இன்று அனேக போதகர்கள் ஊழியர்கள் மற்றும் நம்மை போன்ற விசுவாசிகள் நாங்கள் தான் வேத வசனத்தை
கைகொள்கின்றோம்தேவன் சொன்னபடி நடக்கின்றோம் பரலோகத்திற்கு செல்வோம் என்று பெருமை பட்டுக்கொண்டு
மற்றவர்களை நியாயம் தீர்த்து கொண்டு இருக்கின்றோம் ஆனால் வேதம் சொல்வதை பார்த்தால்
லூக்கா : 13
29. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
30. அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்
இந்த வசனத்தை இங்கு ஏன் பதிவிடுகின்றேன் என்றால் சமிபத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் வாயிலிருந்து வேதத்தில் இருந்து
வசனத்தை சொல்வதை கேட்டேன் அப்பொழுது நான் மிகவும் ஆச்சரிய பட்டேன்
அதன் பின் ஒரு நாள் நான் வேதத்தை தியானிக்கும் பொழுது நான் என் ஆவியில் உணர்த்த பட்ட காரியம் என்னவெனில் இந்த
உலகத்தில் பிரபலாமாய் இருக்கின்றவர்கள் அதாவது நடிகர்கள் அதிகாரிகள் அரசியல் வாதிகள் போன்றவர்கள் கூட
இந்த உலகத்தின் உள்ள தங்கள் சூழ்நிலைகளின் காரணமாக இயேசுவின் வார்த்தைகளை விசுவாசித்து அவருக்கு அந்தரங்க சீஷனாய் இருக்கின்றார்கள் என்று அறிந்து கொண்டேன் கிழே உள்ள வசனத்தை வாசிக்கும்பொழுதான்இந்த
காரியத்தை அவியானவராலும் மற்றும் ஒரு சகோதரராலும் அறிந்து கொண்டேன்