இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன?
Permalink  
 


1. பரிசுத்த ஆவியைப் பெறுதல் என்றால் என்ன?

2. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன?

3. பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கும் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்படுவதற்கும் வித்தியாசம் உண்டா? ஆம் எனில், என்ன வித்தியாசம்?

4. பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் கிரியையின் அடிப்படையிலோ அல்லது வேறு வகையிலோ வித்தியாசம் உண்டா? ஆம், எனில் என்ன வித்தியாசம்?

5. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் கிரியையின் அடிப்படையிலோ அல்லது வேறு வகையிலோ வித்தியாசம் உண்டா? ஆம், எனில் என்ன வித்தியாசம்?

இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்தவர்கள் வசன ஆதாரத்துடன் பதில் தரவும். வசன ஆதாரம் இல்லாமல், தேவன் எனக்கு தரிசனத்தில்/சொப்பனத்தில் வெளிப்படுத்தினார் என்பவர்கள் பதில் தரவேண்டாம்.

கண்டிப்பாக வசன ஆதாரத்துடன் மட்டும் பதில் தரவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:

1. பரிசுத்த ஆவியைப் பெறுதல் என்றால் என்ன?

 


பரிசுத்த ஆவியை பெற தகுதி எது என்று சொல்லும் வசனம் இது.   

அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

இயேசுவை விசுவாசிப்பவர்கள்கூட  பரிசுத்த ஆவியை பெறாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதை உணத்தும் சம்பவம்!

அப்போஸ்தலர் 19:2 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.

ஞானஸ்தானம் எடுத்தாலும் பரிசுத்த ஆவியை பெறுதலும் தனிதனி சம்பவங்கள் என்பதை விளக்கும் வசனம் இது.  

அப்போஸ்தலர் 8:15 இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,
அப்போஸ்தலர் 8:16 அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

பரிசத்த ஆவியை எவ்வாறு பெற முடியும் ?

ஆவியை பெற்றவர்கள்  ஜெபித்து கைகளை  வைப்பதன்  மூலம் பெறமுடியும்

அப்போஸ்தலர் 8:17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்

வாஞ்சையோடு கூடிய தனி வேண்டுதல் மூலம் பெறமுடியும்!   

லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

குழுவாக சேர்ந்து ஜெபிப்பதன்  மூலமும், வேத வசனங்களை ஊழியர்கள் பிரசங்கிக்கும் போது வாஞ்சையுடன் கவனித்தில் போன்றவை  மூலமும் ஆவியை  பெறமுடியும்!   

அப்போஸ்தலர் 10:44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
 
பரிசுத்த ஆவியை பெற்றதன் அடையாளம் எது? 

வெவேறு பாஷைகளை பேசுதல்/ தீர்க்க தரிசனம்  சொல்லுதல்.  

அப் 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

6. அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

ஆனால் கண்டிப்பாக அப்படிதான்  நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆகினும் ஆவியானவர் நம்மை நிறைத்ததை  பெரும்பாலும் கல்லான இருதயம் உடைக்கபட்டு  நமக்கு வரும் அழுகையின் மூலம் அறிய முடியும்.     

ஒருவர் பரிசுத்த ஆவியை பெறுதல்  என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். ஆவியானவரை பெற்றதைநாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்!  ஒருமுறை ஆவியானவரை  பெற்றுவிட்டால் அவர் நம்மோடுதான் தங்கியிருப்பார்.  

anbu57 wrote:////2. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன?///

அபிஷேகம் என்பது பரிசுத்த ஆவியை பெற்றபின்னர் தேவனை அதிகமதிகமாக தேடி, முழுவதுமாக தேவ ஆவியால் நிரப்பபட்டு போவதை குறிக்கிறது. 
 
பொதுவாக அபிஷேகித்தல் என்பதற்கு ஏதாவது ஒரு திரவ பொருளை கொண்டு குளிப்பாட்டுதல் என்பதற்கு ஒப்பானது.  

II இராஜாக்கள் 9:3 தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

தேவன் தன் ஆவியின் வல்லமையால் முற்றிலும் ஒரு மனுஷனை குளிப்பாட்டி மூழ்கடிப்பதே ஆவியின் அபிஷேகம்  

அப்போஸ்தலர் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்;

அதாவது இயேசுவை முழுவதும் நிரப்பிவிட்டார்!

அவ்வாறு ஆவியானவர் ஒவ்வொருமுறை நம்மை மூழ்கடிக்கும் போதும் நாம் வேதம் சம்பந்தமான அனேக உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்!
 
I யோவான் 2:20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும்றிந்திருக்கிறீர்கள்.
 
anbu57 wrote:
///////3. பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கும் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்படுவதற்கும் வித்தியாசம் உண்டா? ஆம் எனில், என்ன வித்தியாசம்?////
 
நான் அறிந்தவரை பரிசுத்த  ஆவியை பெறுதல் என்றால் ஒரு சில குறிப்பிட்ட அளவு என்னை  தலையில் வைத்தல் போன்றது. ஆனால் அபிஷேகம் என்பது முற்றிலும் நம்மை குளிப்பாட்டுதல் போன்றது.    
 
பரிசுத்த ஆவியை பெறுதல் என்பது ஒரே ஒரு நேரம் நடக்கும் சம்பவம். ஆனால் அபிஷேகம் என்பது நாம்   அதிகமாக வாஞ்சித்து தேடும் எல்லா நேரமும் நம்மை நிறப்பும்.     

anbu57 wrote:////4. பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் கிரியையின் அடிப்படையிலோ அல்லது வேறு வகையிலோ வித்தியாசம் உண்டா? ஆம், எனில் என்ன வித்தியாசம்?////

நிச்சயமாக வித்தியாசம் உண்டு! உலகநிலையில் நடக்கும் மனுஷனை இன்னொரு மனுஷன் சுலபமாக நிதாத்து அறிந்து அவனை குறைகூறி விட முடியும் ஆனால் ஆவியானவால் நிரப்பபட்டு அவரது வழிகாட்டு தலின் அடிப்படையில் நடப்பவர்களை இன்னொரு  மனுஷனால் நிதானித்து அறிந்துவிட முடியாது. 

I கொரிந்தியர் 2:15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான

தேவ ஆவியானவரே அவரை நடத்துவதால், அவர் செய்யும் காரியங்கள் குறித்து வேறொருவர்  குறைசொல்லிக் கொண்டு இருக்க முடியாது.   

தேவனின் ஆழங்களை  அறிந்தவர் ஆவியானவர் ஒருவரே!  ஆகையால் எழுதப்பட்ட வசனத்தில் எதுஎது அவசியம் எது அவசியமற்றது என்பது ஆவியானவருக்கு தெரியும், எனவே அவர் சரியான சத்தியத்துக்குள்  நம்மை நடத்துவார் தவறு செய்யும்போது கண்டிப்பார். அவரில் நிலைத்திருந்து அவரால் நடத்தப்படு கிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை என்று வேதம் சொல்கிறது.

ரோமர் 8:1 கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

மேலும் ஆவியானவர் வைராக்கிய வாஞ்சை உள்ளவராக இருப்பதால் அவர் எப்படியாவது ஒருவரை கண்டித்து உணர்த்தி சத்தியத்துக்குள் நடத்திவிடுவார். 

யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;

ஆவியானவர் ஒரு மனுஷனை விட்டு அவ்வளவு சீக்கிரம் விலகிபோவது இல்லை என்பது உண்மையானாலும்  போதிய கீழ்படிதல் இல்லாதவர்களை  ஒரு அளவுக்குமேல் கட்டயாப்படுத்தி எதையும் செய்ய வைப்பது இல்லை. நாம் பாவி என்பது அவருக்கு தெரியும். மேலும் நம்மில் ஒருவரும் முழு பரிசுத்தவான் இல்லாததால் நம்மை பரிசுத்தப்படுத்துவதே அவரின் வேலையாக இருப்பதால் நாம் செய்யும் தப்பிதங்களை அவர் கண்டித்து உணர்த்தி, தண்டனை கொடுத்து மன்னித்துவிடுகிறார்.  

ஒரு ஸ்கூல் வாத்தியாரை எடுத்துகொள்ளுங்கள். ஒரு மாணவன் என்னதான் தவறுகள் செய்தாலும் அவ்வளவு சீக்கிரம் அவனை  டிஸ்மிஸ் செய்யமாட்டார் அல்லவா?  அத்தோடு நன்றாக படித்து சொல்கேட்டு மதிப்பு கொடுத்து நடக்கும் மாணவன்மீது அதிக அன்பு காட்டுவார் அல்லவா?   அதுபோலதான் ஆவியானவரும்.

ஒருவர் என்னதான் மாம்ச காரியத்தில் எத்தனை முறை வீழ்ந்து னாலும் அவர் எழேழுபது தரம் நம்மை மன்னித்து தூக்கிவிடுவார். அவரின் நடத்துதலில் சரியாக நடப்பவர்கள் மீது அதிகம் அன்பு காட்டுவார் அவரது சொல்லை கேழாமல் முரண்டாட்டம் பண்ணினால் துக்கபடுவார்.

ஆனால் ஒருவர்  மீண்டும் மீண்டும் இரக்கமில்லாமல்  துணிகர பாவம் செய்து  அவரை துக்கபடுத்தினால் அவர் விலகி விடுவார் அவர்களை மீண்டும் புதுப்பிப்பது என்பது கூடாத ஒரு  காரியம்.
    
எபிரெயர் 6:4.ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 6 மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
 
சகோதரர் அவர்களே! தங்களை விட ஆவியை பெற்றவர்கள் நல்லவர்கள் சரியாக நடக்கிறவர்கள் என்பது எனது  கருத்து அல்ல. சத்திய ஆவியானவரை பெற்றிருந்தும் அவர் உணர்த்துலுக்கு சரியாக அடிபணியாத முரட்டாட்டம் பண்ணும் கிறிஸ்த்தவர்களே இன்று  உலகில் அதிகம். ஆவியானவரும் மனுஷனின் முரட்டாட்டத்தை  ஓரிரு முறை துக்கபடுவதன் மூலம் உணர்த்துவார் மீறியும் அதை செய்பவர்களுக்கு கடும் தண்டனைகள்கொடுத்து பின்னர் மன்னிக்கிறார். முடியாத பட்சத்திலேயே ஒருவரைவிட்டு விலகுவார்.
 
என்னை பொறுத்தவரை "பரிசுத்த ஆவியானவர் என்பவர் ஒரு மனுஷன் தேவனுக்கு ஊழியம் செய்யவும் அவன்தேவனுடைய வார்த்தைகள்படி வாழவும் தேவனால் அருளப்பட்ட  உன்னதத்தின் பெலன்" என்றே
கருதுகிறேன்.
 
லூக்கா 24:49   நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
 
எசேக்கியேல் 36:27 உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
 
ஆனால் ஆவியை பெற்ற பலர்  ஊழியம் செய்ய வாஞ்சித்தாலும் ஆண்டவர் வார்த்தையை  ஜாக்கிரதையாக கைகொண்டு வாழ அக்கரை எடுப்பது  இல்லை. இந்நிலையில் தங்களை போன்று இயேசுவின் வார்த்தைகள்படி வாழவாஞ்சிப்பவர்கள் கூடுதல் பெலனாக ஆவியானவரையும் பெற்றுக்கொண்டால் அறுவடை அதிகமாக இருக்கும் என்பதே எனது கணிப்பு!        
 
(எனக்கு தெரிந்ததை என் அனுபவத்தின் அடிப்படையில் எழுதிவிட்டேன் இன்னுமதிக விபரம் தெரிந்தவர்கள் தொடர்ந்து விளக்கலாம்)  
     


-- Edited by SUNDAR on Thursday 5th of January 2012 11:19:16 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//தேவன் தன் ஆவியின் வல்லமையால் முற்றிலும் ஒரு மனுஷனை குளிப்பாட்டி மூழ்கடிப்பதே ஆவியின் அபிஷேகம்//

//அவ்வாறு ஆவியானவர் ஒவ்வொருமுறை நம்மை மூழ்கடிக்கும் போதும் நாம் வேதம் சம்பந்தமான அனேக உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்!//

ஒருவன் அபிஷேகம் பெற்று வேத சம்பந்தமான உண்மைகளைத் தெரிந்தால்தான் நித்தியஜீவனைப் பெறமுடியுமா? நித்திய ஜீவனைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் எனும் கேள்விக்கான பதில், நம் கையிலுள்ள வேதாகமத்திலேயே தெளிவாக இருக்கிறதே! இதற்கு மேலும் நித்திய ஜீவனைப் பெற என்ன செய்யவேண்டும் என்பது சம்பந்தமான ஏதாவது விஷயங்கள் அபிஷேகத்தால் கிடைக்குமா?

தயவு செய்து கேள்விக்கான நேரடி பதிலைத் தரவும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//anbu57 wrote:////4. பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் கிரியையின் அடிப்படையிலோ அல்லது வேறு வகையிலோ வித்தியாசம் உண்டா? ஆம், எனில் என்ன வித்தியாசம்?////

நிச்சயமாக வித்தியாசம் உண்டு! உலகநிலையில் நடக்கும் மனுஷனை இன்னொரு மனுஷன் சுலபமாக நிதாத்து அறிந்து அவனை குறைகூறி விட முடியும் ஆனால் ஆவியானவால் நிரப்பபட்டு அவரது வழிகாட்டு தலின் அடிப்படையில் நடப்பவர்களை இன்னொரு  மனுஷனால் நிதானித்து அறிந்துவிட முடியாது.//

மற்றவர்கள் நம்மை நிதானித்து அறிய முடியாததால் நமக்கு என்ன பயன்? இதனால் நாம் நித்தியஜீவனைச் சுதந்தரிப்பதற்கான வாய்ப்பு கூடுகிறதா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

யோவான் 14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.

23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொண்டாலே, இயேசு தம்மை வெளிப்படுத்துவதாக வாக்களித்துள்ளார். எனவே கற்பனைகளைக் கைக்கொண்டு இயேசுவைக் குறித்த வெளிப்பாடுகளைப் பெற்றால் அது எத்தனை மேன்மையானது? இதைவிட பெரிய வெளிப்பாடு வேறு என்ன இருக்கிறது?

இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொண்டால், பிதா, இயேசு இருவருமே நம்மிடம் வந்து வாசம்செய்வதாக இயேசு வாக்களித்துள்ளார். எனவே இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொண்டால் பிதாவும் இயேசுவும் நம்மிடம் வாசம் செய்வார்களல்லவா? பிதாவும் இயேசுவும் வாசம் செய்கையில், பரிசுத்த ஆவியானவர் என ஒருவர் இருந்தால், அவரும் வாசம் செய்வார்தானே? அல்லது நான் வாசம் செய்யமாட்டேன் என அவர் பிடிவாதம் பிடிப்பாரா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர்களே..

சகோ.அன்பு///பரிசுத்த ஆவியானவர் என ஒருவர் இருந்தால், அவரும் வாசம் செய்வார்தானே? அல்லது நான் வாசம் செய்யமாட்டேன் என அவர் பிடிவாதம் பிடிப்பாரா?////

 


தேவஆவியானவர் நம்மோடு வாசம் செய்யாமல் அவருக்கு கீழ்படிவது,வசனத்தை,கற்பனைகளை கை கொள்வது என்பது கூடாத காரியம்..

 

ரோமர் 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

 

கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால்,...

 யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

பிதா,குமாரனுக்கு பிரியமாய் இருக்கும் படி நம்மை நடத்தும் ஆவியானவர் நம்முடன் தான் உள்ளார்..ஆகவே பிதா,குமாரன் மட்டும் தாங்கும் படி பிரியமானவனிடத்தில் வருகின்றனர்..



 

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

 

சங்கீதம் 1:2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

 

வசனத்தின் படி வேதத்தை ஆவியானவர் தந்திருக்க..வேதவசனத்தை கைகொள்ளுவேன். ஆனால் ஆவியானவர் என ஒருவர் இருந்தால்.....என கேள்வி கேட்பேன் என கூறுபவர்க்கு பிரதியுதிரத்தை தேவன் விரைவில் அருள்வார்..

 

பிதாவின் நாமத்தில் இயேசுவானவர் ஆள்ததுவமாய் வதிருக்க,இயேசுவின் நாமத்தில் அனுப்பட்டிருக்கும் ஆவியானவரை  வெறும் வல்லமை என கூறுவதை இன்னும் விவரமாய் கேட்கதான் வேண்டுமோ!?

 



-- Edited by JOHN12 on Friday 13th of January 2012 06:15:21 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:
மற்றவர்கள் நம்மை நிதானித்து அறிய முடியாததால் நமக்கு என்ன பயன்? 

ஒருவரின் செயலை  நிதானித்து அறியமுடிந்தால் அவர்கள் செயும் ஒவ்வொரு காரியத்திலும்உள்ள தேவ வழி நடத்துதலை நம்மால் அறிந்துகொள்ள முடியும். ஆனால்  ஆவியில் நடப்பவர்களை மற்றவர்கள் நிதானித்து அறிய முடியாத காரணத்தால் அவர்களின் செயல்பாடுகள் குறித்து நாம் துணிந்து  குறைகூறிவிட முடியாது.  

anbu57 wrote: 
////இதனால் நாம் நித்தியஜீவனைச் சுதந்தரிப்பதற்கான வாய்ப்பு கூடுகிறதா?///
 
வாய்ப்பு கூடுகிறது என்று எதுவும் கூற முடியாது. ஆனால்  ஆவியில்  நடத்தப்படும் சில தேவ ஊழியர்களை சரியாக நிதானிக்க முடியாமல் குறை கூறி "அவர்களை தீர்க்கிற தீரிப்பின்படி நாமும் தீர்க்கபட்டு"  நித்திய ஜீவனை இழந்துபோக வாய்ப்புண்டாகலாம்.
 
ஆவியில் நடத்தபட்ட ஆண்டவராகிய  இயேசு துணிந்து  பழய ஏற்பாட்டில் கொடுக்கபட்ட முக்கிய கட்டளையாகிய ஓய்வுநாள் கட்டளையை மீறி காரியங்களை செய்தார். அவருள் இருந்து அவரை நடத்தும் தேவ ஆவியின் செயலாட்டை  நிதானித்து அறிய முடியாத பரிசேயர்கள் அவரின்செயல்பாடுகளை கடுமையாக சாடினார்கள்.
 
அதுபோல் ஆவியில். நடத்தப்படும் சில ஊழியர்கள் சில வேத வார்த்தைகளை மீறி செயல்படுவதுபோல் நமக்கு தோன்றலாம் ஆனால்  சத்திய ஆவியானவர் அவர்களுக்கு அவ்வாறு கட்டளையிட்டு  அவர்களை  நடத்தும் பட்சத்தில் நாம் அவர்களை நிதானித்து குறை கூறாமல் விலகியிருப்பது நல்லது  என்பது எனது கருத்து.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

நான் கேட்டது, “மற்றவர்கள் நம்மை நிதானித்து அறிய முடியாததால் நமக்கு என்ன பயன்?” எனும் கேள்வியை.

ஆனால் நீங்களோ, “மற்றவர்கள் நம்மை நிதானித்து அறிய முடியாததால் அவர்களுக்கு என்ன கேடு?” எனும் கேள்விக்கான பதிலைக் கூறியுள்ளீர்கள்.

மீண்டும் கேட்கிறேன் “மற்றவர்கள் நம்மை நிதானித்து அறிய முடியாததால் நமக்கு என்ன பயன்?

“இயேசு Vs ஓய்வு நாள்” விஷயத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறியுள்ளீர்கள். அதாவது இயேசு ஓய்வுநாள் கட்டளையை மீறினார் எனும் கருத்தைச் சொல்லியுள்ளீர்கள்.

இக்கருத்துக்கு பதில் சொன்னால் இத்திரியின் விவாதம் திசைமாறிவிடும்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:

நான் கேட்டது, “மற்றவர்கள் நம்மை நிதானித்து அறிய முடியாததால் நமக்கு என்ன பயன்?” எனும் கேள்வியை.

ஆனால் நீங்களோ, “மற்றவர்கள் நம்மை நிதானித்து அறிய முடியாததால் அவர்களுக்கு என்ன கேடு?” எனும் கேள்விக்கான பதிலைக் கூறியுள்ளீர்கள்.


மன்னிக்கவும் சகோதரரே தாங்கள் கேள்வியை மாற்றி போருள்கொண்டு விட்டேன். ஆகினும் அதுவும் யாருக்கேனும்  பயனுள்ள தகவல்தான் எனவே இருந்துவிட்டு  போகட்டும்    

anbu57 wrote: 
////மீண்டும் கேட்கிறேன் “மற்றவர்கள் நம்மை நிதானித்து அறிய முடியாததால் நமக்கு என்ன பயன்?”///
 
நாம் என்ன செய்யபோகிறோம் என்பதை அடுத்தவர் நிதானித்து அறிய முடியாமல் இருப்பதால் நிச்சயம் பெரிய பலன் நமக்கு உண்டு. எப்படியெனில் ஒருவர் இதைதான் செய்யபோகிறார் என்பது தெளிவாக
தெரிந்தால் அவரை தடுப்பது சுலபம். உதாரணமாக   "நான் வங்கிக்கு போய் 10 லட்ச ரூபாய் பணத்தை  எடுக்க போகும் என்னுடய நிலையை ஒரு திருடன் அறிந்துவிட்டால் அவன் என்னை  தொடர்ந்து பணத்தை கொள்ளையடிக்க வாய்ப்பிருக்கிறது.
 
அதேபோல் ஆவியானவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் நடத்தும்போது அதை எதிரி அறிந்துவிட்டால் அவனை திசை திருப்ப அல்லது கலங்கடிக்க சத்துரு முயற்ச்சிக்கலாம். ஆனால் நம்மை பிறர் நிதானித்து அறியமுடியாத நிலையில் அது சாத்தியம் இல்லை.
 
anbu57 wrote:
////இயேசு Vs ஓய்வு நாள்” விஷயத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைக் கூறியுள்ளீர்கள். அதாவது இயேசு ஓய்வுநாள் கட்டளையை மீறினார் எனும் கருத்தைச் சொல்லியுள்ளீர்கள்./////
 
நான் கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையிலேயே  இந்த கருத்தை  பதிவிட்டேன்.   
 
யோவான் 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலை செய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
 
இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்ன இருக்கிறது என்று  எனக்கு புரியவில்லையே!
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

anbu57 wrote:
ஒருவன் அபிஷேகம் பெற்று வேத சம்பந்தமான உண்மைகளைத் தெரிந்தால்தான் நித்தியஜீவனைப் பெறமுடியுமா? நித்திய ஜீவனைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் எனும் கேள்விக்கான பதில், நம் கையிலுள்ள வேதாகமத்திலேயே தெளிவாக இருக்கிறதே! இதற்கு மேலும் நித்திய ஜீவனைப் பெற என்ன செய்யவேண்டும் என்பது சம்பந்தமான ஏதாவது விஷயங்கள் அபிஷேகத்தால் கிடைக்குமா?

தயவு செய்து கேள்விக்கான நேரடி பதிலைத் தரவும்.

சகோதரர் அவர்களே நித்திய ஜீவனை பெறுதல் பற்றி வேத வசனங்கள் மிக தெளிவாக வேதாகமத்தில் உள்ளது. அதை படித்து அதன்படி சரியாக நடந்தால் நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியும்  என்பதை  எந்த மாற்று  கருத்தும் இல்லை. ஆகினும்  அந்த வார்த்தைகளின்படி சரியாக நடக்க ஆவியானவரின் வழி நடத்துதல் அவசியம் என்று நான் கருதுகிறேன். காரணம் 

யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;
 
என்று வசனம் சொல்கிறது.  .   
 
எபேசியர் 1:13
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது,
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
 
எபேசியர் 4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
அவ்வாறு வரும் ஆவியானவரே மீட்கப்படும் நாளுக்கென்ற முத்திரை அல்லது  அடையாளம் என்று வசனம் சொல்வதால் அவரை வாஞ்சித்து  பெறுதல் அவசியம் என்றும் அவரில்லாமல் சரியான சத்தியத்துக்குள் நடக்க முடியாது. மேலும் எல்லா மனுஷனுமே  பாவம் செய்து தேவனுடன் ஒப்புரவாக/ அவர்முன் நிற்க தகுதியற்றவர்கள் இந்நிலையில் நமிடமுள்ள பரிசுத்த ஆவியானவரின் வழியே தேவன்  நம்மை பார்க்கும்போது மட்டும்தான் நாம் அவருக்கேற்ற பரிசுத்தராக  தெரியமுடியும் என்றும் கருதுகிறேன்.  
 
ஆனால் தாங்கள்  "எனக்கு அபிஷேகம் தேவையில்லை ஆவியானவர் தேவையில்லை, நான் வேதாகமத்தை  படித்து அதன்படி சரியாக நடந்து விடுவேன்" என்று கருதினால், அதன் முடிவு என்னமாயிருக்கும் என்பது குறித்து எனக்கு தெரிந்தாலும் அதற்க்கு நேரான வசன ஆதாரம் இல்லாத காரணத்தால் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை எனவே இதற்க்குமேலும் தங்களை கட்டாயப்படுத்தவும் நான் விரும்பவில்லை.
 
தற்போது இந்த கேள்வியை விபரம் அறிந்த மற்ற சகோதரர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
 
அதாவது வேத வசனங்கள் கீழ்கண்டவாறு போதிக்கிறது.
 
யோவான் 5:24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்
 
யோவான் 6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
 
இந்த வசனங்களின் அடிப்படையில் சகோதரர் அன்பு அவர்களின் கேள்வி என்னவெனில் "ஆவியானவர் அபிஷேகம் பெற்றால்  தான் நித்திய ஜீவனை பெறமுடியுமா? வேதம் சொல்வதுபோல் நடந்தால் போதாதா? என்பது போன்றதே.
 
அவர் கேள்வி. அதற்க்கு சரியான விளக்கம் தெரிந்தவர்கள் வசன ஆதாரத்துடன் பதிவிடவும்.
    


-- Edited by SUNDAR on Tuesday 17th of January 2012 03:24:21 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர்:

//அதேபோல் ஆவியானவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் நடத்தும்போது அதை எதிரி அறிந்துவிட்டால் அவனை திசை திருப்ப அல்லது கலங்கடிக்க சத்துரு முயற்ச்சிக்கலாம். ஆனால் நம்மை பிறர் நிதானித்து அறியமுடியாத நிலையில் அது சாத்தியம் இல்லை.//

அதாவது நமது ஆவிக்குரிய கிரியை பற்றி பிறர் அறிந்தால், அவர்கள் நமது ஆவிக்குரிய கிரியைகளை குலைத்துப்போடமுடியும் என்கிறீர்கள். இக்கூற்றை என்னால் ஏற்கமுடியவில்லை சகோதரரே!

சத்துருக்களின் எந்தவொரு வஞ்சகத்திற்கெதிராகவும் போராடி வெற்றிபெற வேண்டும் என்றுதான் வசனம் கூறுகிறதேயொழிய, நம்மில் ஆவியானவர் இருந்தால் சத்துருக்கள் நம்மை வஞ்சிக்க வாய்ப்பு இல்லாமற்போகும் என வசனம் கூறவில்லை.

எபேசியர் 6:11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14 சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; 15 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; 16 பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 17 இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

சத்துருக்களின் போராட்டத்திற்கு எதிராக (சத்துரு மனிதனாயிருந்தாலும் சரி, பிசாசாய் இருந்தாலும் சரி) போராடி ஜெயிக்கவேண்டும் என்றே வேதாகமம் கூறுகிறது.

எனவே சத்துருவானவன் நம்மை திசை திருப்புவதும் கலங்கடிக்க முயற்சிப்பதும் சாத்தியமே.

1 கொரி. 2:15-க்கு நீங்கள் தவறான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோதரரே! அவ்வசனத்திற்கான விளக்கத்தை அறிய அதற்கு முந்தின வசனத்தையும் சேர்த்து படியுங்கள்.

1 கொரி. 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

ஆவிக்குரியவன் செய்கிற செய்கைகள் ஜென்மசுபாவமுள்ளவனுக்கு பைத்தியக்காரத்தனமாய் தோன்றும்; ஏனெனில் அவனுக்கு ஆவிக்குரிய விஷயங்களை நிதானித்து அறியத் தெரியாது. ஆவிக்குரிய விஷயங்களை நிதானித்து அறியமுடியாதவனால், ஆவிக்குரியவனையும் நிதானித்து அறியமுடியாது. எனவே ஆவிக்குரியவன் செய்கிற செயலெல்லாம் அவனுக்கு விந்தையாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றும்.

