புது வருடத்தில் நான் ஆவியானவரால் உணர்த்த பட்டு கற்று கொண்ட ஒரு காரியத்தை நான் இங்கு தெரிய படுத்த விரும்பிகின்றேன்
என் சபையில் நான் புது வருட ஆராதனையில் நான் கலந்து கொண்டு இருக்கும் பொழுது என் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒரு சிறு பையனை பார்த்தேன் அவன் எனக்கு தெரிந்தவன் தான் அவனுக்கு ஒரு 13 அல்லது 14 வயது இருக்கும்
அவனை பார்க்கும் பொழுதுஆவியானவர் எனக்கு சில காரியங்களை
உள்ளத்தில் உணர்த்தி கேள்வியை கேட்டு பதிலையும் சொல்ல ஆரபித்தார்
ஆவியானவர் எனக்கு தெரியபடுத்திய காரியம் என்னவென்றால் நீங்கள் கிறிஸ்மஸ் புது வருடம் போன்ற பண்டிகைகள் வரும் பொழுது புது உடைகளை உனக்கும் உன் குடும்பத்திற்கும் வாங்கி உடுத்தி கொள்கின்றீர்கள் அல்லவா ஆனால் இதோ இந்த சிறுவனை பார் இவன் பழைய ஆடை உடுத்தி கொண்டு இருக்கின்றான்
இவனுடைய இந்த சிறு வயதில் இவனுடைய மனதில் அவனை போல இருக்கும் எல்லோரையும் பாக்கும் பொழுது அவனுடைய மனம் எவ்வளவு கவலை கொள்ளும் என்று யோசித்து பார் ஓரளவு கருத்து தெறிந்தவர்கள கஷ்டங்களை புரிந்து கொல்வார்கள அனால் இந்த சிறுவனுக்கு என்ன தெரியும் என்று எனக்கு சொல்லி
இனிமேல் நீங்கள் பண்டிகைகளுக்கு உடைகள் எடுக்கும் பொழுது இல்லாதவர்களுக்கு எடுத்து கொடுங்கள் அல்லது நீங்கள் எடுக்க போகும் உடையை எடுக்காமல் இல்லாதவர்களுக்கு எடுத்து கொடுங்கள் என்று சொல்லி இவைகளை தான் நான் விரும்புகின்றேன் என்றார்
அவர் எனக்கு தெரிவித்த உடனே எனக்கு இதயத்தில் மிகவும் கவலை உண்டாகிவிட்டது அப்பொழுது ஒரு முடிவு எடுத்தேன் இனிமேல் நாம் பண்டிகைகள் வரும் பொழுது நமக்கும் எடுத்து இல்லாதவர்களுக்கும் எடுத்து கொடுக்க வேண்டும் அப்படி பிறருக்கு எடுத்து கொடுக்க முடியவில்லை என்றால் நமக்கு எடுக்க வைத்து இருக்கும் பணத்தில் இல்லாதவர்களுக்கு எடுத்து தரவேண்டும் இதை தான் நம் தேவன் விரும்பின்றார் என்று புதிய வருடத்தில் ஒரு தீர்மானம் பண்ணினேன்
16. உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்குவேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 2nd of January 2012 09:51:19 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)