இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம்-மீண்டும் ஒரு விவாதம்


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: திரித்துவம்-மீண்டும் ஒரு விவாதம்
Permalink  
 


anbu57 wrote:
பரிசுத்தஆவியை ஒரு தேவனாக வேதாகமம் கூறவில்லை. அவரை ஓர் ஆள்த்தத்துவமாகவும் வேதாகமம் கூறவில்லை.

இதற்கு மாறான எந்தவொரு நம்பிக்கையும் தேவத்துவத்துக்கு எதிரானதே.

சகோ.  அன்பு  அவர்களே "பரிசுத்த ஆவியானவர் ஒரு தனி தேவன் அல்ல" என்று வேண்டுமானால் சொல்லுங்கள் அது சரியே! அவரும் தேவ ஆவியின்  இன்னொரு பரிணாமமே!  ஆனால் அவர் "ஆள்தத்துவம் உள்ளவர் அல்ல வெறும் வல்லமை மட்டும்தான்" என்று சொல்வது  வசனத்துக்கு புறம்பானது. வசனம் அனேக  இடங்களில் ஆவியானவரை  ஆள்தத்துவம் உள்ளவராகவே காட்டுகிறது.

அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;
அப்போஸ்தலர் 11:12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்
ரோமர் 8:26   ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

ஆவியானவர் ஆள்தத்துவம் இல்லாத  ஒரு வல்லமையாக மட்டும் இருந்தால் அவர் பிலிப்புவுடன் பேசவோ அல்லது கட்டளையிடவோ அல்லது வேண்டுதல் செய்யவோ  துக்கபடவோ முடியுமா சகோதரரே?  
 
 I கொரிந்தியர் 12:11 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

 
12:11  But all these are the operations of the one and the same Spirit, giving to every man separately as his pleasure is.

இங்கு ஆவியானவரை "அவர்" "HIS" என்று குறிப்பிட்டிருப்பதை வைத்து அவர் ஆள்தத்துவம் உள்ளவர் என்று அறிய முடியுமே.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

anbu57 wrote:


பரிசுத்தஆவியை ஒரு தேவனாக வேதாகமம் கூறவில்லை. அவரை ஓர் ஆள்த்தத்துவமாகவும் வேதாகமம் கூறவில்லை.

இதற்கு மாறான எந்தவொரு நம்பிக்கையும் தேவத்துவத்துக்கு எதிரானதே.


 

 

சகோதரரே நான் ஏற்கனவே இத் தலத்தில் கேட்ட இக் கேள்விக்கு யாரும் பதில் எழுதவே இல்லை நீங்களாவது கீழே உள்ள விளக்கத்திற்கு பதில் தாருங்கள்

 

லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

 

 

பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவம் உள்ளவர் என்பதை நிரூபிக்க இந்த ஒரு வசனம்   போதும் என்று நினைக்கின்றேன் சுருக்கமாக நான் எழுதுகிறேன்

பரிசுத்த ஆவியானவர் ரூபம் கொண்டு புறாவை போல் வந்து ஆண்டவர் மேல் இறங்கினார் என்று வேதத்தில் எழுத பட்டுள்ளது

 இந்த காரியத்தை நீங்கள் நம்புகின்றீர்கள் என்று நினைக்கின்றேன் நீங்கள் பரிசுத்த ஆவியானவரை வல்லமை மட்டும் தான் என்று கூறுகின்றீர்கள்

நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்  பரிசுத்த ஆவியானவர் புறாவாக மாறி அதாவது புறாவின்  மீது வந்து அல்ல அவர் புறாவை போலவே மாறி இருக்கின்றார்  நன்றாக கவனித்து பாருங்கள் ரூபம் கொண்டு புறாவை போல் வந்து என்று தெளிவாய் கூறி இருக்கின்றது

 

இப்படி பரிசுத்த ஆவியானவர் அவர் இஷ்டபடி ரூபம் எடுக்க முடிகின்றது என்றால் அவரால் ஒரு மனிதனாகவோ அல்லது ஒரு தெய்வ ரூபமாகவோ மாற முடியாதா ?

 

பரிசுத்த ஆவியானவர் வெறும் வல்லமை மட்டும்தான் என்று போதிக்கும் தாங்கள், வெறும் வல்லமையால் ரூபம் கொள்ள முடியுமா என்பதை ஆராயும்படி சொல்லும்படி  அன்புடன்  கேட்கிறோம்.



-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 29th of December 2011 03:53:29 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.அன்பு அவர்களே.

நீங்கள் எழுதியது /////ஆம், நம் அறிவு குறைவுள்ளததுதான். ஆனால் கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம், தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்வதால் முதியோர்களைப் பார்க்கிலும் நான் ஞானமுள்ளவனாயிருக்கிறேன் என வசனம் சொல்கிறது. நீங்கள் வேண்டுமானால் உங்களை அறிவில் குறைவுள்ளவன் என தாராளமாகச் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் நானோ பிறப்பால் அறிவில் குறைவுள்ளவனாக இருந்தாலும், கர்த்தருக்குப் பயந்து அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதால் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்றுள்ளேன்.////
நான் அறிவில் அனைவரும் குறைவுள்ளவர்கள் என்றேன். தாங்கள் சம்பதம் இல்லாமல் ஞானத்தை பற்றி எழுதயுளீர்கள்..  

நீங்கள் வசனத்தில் ஞானத்தை பெற்றவர் என்கிறீர்கள்..அனால் ஞானத்திற்கும் அறிவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை தங்களுக்கு..

ஏன் தெரியுமா? தங்கள் அறிவும் குறைவுள்ளது..

 பவுலும் இதை தான் சொல்கிறார்..I கொரிந்தியர் 13:12 இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.


இப்போதென்ன ஞானமும் அறிவும் ஒரே பதம் என்று மொழிபெயர்ப்பு பிழை என்று எங்களுக்கு எபிரேயு சொல்லி தர போகிறீர்களா..

ஞானமும் அறிவும் ஒன்று என்றாலும் தாங்களை போன்றவரால் திரிகளில் பதிய முடியும்,அவ்வாறு இல்லை என்றாலும் உங்களால் திரிகளை தர முடியும்..நான் கூறுவதை ஒன்றும் இல்லை என கூறியும் சமாளிக்க முடியும்..தாங்கள் எபிரேயுவை பின்பற்று பட்சத்தில் இயேசுவை "யெஹுஸுஅஹ்" என்றும் எஹோவாவை  "எஹுஹ்வா" என்றும் தானே உங்கள் பதிவுகளில் எழுதி இருக்க/அழைத்திருக்க வேண்டும்!!! நீங்கள் முடிவில்லாமல் ஆயுள் வரை மொழிபயர்துகொண்டே இருப்பீர்களோ..வேதத்தை மொளிபயற்பது பற்றி வேதத்தில் எங்கு  உள்ளது ..ஏன் இந்த மாய்மாலம்.அனலற்றவர்களை அவித்துபோடவா? வசனம் பின்வருமாறு உள்ளது

கொரிந்தியர் 14:6 மேலும், சகோதரரே, நான்உங்களிடத்தில்வந்துஉங்களுக்குஇரகசியங்களைவெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தைஅறிவிக்கிறதற்காவது, போதகத்தைப்போதிக்கிறதற்காவதுஏதுவானதைச்சொல்லாமல், அந்நியபாஷைகளில்பேசினால்என்னாலேஉங்களுக்குப்பிரயோஜனம்என்ன?

you wrote//வசனத்திற்கான உங்களது இவ்விளக்கத்தை நான் ஏற்கவில்லை.//

நீங்கள் சகலத்தையும் அறிந்தவர் நான் கருதவில்லை....நான் உங்களை ஏற்றுகொள்ளும்படி கூறவில்லை,செவி கொடுக்க மட்டும் தான் கூறினேன்..



யோவான் 8:43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?


//அவருக்காக நான் ஜெபிக்கிறேனா என்பதையெல்லாம் தங்களிடம் ஒப்பிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை.///

ஒப்புவிக்காத பட்சத்தில் என்னிடம் ஒரு ஊழியரை பற்றி சாப வார்த்தை கூற உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை..


///நீங்கள் வசனத்தை வைத்து வாதம் வைக்கவில்லையே! சுயமாக என்னவெல்லாமோ சொல்கிறீர்கள். அதற்கு நான் என்ன சொல்லமுடியும்?///

தங்கள் எடுத்து காட்டும்"தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாகுக  "என்பது நான் துதிக்கும் வார்த்தை..தாங்கள் திரிகளில் இருந்து வார்த்தையை எடுத்து பேச துணியாமல் துதிக்கும் வார்த்தை எடுத்து பேசி உள்ளீர்கள்..


you wrote/// உங்களால் முடியாவிட்டால், அந்த சொற்றொடரை நீங்கள் பிரயோகிக்கக்கூடாது. உங்கள் அறியாமையை ஒத்துக்கொண்டு என்னிடம் கேளுங்கள், நான் வசன ஆதாரத்துடன் விளக்கம் சொல்கிறேன்.///

சகோதரர் தாங்கள் அறியாமை தான் ஆச்சர்யபடுத்துகிறது..தமிழ் பைபிள் தலத்தில் 'தேவாதி' என குறிப்பிட்டால் வசனங்கள் கிடைக்காதா? கர்த்தருடைய பட்டயம் என்னுடைய பட்டயமும் கூட சகோதரே.. மற்றுமல்லாது வசனத்தை கையாள எனக்கு பஞ்சம் இல்லை..

நான் கர்த்தரால் அறிவுறுத்தப்பட்டு,அவர் வார்த்தைகளை கவனமாய் என் சுவாபத்தின் படியல்லாது கையாள பொறுமையாய் இருந்தேன்.

 நான் தங்கள் கருத்தை கூறவும்,தங்கள் விசுவாசத்தை தங்கள் எழுத்துக்களால் அறிந்து கொள்ளும் வரை எனக்குள் நிச்சியித்து

பொறுமையாய் இருந்தேன்..ஏன் என்றால் பின்வருமாறு நாம் எல்லாரும் இருக்க வேண்டும் என குறைவில்லாது வாஞ்சிக்கிறேன்..


கொலோசெயர் 2:2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

நான் முன் கூறிய வசனங்களின் பொருளை தாங்களால் அறிய முடியவில்லை என கூறி இருந்திருந்தால்..நான் 4 வசனங்களுக்கு மேலும் தங்களுக்கு சுட்டி காட்டி இருப்பேன்..

You wrote///அந்த சொற்றொடரை நீங்கள் பிரயோகிக்கக்கூடாது///

என்னை தேவாதி தேவனை துதிக்ககூடாது சொல்ல நெபுகத்நேச்சாராலும்  முடியாது.. தங்கள் பின்னே இருந்து இவ்வார்த்தைகளை கூறவைக்கும் அசுத்த ஆவிகளை அறிகிறேன்..


You wrote ////கல்லெறியவேண்டும் (அதாவது தண்டனை கொடுக்கவேண்டும்) என்று சொல்லி இயேசுவிடம் அவளைக் கூட்டி வந்தனர். தண்டனை கொடுத்தல் எனும் நியாயத்தீர்ப்புதான் வேண்டாம் என இயேசு சொன்னார்///

"தண்டனை கொடுத்தல் எனும் நியாயத்தீர்ப்புதான் வேண்டாம் என இயேசு சொன்னார்"எங்கு வேதத்தில் இவ்வாறு இயேசு கூறியதாக உள்ளது.பொய் சொல்லாதிருங்கள் என்று கட்டளை இருக்க, வசனம் அல்லாததை வசனம் போல காண்பிகிறீர்கள்..

YOU WROTE///அட்டூழியரான அவரை தேவனால் அபிஷேகம் பெற்றவர் எனச் சொல்லி, நீங்கள் வஞ்சகத்தில் கிடப்பதால்தான் உங்கள் மீது பாய்கிறேன்.///

என் மீது பாய்வதை ஒப்புகொள்கிறீர்கள்..பாய்வதை நிறுத்தி நிதானியுங்கள்..சவுலும்,சாத்தானும் கூட அபிஷேகம் பெற்றிருந்தவர்களே..

நான் எந்த தேவ ஊழியரையும் பின்பற்றுவதயுல்லை..என் ஏசுவே எனக்கு குரு..தேவை இல்லாமல் நான்  எந்த ஊழியரையும் பின்பற்றுகிறேன் என கூறாதிருங்கள்.

மத்தேயு 23:10 கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.

///தேவாதி தேவன் பற்றின எனது கேள்விக்கான பதிலை இன்னமும் சகோ.John12 சொல்லாததால்///

ஆனால் தாங்கள் சோதிக்கும் விதமாய் (தங்களுக்கு தான் எல்லாம் தெரியும்) என்ற விதமாய் என்ன கூறினாலும் ஏற்காமல் இருந்தீர்கள்..அதனால் மட்டுமே மேற்கொண்டு பதிலை தாங்கள்    என்னிடம் இருந்து பெறவில்லை ...

விவாதத்திற்கு பிரயோஜனமாக தற்போது தங்கள் விசுவாசத்தை பதிவின் மூலமாய் சொல்லி உள்ளீர்கள்.நன்றி

 

தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்..

இயேசு தேவாதி தேவன் என்பதற்கு விளக்கங்களையும் தருகிறேன்

===============================================

 

எபிரெயர் 10:22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.



-- Edited by JOHN12 on Thursday 29th of December 2011 09:56:48 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

செப்பனியா2:11. கர்த்தர் (THE LORD)அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.

மேற்கூறிய வசனத்தில் கர்த்தர் எனும் பதம் வருகிறது.. இயேசுவை பின் வரும் அனேக வசனங்கள் கர்த்தர் என்கின்றன.மேற்கூறிய வசனத்தில் கர்த்தர் என்பதாக குறிப்பிடபட்டவர் "தேவர்களை மேலியபண்ணுகிறவர்" என சொல்லபடுகிறது.

 

இயேசுவை பின் வரும் அனேக வசனங்கள் கர்த்தர் என்கின்றன.

லூக்கா 24:3 உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,

அப்போஸ்தலர் 7:59 அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

அப்போஸ்தலர் 1 :21. ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

அப்போஸ்தலர் 11:17 ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு ......

எனவே வேதத்தில் கர்த்தர் என சொல்லபடுகிற  நம் இயேசுவானவர் வேதத்தில் உள்ள கர்த்தர் என்ற பதத்திலும்  ஒப்பிடப்பட தகுதியானவரே..தேவர்களை மெலிய பண்ணுகிறவர் நிச்சயம் தேவர்களுக்கு மேற்பட்ட தேவாதி தேவன் என்பதில் சந்தேகள் இல்லை..
இங்கு கர்த்தர் தேவர்களை மெலிய பண்ணுகிறார் என சொள்ளபடுவதினால் கர்த்தராகிய இயேசுவானவர் தேவாதிதேவன் என்பதில் சந்தேகம் எள் அளவும் இருக்க தேவை  இல்லை...

 

===============================================

உன்னதப்பாட்டு 8 :3. அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.



 



-- Edited by JOHN12 on Friday 30th of December 2011 03:40:18 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//நான் கர்த்தரால் அறிவுறுத்தப்பட்டு, அவர் வார்த்தைகளை கவனமாய் என் சுவாபத்தின் படியல்லாது கையாள பொறுமையாய் இருந்தேன்.

நான் தங்கள் கருத்தை கூறவும், தங்கள் விசுவாசத்தை தங்கள் எழுத்துக்களால் அறிந்து கொள்ளும் வரை எனக்குள் நிச்சியித்து பொறுமையாய் இருந்தேன்.. ஏன் என்றால் பின்வருமாறு நாம் எல்லாரும் இருக்க வேண்டும் என குறைவில்லாது வாஞ்சிக்கிறேன்..//

//ஆனால் தாங்கள் சோதிக்கும் விதமாய் (தங்களுக்கு தான் எல்லாம் தெரியும்) என்ற விதமாய் என்ன கூறினாலும் ஏற்காமல் இருந்தீர்கள்..அதனால் மட்டுமே மேற்கொண்டு பதிலை தாங்கள்    என்னிடம் இருந்து பெறவில்லை ...//

சகோ.John12 அவர்களே! நீங்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் என்பதையும் நேருக்கு நேராய் நேர்மையாய் விவாதிக்கும் திறமில்லாதவர் என்பதையும் முரண்பாடான தன்மையுள்ளவர் என்பதையும் குழப்பவாதி என்பதையும் மேற்கூறிய தங்கள் வரிகள் மூலம் புரிந்துகொண்டேன்.

You go ahead as you please and confuse the readers as much as possible.

தேவாதி தேவன் எனும் சொற்றொடர் அடங்கின வசனங்களை தெரிந்திருந்துங்கூட, பிடிவாதமாக அவற்றை நீங்கள் சொல்லாததற்குக் காரணம், அவ்வசனங்கள் உங்கள் வாதத்திற்கு சாதகமாக இராததே. இதை நேர்மையாக ஒத்துக்கொள்ள மனமின்றி, “இந்தக் காரணத்திற்காக பொறுமையாக இருந்தேன், அந்தக் காரணத்தினால் பதில் தரவில்லை” என ஏதேதோ சொல்லி சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள். கர்த்தரால் அறிவுறுத்தப்பட்டதாக ஒரு மாபெரும் பொய்யையும் சொல்லுகிறீர்கள்.

உண்மையில் நீங்கள் “அறியாமையில்” இருப்பதாகத்தான் நான் கருதினேன். அதை எனது “அறியாமை” என நான் ஒத்துக்கொள்கிறேன். ஆகிலும் உங்கள் “அறியாமையைப்” போக்குவதற்காக நான் எனது விளக்கத்தைத் தரவில்லை. பிற தள அன்பர்களுக்காகவே நான் விளக்கத்தைத் தந்தேன்.

அறியாமையை” நான் சகித்துக் கொள்வேன், ஆனால் “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிற ஏமாற்றுக்காரர்களையும், தன் மனதிலுள்ளதை நேர்மையாய் சொல்லி விவாதம் செய்ய தைரியமில்லாத கோழைகளையும்” நான் சகிப்பதில்லை.

So, you carry on your unrighteous doings. I won't come across with them. It is none of my duty to correct persons like you.

