இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவத்துக்கு மட்டுமே பயப்பட்டவர்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
பாவத்துக்கு மட்டுமே பயப்பட்டவர்
Permalink  
 


பாவத்துக்கு மட்டுமே பயப்பட்டவர்

 
 
john-chrysostom.jpg
 
 
 
 
ஆதிச்சபைப் பிதாக்களில் ஒருவரான ஜோன் கிறிஸ்சொஸ்தம் (கி.பி. 349-407) ஆரம்பத்தில் அந்தியோக்கிய சபையின் குருவானவரா கவும்,
பின்னர் கொன்ஸ்டன்டிநோபிள் சபையின் பிஷப்பாகவும் பணியாற்றிய பிரபலமான பிரசங்கியாவார். இவரது இறைப்பணி காரணமாக கிரேக்க
கிறிஸ்தவவர்களின் வளரச்சி அதிகரி்த்து வந்த காலத்தில், இவரை ரோம அரசு கைது செய்தது. 
 
 
ஜோன் கிறிஸ்சொஸ்தமுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற அரசன் ஆலோசகரிகளிடம் கேட்டபோது அவர்கள் “அவன் பாவத்திற்கு
மட்டுமே பயப்படுவான். எனவே அவனை பாவம் செய்ய வையும்“ என்ற கூறினார்கள். 
 
 
ஆரம்பத்தில் அரசன் ஜோன் கிறிஸ்சொஸ்தமை இருட்டறை ஒன்றில் சிறைவைக்கவே தீர்மானித்தான். ஆனால் அவனது ஆலோசகர்களோ
“அங்கு அவன் சந்தோஷமாகவே இருப்பான். ஏனென்றால் அவன் இருட்டறையின் தனிமையில் தேவனுடைய இரக்கங்களை தியானிப்பவனாக இருப்பான்“ என்றனர். 
 
 
ஜோன் கிறிஸ்சொஸ்ம்மை சிறையிலிடுவது அர்த்தமற்றது என்பதை அறிந்து கொண்ட அரசன் “அப்படியானால் அவனக்கு மரண தண்டனை கொடுப்போம்“
என்றான். ஆனால் அவனது ஆலோசகர்களோ “மரணமும் அவனுக்கு சந்தோஷமாகவே இருக்கும். ஏனென்றால் மரணத்தின் பின, நான் கர்த்தரோடு
இருப்பேன் என்று அவன் கூறியுள்ளான்“ எனத் தெரிவித்தனர். 
 
 
 
சிறைத்தண்டனையும் மரணதண்டனையும் ஜோன் கிறிஸ்சொஸ்தமுக்கு வேதனையளிப்பவையல்ல என்பதை அறிந்து கொண்ட ரோம அரசன் “அப்படியானால்
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.” என்று கேட்டபோதே அவனது ஆலோசகர்கள் “அவனைப் பாவம் செய்ய வையும்.
ஏனென்றால் பாவத்திற்கு மட்டுமே பயப்படுவான். எனவே, அவனுக்கு வேதனை ஏற்படுத்த அதுவே சிறந்த வழி“ எனக் கூறினர். 
 
 
 
ஜோன் கிறிஸ்சொஸ்தம்மை பற்றி அரசனின் ஆலோசகர்கள் அறிந்திருந்த விடயங்கள் அவரது பரிசுத்த வாழ்வுக்கான பகிரங்க சாட்சியாகவே உள்ளன.
அவர் பாவம் செய்வதற்கு மட்டுமே பயப்படுவார். அவரைப் பாவம் செய்ய வைத்தால் மட்டுமே அவருக்கு வேதனையை ஏற்படுத்தலாம்
என அவர்கள் கூறியதிலிருந்து. அவர் பாவத்தைப் பற்றி எத்தகைய உணர்வுடையவராய் இருந்துள்ளார்
என்பதை அறிந்து கொள்ளக்
கூடியதாயுள்ளது. இதைப்போலவே கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் பாவத்திற்கு மட்டும் பயப்படுபவர்களாக இருக்க வேண்டியது அவசியம். 
 
 
 
(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)


-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 27th of December 2011 12:40:38 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard