ONCE IT HAPPENED: Aesop, the greatest master of story-telling, was going out of Athens. He met a man who was coming from Argos. They talked. The man from Argos asked Aesop, "You are coming from Athens. Please tell me some thing about the people there: what manner of men they are, what they are like."
Aesop asked the man, "First you tell me what type of people are there in Argos."
The man said, "Very disgusting, nauseating, violent, quarrelsome." And all these qualities flashed on the face of the man.
Aesop said, "I am sorry. You will find the people of Athens just the same."
Later on, he met another man who was also from Argos, and he also asked the same question: "You are coming from Athens and you have lived your whole life there -- what manner of men are they there? What are they like?"
And Aesop again asked, "First tell me what manner of men are there in Argos."
And the man became aflame with nostalgia...(meaning : noun, sentimental longing or wistful affection for a period in the past.) a very loving memory of the people of Argos. His face shone and he said,
"Very pleasant, friendly, kind, and good neighbours."
Aesop said, "I am happy to tell you that you will find the people of Athens just the same."
The story is tremendously beautiful. It tells a very basic truth about man: wherever you go, you will always find yourself; wherever you look, you will always encounter yourself. The whole world is nothing but a mirror, and all relationships are mirrors.
Again and again you encounter yourself -- and again and again you misunderstand. You never realize the point, that it is your own face that you have looked at, that it is your own mood that you have come across.
தீத்து 1:15 சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
SANDOSH wrote:தீத்து 1:15 சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
இந்து புராணமாகிய மகாபாரதத்தில் சொல்லபட்டுள்ள ஒரு கதை ஓன்று உண்டு:
துரோணர் நல்லவனாகிய தருமரை அழைத்தார். " இந்த ஊரில் கெட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா" என்று அனுப்பினார். அவன் புறப்பட்டுப் போனான். அடுத்து தீயவனாகிய துரியோதனை அழைத்தார். " இந்த ஊரில் நல்லவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா என அனுப்பினார். அவனும் புறப்பட்டு போனான்.
ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் திரும்பி வந்தார்கள்.
" ஊரில் எல்லோரையும் பார்த்தேன். கெட்டவன் ஒருவன் கூட இல்லை." எனறான் தருமன்.
" நானும் எல்லோரையும் பார்த்தேன். ஊரில் நல்லவன் ஒருவன் கூட இல்லை." என்று சொன்னான் துரியோதனன்.
இருவருமே ஒரே மனிதர்களைத்தான் பார்த்தார்கள்.ஒவ்வொரு மனிதனிடமும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. தருமன் நல்லவன். அவன் நல்லதை மட்டுமே பார்த்தான். அவனால் அப்படித்தான் பார்க்க முடியும். அதனால் அவனுக்கு எல்லோரும் நல்லவர்களாக தெரிந்தார்கள்.
உலகம் நம் பார்வையை பொறுத்தது. நமக்குள் நல்லது இருந்தால் வெளியிலும் நல்லதே தெரியும். நமக்குள் கெட்டது இருந்தால் வெளியிலும் கெட்டதாகவே தெரியும். நமக்குள் அழகு இருந்தால் உலகம் அழகாக தெரியும். நமக்குள் அசிங்கம் இருந்தால் உலகம் அசிங்கமாகவே தெரியும்.
இந்த கதையின் மறுவடிவம்தான் தாங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியின் அடிப்படை கருத்து என்பது புரிகிறது. ஆனால் இந்த கதைக்கும் கிறிஸ்த்தவத்துக்கும் நேர் எதிர்நிலை என்றேகூறமுடியும். என்னெனில் வேதம் திட்டமாக சொல்கிறது எல்லோரும் பாவியாகி ஏகமாக கெட்டுபோனோம் என்று
சங் 14:3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
I யோவான் 5:19உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
எல்லோருமே கெட்டுபோய் உலகம் முழுவதுமே பொல்லாங்கனுக்குள்
கிடக்கிறது என்று வேதம் சொல்லும்பட்சத்தில் "நல்லவனுக்கு எல்லாம்
நல்லதாக தெரியும் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டதாக தெரியும் என்று சொல்லும் புராண கருத்து சரியானதா?
ஒருவனிடம்போய் "நீ இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பு" என்று சொன்னால், அவன் சுலபமாக "நீ நல்லவனாக இருந்தால் நான் உனக்கு நல்லவனாகவே தெரிவேன் எனவே முதலில் நீ நல்லவனாகிவிட்டு
பின்னர் என்னை வந்து பார்" என்று சொல்லிவிடுவான்.
ஒருவேளை "சுத்தம் உள்ளவனுக்கு எல்லாம் சுத்தமாகதான் தெரியும்"
என்ற கருத்து சரியானால், கர்த்தராகிய தேவன் மிகுந்த பரிசுத்தம் உள்ளவர் அவர்கண்ணுக்கு எல்லாமே நல்லதாகவே தெரிந்திருக்கலமே? ஜனங்களை பார்த்து பொல்லாத ஜனங்கள் என்று அவர் ஏன் சொல்கிறார்?
எரேமியா 13:10என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
மேலும் ஆண்டவராகிய இயேசு வேதபாரகர் பரிசேயரை பார்த்து "வெள்ளை அடிக்கபட்ட கல்லறை" என்று சொல்லி மிக அதிகமாக கடிந்து கொண்டார் அத்தோடு தன் முன்னால் நிற்ற மொத்த ஜனக் கூட்டத்தையும் பார்த்து இவ்வாறு கூறுகிறார்:
மத்தேயு 16:4இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்;
மத்தேயு 12:34விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்?
இயேசு நல்லவர் இல்லை அதனால அவருக்கு எல்லோரும் நல்லவர்களாக தெரியவில்லை என்று சொல்வீர்களா?
தாங்கள் குறிப்பிட்ட வசனத்தை கூறிய பவுல்கூட பல மனுஷர்களை
கடினமாக கடிந்துகொண்டிருக்கிறார், சிலரை சாத்தானுக்கு ஒப்புகொடுக கிறேன் என்றுகூட சொல்லியிருக்கிறார்! அதன் அடிப்படையில் பார்த்தால் அடுத்தவரை நல்லவராக பார்க்காத அவரே சுத்தம் இல்லாதவராகிவிடுவாரே.
எனவே தாங்கள் குறிப்பிட்ட வசனத்தில் பொருள் வேறு என்பதை சுலபமாக அறியமுடியும்!
தீத்து 1:15சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
ஒருவன் இருதயத்தில் சுத்தமாகவும் தேவனுக்கு ஏற்ற நல்லவனாகும் இருந்தால் அவனுக்கு எல்லாமே சுத்தமாக இருக்கும்!ஆனால் அந்த "சுத்தமான நிலைக்கு" ஒருவர் வரவேண்டும் என்ற வாஞ்சையிலேயே தேவனாகட்டும், இயேசுவாகட்டும்,
அப்போஸ்தலர்கள் ஆகட்டும் எல்லோரும் கடிந்துகொண்டு புத்தி சொல்லியிருக்கிறார்கள். நாமும் ஒருவருக்கொருவர்
புத்திசொல்லி தேறுவது அவசியம். ஒருவர் சுத்தமாகி உயர்ந்த நிலையை எட்டும்போது அவர் அடுத்தவர் உபதேசத்தை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுத்தமான காற்றை சுவாசிப்பவர் அசுத்தமான காற்றை உடனே அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆனால் அசுத்தத்திலேயே ஊரிப்போன நமக்கு சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாமல், எல்லாமே நல்லது போல்தான் தோன்றும் எனவே நமது நிலை குறித்து தெளிவான உறுதி நமக்கு நிச்சயம் அவசியம்!
தேவன் எதிர்பார்க்கும் பரிசுத்த நிலையை எட்டுவதற்கு நாமும் வாஞ்சிப்பதொடு பிறரையும் பரிசுத்தம் பண்ண முயலவேண்டும் அல்லாமல் நம்மில் உள்ள அசுத்தங்களை மூடிமறைக்க வழி செய்யகூடாது! நாம் சுத்தம் இல்லாது இருந்தும், நானும் சுத்தம் எல்லோரும் சுத்தம் என்று எண்ணிக்கொண்டு பரிசுத்தம் அடைதலை குறித்து நிர்விசாரமாக இருந்தால்,
வெளி 3:17நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத் தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; 18. ....................நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். என்று சொல்லி தேவன் நம்மை வாந்திபண்ணி போடும் நிலை ஏற்ப்படலாம்!
-- Edited by SUNDAR on Thursday 22nd of December 2011 04:01:46 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)