சங்கீதம் 31:23 உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

CSI-கிறிஸ்துவர் என்ற போர்வையில் காணப்படும் யஹோவா சாட்சிகாரரான உங்கள் மாயத்தை வெளிச்சம் போட்டு காட்டினால் தகாத வார்த்தைகளை கொண்டு தாங்கள் இவ்வாறு தான் பேசுவீர்கள்..நான் தங்களை போல சுவாபதின் படி வசனத்தை கையாள்வதில்லை...

யாக்கோபு3 :5. அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது

யாக்கோபு1 :26. உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்..


இஸ்லாமியர்க்கும் யஹோவா சாட்சிகாரரான தங்களுக்கும் பெரிய வேற்றுமைகள் கிடையாது.. அவர்களும் இயேசுவை அறியாமல் பிதாவை மட்டும் வழிபடுவதாக எதையோ செய்கிறார்கள்..தாங்களும் இயேசுவை தேவன் எனவும் பிதாவிற்கு இயேசு சமமற்றவர் எனவும் கூறியதோடு மட்டும் அல்லாது,பரிசுத்த ஆவியானவரை தேவன் என வேதம் குறிப்பிடவில்லை என்கிறீர்கள்..

ஒரு விசுவாசி இவ்வாறு கூறுவதிற்கும்,தேவ ஊழியர் என தங்களை கூறிக்கொள்பவர் இவ்வாறு செய்வதற்கும் வித்தியாசம் உண்டு...

தாங்கள் கிறிஸ்துவை அஸ்திபாரமாக கொள்ளாதவர்,ஆவியற்றவர்,மார்க்கம் தப்பி போன நட்சதிற்கும்,அவமானத்தை நுரையாக தள்ளும் கடல் அலைக்கும் ,மழை பெய்யாமல் போகும் மேகத்திற்கும் சமமானவர். அநேகருடிய பொது விசுவாசத்தை குலைதுபோடும் கோராவின் ஆவியை உடையவர்..தங்களது ஊழியமும் ஆவ்வாரானதே.. கனியற்ற மரமான நீங்கள் என்னை குறைகூறும் படிக்கு இன்னும் என்ன என்னமோ கூட கூரிகொள்ளுங்கள்..நான் பொருட்படுத்த போவதில்லை..

துன்மார்கனை என்காலின் கீழ் சாம்பலாய் ஒப்புகொடுக்கும் தேவன் உண்டு,

மல்கியா 4:3. துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் வேறுபாடு ஏற்படுத்தி,என்னை கடாட்சிக்கும் தேவன் எனக்கு உண்டு..

மல்கியா 3 :17,18...ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்...

அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

கசப்பான வைராக்கியத்தை கொண்டு,வசனத்தை வளைக்கிற தங்கள் ஞானம் பேய் தனத்திற்கு அடுத்தது...

யாக்கோபு3 :14. உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.

தங்களை போன்ற தூசன நாவை உடையவர்கள் பரிசுத்த ஆவியை கூட தேவன் இல்லை என்பீர்கள்.. ஞானம் என வேதம் காட்டுவது இயேசுவை,வார்த்தை என வேதம் காட்டுவதை புறக்கணித்து ஞானத்தால் நிறைந்துள்ளேன் என்பீர்கள்.. தங்கள் இந்த ஞானம் பேய் தனத்திற்கு அடுத்தது..

பிதா தங்களை போன்றவரால் மகிமைபடுகிறார் என சொல்லபடாமல், குமாரனால் மகிமை படுகிறார் என ஏன் எழுதபட்டுல்லாது என தாங்கள் அறிந்துனராதவர்..

தங்களை போன்றோரை பற்றி தான் வேதம் பின்வருமாறு சொல்கிறது..


யூதா:9-25

பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்ளுவாராக என்று சொன்னான்.

பிசாசை கூட தூசனமாய் குற்றபடுத்த வேதம் நம்மை அனுமதிகிரதில்லை,ஆனால் இவரை கவனயுங்கள்.. ..சாதாரணமாக குற்றபடுதுகிறார்!!!!!என் தெரியுமா??

இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும்,

தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்த்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.

ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,

தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.

நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூறுங்கள்.

கடைசிகாலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.

இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,

தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.

அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,

மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.

வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,

தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

சுயஜீவியத்தில் வெளிப்பாடுகளை பெறாமல் ஊழியம் செய்கிறேன் என கிளம்பி அநேகரை வசிக்கிற ஆவி உடைய தங்களை போன்றோரின் ஊழியத்தை நான் என் இயேசுவின் நாமத்தின் மகிமைக்காக சபிக்கிறேன்...

நீங்களும் சகோதர்களே வஞ்சகத்தை,விசுவாச துரோகத்தை அறிகிற அறிவினால் நிறையபெற்று வேதம் காட்டும் இத்தகைய ஆவி உடையவர்களை விட்டு விலகுங்கள்..இவர்கள் போதகம் சரியானதை போல தோன்றினாலும் முடிவு அந்தகாரம்..

இவர்கள் ஜீவியதிர்கடுத்த காரியங்களை சாமர்த்தியமாய்   போதித்து,மயங்குபவர்களை தங்களுடைய மாயமான பொது விசுவாசத்தின் படி நடத்தி வஞ்சிக்கும்,விரியன் பாம்பு குட்டிகள்....

I யோவான் 4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

என வேதமும் நம்மை எச்சரிக்கிறது...

இதோ..அற்பமான நான் தேவவழி நடத்துதலின் படி இத்தளதிற்கு வந்தேன்.தமிழில் எழுத தளசகோதரர்களால் அறிவுருத்தப்பட்டேன்.இத்தளத்தில் கிறிஸ்துவை அஸ்திபாரமாக கொள்ளாத,அவிசுவாசதிர்கடுத்த,கிறிஸ்துவை புறக்கணிக்கும் வினோத ஊழியரான இவரை கண்டிக்க இத்திரியை தொடங்கி தற்போது வசனத்தை கொண்டே இவர் முகத்திரையையும் கிழித்தேன்..  

---------------------------------------------------------------------------

தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!

