த்தனைகளில் நினைத்து கொள்ளுங்கள்.