இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம்-மீண்டும் ஒரு விவாதம்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
திரித்துவம்-மீண்டும் ஒரு விவாதம்
Permalink  
 


//தேவாதி தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக..// எனச் சொன்னது நீங்கள். இவ்வரியில் “தேவாதி தேவன்” யார் எனக் கேட்டால் “தேவாதி தேவன் என யாரை துதிக்க முடியும் சகோதரரே!!!” என என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்.

யாரை “தேவாதி தேவன்” என துதிக்கமுடியும் என்பது எனக்குத் நன்றாக தெரியும். நீங்கள் யாரை “தேவாதி தேவனாகத்” துதிக்கிறீர்கள் என்பதுதான் எனக்குத் தெரியவேண்டும்.

என் கேள்விக்கு நேரடியான பதில் சொல்லாமல், ஜெபத்தோட்ட பாடலைச் சொல்லி ஏதேதோ விளக்கம் சொல்கிறீர்கள். அதையெல்லாம் கேட்க நான் தயாரில்லை.

உங்கள் பதிலில் 4 வசன பகுதிகளைக் காட்டியுள்ளீர்கள். அவற்றில் எதிலுமே “தேவாதி தேவன்” யார் எனும் கேள்விக்குப் பதில் இல்லை.

மீண்டும் கேட்கிறேன்,

//தேவாதி தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக..//

எனும் வரியில் “தேவாதி தேவன்” என யாரைச் சொல்கிறீர்கள்?

பிதாவாகிய தேவனையா, குமாரனாகிய தேவனையா, பரிசுத்த ஆவியானவராகிய தேவனையா? உங்கள் கூற்றுக்கான வசன ஆதாரம் என்ன?



-- Edited by anbu57 on Friday 23rd of December 2011 05:37:28 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் இயேசுவின் வழியே பிதாவை துதிக்கும் பாடல் அது...

 


சகோதரர் அவர்களின் இந்த பதில் சரியானதும் ஏற்ப்புடையதுமாகவே இருக்கிறது.  

இயேசு நானே வழி என்று சொல்லியிருக்கிறார், அவர் வழியே தேவனை  ஸ்தோத்தரிக்கிறோம்  தொழுது கொள்கிறோம். தேவன்  ஆவியாய்  இருக்கிறார்.

தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்றார். யோ 4:24

தேவாதி தேவன் என்ற வார்த்தைக்குள் தேவனின் அனைத்து ஆள்த்துவங்களும் மொத்தமாக  அடங்கும் என்றே கருதுகிறேன்.  

 


__________________


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

////தேவாதி தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக..//

எனும் வரியில் “தேவாதி தேவன்” என யாரைச் சொல்கிறீர்கள்?


பிதாவாகிய தேவனையா, குமாரனாகிய தேவனையா, பரிசுத்த ஆவியானவராகிய தேவனையா? உங்கள் கூற்றுக்கான வசன ஆதாரம் என்ன?

//
கர்த்தாதி கர்த்தர் என்று யாரை சொல்லுகிறார்களோ அவர்தான் தேவாதி தேவன்

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

Mr.John12:

//தேவாதி தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக..//

எனும் வரியில் “தேவாதி தேவன்” என யாரைச் சொல்கிறீர்கள்?


பிதாவாகிய தேவனையா, குமாரனாகிய தேவனையா, பரிசுத்த ஆவியானவராகிய தேவனையா? உங்கள் கூற்றுக்கான வசன ஆதாரம் என்ன?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இளையவர்

Status: Offline
Posts: 27
Date:
Permalink  
 

முதலில் எந்த வசனத்தை படிப்போம் ... 
 
I யோவான் 5:7 [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
இப்படி மூவரும் ஒன்றாய்  இருக்க, இதில் யார் பெரியவர் என்பதில் குழப்பம்  என்ன?
 
உண்மையில் இயேசு, பிதாவின் பிள்ளையாய் இருக்க, இவர் இருவருவரில் யார் பெரியவர்
என்பதை விவாதிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை.
 
நம்முடைய பிள்ளையிடம், நான் உன்னைவிட பெரியவன், நீ என் பக்கத்தில் அமர தகுதி
உடையவன் அல்ல என்று கூறுவோமா?
 
அதனால் தான்  பிதா, இயேசுவை தன்னுடைய வலது பாரிசத்தில் அமர வைத்திருக்கிறார்.
 
இவர்கள் இடையில் எந்த பேதமும் இல்லை.
 
அதே போல பரிசுத்த ஆவியானவரும், பிதாவின் ஆவியால் உருவக்கபட்டிருக்கிறார் .
அதனால் இவர்கள்  இடையிலும் எந்த பேதமும் இல்லை.
 
இறுதியாக நான் சொல்ல வருவது என்னவெனில்...  
 
பிதா, குமாரன் , பரிசுத்த ஆவியானவர் இம்மூவரும் ஒருவரே..  
 
இருப்பினும் இயேசு சொல்லியது போல..
 
(என் பிதா  என்னிலும் பெரியவராக இருக்கிறார்)
 
இதற்க்கு ஆதாரமாக ஒரு வசனம்.
 
 யோவான் 14:28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
பிதா, குமாரன் , பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரில் பிதாவாகிய தேவன் பெரியவரே....

இருப்பினும் இவர்கள் இடையில் எந்த  விதமான பேதமும்(நான் பெரியவர், நீ சிறியவன் என்று) இல்லை. 

 




-- Edited by Sugumar S T on Saturday 24th of December 2011 02:25:04 PM

__________________

Sugumar Samuel T

யோவான் 8:32சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

SUGUMAR  WROTE  :
____________________________________________________________________________________
இறுதியாக நான் சொல்ல வருவது என்னவெனில்...  
 
பிதா, குமாரன் , பரிசுத்த ஆவியானவர் இம்மூவரும் ஒருவரே..  
 
இருப்பினும் இயேசு சொல்லியது போல..
 
(என் பிதா  என்னிலும் பெரியவராக இருக்கிறார்)
 
இதற்க்கு ஆதாரமாக ஒரு வசனம்.
 
 யோவான் 14:28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
பிதா, குமாரன் , பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரில் பிதாவாகிய தேவன் பெரியவரே....

இருப்பினும் இவர்கள் இடையில் எந்த  விதமான பேதமும்(நான் பெரியவர், நீ சிறியவன் என்று) இல்லை

___________________________________________________________________________________________________________

 

சகோ : சுகுமாரன் அவர்கள் சுருக்கமாக அருமையாக சொல்லிவிட்டார்

 
 
ஆம் தேவன் என்பர் ஒருவரே அவரே தன்னை பிரித்து செயல் படுகின்றார் அப்படி பிரிந்து  செயல் படுகையில் சில மாற்றங்கள் நிகழ்கின்றது அவர்களுடைய கிரியைகளின் அடிப்படைகளில்
 
 
தேவனின் வார்த்தையான  கிருஷ்துவே தேவன் என்னை விட பெரியவர் என்பதால் நாம் இயேசுவின் மேலுள்ள அன்பினால் எசுவுடைய வார்த்தையை நம்பாமல் இருப்பது முற்றிலும் தவறானது ஏனென்றால் இயேசு அனேக இடங்களின் தன பிதாவை பெரியவராக காட்டி இருக்கின்றார் இயேசுவின் மேல்  அன்பாய் இருக்கின்றவன் அவருடைய வார்த்தை நம்புவான்
 
 
இயேசு பிதாவின் வார்த்தைக்கு கீழ்படிய வேண்டும் என்பதற்காக அடிக்கும் உதைக்கும் அவமானத்திற்கும் அஞ்சாமல் 
பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக தன்னையே பலியாக அற்பநித்தும் இருக்கின்றார்
 
 
ஆனால் நாமே அந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் இயேசு பிதாவிற்கு சமம் இல்லை பரிசுத்த ஆவியானவர் பிதாவிருக்கு சமம்
என்று வாதி இட்டு கொண்டு இருக்கின்றோம்
 
 
 
இஸ்ரவேலுக்கு அன்று ஒரே தேவன் அதுவும் பெயரும் உருவமும் இல்லாத தேவன் ஆனால் இன்று நமக்கோ 3   தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் அதுவும் சிலுவை இயேசுவின் படம் என்ற உருவத்தோடு
 
 
 
கடைசியாக:
 
 
நமக்கு தேவனாகிய கர்த்தரே ஒருவரே  கடவுள் அவரை தவிர வேறொரு தெய்வம் இல்லை இவரே அவர் (இயேசு,பரிசுத்த ஆவி )
என்பதை புரிந்து கொண்டு சேனைகளின் கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள் அவரே ஆராதனைக்கு உரியவர்.........


-- Edited by EDWIN SUDHAKAR on Monday 26th of December 2011 11:34:39 AM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.அன்பு அவர்களே..

தேவாதி தேவன் என்பது யார்??-இதற்கு வசன ஆதாரம் ஏற்கனவே தந்துள்ளேன்..



Iகொரிந்தியர் 8 : 5 ,6. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

அனேக தேவர்கள் இருகிறார்கள் என எழுதி உள்ளது சகோதரரே.. இந்த தேவர்கள் எதனை பேர் இருந்தாலும் நம் தேவனின் வல்லமைக்கு முன் ஒன்றும் இல்லை.. இந்த தேவர்கள் மனுஷ கற்பனையாகவோ,படைப்பாகவோ,மார்க்கம் தப்பி போன நட்சதிரங்கலாகவோ இருக்கலாம்.. இவர்களை பார்க்கிலும் நம் தேவன் பெரியவராதலால் அவர் தேவாதி தேவன்..

வெளி 19:16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

அவர் ராஜாதி ராஜனும்,கர்த்தாதி கர்த்தராயும் இருக்கிறார்..அவருகுள்ளாக நாம் சிருஷ்டிக்க பட்டிருக்க பிதாவே வெளிபடுதினவரை புறக்கணித்து,பிதாவை மாத்திரம் துதிப்பேன் என்பவர் எந்த அளவிற்கு சரியானவர் என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.. 

சங்கீதம் 82:6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

நான் உன்னதமானவரின் நிழலில் இருகிறதை அறிவேன்..நம்மை அவர் தேவர்கள் என்கிறார்..ஆகவே தேவர்களின் தேவன்; தேவாதி தேவன் என்பதில் எனக்கு ஐயப்பாடு இல்லை..

இயேசுவுக்கு அனேக கிரீடங்கள்,நாமங்கள் உண்டு..நாம் அறியாத நாமமும் உண்டு!!

வெளி 19:12 அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

உங்களுக்கு தேவாதி தேவன் யார் என தெரியும் என கூறி இருந்தீர்கள்.. உங்களால் யாரை தேவாதி தேவன் என கூற முடியும் என உங்கள் முந்தைய பதிவில் இருந்து எனக்கு தெரிகிறது..

http://lord.activeboard.com/t33380972/topic-33380972/

நான் பிதாவை தனியாக ஆராதிக்க முடியாது.. ஆராதனை செய்வது தேவ சித்தம்.. நான் பரிசுத்த ஆவியால் நடத்த படாமல் தேவ சித்தம் என எதையும் செய்ய இயலாது..
நான் ஒரே நாளில் ஏலேலுபது முறை இடற.. பரிசுத்த ஆவி என்மேல் எவ்வாறு தங்குவார்?

மஹா பிரதான ஆசாரியரான நம் இயேசுவானவர் நம் பாவத்திற்கு தம் சொந்த ரத்தத்தை ஏந்தி பிதாவிடத்தில் பரிந்து பேசாவிட்டால் எனக்கு பரிசுத்த ஜீவியம் என ஒன்றும் இருக்காது.அனால் நாம் இரட்சிக்கப்பட பிதா தம் ஒரே பேரான குமாரனை நமக்காக கழுவாயாய் தந்திருக்க, என பரிசுத்தத்திற்கு நிச்சயம் உண்டு..ஆக நான் அனுதினமும் என தேவனை ஆராதிக்க கழுவப்படவேண்டும்.. பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியம் வேண்டும்.எவரும் குமாரனை கனம் பண்ணாமல் பிதாவை ஆராதிக்க முடியாது.நான் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு உறுப்பு..அவர் இல்லாமல் நமக்குள் ஜீவன் இல்லை...


இதுவே நான் என தேவனை ஆராதிக்க காரணமும் கூட..

எனவே தேவாதி தேவன் என்பவர் பிதா..
தேவாதி தேவன் என்பவர் குமரன்..
தேவாதி தேவன் என்பவர் தேவ ஆவியானவர்..

 You wrote//எனவே தேவன், தேவனாகிய கர்த்தர், (கிறிஸ்துவைக் குறிப்பிடுகிற) கர்த்தர் எனும் வார்த்தைகளெல்லாம் மொழிபெயர்ப்பாளர்களின் சுயஞானத்தின் பாதிப்பால் வந்தவைகளேயன்றி தேவஞானத்தால் வந்தவைகளல்ல. அப்படிப்பட்ட அந்த வார்த்தைகளுக்கு இடையே தொடர்புள்ளதாகச் சொல்லி, அதன் அடிப்படையில் திரித்துவ கோட்பாட்டை நீங்கள் நிலைநிறுத்த முற்படுவது நிச்சயமாக சரியல்ல சகோதரரே!///

நீங்கள் இவ்வாறு கூறுவதினால், தேவன் தமது வேதத்தை காத்துகொல்வதில்லை என துணிகரமாக அறிக்கை செய்கிறீர்கள் என முதலில் அறிந்து கொள்ளுங்கள்..