 



 



-- Edited by JOHN12 on Friday 30th of December 2011 03:57:33 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோ.ஜான்12 அவர்களே, தாங்கள் சகோ. அன்பு அவர்களின் அடிப்படை கொள்கைகள் பற்றி அறிந்துவிட்டீர்கள். அவர் பரிசுத்த ஆவியின் ஆள்தத்துவம் பற்றி ஏற்ப்பது இல்லை, அடுத்து இயேசு தேவனின் இன்னொரு ஆள்தத்துவம் என்பதையும் அவர் ஏற்ப்பது இல்லை. ஆனால் வேத வசனங்களின்படி சரியாக நேர்மையாக வாழவேண்டும் என்ற கொள்கையுடையவர். தாங்கள் குறிப்பிடுவதுபோல் ஏறக்குறைய ஒரு இஸ்லாமியரின் நிலை போன்றதுதான்.  
 
எனவே தாங்கள் இங்கு அவருடன் விவாதிக்க விரும்பினால் செய்ய வேண்டியது என்னவெனில் அவரின்  இந்த இரண்டு தவறான புரிதல்களை மாற்றி சரியாக புரியவைக்கும்  வேதவசன ஆதாரத்தை எடுத்து பதிவிட்டு விளக்குவதுதான் முறையே தவிர, ஏதோ சில வசனங்களை எடுத்து கொண்டு ஒருவரை மாற்றி ஒருவர்  நியாயம் தீர்ப்பது பயனற்றது என்றே நான் கருதுகிறேன்.
  


-- Edited by SUNDAR on Friday 30th of December 2011 03:18:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நல்லது சகோ.சுந்தர் அவர்களே...

தாங்கள் கூறியதை ஏற்கிறேன்..

ஆனால் இயேசுவை அஸ்திபாரமாக அவர் கொள்ளாத படியினால்,அவருக்கு கிறிஸ்துவின் உயர்தேளுதலின் மகிமையில் பங்கில்லை..கர்த்தர் அவரை திருத்தட்டும்..

நான் என்ன!!! 

மோசேயும்,பவுலும் ஒருங்கே சாட்சி தந்தாலும் இவர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள்..

சகோதரரே!! சுவிஷேத்தை நாம் அறிவிப்பது கடமை..ஆனால் பாருங்கள் இரட்சிப்பு கர்த்தருடையது என வேதத்தில் உள்ளது..  

நீங்கள் ஒருமுறை எனக்கு இடறலாய் இருப்பதை குறித்து வசன விளக்கத்தோடு கூற கேட்டீர்கள். இதோ சகோ.அன்பின் இத்தகைய போக்கும்,போதகமும் எனக்கு இடறலாய் இருந்தது..இப்போது வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டேன்..

ஆனால் இனி அவருக்கென தனியாய் எழுதாமல், கேள்விகளுக்கு பொதுவாய் வேத அடிப்படையில் பதில் தருகிறேன்..அது பக்திவிருத்திக்கு நிச்சயம் எதுவாய் இருக்கும்.

============================================

 

ஏசாயா 33:6 பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்.



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:
ஆனால் இயேசுவை அஸ்திபாரமாக அவர் கொள்ளாத படியினால்,அவருக்கு கிறிஸ்துவின் உயர்தேளுதலின் மகிமையில் பங்கில்லை..


சகோ. அன்பு அவர்கள் ஆண்டவராகிய  இயேசுவை  தேவத்துவத்துக்குள் ஒருவராக ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவரை தேவகுமாரனாக ஏற்றுக் கொண்டு, இஸ்லாமியரை போல் அல்லாது, அவர்  நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் பின்னர் உயிர்த்தார் என்ற உண்மைகளை  எல்லாம் விசுவாசிப்பதால், அவரின் விசுவாசத்தின் அடிப்படையில் அவருக்கு இயேசுவின் உயிர்த்தெழுதலில் பங்கு பாத்திரம் உண்டா  என்பதை இறைவனே தீர்மானிக்கட்டும். நாம் தீர்மானமாக  எதையும் சொல்லமுடியாது என்பதே எனது கருத்து.      

I கொரிந்தியர் 4:5  கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்

 
 


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

Please follow:

http://www.lord.activeboard.com/t47032312/vs/



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//சகோ.அன்பு அவர்களே "பரிசுத்த ஆவியானவர் ஒரு தனி தேவன் அல்ல" என்று வேண்டுமானால் சொல்லுங்கள் அது சரியே! அவரும் தேவ ஆவியின்  இன்னொரு பரிணாமமே!  ஆனால் அவர் "ஆள்தத்துவம் உள்ளவர் அல்ல வெறும் வல்லமை மட்டும்தான்" என்று சொல்வது  வசனத்துக்கு புறம்பானது. வசனம் அனேக  இடங்களில் ஆவியானவரை  ஆள்தத்துவம் உள்ளவராகவே காட்டுகிறது.//

சகோ.சுந்தர் அவர்களே! பரிசுத்தஆவியின் ஆள்த்தத்துவம் பற்றி நேரடியான வசனங்கள் வேதாகமத்தில் இல்லை. நீங்கள் உங்கள் புரிந்துகொள்தலைச் சொல்கிறீர்கள், நான் எனது புரிந்துகொள்தலைச் சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை பரிசுத்தஆவி தேவனா, ஆள்த்தத்துவமா என்ற கேள்வியெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

தங்களது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்த நினைப்பவர்கள்தான், தேவையற்ற ஆராய்ச்சிகளைச் செய்து, வேதாகமம் திரித்துவ தேவனைக் கூறுகிறது, அவர் ஒரு தேவன், இவர் ஒரு தேவன், அவரும் இவரும் சமம் என்றெல்லாம் சொல்வதில் தீவிரப்படுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை “தேவன் ஒருவரே” என்றும், “தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்வாயாக” என்றும், “இயேசுவானவர் தேவனின் ஒரேபேறான குமாரன்” என்றும், “நாம் இரட்சிக்கப்படும்படி தமது ஒரேபேறான குமாரனை தேவன் இவ்வுலகத்திற்கு அனுப்பினார்” என்றும், “தேவனுக்குள்ளும் இயேசுவுக்குள்ளும் இருக்கிற பரிசுத்தஆவியை வாஞ்சித்துப் பெற்று, அதன் பலத்தினாலே இவ்வுலகத்தை நாம் ஜெயிக்கவேண்டும்” என்றும் வேதாகமம் சொல்வதை அப்படியே நான் ஏற்கிறேன். இதற்கு மேலாக தேவத்துவத்தைக் குறித்த எந்த ஆராய்ச்சியும் எனக்குத் தேவையில்லை. மாறாக, நித்திய ஜீவனை சுதந்தரிக்க என்ன செய்யவேண்டும், இயேசுவோடுகூட 1000 வருட அரசாட்சியில் அரசாள என்ன செய்யவேண்டும் என்பதுதான் எனக்குத் தேவை.

ஆனால் தேவத்துவத்தை தீவிரமாக ஆராய்ந்து திரித்துவ தேவனைக் கண்டு பிடித்தவர்களுக்கு, நித்தியஜீவனைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் முக்கியமல்ல. ஏனெனில் இயேசுவை விசுவாசிக்கிற அனைவருக்கும் பரலோகம்தான் என்பதே இவர்களின் பொதுவான நம்பிக்கை. எனவேதான் மத்தேயு 7:21 கூறுகிறபடி இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்வதோடு, அவரை ஆராதிக்கவும் வேண்டும் என்பதில் இவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். இவர்களின் இந்த நம்பிக்கைக்கு எதிரானவர்கள் “உயிர்த்தெழ மாட்டார்கள், நரகம் தான் செல்வார்கள்” என நியாயந்தீர்க்கவும் செய்கின்றனர்.

நீங்களுங்கூட என்னைப் போன்றவர்களை இஸ்லாமியருடன் ஒப்பிட்டு நியாயந்தீர்க்கிறீர்கள். எந்த வசனத்தின் அடிப்படையில் இப்படி நியாயந்தீர்க்கிறீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பதும் தேவகட்டளைதான், விருத்தசேதனம் செய்யவேண்டும் என்பதும் தேவகட்டளைதான், பலியிடவேண்டும் என்பதும் தேவகட்டளைதான், நீதி, இரக்கம், விசுவாசம் வேண்டும் என்பதும் தேவகட்டளைதான். ஆனாலும் இதைவிட இதுதான் முக்கியம்/பிரதானம் என இயேசு கூறியுள்ளார். தேவகட்டளைகளில்கூட சிலவற்றை முக்கியப்படுத்திவிட்டு சிலவற்றை பின்னே தள்ளின இயேசு, தேவகட்டளைக்கு சற்றும் சம்பந்தமில்லாத தேவத்துவ விஷயங்களை முக்கியப்படுத்துவாரா என யாரும் சிந்திப்பதில்லை.

தேவகட்டளைகளைக் காட்டிலும் தேவத்துவ விஷயங்களைப் பிரதானப்படுத்தி, அதன் அடிப்படையில் “இவனுக்கு உயிர்த்தெழுதல் கிடையாது, இவன் இஸ்லாமியரைப் போன்றவன்” என நியாயந்தீர்க்க John12-க்கும் உங்களுக்கும் எந்த வசனம் அதிகாரம் கொடுத்துள்ளது எனப் புரியவில்லை.

அன்பான சகோதரரே! பரிசுத்த ஆவியானவரை ஆள்த்தத்துவமுள்ளவராக அனேக இடங்களில் வசனம் காட்டுகிறது என்கிறீர்கள். அப்படியானல் “சில” இடங்களில் ஆள்த்தத்துவமாகக் காட்டவில்லை என அர்த்தங்கொள்ளலாமா? பரிசுத்தஆவியை சில இடங்களில் ஆள்த்தத்துவமுள்ளவராகவும் சில இடங்களில் ஆள்த்தத்துவமில்லாதவராகவும் வசனம் காட்டுவது சரியாகுமா?

மரியாள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது என மத்தேயு 1:18 கூறுகிறது. இதே வசனத்தை “மரியாள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது” என மொழிபெயர்த்திருந்தால் அவ்வசனத்தின் அர்த்தம் விபரீதமாகியிருக்குமல்லவா?

ஆவி, ஆவியானவர் எனும் 2 சொற்களுக்கும் மூல பாஷையில் "pneuma" எனும் ஒரே வார்த்தைதான் காணப்படுகிறது. இவ்வார்த்தைக்கு அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தம்:

a current of air, i.e. breath (blast) or a breeze; by analogy or figuratively, a spirit, i.e. (human) the rational soul, (by implication) vital principle, mental disposition, etc., or (superhuman) an angel, demon, or (divine) God, Christ's spirit, the Holy Spirit:

என்பதாகும். current of air, breath (blast) or breeze என்பவை மட்டுமே நேரடி அர்த்தங்களாகும். மற்றவையெல்லாம் ஒப்பிடுதல் அல்லது உருவகப்படுத்துததால் உண்டாகும் அர்த்தங்கள். இந்த அர்த்தங்களின் அடிப்படையில் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள், ஆவி என்பது ஆள்த்தத்துவமா இல்லையா என்பதை.

வேதாகமத்தின் பல தவறான மொழிபெயர்ப்புகள்தான் நம்மிடையே பல கருத்து வேறுபாடுகளுக்கு முக்கிய காரணம். ஆனால் John12 போன்றவர்கள், தவறான தமிழ் மொழிபெயர்ப்பின் அடிப்படையிலேயே விவாதிக்கலாம் என்கின்றனர். முதல் கோணல் முற்றும் கோணலல்லவா? பின் எப்படி தவறான மொழிபெயர்ப்பை ஆதாரமாக வைத்து விவாதித்து சரியான முடிவை எட்டமுடியும்?

பழையஏற்பாட்டில் ஒரு வசனம் இப்படி கூறுகிறது.

ஏசாயா 45:11 இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.

இஸ்ரவேலர்களை தம்மிடம் கட்டளையிடும்படி தேவன் கூறுவதாக இவ்வசனம் அமைந்துள்ளது. அப்படியானால் அற்பமனிதர்களுக்கு தேவனிடம் கட்டளையிட உரிமையுள்ளதெனச் சொல்லலாமா? இக்கேள்விக்கான பதிலைக் கூறுங்கள் சகோ.சுந்தர் அவர்களே!



-- Edited by anbu57 on Monday 2nd of January 2012 01:02:53 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

anbu57 wrote:


என்னைப் பொறுத்தவரை “தேவன் ஒருவரே” என்றும், “தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்வாயாக” என்றும், “இயேசுவானவர் தேவனின் ஒரேபேறான குமாரன்” என்றும், “நாம் இரட்சிக்கப்படும்படி தமது ஒரேபேறான குமாரனை தேவன் இவ்வுலகத்திற்கு அனுப்பினார்” என்றும், “தேவனுக்குள்ளும் இயேசுவுக்குள்ளும் இருக்கிற பரிசுத்தஆவியை வாஞ்சித்துப் பெற்று, அதன் பலத்தினாலே இவ்வுலகத்தை நாம் ஜெயிக்கவேண்டும்” என்றும் வேதாகமம் சொல்வதை அப்படியே நான் ஏற்கிறேன்.

 


தங்கள் கருத்தை நானும் அப்படியே ஏற்கிறேன்!

anbu57 wrote:///இதற்கு மேலாக தேவத்துவத்தைக் குறித்த எந்த ஆராய்ச்சியும் எனக்குத் தேவையில்லை./// 

சகோதரர் அவர்களே,  தேவத்துவ விஷயங்களை நாம் அதிகம் துருவி துருவி ஆராயவிடிலும் வேதம்  சொல்லும் சில அடிப்படை  விஷயங்களாகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளுதல், ஞானஸ்தானம் எடுத்தல், பரிசுத்த ஆவியை பெறுதல் போன்ற தேவனின் ஆலோசனகளை தள்ளிவிடாமல் அதை நிறைவேறியே ஆகவேண்டும். இல்லையேல், எலியாவின் சிறிய ஆலோசனையை தள்ளிவிட்ட நாகமான் போல பாவ குஸ்டம் நீங்காமல் போய்விடலாம். மேலும் நாம் தேவனை அறிய வேண்டிய விதமாக அறியாதவர்களாகி தேவனின் எதிர்பார்ப்பை  சரியாக செய்ய முடியாத ஒரு நிலையில் இருந்துவிடலாம்.  

 anbu57 wrote://///தேவகட்டளைகளைக் காட்டிலும் தேவத்துவ விஷயங்களைப் பிரதானப்படுத்தி, அதன் அடிப்படையில் “இவனுக்கு உயிர்த்தெழுதல் கிடையாது, இவன் இஸ்லாமியரைப் போன்றவன்” என நியாயந்தீர்க்க John12-க்கும் உங்களுக்கும் எந்த வசனம் அதிகாரம் கொடுத்துள்ளது எனப் புரியவில்லை.////
 
தங்களை "இஸ்லாமியரை போன்றவர்" என்று சொல்வதற்கு எங்களுக்கு எந்த வசனம் அதிகாரம் கொடுத்தது என்று தாங்கள் கேட்டால் அதற்க்கு எனது பதில்: 
 
எபேசியர் 4:30   நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
 
இவ்வசனத்தின்படி "மீட்கப்படும் நாளுக்கென்று நமக்கு கிடைத்த  முத்திரையே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்தான்" என்று வேதம் தெளிவாக சொல்லும் பட்சத்தில், அவரை அறியாமல் அவரை வாஞ்சித்து பெறாமல் சன்மார்க்க நடத்தைகள் மேல்மட்டும் நம்பிக்கை வைத்து இயேசுவை "ஒரு தேவ தூதர்" என்று சொல்பவர்கள் இஸ்லாமியர்களே! எனவே அவ்வாறு சொல்ல நேர்ந்தது.  
 
ஒரு மனுஷனை தேவனுக்கேற்ற பரிசுத்த நிலையில் நடத்துபவர் ஆவியானவர் மட்டுமே!  
 
யோவான் 16:13சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
 
அவர் நமக்குள் இல்லாமல் நாம் என்னதான் சன்மார்க்கமாக நடந்தாலும் அது தேவனுக்கு ஏற்ற ஒரு பரிசுத்த நிலையாக இருக்காது.  அவ்வாறு ஆவியானவர் நம்மை கண்டித்து உணர்த்தி நடத்தும் போது அவரது நடத்துதலுக்கு நாம் செவிகொடுக்காத பட்சத்தில் அவர் துக்கப்படுவார். அதை நாம் நன்றாகவே உணர  முடியும். ஒரு மனுஷனால் மட்டுமே துக்கப்பட முடியுமேயன்றி, வெறும் வல்லமையால் துக்கபட முடியாது.    
 
அவரைப்பற்றி ஆண்டவராகிய இயேசு சொல்கையில் "வேறொரு தேற்றரவாளனை" என்று ஆள்த்துவத்தொடு சொல்கிறார்.   
 
யோவான் 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

 

14:16

  And I will make prayer to the Father and he will give you another helper to be with you for ever,  (he may abide with you forever)  - comforter/consoler
 
ஆவியானவர் "வல்லமையுள்ள ஆள்த்துவமானவர்" அவர் சில இடங்களில் வெறும் வல்லமையாக மட்டும் செயல்படுவார். சில இடங்களில்  ஆள்தத்துவம் உள்ள தேவ ஆவியாக செயல் பட்டு நம்மை கண்டித்து உணர்த்தி நடத்துவார். எனவே அவரை இப்படித்தான் என்று யாரும் வரையறுக்க முடியாது.
  
நீங்கள் ஆவியானவரை ஆள்தத்துவம் உள்ளவர் என்று நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர் ஆள்தத்துவம் உள்ளவர்தான் அந்த உண்மை யாரும் மாற்றவோ மறைக்கவோ முடியாது.  
 
யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
 
என்ற வர்த்தைகள்படி, நாங்கள் அவரை அறிந்திருக்கிறோம். அவர்  நடத்துதலையும்  அவர் துக்கப்படுதலையும் அறிந்தும்  உணர்ந்தும் இருக்கிறோம். உங்களுக்குள் ஆவியானவர் இருந்தால் அவரை நீங்கள் நிச்சயம் அறிய முடியும். ஒருவரை பற்றிய  உண்மைகளை  அறியாதவரை அவரை "ஒரு வல்லமை" என்று தாங்கள் சொல்வதில் வியப்பேதும் இல்லை!   
 
என்னை பொறுத்தவரை தாங்கள் வேத வசனப்படி அதிகம் நடக்க பிரயாசம் எடுத்தும்  இன்னொரு  தேவ ஊளியரிடமோ அல்லது தேவனிடமோகூட தங்களை அதிகமாக தாழ்த்தி "என்னை உம்முடய வல்லமையால் அபிஷேகியும் ஆண்டவரே" என்று கேட்க மனதில்லாமல் இருக்கிறீர்கள் என்று கருதுகிறேன். அதனால்தான் ஆவியானவர் இன்றுவரை தங்களை அபிஷேகிக்க வில்லை.
 
தேவ ஊழியர்களையும் சரி யாரையுமே "இவன் பாவி" என்று தீர்க்காமல் எல்லோரையுமே நம்மைவிட மேன்மையாக நினைக்க சொல்லி வேதாகமம் அறிவுறுத்துகிறது  
 
பிலிப்பியர் 2:3 ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
ஆவியானவர் மிகவும் மென்மையானவர்  மிகுந்த தாழ்மையோடு விட்டாப்பிடியாக அவரைநோக்கி கெஞ்சி கேட்போமானால் அவர் நிச்சயம் அபிஷேகிபார். மேலும் தங்கள் பேரில் ஆண்டவருக்கு அதிக பிரியம் இருக்கிறது என்பதை நான் அறிந்தும் உணர்த்தும் இருக்கிறேன். எனவே மீண்டும்மீண்டும் தங்களுக்கு இந்த உண்மையை நினைவுபடுத்துகிறேன். 
 
anbu57 wrote 
////ஏசாயா 45:11 இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.
 
இஸ்ரவேலர்களை தம்மிடம் கட்டளையிடும்படி தேவன் கூறுவதாக இவ்வசனம் அமைந்துள்ளது. அப்படியானால் அற்பமனிதர்களுக்கு தேவனிடம் கட்டளையிட உரிமையுள்ளதெனச் சொல்லலாமா? இக்கேள்விக்கான பதிலைக் கூறுங்கள் சகோ.சுந்தர் அவர்களே!////

தமிழ் மொழிபெயர்ப்பில் பல தவறுகள் இருக்கலாம் நான் மறுப்பதற் கில்லை. தாங்கள் மேலே சுட்டியுள்ள  வசனமானது  ஆங்கில வேதாகமத்தில் இருந்து முற்றிலும் மாறான கருத்தில் மொழி  பெயர்க்க பட்டுள்ளது  என்பதை அறியமுடிகிறது.  ஆனால் நமக்கு எது  பிரயோசனமோ அதை சரியாக போதித்து நம்மை  நடக்கவேண்டிய வழியில் நடத்தும் கர்த்தரின் ஆவியானவரே நம்மோடு  இருக்கும் பட்சத்தில் நாம் மொழிபெயர்ப்பு  பிழைகளை பற்றி  ஆராய வேண்டிய அவசியம்  இல்லை என்றே நான் கருதுகிறேன்!
    
ஏசாயா 48:17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

தேவத்துவத்துக்கடுத்த சில விஷயங்களை தேவனுடய  ஆழங்களை அறிந்த ஆவியானவர் உணர்த்தினால்தான் சரியாக அறிய முடியும். மற்றபடி நாம் எத்தனை மொழியில் அராய்ச்சி பண்ணினாலும் உண்மையை அறிய வேண்டிய விதமாய் அறிய முடியாது. 
 
மேலும் தங்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, ஏதோ எனது மனதில் பட்டத்தை சொல்கிறேன் அவ்வளவே! ஏற்ப்பதும் ஏற்காததும் தாங்கள் விருப்பம். இனி இக்கருத்தை பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை.  
 


-- Edited by SUNDAR on Tuesday 3rd of January 2012 03:21:19 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர்களே..

தங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தேவனின் நாமத்தில் தெரிவித்து கொள்கிறேன்..

இந்த திரியில் நான் நானும்,சில 

சகோதர்களும் ஏற்கனவே

பரிசுத்தர்,பரிசுத்தர்,பரிசுத்தர்

பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆள் தத்துவம்

குமாரனும் பிதாவும் மகிமையில் சமம்..

பிதா,குமாரன்,தூய ஆவியானவர் தேவாதி தேவன். (கர்த்தரே தேவாதி தேவன்). ஒருவரே தேவன்..

என்னுடைய விசுவாச அறிக்கை..

குமாரன்,தான் பிதாவின் தாசனாய் இருக்க தன்னை பிதாவிற்கு சமமாய் இருந்து கீழ்படுத்தினார்..

பிசாசின் திரித்துவம்,(கர்த்தரை போல தம்மை காண்பித்தல்)

பரிசுத்த ஆவியானவரை புறக்கணிக்கும் ஊழியங்கள்,விளிவிலக செயும்,தகாத கற்பனைகளை கைகொள்ள செய்யும் ஊழியர்கள் 

இயேசுவை அஸ்திபாரமாக கொள்ளாத ஊழியங்கள்

போன்ற சில கருத்துகளை வசன ஆதாரங்களுடன் பதிந்துள்ளோம்..

இது பெரிய திரி ஆகையால் சகோதரர்கள் முன்பு எழுதின கருத்துகளை மறந்து விவாதிக்க கூடும்..

பரிசுத்த ஆவியானவரை துக்கபடுத்தி ஆக்கினை அடைய ஏது இருபதினால், கேள்விகள் உள்ள சகோதரர்கள் திரியை படித்து அதின் அடிபடையில் கேள்விகளை விவாதிக்கலாம்..

-------------------------------------------------------------------------------

 

ரோமர் 15:2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

 

 

  



-- Edited by JOHN12 on Tuesday 3rd of January 2012 06:26:06 PM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றதாகக் கூறுபவர்கள் பின்வரும் தொடுப்பிற்குச் சென்று, திரியில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குக்ப் பதில்தரும்படி வேண்டுகிறேன்.

http://www.lord.activeboard.com/t47066756/topic-47066756/



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 3 4 | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard