யெகோவாவின் சாட்சிகள் என்கின்ற பிரிவு இப்போது உலகம் முழுதும் பரந்து விரிந்திருக்கும் ஒரு சபை. ஆனால் கிறீஸ்தவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்????
-வேதவசனத்துடன் விளக்கம் தேவை
__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22:12
யெகோவாவின் சாட்சிகள் என்கின்ற பிரிவு இப்போது உலகம் முழுதும் பரந்து விரிந்திருக்கும் ஒரு சபை. ஆனால் கிறீஸ்தவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்???? -வேதவசனத்துடன் விளக்கம் தேவை
சகோதரர் அவர்களே நான் யஹோவா சாட்சியாளர்களை பற்றி ஒன்றே ஒன்றுதான் சொல்லவிரும்புகிறேன் அதை என்னுடய வேண்டு கோளாகவே முன் வைக்கிறேன்.
அவர்கள் பரிசுத்த ஆவியானவரை அலட்சியம் பண்ணாமல் வாஞ்சித்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதேஎன்னுடய வேண்டுகோள். அதற்க்கான வழிமுறைகளை கீழ்கண்ட தொடுப்பில் சென்று அறியவும்.
அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகள் ஆவியானவராலே தானாகவே உணர்த்தப்படும்.
I யோவான் 2:20நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
I கொரிந்தியர் 2:10நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
அதாவது தேவத்துவத்தின் ஆழங்களை அறிந்திருக்கும் ஆவியானவராலேயன்றி தேவனை யாரும் சரியாக அறிந்துவிட முடியாது.
மேலும் ஆவியானவர் நம்முள் இருந்தால் மட்டுமே நாம் தேவனில் நிலைத்திருக்க முடியும்.
I யோவான் 4:13அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
எனவே ஆவியானவரின் அபிஷேகம் என்பது மிக முக்கியமானது. மற்றபடி அவர்களை பற்றி வேறு எதுவும் நான் கூறவிரும்பவில்லை சகோதரரே.
நான் கிறிஸ்துவையும் கிறிஸ்த்துவத்தையும் வேத வசனங்களையும் பற்றி ஒன்றுமே அறியாமல் மும்பையில் வாழ்ந்த காலத்தில் ஆவியானவர் என்னை அபிஷேகித்தார். அந்த அபிஷேகத்தொடு சொந்த ஊர் வந்த நான் பாஸ்டராக இருந்த என் தம்பியை சந்தித்தேன் அவனுடன் பேசும்போது ஆவியானவர் வேதத்தில் இருந்து நான் அறியாத எத்தனையோ வசனங்களை எடுத்து அவனோடு சம்பாஷிக்க கிருபை செய்தார். நான் பேசிய ஞானத்தை கேட்டு அவன் திகைத்து போனான் எனவே சகோதரரே ஒருவர் வேதத்தை அதிகம் ஆராயா விட்டலும் கூட ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றால் அது போதுமானது. காரணம் அவருக்குள் ஆவியானவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் எவ்வாறு நடக்கவேண்டும் என்று போதித்து தேவனுக்கு ஏற்றவிதத்தில் அவரை நடத்திவிடுவார். ஆனால் வேதத்தை அதிகமாக ஆராயந்துவிட்டிருந்தும் ஆவியானவரின் அபிஷேகம் பெறவில்லை என்றால் அதனால் எந்த பயனும் இல்லை என்பதே எனது கருத்து.
-- Edited by SUNDAR on Wednesday 28th of December 2011 03:33:00 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
யெகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses) என்போர் திரித்துவக் கொள்கையற்ற புத்துலக நம்பிக்கையுடைய கிறித்தவ மதப் பிரிவினராவர். இம் மதத்தில் ஏழு மில்லியன் பேர் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூயார்க் என்பது யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அமைப்பு ஆகும். யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வந்து தங்கள் கொள்கைகளைப் பரப்புவதில் முனைப்புடன் செயல்படுபவர். காவற்கோபுரம் (the watch tower) மற்றும் விழித்தெழு (Awake) போன்ற இதழ்களை வழங்குவர்.
வரலாறு சார்லசு ரசல் சார்லஸ் ரசல் என்ற அமெரிக்கர் தனது சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் மீது ஐயம் கொண்டு பிற சபைக் கொள்கைகளையும் பைபிளையும் ஆராயத் துவங்கினார். இவர் வேதாகம மாணவர் அமைப்பு எனும் அமைப்பைத் துவங்கினர். இந்த அமைப்பு தான் யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் முன்னோடி. 1879 இல் சீயோனின் காவற்கோபுரப் பாதைச் சமூகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக கோன்லி எனும் செல்வந்தர் இருந்தார். ரசல் இந்த அமைப்பின் இரண்டாவது தலைவரானார். இவர் தன் வாழ்நாளில் 50,000 பக்கங்களுக்கும் அதிகமாக எழுதினார். இவர் உயிர் வாழ்ந்த காலத்தில் இவர் எழுத்துகள் 2 கோடி புத்தகங்களாக உலகெங்கும் பல்வேறு மொழியில் வழங்கப்பட்டன. காவற்கோபுரம் என்ற பெயரில் தற்போது வெளியிடப்படும் இதழையும் இவர் தொடங்கினார். காவற்கோபுரம் தவிர வேறு எந்த இதழையும் சீயோனின் காவற்கோபுர அமைப்பு வெளியிடக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டளைகளை தனது உயிலில் எழுதியிருந்தார். 1916 ஆம் ஆண்டில் இவர் மரணமடைந்தார். ஜோசஃப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்டு ரசலுக்குப் பின்னர் வேதாகம மாணவர் இயக்கத்தின் தலைவராக ஜோசஃப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்டு என்பவர் தெரிவு செய்யப்பட்டர். இவரே 1931 ஆம் ஆண்டு இவ்வியக்கத்தின் பெயரை யெகோவாவின் சாட்சிகள் என மாற்றினார். நிர்வாக ரீதியிலான மாற்றங்களைச் செய்தார். ரசல் தனது உயிலில் காவற் கோபுரம் தவிர வேறு இதழ் வெளியிடக் கூடாது என்று சொல்லியிருந்த போதும் ரூதர்ஃபோர்டு விழித்தெழு! என்ற பெயரிலான இன்னொரு இதழையும் துவக்கினார். குறிப்பாக வேற்று மதத்தினர் மற்றும் வேற்றுச் சபையினருக்கு வழங்க இந்த இதழை வழங்கினர். இந்த இதழில் சமயம் மட்டுமின்றி உடல்நலம், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெறும் வகையில் செய்தார்.
பழக்க வழக்கங்கள் இவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு விவிலிய மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளனர். இம்மொழிபெயர்ப்பு மூல நூலோடு ஒத்திருக்கவில்லை என பல இறயியலாளர்களும் விவிலிய அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். உலகின் தற்போதைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு "இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுவதே" என்பது யெகோவாவின் சாட்சிகளின் மைய நம்பிக்கை ஆகும். இறை கல்வியே முக்கியமானது எனவும், பாடசாலை கல்வியை ஆதரிக்காத போக்கும் இந்த மதத்தினரிடையே காணப்படுகின்றன. உலகின் பல நாடுகள் இந்த சமயத்தினரின் செயல்பாடுகளுக்கு தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற கிறித்தவ மதப் பண்டிகைகளைக் எதையுமே கொண்டாடுவதில்லை. தங்கள் பிறந்தநாளைக் கூட அவர்கள் கொண்டாட மாட்டார்கள். அது மட்டுமன்றி உயிருக்குப் போராடும் நிலையில் கூட இவர்கள் இரத்த தானத்தை ஏற்பதில்லை; நாடுகளின் இராணுவத்தில் சேருவதில்லை; நாட்டுக் கொடிகளை வணங்குவதில்லை; நாட்டுப்பண் பாடுவதுமில்லை. இது போன்ற செயல்களால் இவர்கள் பல நாட்டு நீதிமன்றங்களோடு வழக்காட வேண்டியுள்ளது. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் முதல் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் இவர்களின் இக்கொள்கைகளால் ஏற்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
இப்படி இவர்களைப்பற்றி விக்கிப்பீடியா இணையத்தளம் கூறுகிறது...
போன வாரம் ஆராதனை பத்திரிக்கையில் யகோவா சாட்சிகள் பற்றி எழுதப்பட்டிருந்த ஒரு சிறந்த கருத்தின் சுருக்கத்தை சற்று மாற்றி வசன ஆதாரத்தோடு இங்கு பதிவிடுகிறேன்:
பொதுவாக "சாட்சி" என்ற தமிழ் வார்த்தையின் பொருள் கண்ணால் கண்ட ஒரு சம்பவத்தையோ அல்லது காதால் கேட்ட சம்பவத்தையோ அல்லது நேரடியாக ஒருவர் இடைபட்ட சம்பவத்தையோ இன்னொருவருக்கு விளக்கி சாட்சியாக சொல்வதையே குறிக்கும்.
உதாரணமாக இயேசு தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் சாட்சியாக சொன்னார்.
மோசே தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் சாட்சியாக சொன்னார்.
எபிரெயர் 3:5சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
இங்கு பேதுரு தான் கண்ட / கேட்ட இயேசுவின் செய்திகளை சாட்சியாக கூறுகிறார்.
அப்போஸ்தலர் 3:15ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
ஆனால் இன்றைய ஜனங்கள் யாரும் யகோவாதேவனை கண்டிருக்கவோ அல்லது அவரது குரலை கேட்டிருக்கவோகூட முடியாது.
யோவான் 5:37என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
இப்படியிருக்க காணாதிருக்கும் ஒன்றை பற்றி ஒருவர் சாட்சி சொல்வாராகில் அந்த சாட்சி உண்மையாக இருக்க முடியுமா?
பின்னர், ஒருவர் தான் காணாத யகோவா தேவனுக்கு எப்படி
சாட்சிகளாயிருக்க முடியும்?
நமக்காக ஜீவனை கொடுத்து நம்மை தேவனண்டைக்கு வழி நடத்தும் இயேசுவை பற்றிய சாட்சியே நாம் சொல்லகூடிய ஒன்றும், பல மனுஷர்களால் நேரடியாக பார்க்கபட்டதும், இன்றும் ஆவியானவரின் அற்ப்புத அடையாளங்கள் மூலம் அநேகரால் நிரூபிக்கப்படும் சாட்சியாகவும் இருக்கிறது. இயேசுவும் தனக்கு சாட்சிகளாக இருக்கும்படியே கட்டளையிட்டுள்ளார்:
அப்போஸ்தலர் 1:8பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
எனவே எப்பொழுதும் இயேசுவுக்கே சாட்சிகளாக ஜீவிக்க பிரயாசம் எடுப்போம்!
-- Edited by SUNDAR on Wednesday 7th of March 2012 12:47:57 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
praise the lord, யகோவா சாட்சிகள் உறுப்பினர் ஒருவரோடு பேசும் வாய்ப்பு ஒருமுறை எனக்கு கிடைத்தது. அவர் ஒரு பேப்பர் என்னிடம் கொடுத்து படிக்கும்படி சொன்னார். நான் அதை படிக்கும் முன்பாகவே ஆவியானர் அதை வீசும்படி எனக்கு உணர்த்தினார். அவர் என்னிடம் நான் கிருஷ்துவனா என்று கேட்டார். நான் உடனே ஆம் நான் கிருஷ்தன் தான் என்றேன். அவர் தானும் கிருஷ்தர் என்று சொன்னார். என்னால் அவரிடம் இயல்பாக பேச முடியாமல் என் ஆவியிலே கோபம் உண்டாவதை நான் நன்கு உணர்ந்தேன். நான் அவரிடம் நீங்கள் கிருஷ்துவறல்ல, நீங்கள் அரைகுறை முஸ்லிம் என்று சொல்லி விளக்க ஆரம்பித்தேன். அவரும் இயேசு தெய்வமில்ல என்று எவ்வளவோ வசனங்களை மாற்றி சொல்லி என்னை மடக்க பார்த்தார். ஆனால் ஆவியானர் எனக்கு வசனங்களை உணர்த்தி அவரோடு சத்தியத்தின் துணை கொண்டு பேச உதவினார்.
கடைசியில் யகோவா சாட்சிகள் உறுப்பினர் தோற்று போய் ஓடிவிட்டார்.
ஆகவே இந்த கூட்டம் ஒரு கள்ள தீர்க்கதரிசிகளின் கூட்டம் என்று நான் உணருகிறேன்.
அவர் தானும் கிருஷ்தர் என்று சொன்னார். என்னால் அவரிடம் இயல்பாக பேச முடியாமல் என் ஆவியிலே கோபம் உண்டாவதை நான் நன்கு உணர்ந்தேன்.
ஆகவே இந்த கூட்டம் ஒரு கள்ள தீர்க்கதரிசிகளின் கூட்டம் என்று நான் உணருகிறேன்.
அவர்கள் சொல்லும் முதல் வார்த்தையே பொய் அதாவது கிறிஸ்தவன் என்னும் வார்த்தை கிறிஸ்துவை உடையவன் கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்துவழியில் நடப்பவன் கிறிஸ்தவன் அவர்கள் எப்படி கிறிஸ்தவன் என்று வாயினால் கிறிஸ்துவை அறிக்கை செய்து விட்டு மாற்றிக்கூறுவது பொய்சாட்சிதானே , பகிரங்கமாக , தந்திரமாக பொய் சொல்லும் இவர்கள் சொல்லுவது எப்படி உண்மையாகும்