உதாரணமாக: இன்றைய மாபெரும் ஊழியர்களை எடுத்துக்கொள்வோம். எந்த உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என வேதாகமம் கூறுகிறதோ, அந்த உலகத்திற்குரியதைப் பேசுகிற ஊழியர்கள்தான் மாபெரும்  ஊழியர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். உலகத்திற்குரியதை பேசாமல், ஆவிக்குரியதை மட்டுமே பேசுபவர்கள் ஜனங்களால் ஓரங்கட்டப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள்தான் மெய்யாகவே ஆவிக்குரியவற்றை பேசுகிறார்கள் என நிதானித்து அறியும் அறிவு ஜனங்களுக்கு இல்லை.

ஆவிக்குரியவன் பேசுவதை ஆவிக்குரியவர்களால் மட்டுமே புரிந்துகொண்டு ஏற்கமுடியும். மற்றவர்களால் அதைப் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ முடியாது. இடுக்கமான வாசலைக் கண்டு கொள்பவர்கள் சிலரே! விசாலமான வாசலைத்தான் அநேகர் அறிந்துள்ளனர்; அதாவது ஜென்மசுபாவமுள்ளவர்களாக இவ்வுலகை நேசிப்பவர்களாகத்தான் அநேகர் உள்ளனர். எனவேதான் இயேசு இப்படிச் சொன்னார்.

லூக்கா 6:22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 26 எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

இன்று எல்லா மனுஷராலும் புகழப்படுபவர்கள்/அங்கீகரிக்கப்படுவர்கள் நிச்சயமாக ஆவிக்குரியவர்கள் அல்ல. ஆனால் எல்லாராலும் புறக்கணிக்கப்படுவர்கள்தான் ஆவிக்குரியவர்கள். இவர்களை யாரும் நிதானித்து அறியமுடியாததால்தான் இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

 



-- Edited by anbu57 on Thursday 19th of January 2012 08:43:06 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//ரோமர் 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.//

மத்தேயு 5:44  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்;

மத்தேயு 5:9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர்:

//தேவ ஆவியானவரே அவரை நடத்துவதால், அவர் செய்யும் காரியங்கள் குறித்து வேறொருவர்  குறைசொல்லிக் கொண்டு இருக்க முடியாது. //

ஆவிக்குரியவர்களை மற்றவர்கள் குறை சொல்வதால் ஆவிக்குரியவர்களுக்கு நஷ்டமும் இல்லை; குறை சொல்ல முடியாததால் ஆவிக்குரியவர்களுக்கு எந்த லாபமும் இல்லை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

சகோ.சுந்தர்:

//அந்த வார்த்தைகளின்படி சரியாக நடக்க ஆவியானவரின் வழி நடத்துதல் அவசியம் என்று நான் கருதுகிறேன்.//

சரி, உங்களிடம் ஒரு கேள்வி. ஒருவன் இயேசுவின் உபதேசங்களின்படி அப்படியே நடக்கவேண்டும் என மிகுந்த வாஞ்சைகொண்டு அதற்காக முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் முயற்சி செய்தால், அவன் அப்படி நடப்பதற்கு நீங்கள் சொல்லும் ஆவியானவர் வழி நடத்துவாரா, நடத்த மாட்டாரா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink  
 

//சரி, உங்களிடம் ஒரு கேள்வி. ஒருவன் இயேசுவின் உபதேசங்களின்படி அப்படியே நடக்கவேண்டும் என மிகுந்த வாஞ்சைகொண்டு அதற்காக முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் முயற்சி செய்தால், அவன் அப்படி நடப்பதற்கு நீங்கள் சொல்லும் ஆவியானவர் வழி நடத்துவாரா, நடத்த மாட்டாரா?
//
ஆவியானவர் வழி நடத்தாமல் ஒருவன் அப்படி நினைக்ககூட முடியாது!!!

சகரியா 4:6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard