அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தேவனிடம் அதிகமதிகமாக கிட்டி சேர்ந்து அவருடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் இருக்கவும் எந்த ஒரு கருதனாலும் காரியமானாலும் அவருடைய சித்தப்படி பேசவும் எழுதமும் நாம் கவனமாயிருப்பது அவசியமாகிறது. அவரது சித்தம் என்னவேற்று அறிந்து செய்யாத எதுவுமே பயனற்றது.
அநேக தேவ பிள்ளைகளுக்கு ஆண்டவர் தன்னுடன் பேசவேண்டும் தனக்கு தம்மை பற்றி வெளிப்படுத்த வேண்டும் என்ற வாஞ்சையும் விருப்பமும் இருப்பதை அறியமுடிகிறது. தேவாதி தேவன் வந்து பேசுவதை யார்தான் வாஞ்சிக்க மாட்டார்கள்? ஆனால பல நேரங்களில் கடுமையாக ஜெபித்தும், வாஞ்சித்து தேடியும் தேவனின் சித்தம் கேட்க முடியாமல் ஆண்டவரிடம்இருந்து பதில் ஏதும் கிடைக்காமல் சோர்ந்து தவிப்பவர்களும் உண்டு.
அப்படிபட்ட சகோதர சகோதரிகளுக்கு தேவனை கிட்டிசேர வழி முறைகள் தெரிந்தவர்கள் சில ஆலோசனைகளை இந்த திரியில் கூறலாம் என்று கருதுகிறேன்.
முதலில் என்னுடைய ஆலோசனையை இங்கு தருகிறேன்!
நொருங்குதல் மற்றும் கண்ணீர் சிந்துதல்!
ஒருவர் தன்னை உடைத்து நொறுங்கி கண்ணீர் சிந்தி கதறி அழுவதே தேவனை கிட்டி சேரும் முதல் வழி என்பது என்னுடய கருத்து.
ஒருவரிடம் "நான்" "என்னால் சாதிக்க முடியும்" என்பது போன்ற எண்ணம் இருக்கும் வரை ஆண்டவரால் அவரை நெருங்கவே முடியாது. "நான்" என்ற சுயம் முற்றிலும். அதாவது நான் சரியாக நடக்கிறேன், நான் இதை செய்வேன், நான் இவ்வாறு நடப்பேன் எனக்கு தேவன் தெரிவிக்கவேண்டும் என்னிடம் ஆண்டவர் பேச வேண்டும் எனக்கு ஆண்டவர் உணர்த்தவேண்டும் என்ற எண்ணத்தோடு தேவனை தேடினால் அவர் தென்படவே மாட்டார்.
"நான்" என்று ஒன்றுமே இல்லை என்ற ஒரு பூஜ்ய நிலைக்கு நாம் வர வேண்டும். அவ்வாறு வருவதற்கு நொறுங்குதலும் கண்ணீர் சிந்துதலுமே சரியான வழி. நீங்கள் பெரிய உத்தமராக பரிசுத்தராக இருக்கலாம் தேவனின் வார்த்தைகள்படி சரியாக வாழலாம் ஆனால் தேவனின் பரிசுத்தத்துக்கு முன்னால் நம்முடைய நீதிகள் எல்லாம் வெறும் அழுக்கான கந்தைகள் போன்றது.
ஏசா 64:6நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது
என்று ஒரு தீர்க்கதரிசியே புலம்புகிறான். இந்நிலையில் இங்கு "நான் நான்" என்று ஒரு மனுஷனை தன்னை பெரிதாக எண்ண வைப்பதுவும் கூட சாத்தானின் ஒரு தந்திரமான செயல் என்பதை அறியவேண்டும்.
மனுஷர்களை பற்றி வேத புத்தகம் இவ்வாறு சொல்கிறது:
யோபு 15:16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
மத்தேயு 12:39அவர்களுக்குப் அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்;
யோபு 15:14மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும்,
ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
மேலேயுள்ள வார்த்தைகள் எல்லாம் ஏதோ மிகையாக சொல்லப்பட்ட வசனங்கள என்று எண்ணிவிட வேண்டாம் மனுஷர்களாகிய நாம் எல்லோருமே தேவனின் பார்வையில் அசுத்தத்திலும் அசுத்தமாயிருக் கிறோம் நமது கண்கள் திறக்கபட்டால் நாமே கூட அதை பார்க்க முடியும். அவ்வளவு அசுத்தமான நம்மயும்கூட அழிக்காமல் தேவன் இன்னும் வைத்திருக்கிறார் என்றால் அதற்க்கு காரணம் தேவனின் மிகுந்த இரக்கங்களும் அவருடைய கிருபையும் மட்டுமே என்பதை அறியவேண்டும்!
புலம்பல் 3:22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
எனவே யாரும் தேவனுக்கு முன்னால் நான் பெரிய பரிசுத்தவான் என்று கூறிவிட முடியாது! ஒருவர் எவ்வளவு பெரிய பாவம் செய்தார் என்பது ஒரு பொருட்டல்ல அவர் அந்த பாவத்திநிமித்தம் எவ்வளவு மனம் வருந்தி தன்னை நொறுக்கி தேவனின் பாதத்தில் தன்னை ஒப்பு கொடுத்தார் என்பதை அடிப்படையிலேயே தேவனின் கிருபை அவர்மேல் கிரியை செய்யும் என்பதை அறிய வேண்டும்.
வேத புத்தகத்தில் தன்னால் தாங்க முடியவில்லை என்று அழுது நொறுங்கி பண்ணிய அனேக விண்ணப்பங்கள் தேவனால் கேட்கபட்டு உடனடியாக தீர்க்கபட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் இங்கு முன்னே வைக்கிறேன்.
ஆப்ரஹாமின் அடிமை பெண்ணாகிய ஆகார் துரத்திவிடபட்டபோது:
ஆதி 21:16பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். அங்கே அவளுக்கு ஒரு வழி நடத்துதல் கிடைத்தது.
ராஜாவாகிய எசேக்கியா மரண தருவாயில் கர்த்தரை நோக்கி மிகவும் அழுதான்
II இராஜாக்கள் 20:3ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
அவன் விண்ணப்பத்தை கேட்டு தேவன் அவன் ஆயுள் நாட்களை கூட்டினார்!
சக்களத்தியால் மனமடிவான அன்னாள் கர்த்தரின் சமூகத்தில் பிள்ளை வேண்டி அழுதாள்:
I சாமு 1: 10.அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
அவளின் மிகுந்த அழுதலை கேட்ட கர்த்தர் அவர்ளுக்கு சாமுவேலை கொடுத்தார்.
இதுபோல், நம்முடைய துக்கங்கள் துன்பங்கள் எதுவானாலும் சரி தீராத பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சரி, சிறிய பெரிய காரியங்கள் எதுவானாலும் சரி அதை நம்மைபோற்ற பிற மனுஷனிடம் சென்று சொல்லி புலம்பிக்கொண்டு திரிவதை விட, ஆண்டவரை நாம் சொந்த தகப்பனாக பாவித்து, அவரிடம்சொல்லி புலம்பி அழுங்கள் அப்பொழுது அவர் நம்முடய எல்லா சூழ்நிலையையும் மாற்றி அமைப்பதோடு அவரை அறியும் அறிவிலும் வளரவைப்பார் அவரது பிரசன்னத்தையும் நாம் அதிகமாக உணர முடியும்!
மனுஷன் தனது நிலையற்ற வாழ்வையும் தன் பாவத்தையும் உணர்ந்து நொறுங்கி அழும்போது நாம் தேவனை கிட்டிசேர முடியும்!
-- Edited by SUNDAR on Monday 26th of December 2011 10:00:54 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவனை கிட்டி சேர்வதற்கு இரண்டாவது முக்கிய வழி என்று நான் கருதுவது இருதயத்தில் சுத்தமாக இருத்தல் ஆகும். இருதயத்தில் சுத்தமாக இருந்தால் தேவனை கிட்டி சேர்வதல்ல, காணக்கூடாத தேவனை தரிசிக்கவே முடியும் என்று வசனம் சொல்கிறது.
மத்தேயு 5:8இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
இருதய சுத்தம் என்பது ஒரு சாதாரண காரியம் அல்லஇன்றைய பாவம் நிறைந்த உலகில் இருதய சுத்தம் என்பது அநேகருக்கு அடைய முடியாத ஒரு கனவாகவே அமைகிறது. காரணம்
எரேமியா 17:9எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
ஆகினும் அநேகர்தாங்கள் இருதயத்தில் இருக்கும் அனேக அழுக்குகள் தெரியாமல் தங்களை பெரிய பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டு திர்ப்தியடைந்து விடும்படி சாத்தான் வஞ்சிக்கிறான். உண்மையிலோ மனுஷ இருதயமானது திருகுள்ளதும் மஹா கேடுகள் நிறைந்ததுமாக இருக்கிறது. அதில் இருந்து கீழ்கண்ட கேடான சிந்தனைகள் புறப்பட்டு வருகிறது.
இருதயத்தில் இருந்து உண்டாகும் அசுத்த சிந்தனைகள் நாம் வேண்டுமென்று நினைத்து நம்முடைய சித்தப்படி வராமல் தானாகவே உண்டாகிறது. அதை தடுப்பதற்குத்தான் நாம் அதிக பிரயாசம் எடுக்கக் வேண்டிய அவசியம் உண்டாகிறது. இல்லையேல் அது நம்முடய இருதயத்தை தேவனுக்குஏற்ற சுத்தம் இல்லாமல் தீட்டு படுத்திவிடும்.
எனவே அன்பானவர்களே இருதயத்தில் இருந்து தானாகவே புறப்படும் பொறாமை, வஞ்சம், தற்பெருமை, முறுமுறுப்பு, வன்கண், நிர்விசாரம், கீழ்படியாமை, புறம்கூறுதல், களவுகள், வேசித்தன எண்ணங்கள் எல்லாவற்றையும் அது உருவாகும்போதே தடைசெய்து தேவனுக்கு அதை தெரியபடுத்தி உடனுக்குடன் மன்னிப்பை பெற்று மனதை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
இருதயத்தில் சுத்தம் உள்ளவரகளாக இருக்க எனக்கு தெரிந்த சில ஆலோசனைகளை இங்கு கூறுகிறேன்:
1. எப்பொழுதும் நம்முடய இருதயத்தில் தேவனாகிய கர்த்தரை பரிசுத்தம் பண்ணுவது நல்லது.
I பேதுரு 3:15கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்;
2 முடிந்தவரை நம் மனதை வேததியானங்களில் நிலைத்திருக்க பண்ணுவது தீய சிந்தனைகள் உருவாகாமல் தடுக்கும்.
4.எப்பொழுதுமே நம் இருதயம் கர்த்தரின் முன்னால் இருப்பதக சித்தித்து அவர் நம்மை சோதித்து அறிகிறார் என்று எண்ணி நடப்பது, நம்முடய இருதய எண்ணங்களை சீர்படுத்தும் .
எரேமியா 12:3கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்;
5. எப்பொழுதும் நல்ல காரியங்களை பற்றி மட்டுமேசிந்தித்துக் கொண்டு இருப்பது தீய காரியங்கள் மனதில் உருவாகாமல் தடுக்கும்.