இஸ்ரவேலை ஆட்சிசெய்த தாவீது ராஜாவை பற்றி நாம் அறிவோம்! அவன் ஒருமுறை மாம்ச இச்சையில் ஈர்க்கபட்டு மிகப்பெரிய பாவம் செய்ய நேர்ந்தது! அதாவது, இன்னொருவனின் மனைவியை தன் மனைவியாக்கி கொண்டு அந்த இன்னொருவனை போர் முனையில் கொல்லுபடி தூண்டி கொலைசெய்தவன்.
அப்படிபட்ட கொடிய பாவம் செய்த தாவீதுக்கு மன்னிப்பு வழங்கிய தேவன்,
சவுல் என்னும் ராஜா, சாமுவேல் சொன்ன முறைமைப்படி காத்திருந்து பலியிட்டாமல் அவர் வரும் முன்னர் பலியை செலுத்திய காரணத்துக்க்காகவும், அமலேக்கியரை ஆண்டவர் முறியடிக்க சொன்ன விஷயத்தில் கர்த்தரின் கட்டளைப்படி எல்லா ஆடு மாடுகளையும் கொல்லாமல் சில நல்ல ஆடுமாடுகளை கர்த்தருக்கு பலிசெலுத்த தப்புவித்ததாலும் அவனை ராஜ்யபாரத்தில் இருந்து தள்ளுவேன் என்று சொன்னதோடு அவன் மரிக்கும் அளவுக்கு அவனை கைவிட்டார் .
மேலேயுள்ள இரண்டு ராஜாக்களில், தாவீதும் தன் பாவத்தை சுட்டி காட்டிய நாத்தானிடம் மன்னிப்பு கேட்கிறார்:
II சாமுவேல் 12:13அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான்.
சவுலும் தன் தவறை சுட்டிகாடிய சாமுவேலிடம் மன்னிப்பு கேட்கிறான்:
II சாமு 15 :24. அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடையகட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
ஆனால் கொடிய பாவம் செய்த தாவீதுக்கு மன்னிப்பு கேட்டவுடன் கிடைக்கிறது
சாமுவேல் 12:13நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.
ஆனால் சவுலுக்கோ மன்னிப்பு கிடைக்கவில்லை!
26. சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்
பின்னர், சவுல் கொஞ்ச நாளில் யுத்தத்தில் மரித்து போனதையும் தாவீது முதிர் வயதில் மரித்ததையும், பின்னாளில் கர்த்தர் தன் இருதயத்துக்கு ஏற்றவன் என்று சொன்ன ஒரேமனுஷன் இந்த தாவீதுதான் என்பதையும் நாம் அறிவோம்!
தேவனின் இந்த தண்டனை விபரங்கள் நமக்கு புரிவதற்கு சற்று டினமாக இருந்தாலும் "தேவன் தன்னுடைய எல்லாசெய்கையிலும் நீதியுள்ளவர்" என்பதை நாம் அறிவோம். எனவே தேவனின் இந்த செய்கைக்கு காரணமாக நான் கருதும் சில காரியங்களை இங்கு பதிவிடுகிறேன்:
1. ஒரு பாவத்தை அறியாமல் இருப்பதைவிட அதை செய்தவிட்டு அதிலிருந்து விடுபடுவது கடினம்.
பெரிய பாவமே செய்யாமல் நீதிமானாக இருந்த யோபு, தானியேல் நோவா போன்றவர்கள் ஒருபுறம் தேவனால் அங்கீகரிக்கபட்டாலும் பாவம் செய்துவிட்டு பின்னர் மனம் திரும்பியவர்களையும் தேவன் அதிவிட அதிகமாக அங்கீகரிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
காரணம், ஒரு சிகரெட் பழக்கத்தை எடுத்துகொள்வோம். சிகரட்டை குடித்தே பார்க்கதவர்களுக்கு அதன் டேஸ்ட் பற்றி எதுவும் தெரிய வாய்ப்பில்லை ஆனால் அதை குடித்து அனுபவித்த பின்னர் அதை நிறுத்துவது என்பது மகா கடினமான ஒரு காரியமாகும். அதாவது பாவம் என்பது ஒருவரை பற்றி பிடிக்கும் தன்மை உள்ளது. ஒருமுறை அதை செய்தாலே அது ஒருவரை அடிமை கொண்டுவிடும். திருட்டு தண்ணீர் என்றுமே தித்திக்கும் அதன் ருசி கண்ட பூனைகள் சும்ம இருக்கவே முடியாது எல்லா பாவங்களுமே அதுபோல்தான்! எனவே பாவத்தில் வீழாதவர்கள் பற்றி கவலையில்லை. ஆனால் பாவத்தில் வீழ்ந்தவர்கள் மனம்திரும்புதல் என்பது அரிதானதும் மிகுந்த சந்தோஷம் தரக்கூடிய ஒரு செய்தி. எனவேதான் ஆண்டவர்,
லூக்கா 15:7மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
என்று சொல்லியிருக்கிறார். அவ்வகையில் பாவத்தில் வீழ்த்த தாவீது உடனே மனம்திரும்பியது தேவனுக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம்.
2. சவுலை விட தாவீது உத்தமனானவன்!
தேவன் சவுலை ராஜ்யபாரத்தில் இருந்து நிராகரிக்கும் போதே, சாமுவேல் மூலம் இவ்வாறு சொல்கிறார்:
I சாமுவேல் 15:28அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
இதன் மூலம் தாவீது உத்தமமானவன் என்பதை அறிய முடிகிறது. அவன் எவவாறு உத்தமமாக இருந்தான் என்பதை அறிவதற்கு ஓரிரு சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.
1. தாவீதை துரத்தி துரத்தி வேட்டையாடுவதையே வேலையாக கொண்டிருந்த சவுலை கொல்வதற்கு இரண்டு முறை தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தும் தாவீது கர்த்தர் அபிஷேகம் பண்ணினவர்மேல் கையை போடமாட்டேன் என்று சொல்லி அவனை கொல்லாது தப்ப விட்டுவிட்டான்.
I சாமுவேல் 26:23இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.
இதன் மூலம் கர்த்தரின் அபிஷேகத்துக்கு மிகுந்த மதிப்பு கொடுத்து எதிரியை கூட சுமுகமாக போகவிட்டு தான் ஒரு உத்தமன் என்பதை நிரூபித்தான்.
2. தாவீதின் மகனாகிய அப்சலோம் தாவீதை விரட்டிவிட்டு ராஜ்யபாரத்தை தன்பக்கம் திருப்பி கொண்டாலும் அவன் யுத்தத்தில் மரித்த போது அவனுகாக அழுது அவனுக்கு பதில் தானே மரித்திருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று புலம்புகிறான்.
II சாமுவேல் 18:33அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.
இதன் மூலம் தன் பிள்ளைகள் பாவமே செய்திருந்தாலும் அதற்க்கு தன்னையே இழக்க துணியும் தேவனின் மேலான பண்பு அவனிடம்
இருந்ததை அறிய முடியும்.
3. சவுல் தான் மகன் அப்சலோமிநிமித்தம் நாட்டை விட்டு ஓடும் போது
அவனை சிமேயி என்னும் ஒரு மனுஷன் அவனை கொடிய தூஷனன்களால் தூஷிக்கிறான் ஆனால் தாவீதோ அவனை தப்ப விடுகிறான். அப்பொழுது அவன் சொல்லும் வார்த்தைகள் மனதை உருக்கும் நிலையில் இருப்பதை நாம் அறிய முடிகிறது.
II சாமுவேல் 16:10அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
பாவம் செய்யதுணியும் பலர் அதனிமித்தம் கிடைக்கும் தண்டனையை
ஏற்றுக்கொள்ள விரும்புவது இல்லை ஆனால் இங்கு தாவீது தன் பாவத்தினிமித்தம் தனக்கு கிடைத்த் தண்டனையை கர்த்தரே அனுமதித்தார் என்று எண்ணி உத்தமமான முழு மனதோடு அதை ஏற்றுக்கொள்ள அவன் தயங்கவில்லை.
4. இஸ்ரவேலை தொகையிட்ட பாவத்தினிமித்தம் கர்த்தரின் தூதன் எருசலேமில் உள்ள ஜனங்களை அழிக்கும் போது, அவர்களுக்காக தேவனிடம் மிகவும் பரிந்து பேசினான்.
II சாமுவேல் 24:17ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.
யாருக்கு துன்பம் வந்தால் எனக்கென்ன நாள் நன்றாக இருக்கிறேனா என்பதை மாத்திரம் சிந்திக்கும் மனுஷர்கள் மத்தியில் என் பாவத்துக்கு என்னை தண்டியும் இந்த ஜனங்களை தண்டிக்க வேண்டாம் என்று மற்றாடும் ஒரு உத்தம நிலையில் தாவீது இருந்தான்.
இப்படி அனேக காரியங்களில் தாவீது தன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக இருந்தான்.
தாவீதை தேவன் மன்னிக்க மிக முக்கியமான மூன்றாவது காரணமாக
நான் கருதுவது அவன் தேவனின் கற்பனைகள்படி நடக்க தன்னை
அர்ப்பணித்தது என்று கருதுறேன். கர்த்தரின் கற்பனையை கைகொள்ளுவதால் வரும் பழங்கள் குறித்து அனேக சங்கீதங்களில் எழுதிவைத்ததோடு அவற்றை கைகொள்ளுவதில் அவன் வைராக்கியம் உள்ளவனாக இருந்தான்:
சங்கீதம் 119:6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
என்று துணிந்து சொல்லும் அவனை பற்றி கர்த்தர் சாட்சி கொடுக்கையில்:
I இராஜாக்கள் 15:5தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
மனுஷனின் இருதயங்களை ஆராயும் கர்த்தர் தாவீதின் இருதய நிலையை பார்த்தே அவன் சாகாதபடிக்கு அவன பாவத்தை மன்னித்தார் என்று கருதுகிறேன்.
மேலும் ஏதாவது விசேஷமான காரியங்கள் இருக்குமாயின் சகோதரர்கள் இங்கு பதிவிடலாம்.
-- Edited by SUNDAR on Friday 23rd of December 2011 03:48:02 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கர்த்தர் சவுலை புறக்கணித்த காரணம் ஒரே வசனத்தில் தெளிவாய் சொல்லப்பட்டுள்ளது.....
I சாமுவேல் 15:23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியபாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
மேற்சொல்லப்பட்ட இரண்டகம்பண்ணுதல்,முரட்டாட்டம்பண்ணுதல் ஆகிய பாவங்கள் அவபக்தி,பில்லிசூனியம்,விக்கிரகாராதனை ஆகிய பாவங்களுக்கு சமமாய் இருபதினால் கர்த்தர் சவுலை ராஜாவை இராத படி புறக்கணித்து தள்ளினார்..
இருவருக்கும் வித்தியாசங்கள்
1)சவுல் தன்னை ராஜாவை அபிஷேகம் செய்த கர்த்தர் சொல்லை கேட்பதை விட..ஜனங்களால் வரும் கனத்தையும் விரும்பி கர்த்தர் சொல்லை மீறினார்..
அனால் தாவீது,தம்மை பின்பற்றினவர்கள் கல்லெறியும் நிலையிலும்,சிமேயி,நாபால் போன்றோரால் தூஷிக்கபட்டும் கர்த்தரை தன முன்னே எப்போதும் நிறுத்தி இருந்தார்..
2)கர்த்தரின் உடன்படிக்கை பெட்டியை பற்றி சவுல் கவலை கொள்ளவில்லை..(கர்த்தரின் மகிமையை தேடவில்லை)
தாவீது உடன்படிக்கைபெட்டியை கொண்டு வருதலிலேகண்ணாக இருந்தார்..கர்த்தருக்கு ஆலயம் கட்டவும் மிகவும் நாடினார்..
3)தாவீது ஆணவம் அற்றவன்..தன்னை நீசன் என்று அறிக்கை பண்ணினவன்.சனல் நூல் எபோதை தரித்தவர்..
ஜனங்கள் சவுல் கொன்றது ஆயிரம்,தாவீது கொன்றது பதினாயிரம் என்ரு ஜனங்கள் பாடிய போது பொறாமை பட்டு,மனிதர்களால் வரும் மகிமையை விரும்பி இருந்தார்..
4)சவுல் வருங்காலத்தை அறிந்திருந்தும் (அநேகம் முறை தீர்க்க தரிசனம் சொல்லியிருந்தும்) அதற்கு எதிர்த்து நிற்கும் மனப்பான்மையோடு.. தாவீது தனக்கு பின் ராஜாவை இராதபடி அவனை கொல்ல தேடினார்..
தாவீதை தேவன் மன்னித்ததற்க்கான பல முக்கிய காரணங்களை இத்திரியின் மூலம் அறிய முடிகிறது.
BRO: JOHN WROTE
/////தாவீது கர்த்தரின் கிருபையினால் திருப்தியாகிறார்.. இக்காரணத்தினால் மட்டுமே தன் பாவங்களுக்கு மன்னிப்பையும்,சிட்சிப்பையும் பெற்றார்..////
மிக முக்கியமாக தாவீது தேவனின் கிருபையை சார்ந்து நின்றான் அதனால் மன்னிப்பை பெற்றான் என்று அறிய முடிகிறது. அது முற்றிலும் உண்மையான ஒரு கருத்து என்றே கருதுகிறேன்.
ஆகினும் சகோதரர் பயன்படுத்தியுள்ள "மட்டுமே" என்ற வார்த்தை சரிதானா? வேதம் இந்த காரணத்தினால்தான் அவன் மன்னிப்பை பெற்றான் என்று தெளிவாக சொல்லாத பட்சத்தில் நாம் இதனால் மட்டுமே என்ற உறுதியான முடிவுக்கு வரமுடியாது என்றே கருதுகிறேன்.
காரணம், இன்றைய உலகில் பல இந்து சகோதரர்கள் "மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்" என்பது போல் ஒரு பழமொழியை சொல்லி இறைவன்தான் நம் எல்லோரையும் படைத்தார். எனவே நம்மை அவர் எப்படியும் காப்பாற்றிவிடுவார் அவர் யாரையும் சங்கடப்படவிடமாட்டார் என்பதுபோல் ஒரு கருத்தை சொல்லிவிட்டு தேவனின் ஆலோசனையாகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளுதலை நிராகரித்து வருகின்றனர். அதாவது அவர்களும் இறைவனின் கிருபையையும் இரக்கத்தையும் மாத்திரம் நம்பி இருப்பதுபோல் ஒரு தோன்றத்தை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் என்னுடய கருத்து என்னவெனில் ஒருவர் இறைவனின் கிருபை மற்றும் இரக்கத்தை முழுமையாக நம்பியிருந்தாலும் அவரது ஆலோசனைகளுக்கு செவிகொடுக்காமல் தள்ளிவிடும் பட்சத்தில் கைவிடப்பட நேரிடலாம்.
சகோதரரே.. பின்வரும் வசனங்களில் தாவீது பாவ அறிக்கை செய்த சமயங்களில் தேவ கிருபையை வேண்டி ஜெபம் செய்ததாக உள்ளது..ஆகவே தான் நான் கிருபையை மாத்திரம் பிரதானபடுதி கூறியிருந்தேன்..
சங்கீதம் 6:4 திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
சங்கீதம் 25:7 என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
சங்கீதம் 51:1. தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
சங்கீதம் 6:4 திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
தாவீது தேவ கிருபையை அதிகமாக நம்பி இருந்ததை பின்வரும் வசனங்கள் காட்டுகிறது..
தாங்கள் கூறியபடியே கிருபையை புரகணிக்கிறது நல்ல முடிவுகளை தராது ..
கிருபையை காத்துக்கொள்ள கற்பனைக்கு கீழ்படியும் ஆர்வமும்,உடன்படிக்கை மற்றும் சாட்சிகளை கைகொள்ளுதல் அவசியமாகிறது...
சங்கீதம் 13:5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
சங்கீதம் 6:4 திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
சங்கீதம் 32:10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.