மத்தேயு:26 .6 என்ற வசனத்தின் படி கிறீஸ்தவர்கள் சேர்த்து வைக்கக் கூடாது என்று பலர் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் நான் அங்கு எமக்கு ஆண்டவர் கவலைப்படாதிருப்பதையே கூறுகிறார் என எடுத்துக்கொண்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22:12
மத்தேயு:26 .6 என்ற வசனத்தின் படி கிறீஸ்தவர்கள் சேர்த்து வைக்கக் கூடாது என்று பலர் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் நான் அங்கு எமக்கு ஆண்டவர் கவலைப்படாதிருப்பதையே கூறுகிறார் என எடுத்துக்கொண்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
நிச்சயமாக சேர்த்து வைக்கலாம் சகோதரரே! ஆனால் இந்த பூமியின் பொக்கிஷங்களாக அல்ல.
மத்தேயு 6:19பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
நாம் சேர்த்து வைக்க வேண்டிய இடம் பரலோகம்:
மத்தேயு 6:20 பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
பவுல் கீழ்கண்ட வசனத்தில் சொல்லியிருக்கும் பொக்கிஷம்கூட இந்த உலக பொக்கிஷம் குறித்து அல்ல என்பதை அறியவேண்டும்.
II கொரிந்தியர் 12:14இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்: பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
சுருக்கமாக சொன்னால் ஒரு மனுஷன் இயேசுவின் வார்த்தைகளை சரியாக கைகொண்டு தன்னிடம் கேட்பவனுக்கு கொடுத்து, கடன் கேட்பவனுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்து, ஏழைகளுக்கு இரங்கி தனக்குண்டானவைகளையும் விற்று தரித்திரருக்கு கொடுத்து உண்மையாக வாழ்ந்தால் அவனால் இந்த பூமியில் பொக்கிஷத்தை ஒருநாளும் சேர்த்துவிட முடியாது.
எனவே நாம் சேர்த்து வைக்கலாமா கூடாதா என்று சிந்திப்பதைவிட இயேசுவின் வார்த்தைகளை கைகொண்டு நடக்கவேண்டும் என்ற உறுதியான நிலையில் இருந்தாலே போதுமானது என்றே கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இதன் மூலம் நீங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதையும் பிழை எனக் கூறுகிறீர்கள??
சகோதரரே, நம்முடைய சில முக்கிய தேவைகளுக்காக வங்கியில் கணக்கோ வைத்திருப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். அனால் தேவையோடு வருபவர்களுக்கு நமது இருதயத்தை அடைத்து, கடன் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லி தரித்திரருக்கு இரங்காமல் பணத்தையோ பொக்கிஷத்தையோ வங்கியில் மட்டுமல்ல எங்குமே சேர்த்து வைப்பது தவறு. காரணம் நம்முடய இருதயம் தேவனை விட்டு பிரிந்து அந்த பொக் கிஷங்கள்மேலேயே நோக்கமாக இருக்க ஏதுவாகும்.
மத்தேயு 6:21உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.