தேவன் தமது வார்த்தைகளில் ஒன்றையும் தரையில் விழ விடுகிறதில்லை என வேதத்தில் தெளிவாய் கூறி உள்ளதே..

வசனம் தான் நம்மை நியாயம் தீர்க்க வேண்டும், நாம் வசனத்தை அல்ல..

You wrote:///சகோ.மோகன் சி.லாசரஸ் போன்ற மோசடிப் பேர்வழிகளால், அவர் ஒருவரே தேவன் என பறைசாற்றப்படுகிறார்///

தீர்க்கதரிசன சுதந்திரம் தங்களுக்கு உண்டானாலும்..தேவ ஊழியரின் அபிஷேகம் பெற்றவரை தர குறைவாக பேசுவதை தேவன் மிகவும் விரும்புவார் என கருதுகிறீர்களா.. வைக்கோல் ஊழியமா?விலை உயர்ந்த கல் போன்ற ஊழியமா? பொன் ஊழியமா? இதை கர்த்தர் அறிவர்.அதற்கேற்ற கனத்தையும் கொடுப்பார்.இவ்வகை விமர்சனம் பக்தி விருதிக்கல்ல,இடரலுக்கே ஏது உண்டாக்கும்..

நீங்கள் விமர்சித்து பாவம் செய்யாதீர்கள்.எனக்கு உணர்த்தபட்டதை சொல்கிறேன்.அவ்வளவே..

தேவாதி தேவன் இயேசு அல்ல என கூறுகிற பட்சத்தில் பின்வரும் கேள்விகளுக்கு பதில் தாருங்கள். ..

1)நம் தேவாதி தேவனான இயேசு மரிக்கும் போது தேவாலய திரை சீலை ஏன் இரண்டாக கிழிந்தது?

2)வேதத்தில் கர்த்தரை அறியாத ஒரு ராஜாதிராஜன் கர்த்தருக்கு ஊழியகாரனாய் இருந்தான்.. அவனை இஸ்ரவேலர் அனைவரும் சேவிக்கும் படி கர்த்தர் கூறினார்..அந்த ராஜாதி ராஜன் யார்..ஏன் அவனை கர்த்தர் சேவிக்க சொன்னார்?

 ------------------------------------------------------------------------------------யாக்கோபு 2:10ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.



-- Edited by JOHN12 on Monday 26th of December 2011 06:24:50 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//தேவாதி தேவன் என்பது யார்??-இதற்கு வசன ஆதாரம் ஏற்கனவே தந்துள்ளேன்..//

இதற்கான நேரடி வசன ஆதாரம் இன்னமும் தரவில்லை.

//இவர்களை பார்க்கிலும் நம் தேவன் பெரியவராதலால் அவர் தேவாதி தேவன்..//

//தேவர்களின் தேவன்; தேவாதி தேவன் என்பதில் எனக்கு ஐயப்பாடு இல்லை.//

எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரான நம் தேவன் யார்? பிதாவாகிய தேவனா? குமாரனாகிய தேவனா? பரிசுத்த ஆவியானவரான தேவனா? அதற்கான வசன ஆதாரம் என்ன?

தேவர்களின் தேவன் யார்? பிதாவாகிய தேவனா? குமாரனாகிய தேவனா? பரிசுத்த ஆவியானவரான தேவனா? அதற்கான வசன ஆதாரம் என்ன?

//நீங்கள் இவ்வாறு கூறுவதினால், தேவன் தமது வேதத்தை காத்துகொல்வதில்லை என துணிகரமாக அறிக்கை செய்கிறீர்கள் என முதலில் அறிந்து கொள்ளுங்கள்.//

முட்டாள்தனமான கூற்றுக்களை நான் பொருட்படுத்துவது இல்லை.

//வசனம் தான் நம்மை நியாயம் தீர்க்க வேண்டும், நாம் வசனத்தை அல்ல..//

உங்களைக் குறித்து நீங்களே சொல்வது நல்ல வேடிக்கை.

//You wrote:///சகோ.மோகன் சி.லாசரஸ் போன்ற மோசடிப் பேர்வழிகளால், அவர் ஒருவரே தேவன் என பறைசாற்றப்படுகிறார்///

தீர்க்கதரிசன சுதந்திரம் தங்களுக்கு உண்டானாலும்..தேவ ஊழியரின் அபிஷேகம் பெற்றவரை தர குறைவாக பேசுவதை தேவன் மிகவும் விரும்புவார் என கருதுகிறீர்களா.. வைக்கோல் ஊழியமா?விலை உயர்ந்த கல் போன்ற ஊழியமா? பொன் ஊழியமா? இதை கர்த்தர் அறிவர்.அதற்கேற்ற கனத்தையும் கொடுப்பார்.இவ்வகை விமர்சனம் பக்தி விருதிக்கல்ல,இடரலுக்கே ஏது உண்டாக்கும்..//

துன்மார்க்கனை துன்மார்க்கன் என்றும் நீதிமானை நீதிமான் என்றும் பேசுவதைத்தான் தேவன் விரும்புவார். இதற்கு மாறாக மாற்றிப் பேசுபவர்களைக் குறித்து வசனம் இவ்வாறு சொல்கிறது.

நீதி. 17:15 துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

மோகன் சி லாசரஸ் போன்ற துன்மார்க்கரை தேவனால் அபிஷேகம் பெற்றவரெனச் சொல்லி, கர்த்தருக்கு அருவருப்பானவராக ஆகாதீர்கள்.

//நீங்கள் விமர்சித்து பாவம் செய்யாதீர்கள். எனக்கு உணர்த்தபட்டதை சொல்கிறேன்.அவ்வளவே..//

உங்களுக்கு எந்த ஆவி உணர்த்துகிறது என்பதை நான் அறிவேன். அநீதியில் பிரியப்படுகிற உங்களைப் போன்றவர்கள் மோகன் சி போன்றவர்களின் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக கொடிய வஞ்சகத்தை தேவன் தான் உங்களுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்பதையும் நான் அறிவேன். ( 2 தெச. 2:9-12)

//தேவாதி தேவன் இயேசு அல்ல என கூறுகிற பட்சத்தில் பின்வரும் கேள்விகளுக்கு பதில் தாருங்கள். ..//

மோகன் சி லாசரஸ் போன்றவர்களின் வஞ்சகத்திற்குள் கிடக்கிற உங்களுக்கு என்ன பதில் சொன்னாலும் நீங்கள் திருந்தப்போவதில்லை. நீங்கள் ஆக்கினையை அடையவேண்டும் என்பதுதான் தேவனின் நியாயத்தீர்ப்பு. எனவே ஆக்கினையைப் பெற தயாராயிருங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

you wrote///உங்களுக்கு எந்த ஆவி உணர்த்துகிறது என்பதை நான் அறிவேன். அநீதியில் பிரியப்படுகிற உங்களைப் போன்றவர்கள் மோகன் சி போன்றவர்களின் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக கொடிய வஞ்சகத்தை தேவன் தான் உங்களுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்பதையும் நான் அறிவேன். ( 2 தெச. 2:9-12)///

சகோதரரே.. பரிசுத்த ஆவியின் நிச்சயத்தை பெற்றவன் நான். நீங்கள் என்னை உணர்த்துகிற ஆவியை தூசிக்கிறேன் என்று சொல்லி தங்களுக்கு மோசம் செய்து கொள்ளதீர்கள்..மாறாக தங்களுக்கு நான் ஜெபிக்கிறேன்..



இயேசுவை தேவாதி தேவன் என கூறுவதால் உங்களுக்குள் எழுகின்ற மூர்க்கத்தை நான் உணர்ந்தே நான் உங்களுக்கு முந்தைய பதிவுகளை எழுதினேன்..

you wrote//மோகன் சி லாசரஸ் போன்றவர்களின் வஞ்சகத்திற்குள் கிடக்கிற உங்களுக்கு என்ன பதில் சொன்னாலும் நீங்கள் திருந்தப்போவதில்லை. நீங்கள் ஆக்கினையை அடையவேண்டும் என்பதுதான் தேவனின் நியாயத்தீர்ப்பு. எனவே ஆக்கினையைப் பெற தயாராயிருங்கள்///


நான் மோகன் C  லேசரை பின்பற்றுகிறேன் என எப்போது தங்களிடம் கூறினேன்..நீங்கள் கூறுகிறபடி ஏதேதோ நீங்கள் தான் கூறுகிறீர்கள்.

இயேசுவை அஸ்திபாரமாக கொண்ட எந்த ஊழியமும் வேதம் காடும் படி தான் செல்கிறது.. மற்றுமல்லது தங்கள் ஊழியங்களின் சிறப்பை கர்த்தர் உங்களுக்கு காண்பிப்பார்..

கர்த்தரை வழிபடுகிறவர் என கூறிக்கொண்டு அடுத்தவரை நான் நியாயம் தீர்பதில்லை..தங்களுடைய ஊழியத்தின் அஸ்திபாரம் இயேசு தானா?

I கொரிந்தியர் 3:10 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.

I கொரிந்தியர் 3:11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

I கொரிந்தியர் 3:12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

பேசியர் 2:20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

எனக்கு உங்கள் மேல் எந்த ஆத்திரமும் எரிச்சலும் இல்லை..தாவீது தண்ணீரை கர்த்தருக்கென ஊற்றினது போல, தங்கள் மீதான மனதாங்கலை நானும் ஊற்றிவிடுகிறேன்..


நான் கேட்ட எந்த கேள்விக்காவது நீங்கள் பதி அளித்து உள்ளீர்களா என சிந்தித்து பாருங்கள்.. நீங்கள் எந்த வசனத்தை முன் நிறுத்தி என் கூற்றை மறுத்தீர்கள்??

Mr.prakasam//முட்டாள்தனமான கூற்றுக்களை நான் பொருட்படுத்துவது இல்லை.//துன்மார்க்கனை துன்மார்க்கன் என்றும் நீதிமானை நீதிமான் என்றும் பேசுவதைத்தான் தேவன் விரும்புவார். இதற்கு மாறாக மாற்றிப் பேசுபவர்களைக் குறித்து வசனம் இவ்வாறு சொல்கிறது.//மோகன் சி லாசரஸ் போன்ற துன்மார்க்கரை தேவனால் அபிஷேகம் பெற்றவரெனச் சொல்லி, கர்த்தருக்கு அருவருப்பானவராக ஆகாதீர்கள்.///உங்களைக் குறித்து நீங்களே சொல்வது நல்ல வேடிக்கை.////

///நீங்கள் ஆக்கினையை அடையவேண்டும் என்பதுதான் தேவனின் நியாயத்தீர்ப்பு. எனவே ஆக்கினையைப் பெற தயாராயிருங்கள்///

நியாய தீர்ப்பை குறித்து நான் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை சகோதரரே..

இழிவான ஆதாயத்தை இச்சிக்கும் பெருவயிற்று நாய்களும்,அவிசுவாசிகளும்,வேசிகளும்,விக்கிரக ஆராதனை செய்கிறவர்களும்,அஞ்ஞானிகளும்,துன்மார்கரும் கவலைபட்டும்..

ஒரு விவாதத்தில் எவ்வாறு பேசவேண்டும் என தங்களுக்கு தெரியாத பட்சத்தில் உங்களுடன் விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை...

மேற்கொண்டு நீங்கள் தூசனம் செய்யும் பட்சத்தில் என் mouse-ல் உள்ள தூசியை தங்களுக்கு விரோதமாக உதறுவேன்..

தங்களுக்கு போதுமான வரை வேத விளக்கம் கொடுத்தாயிற்று.. தாங்கள் கணித புத்தகத்தை போல வேதத்தை புரிந்து கொள்வதை நிறுத்தி பரிசுத்த ஆவியுடன் படியுங்கள்...

{தங்களுக்கு பரிட்சயமான பட்சத்தில் தாங்கள் தேவனிடத்தில்  ஒரு அடையாளத்தை வேண்டிகொள்ளுங்கள்.. நீங்கள் துக்கபடுத்தியது எந்த ஆவியை என தெரியும்..
எனக்கும் ஆவியை பிரதறியும் வரம் உண்டு சகோதரா!!அதை வெளிகாண்பித்து உளற அதை நான் பெறவில்லை..}

 

தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!

-------------------------------------------------------------------------------------

 

மத்தேயு 13:9 கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

 



-- Edited by JOHN12 on Tuesday 27th of December 2011 02:03:06 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சகோதரர்களாகிய நாம்  இங்கு தேவனை பற்றி எழுதுவதன் நோக்கம் தேவ பிரசன்னத்திலும் வேத வசனம் குறித்த தியானத்தில் தங்கி  இருப்பதற்குதான் என்பதை நினைபூட்டுகிறேன். எனவே நாம் ஒருவரை  ஒருவர் நியாயம் தீர்க்காமல் வசன ஆதாரங்களை  சரியாக சுட்டி பதிவிடவும்.
   
என்னை பொறுத்தவரை தேவனின் மூன்று அள்த்துவத்தை நான் ஏற்கிறேன். ஆனால் திரித்துவம் என்ற கொள்கையை நான் நிராகரிக்கிறேன். இந்த கருத்து  குறித்து பலமுறை விவாதித்து ஒரு சரியான முடிவை எட்டமுடியாமல் போனதாலும் அவரவர்கள் தாங்கள் தாங்கள் புரிதலில் இருந்து  வெளியில் வர விரும்பாத காரணத்தாலும் நான் எந்த பதிவையும் தர விருப்பமில்லாமல் இருக்கிறேன்.    
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//சகோதரர்களாகிய நாம்  இங்கு தேவனை பற்றி எழுதுவதன் நோக்கம் தேவ பிரசன்னத்திலும் வேத வசனம் குறித்த தியானத்தில் தங்கி  இருப்பதற்குதான் என்பதை நினைபூட்டுகிறேன். எனவே நாம் ஒருவரை  ஒருவர் நியாயம் தீர்க்காமல் வசன ஆதாரங்களை  சரியாக சுட்டி பதிவிடவும்.//

அன்பான சகோதரரே!

தேவாதி தேவன் என John12 யாரைச் சொல்கிறார் என்பதற்கான வசன ஆதாரத்தைத்தான் நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். ஆனால் அவரோ வசன ஆதாரத்தைத் தராமல், சம்பந்தமில்லாத சில வசனங்களைப் போட்டு தனது சொந்த வார்த்தைகளால் விளக்கம் தருகிறார். மாத்திரமல்ல, என்னை முதன் முதலாக நியாயந்தீர்த்தவரும் அவரே.

//தேவன் தமது வேதத்தை காத்துக்கொள்வதில்லை என துணிகரமாக அறிக்கை செய்கிறீர்கள் என முதலில் அறிந்து கொள்ளுங்கள்..//

//வசனம் தான் நம்மை நியாயம் தீர்க்க வேண்டும், நாம் வசனத்தை அல்ல..//

//தேவ ஊழியரின் அபிஷேகம் பெற்றவரை தர குறைவாக பேசுவதை தேவன் மிகவும் விரும்புவார் என கருதுகிறீர்களா.. //

//இவ்வகை விமர்சனம் பக்தி விருதிக்கல்ல,இடரலுக்கே ஏது உண்டாக்கும்.. நீங்கள் விமர்சித்து பாவம் செய்யாதீர்கள்.//

என்னைக் குறித்து 4 நியாயத்தீர்ப்புகளை John12 கூறியுள்ளார்.

1. தேவன் தமது வேதத்தைக் காத்துக்கொள்வதில்லை என நான் துணிகரமாக அறிக்கை செய்கிறேனாம்.

2. நான் வசனத்தை நியாயந்தீர்க்கிறேனாம்.

3. அபிஷேகம் பெற்ற தேவ ஊழியரான மோகன் சி லாசரஸை நான் தரக்குறைவாக பேசுகிறேனாம்.

4. பக்திவிருத்திக்கல்லாததையும் இடறலுக்கேதுவானதையும் சொல்லி பாவம் செய்கிறேனாம்.

இப்படி அவர்தான் என்னை நியாயந்தீர்த்தார். நானோ 2 தெச. 2:9-12 வசனங்களில் தேவன் அறிவித்துள்ள நியாயந்தீர்ப்பை அறிவிக்க மட்டுமே செய்தேன்.

மோகன் சி லாசரஸ் மோசடி ஊழியர் என நான் சொன்னது மெய்தான். அதற்கான தகுந்த ஆதாரம் கேட்டால், நான் தருவதற்கு ஆயத்தமாயுள்ளேன். துன்மார்க்கரை துன்மார்க்கரென்றும் நீதிமானை நீதிமானென்றும் அறியக்கூடிய அறிவு நமக்குக் கண்டிப்பாக வேண்டும். அப்படி இருந்தால்தான், நீதி. 17:15 சொல்கிறபடி, துன்மார்க்கரை நீதிமான் எனச் சொல்லமாட்டோம், நீதிமானை துன்மார்க்கரெனச் சொல்ல மாட்டோம்.

எனவே மோகன் சி லாசரஸை மோசடி ஊழியர் என நான் சொன்னது வேத வசனத்தின்படி தவறல்ல.

வசனத்தை ஆராய்ந்து கருத்துச்சொல்லும் பணியைத்தான் நான் செய்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது பணி மற்றவர்களை நியாயந்தீர்ப்பதாகத் தோன்றினால், நான் இங்கு விவாதிப்பதை நிறுத்திக் கொள்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர்.அன்பு அவர்களே ..

ஒருவேளை மோகன் சி லாசர் அவர்களை பற்றிய தங்களின் கோபம்   என் மீது பாய்ந்து  இருக்கலாம்.. கோபத்தில் வசனத்தையும் கையில் எடுகிறீர்கள்  ..

ஒன்றும் பிரச்சனை இல்லை...

நீங்கள் மேற்காட்டிய  நான்கு சொற்றொடர்கள்.. நான் தங்களை நியாயம் தீர்ப்பது போல இருகின்றதா?
அல்லது நீங்கள் கூறியது நியாய தீர்ப்பா???

You wrote//மோகன் சி லாசரஸ் போன்றவர்களின் வஞ்சகத்திற்குள் கிடக்கிற உங்களுக்கு என்ன பதில் சொன்னாலும் நீங்கள் திருந்தப்போவதில்லை. நீங்கள் ஆக்கினையை அடையவேண்டும் என்பதுதான் தேவனின் நியாயத்தீர்ப்பு. எனவே ஆக்கினையைப் பெற தயாராயிருங்கள்///


மோகன் சி லாசரஸ் மீது தங்களுக்கு மன தாங்கல் இருக்கும் பட்சத்தில் அவரிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாமே.. அவருக்கும் நீங்கள் வசனத்தை உணர்த்தி இருக்கலாமே.. சரி விடுங்கள்.. தாங்கள் அவரை இவ்வாறு நியாயம் தீர்ப்பதை அவர் அறிவாரா.. தாங்கள் அவருக்காகவும்,அவரை சேர்ந்த மற்றவருக்ககவும் இந்த தளத்தில் ஜெபிதுள்ளீர்களா?

தங்களை போன்ற மூத்தவர்களிடம் இருந்து என்னை போன்ற இளையவர்கள் கொள் சொல்லுதலையும், ஆத்திரத்தையும்,இத்தகைய போதக சமர்தயத்தையும்  நிச்சயம் கற்க இயலாது என அறிந்து கொண்டேன்.. மற்றபடி தங்களின் பல பதிப்புகள் கருத்து செறிந்தவை.எனக்கு அவைகளில் மாற்று கருத்து இல்லை..

ஒரு கருத்தை குறித்து விவாதிக்கும் போது வசன ஆதாரங்கள் நிச்சயம் தேவை.. என் மீது நியாய தீர்ப்பை கொண்டு வர பிரயோகித்த வசனத்தை ஏன் என் வாதத்தை எதிர்க்க பயன் படுத்தவில்லை.

எனக்கு தேவாதி தேவன் யார் என தெரியும் என்றீர்கள்..எங்காவது நேரடியாக பதிந்தீர்களா??

சரி விடுங்கள்..

ஒரு சிறு விளக்கத்தை மாத்திரம் தங்களுக்கு காண்பிக்கிறேன்

 

நீதிமொழிகள் 20:10

வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.


நீதிமொழிகள் 20:23 வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.

நீதிமொழிகள் 11:1 கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
இங்கு குறிப்பிட பட்ட இந்த வெவ்வேறான நிறை கற்களை தாங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்..

இந்த நிறைகற்கள் நம்முடைய குறைவான அறிவின் படியான சுய நீதியின் கற்கள்..

இவைகளை கொண்டு தான் அடுத்தவர்களை பெரும்பாலும் எடை போடுகிறோம்.. அனால் என் தேவன் மனுஷன் பார்க்கிற விதமாய் பாராத தேவன்..நாம் குறைவான அறிவை கொண்டு பரிகசித்து நியாயம் தீர்கிறோம்..

 I சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

யோபு 10:4 மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?

அனால் நம் தேவனோ, பாவமில்லாதவன் நியாயம்தீர்க்க கடவன் என்று சொல்லி விபச்சாரியையும் மன்னித்தார்..(தேவனுடைய நிறைகள் அப்படி!!!)

எனக்கு செவி கொடுத்து கூறுங்கள் ..

நான் தங்களுக்கு எந்த விதமான கேடுகளையும் செய்யாத பட்சத்தில்  , நீங்கள் (ஒரு தேவ ஊழியர்) எவ்வாறு மேற்கூறிய சுய நீதி நிறை கற்களை கொண்டு  எனக்கு நியாய தீர்ப்பை செய்தீர்கள்...

I கொரிந்தியர் 13:9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.

இவ்வாறாக வேதம் சொல்கிறது.தீர்க்க தரிசனமே குறைவுடயதாய் சொல்வோமாயின்,நம் நியாயதீர்ப்பை கேட்கவா வேண்டும்!!

இவ்வாறு தடாலடியாக நியாயத்தீர்ப்பு செய்யும்  பட்சத்தில் சர்குனறாக இருக்கவோ, அடுத்தவரை வழிநடதவோ தகுதியில் குறைவு படுகிறோம் என எனக்கு தோன்றிற்று..நான் நினைப்பது சரியா சகோதரரே??

-------------------------------------------------------------------------------------------------------

 

நீதிமொழிகள் 26:2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது



-- Edited by JOHN12 on Tuesday 27th of December 2011 08:27:53 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:
வசனத்தை ஆராய்ந்து கருத்துச்சொல்லும் பணியைத்தான் நான் செய்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது பணி மற்றவர்களை நியாயந்தீர்ப்பதாகத் தோன்றினால், நான் இங்கு விவாதிப்பதை நிறுத்திக் கொள்கிறேன்.

சகோதரர் அவர்களே என் மனதில் தோன்றியதை  இரண்டுபேருக்கும் பொதுவாகத்தான் பதிவிட்டேன்.   

தங்களின் கொள்கைகள்  விசுவாசம்  பற்றி எனக்கு நன்றாக தெரியும்   தங்களுடன்  விவாதிக்க விரும்பினால் சரியாக நேர் வசன ஆதாரத்தின்படி மட்டுமே விவாதிக்க முடியும். மேலும் அவ்வாறு நேர் வசனம் இருந்தாலும்  மூல பாஷையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்து அதற்க்கு ஏற்ப்பதான் தாங்கள் விளக்கம் தருவீர்கள்.  மற்றபடி  வெளிப்பாடுகளையோ  உணர்த்துதல்களையோ அல்லது வேதத்தில் நேரடியாக சொல்லப்படாத எந்தஒரு கருத்தையும் தாங்கள் ஏற்ப்பதில்லை.

தேவன் திரித்துவமாக கிரியை செய்கிறார் என்பதை எங்கள் புரிதல் மற்றும்  நமக்கு ஆவியானவரால் உணர்த்தபட்ட வெளிப்பாடுகள் அடிப்படையிலேயே விசுவாசிக்கிறோம். இக்கருத்தை நேரடியான சொல்லும் வசன ஆதாரத்தோடு விளக்குவது கடினம்.  எனவேதான்  இக்கருத்தை குறித்து நான் விவாதிக்க விரும்புவதில்லை.   
 
ஆகினும் சகோ. JOHN12 அவர்களே  தாங்கள் இந்த விவாதத்தை தொடர விரும்பினால் "தேவாதி தேவன் யார்" என்ற அவருடய கேள்விக்கு "தேவாதி தேவன்" என்ற வார்த்தை வரும் வசன ஆதாரத்தோடு விளக்கம் தரவும்.  அதன் அடிப்படையில் அவர் அவருடய கருத்தை பதிவிடுவார். அதன் அடிப்படையில் தொடருங்கள்  இல்லையேல் குழப்பத்தை விளைவிக்கும் இந்த கருத்து  குறித்த விவாதத்தை அப்படியே நிறுத்தி விடலாம்.
 
மேலும் திரித்துவம் குறித்த என்னுடைய புரிதல்கள்பற்றி கண்டிப்பாக  விவாதிக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பினாலும்கூட  நாம் இக்கருத்து குறித்து  விவாதிக்கலாம்.     
 
நாம் செய்வது எதுவோ அதை  கிரமமாக தேவனின் சித்தபடி செய்வோமாக.
 
மற்றபடி யாரையும் நேரடியாக பெயர்சொல்லி குறை சொல்வதை நான் விரும்புவது இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே  சகோ. மோகன் சி லாசரஸ் நம்முடைய தளத்தில் உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவர் நல்லவரா என்பது குறித்து விவாதம் வேண்டாம் சகோதர்களே. 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//நீங்கள் மேற்காட்டிய  நான்கு சொற்றொடர்கள்.. நான் தங்களை நியாயம் தீர்ப்பது போல இருகின்றதா?
அல்லது நீங்கள் கூறியது நியாய தீர்ப்பா???//

உங்களுக்குப் புரிந்தபடி வைத்துக்கொள்ளுங்கள் சகோதரரே! மேலும் மேலும் விளக்கம் சொல்லி எனக்கு எதுவும் ஆகப்போவதில்லை.

//ஒருவேளை மோகன் சி லாசர் அவர்களை பற்றிய தங்களின் கோபம் என் மீது பாய்ந்து  இருக்கலாம்.. கோபத்தில் வசனத்தையும் கையில் எடுகிறீர்கள்//

ஆம் சகோதரரே! மோகன் சி மீது எனக்குக் கோபம்தான். ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ என 2 கொரி. 11:29-ல் பவுல் கேட்கிறார். இந்த மோகன் சி 1 லட்சம் பேருக்கு மேல் இடற வைத்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால் என் மனம் எவ்வளவாய் எரியும்? 2 கொரி. 11:28-ல் பவுல் சொன்னபடி எல்லா சபைகளையும் குறித்துமான கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.

ஆனால் மோகன் சி மீதான கோபத்தால் உங்கள் மீது பாயவில்லை. மோகன் சி-ன் வஞ்சகத்தில் நீங்கள் கிடப்பதால்தான் உங்கள் மீது பாய்கிறேன். அட்டூழியரான அவரை தேவனால் அபிஷேகம் பெற்றவர் எனச் சொல்லி, நீங்கள் வஞ்சகத்தில் கிடப்பதால்தான் உங்கள் மீது பாய்கிறேன்.

//மோகன் சி லாசரஸ் மீது தங்களுக்கு மன தாங்கல் இருக்கும் பட்சத்தில் அவரிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கலாமே.. அவருக்கும் நீங்கள் வசனத்தை உணர்த்தி இருக்கலாமே.. சரி விடுங்கள்.. தாங்கள் அவரை இவ்வாறு நியாயம் தீர்ப்பதை அவர் அறிவாரா.. தாங்கள் அவருக்காகவும்,அவரை சேர்ந்த மற்றவருக்ககவும் இந்த தளத்தில் ஜெபிதுள்ளீர்களா?//

மோகன் சி லாசரஸுக்கும் எனக்கும் என்ன மனத்தாங்கல்? அவர் என்ன எனது பங்காளியா, சொக்காரரா? அவர் அட்டூழியம் செய்கிறார், அதன் காரணமாக பலர் இடறிக்கொண்டிருக்கின்றனர். எனவே என் மனம் எரிகிறது. அவரது அட்டூழியத்தை அவருக்கு எழுத்துமூலம் சொல்லிப்பார்த்துவிட்டேன். நான் சொல்லிக் கேட்கும் நிலையில் அவர் இல்லை. ஒரு பெரும் ஊழியருக்கு வசனத்தை நான் உணர்த்த வேண்டும் என நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவரை நான் நியாயந்தீர்க்கவில்லை. வசனம் அவரை எப்படி நியாயந்தீர்க்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறேன், அவ்வளவே.

அவருக்காக நான் ஜெபிக்கிறேனா என்பதையெல்லாம் தங்களிடம் ஒப்பிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.

//தங்களை போன்ற மூத்தவர்களிடம் இருந்து என்னை போன்ற இளையவர்கள் கோள் சொல்லுதலையும், ஆத்திரத்தையும், இத்தகைய போதக சமர்தயத்தையும்  நிச்சயம் கற்க இயலாது என அறிந்து கொண்டேன்..//

என்னிடமிருந்து நீங்கள் எதையும் கற்கவேண்டாம். வேதத்திலுள்ளதைக் கற்று அதன்படி நடந்தால்போதும்.

//என் மீது நியாய தீர்ப்பை கொண்டு வர பிரயோகித்த வசனத்தை ஏன் என் வாதத்தை எதிர்க்க பயன் படுத்தவில்லை.//

நீங்கள் வசனத்தை வைத்து வாதம் வைக்கவில்லையே! சுயமாக என்னவெல்லாமோ சொல்கிறீர்கள். அதற்கு நான் என்ன சொல்லமுடியும்?

தேவாதி தேவன் யார் என்பதையும் அதற்கான வசன ஆதாரத்தையும் இன்னமும் நீங்கள் தரவில்லை.

//எனக்கு தேவாதி தேவன் யார் என தெரியும் என்றீர்கள்..எங்காவது நேரடியாக பதிந்தீர்களா??//

தேவாதி தேவன் எனச் சொன்ன நீங்கள்தான், எந்த வசனத்தின் அடிப்படையில் யாரைச் சொல்கிறீர்கள் என்பதை விளக்க வேண்டும். உங்களால் முடியாவிட்டால், அந்த சொற்றொடரை நீங்கள் பிரயோகிக்கக்கூடாது. உங்கள் அறியாமையை ஒத்துக்கொண்டு என்னிடம் கேளுங்கள், நான் வசன ஆதாரத்துடன் விளக்கம் சொல்கிறேன்.

//இந்த நிறைகற்கள் நம்முடைய குறைவான அறிவின் படியான சுய நீதியின் கற்கள்..//

வசனத்திற்கான உங்களது இவ்விளக்கத்தை நான் ஏற்கவில்லை.

//ஆனால் நம் தேவனோ, பாவமில்லாதவன் நியாயந்தீர்க்கக்கடவன் என்று சொல்லி விபச்சாரியையும் மன்னித்தார்..//

விபச்சாரியைக் கல்லெறியவேண்டும் (அதாவது தண்டனை கொடுக்கவேண்டும்) என்று சொல்லி இயேசுவிடம் அவளைக் கூட்டி வந்தனர். தண்டனை கொடுத்தல் எனும் நியாயத்தீர்ப்புதான் வேண்டாம் என இயேசு சொன்னார். நான் யாருக்கும் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற நியாயத்தீர்ப்பை வைக்கவில்லை. 2 தீமோ. 3:1-5 வசனங்கள் சொல்கிறபடி எவர்கள் இருக்கிறார்கள் எனபதை நியாய்ந்தீர்த்து அவர்களைவிட்டு விலகவேண்டும் என்றே ஆசிக்கிறேன்.

//எனக்கு செவி கொடுத்து கூறுங்கள் ..

நான் தங்களுக்கு எந்த விதமான கேடுகளையும் செய்யாத பட்சத்தில்  , நீங்கள் (ஒரு தேவ ஊழியர்) எவ்வாறு மேற்கூறிய சுய நீதி நிறை கற்களை கொண்டு  எனக்கு நியாய தீர்ப்பை செய்தீர்கள்...//

உங்கள் “சுய நீதி, நிறைகற்கள்” விளக்கத்திற்கும் உங்களைக் குறித்து நான் சொல்வதற்கும் (அல்லது நியாயந்தீர்ப்பதற்கும்) எந்த சம்பந்தமுமில்லை. அட்டூழியரான ஒருவரை அபிஷேகம் பெற்றவர் எனச் சொன்னீர்கள். எனவே பொய்யின் ஆவியால் நீங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளீர்கள் என 2 தெச. 2:9-12 மூலம் உங்களை நியாயந்தீர்த்தேன்.

//I கொரிந்தியர் 13:9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.//

ஆம், நம் அறிவு குறைவுள்ளததுதான். ஆனால் கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம், தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்வதால் முதியோர்களைப் பார்க்கிலும் நான் ஞானமுள்ளவனாயிருக்கிறேன் என வசனம் சொல்கிறது. நீங்கள் வேண்டுமானால் உங்களை அறிவில் குறைவுள்ளவன் என தாராளமாகச் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் நானோ பிறப்பால் அறிவில் குறைவுள்ளவனாக இருந்தாலும், கர்த்தருக்குப் பயந்து அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதால் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்றுள்ளேன்.

//இவ்வாறு தடாலடியாக நியாயத்தீர்ப்பு செய்யும்  பட்சத்தில் சர்குனறாக இருக்கவோ, அடுத்தவரை வழிநடதவோ தகுதியில் குறைவு படுகிறோம் என எனக்கு தோன்றிற்று. நான் நினைப்பது சரியா சகோதரரே??//

நீங்கள் நினைப்பது தவறு.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//மற்றபடி யாரையும் நேரடியாக பெயர்சொல்லி குறை சொல்வதை நான் விரும்புவது இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே  சகோ. மோகன் சி லாசரஸ் நம்முடைய தளத்தில் உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவர் நல்லவரா என்பது குறித்து விவாதம் வேண்டாம் சகோதர்களே.//

மன்னிக்கவும் சகோதரரே! மோகன் சி பற்றி எப்போதோ நான் எழுதினதை எடுத்துப் போட்டு சகோ.John12 என்னை விமர்சித்ததால், மீண்டும் மோகன் சி பற்றி கடுமையாக எழுத வேண்டியதாயிற்று. ஒருவரை தனிப்பட்ட விதத்தில் நல்லவர்/கெட்டவர் என பொதுவாக நான் விமர்சிப்பதில்லை. ஆனால் பிறருக்கு இடறலாக இருப்போரை எடுத்துக்காட்டுவது எனது தேவப்பணிகளில் ஒன்றுதான் எனக் கருதியே மோகன் சி பற்றி கூறினேன். அதுவும் வேண்டாமெனில் அம்மாதிரி கருத்துகளை இனி தவிர்க்க முயல்கிறேன்.

தேவாதி தேவன் பற்றின எனது கேள்விக்கான பதிலை இன்னமும் சகோ.John12 சொல்லாததால், அதைக் குறித்து நானே சொல்கிறேன். தேவாதி தேவன் எனும் சொற்றொடர் தமிழ் வேதாகமத்தில் 4 வசனங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அவை:

உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

யோசுவா 22:21 அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக: 22 தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்;

சங்கீதம் 136:2 தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

தானியேல் 11:36 ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்;

இவற்றில் கடைசி வசனத்தைத் தவிர மற்றெல்லா வசனங்களிலும் தேவாதி தேவன் எனும் பட்டம் யெகோவா தேவனையே நேரடியாகக் குறிப்பிடுகின்றன. கடைசி வசனத்தில் அப்பட்டம் யாரையும் குறிப்பதாக இல்லாவிடினும், முதல் 3 வசனங்களின்படி பார்த்தால், கடைசி வசனத்திலும் அப்பட்டம் யெகோவா தேவனுக்குரியதாகத்தான் இருக்கவேண்டும் என அறிகிறோம். மற்றபடி வேதாகமத்தில் எந்தவொரு வசனத்திலும் தேவாதி தேவன் எனும் பட்டம் இயேசுவையோ பரிசுத்த ஆவியையோ குறிப்பதாக இல்லை.

எனவே தேவாதி தேவன் எனப்படுபவர் யெகோவா தேவன் ஒருவரே. இந்த யெகோவா தேவனும் இயேசுவும் பழைய ஏற்பாட்டில் தனித்தனியாகத்தான் அறியப்பட்டுள்ளனர். இதற்கான வசன ஆதாரங்கள் பலவுண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

இவ்வசனத்தில் கர்த்தர் எனும் வார்த்தைக்கு மூல எபிரெய பிரதியில் யெகோவா எனும் வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டவர் எனும் வார்த்தை இயேசுவையே குறிப்பிடுகிறது என்பதற்கு பின்வரும் வசனபகுதி ஆதாரமாயுள்ளது.

மத்தேயு 22:41 பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி: 42 கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
43 அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? 44 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. 45 தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

அடுத்து மற்றுமொரு வசனபகுதியைப் பார்ப்போம்,

சங்கீதம் 45:6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. 7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.

இப்பகுதியில் தேவனே எனும் வார்த்தை இயேசுவையே குறிப்பிடுகிறதென சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவ்வுண்மையை பின்வரும் வசனம் உறுதிபடுத்துகிறது.

எபிரெயர் 1:8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. 9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; 10 கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; 11 அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்; 12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

அடுத்து மற்றுமொரு வசனபகுதியையும் பார்ப்போம்.

சங்கீதம் 2:2 கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: 3 அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

இவ்வசன பகுதியில் கர்த்தர் எனும் வார்த்தைக்கு மூல எபிரெய பிரதியில் யெகோவா எனும் வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கர்த்தராகிய யெகோவா அபிஷேகம் பண்ணினவர் இயேசுவே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆதாரம் வேண்டுபவர்கள் மேலே கூறப்பட்ட சங்கீதம் 45:6,7-ஐப் படிக்கவும்.

இப்படியாக பழைய ஏற்பாட்டின் பல வசனங்களில் இயேசுவும் யெகோவாவும் தனித் தனி ஆள்த்தத்துவங்களாக காட்டப்பட்டுள்ளனர். மாத்திரமல்ல, யெகோவாகிய தேவன், தேவனாகிய இயேசுவுக்கும் தேவனாகக் காட்டப்பட்டுள்ளார்.

எனவே தேவாதி தேவன் எனும் பட்டத்துக்கு உரியவர் யெகோவா மட்டுமே. இந்த யெகோவா தேவன்தான் புதியஏற்பாட்டில் பிதாவாகிய தேவனாக அறியப்பட்டுள்ளார். பிதாவானவர் என்னிலும் பெரியவர் என இயேசு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

எனவே தேவாதி தேவன் எனப்படுபவர் பிதாவாகிய தேவனாக அறியப்பட்டுள்ள யெகோவா தேவன் மட்டுமே.

குமாரனாகிய இயேசுவையும் தேவன் என வேதாகமம் கூறினாலும், அவர் தேவாதி தேவனான யெகோவாவுக்குக் கீழானவரே. பரிசுத்தஆவியை ஒரு தேவனாக வேதாகமம் கூறவில்லை. அவரை ஓர் ஆள்த்தத்துவமாகவும் வேதாகமம் கூறவில்லை.

இதற்கு மாறான எந்தவொரு நம்பிக்கையும் தேவத்துவத்துக்கு எதிரானதே.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard