என்னை ஏன் அடிக்கிறாய்? வேதத்தில் இந்த கேள்வியை கேட்டவர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து....
யோவான் 18:22,23
இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னைஏன்அடிக்கிறாய் என்றார்.
வேதத்தில் ஒருபுறம் அவர் வாய் திறவாமல் இருந்தார் என கூறி இருக்க..
ஏசாயா 53:7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
அப்போஸ்தலர் 8:32 அவன் வாசித்த வேதவாக்கியமென்னவென்றால்; அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்
தேவன் ஏன் மேற்கூறிய கேள்வியை சேவகனிடத்தில் கேட்டார்.. தெரிந்த சகோதரர்கள் வேத ஆதாரத்துடன் விளக்கவும்..
என்னை ஏன் அடிக்கிறாய்? வேதத்தில் இந்த கேள்வியை கேட்டவர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து....
வேதத்தில் ஒருபுறம் அவர் வாய் திறவாமல் இருந்தார் என கூறி இருக்க..
தேவன் ஏன் மேற்கூறிய கேள்வியை சேவகனிடத்தில் கேட்டார்.. தெரிந்த சகோதரர்கள் வேத ஆதாரத்துடன் விளக்கவும்..
சகோதரர் அவர்களே என்னுடய கணிப்புபடி தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனமாகிய "ஏன் அடிக்கிறாய்" என்ற இயேசுவின் கேள்வியானது, அவரை மரண ஆக்கினைக்குள் தீர்ப்பதற்கு முன்னால் இயேசுவால் கேட்கபட்டது. அந்த சமயத்தில் அவர் அடிப்பதற்கு கொண்டுபோகும் ஆட்டுக்குட்டி நிலையில் இல்லை.
மத்தேயு 27: 26.அப்பொழுது, அவன் (பிலாத்து) பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
இவ்வாறு இயேசு மரண ஆக்கினைக்குள் தீர்க்கபட்டு ஒப்புகொடுக்கபட்ட பிறகே அவர் அடிப்பதற்கு கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டி நிலைக்கு வருகிறார். அதன்பின்னர் அவரை என்னவெல்லாமோ பாடு படுத்தினார்கள் முள்முடியை சூட்டினார்கள், கோலினால் அடித்தார்கள், குட்டினார்கள், துப்பினார்கள், சிலுவையை சுமக்க வற்ப்புறுத்தினார்கள், கசப்பான காடியை குடிக்க கொடுத்தார்கள் இன்னும் பல்வேறு விதமாக தண்டித்தவர்கள எவரையும் பார்த்து அவர் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கவில்லை என்பதை நாம் அறிய முடியும்
எனவே தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு அடிப்பதற்காக ஒப்புகொடுத்து தீர்மானம் ஆனபிறகு, வசனம் சொல்வதுபோல் அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலஅவர் வாயை திறக்காமல் இருந்தார் என்பது சரியாகிறது.
வேறு மறைவான காரணங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.
-- Edited by SUNDAR on Tuesday 27th of December 2011 09:59:16 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)