வேதத்தில் இருக்கிற வசனங்களை மட்டும் ஆராய்ந்து பார்ப்போம்..
மெல்கிசேதேக்கு என்னும் பதத்தின் பொருளை வேதம் தெளிவாய் தந்துள்ளது.
மெல்கிசேதேக்கு பெயர் விளக்கம் எபிரெயர் 7 : 2இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.
மேல் உள்ள வசனத்தில் இருந்து மெல்கிசேதேக்கு என்பது பெயரின் ஒரு பகுதியே.அது ஒரு முதற் பெயர்.இதற்க்கு நீதியின் ராஜா என்று பெயர்..பின்பு சாலேமின் ராஜா எனவும் அழைக்க பட்டிருக்கிறார்.இதன் பொருள் சமாதானத்தின் ராஜா.
மெல்கிசேதேக்கின் தலைமுறை எபிரெயர் 7 : 3இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல்
மெல்கிசேதேக்கு என்கிற இந்த ஆள் தகப்பனும்,தாயும்,வம்சவரலாறும் இல்லாதவராம்!!
ஒரு மனிதன் என்றால் வம்சவரலாறு உடையவனாய் இருந்திருக்க வேண்டும்.நம் கர்த்தராகிய இயேசுவும் வம்சவரலாறு உடையவர் .அப்படியானால் மெல்கிசேதேக்கு வேதம் குறிப்பிடும் ஒரு ஆள் ஒரு மனிதன் கிடையாது.
ஆனால் இங்கு பாருங்கள் இந்த மெல்கிசேதேக்குகிற்கு கோத்திர பிதாவாகிய (லேவிக்கும் பிதா) தசமபாக நியமங்கள் மோசே வால் வெளிப்படும் முன்பே தசமபாகம் செலுத்தியுள்ளார்..
இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில் மோசேவிற்கு கர்த்தர் காண்பித்த ஆசாரிப்பு கூடாரத்தின் மாதிரி மற்றும் பலி முறைகள் மெல்கிசேதேக்கின் முறைமையின் மாதிரியே!!!
ஏனெனில் மோசே கர்த்தர் காண்பித்த மாதிரியின் படியே ஆசாரிப்பு கூடாரத்தின் முறைமைகளை ஏற்படுத்தியதாக வசனம் உள்ளது
யாத்திராகமம் 25:9 நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.
சரி.. பார்க்க எவ்வாறு இருப்பார் என வேதம் சொல்லுகிறது என பார்த்தால்!! எபிரெயர் 7 : 3 .. தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் ....
கர்த்தருக்கு ஒப்பானவர் ஒருவர் இல்லை என வேதம் தெளிவாய் பின்வருமாறு சொல்லியிருக்க,கர்த்தரான தேவ குமாரனுக்கு ஒப்பான இந்த மெல்கிசேதேக்கு யார்?
சமாதானத்தின் ராஜா,நீதியின் ராஜா என வேதம் வேதம் வேறொருவரையும் அழைக்கவில்லை என்பதை அறிவீர்களாக.. பூமியின் ராஜ்யத்தை சேர்ந்த வேறு எந்த ராஜாவும் கூட இவாறு அழைக்க பட்டிருக்க மாட்டார்கள்..
மத்தேயு 5:9 சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
சமாதானம் பண்ணுகிறவர்களே தேவ புத்திரர் என சொல்லப்படும் பொது சமாதானத்தின் ராஜா என வேதம் காட்டுபவர் எந்த ராஜ்யத்தின் அதிபதியாக இருக்க முடியும்?
சரி இப்போது ஒரு சிந்தனை தங்களின் மேலான பார்வைக்கு..
நித்திய ஆசாரியத்தை பெற்ற இந்த சமாதானத்தின் ராஜா இந்த பூமியை சார்ந்தவராக இருந்திருந்தால் கர்த்தர் நோவாவின் காலத்தில் அழிக்காமல் இருக்க திறப்பில் நின்றிருப்பார்...
இந்த நித்தய ஆசாரிப்பை பெற்ற மெல்கிசேதேக்கு இப்பூமியை சார்ந்தவராய் இருந்திருந்தால் லேவியின் ஆசாரிய ஊழியத்திற்கும் ,நாம் இயேசுவானவர் நமக்காக தம்மையே பலியாக தரவும் அவசியம் இல்லாமல் போயிருக்கும்.. எனவே வேதம் காடும் இந்த சமாதானத்தின் ராஜா பரலோகத்தின் ஆசாரியன்.இவருடைய ஆசாரிப்பு முறைகள் தான் மோசேவிற்கு காட்டப்பட்டது.. மோசே நியமித்த தசமபாகங்கள் அதனால் தான் லேவி பிறபதற்கு முன்பே கோத்திர பிதாவாகிய அபிரகாமால் செலுத்த பட்டது..
எனவே இந்த சமாதானத்தின் ராஜாவின் ராஜ்யமும் கூட இவ்வுலகத்தை சார்ந்தல்ல.சமாதானத்தின் ராஜா உலகத்தை சார்ந்தவராய் இருந்திருந்தால் உலகம் பரலோகம் போல் தானே இருந்திருக்க வேண்டும்..நாமும் சமாதானத்தின் ஆலோசனைகளை பின் தள்ளி பாவத்தில் இருந்திருக்க மாட்டோம்..
மெல்கிசேதேக்கின் ராஜ்யம் பரலோகத்தின் ராஜ்யம்..
எபிரெயர்7 : 16 ,17அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்
இவர் மாம்சத்தின் படி ஆசாரியத்தை பெற்றவர் அல்ல.வசனம் சொல்லுகிறபடி ,இவர் குமாரனுக்கு ஒப்பானவராதலால் இவர் ராஜ்யமும் இவ்வுலகத்தை சேர்ந்தது அல்ல..
எபிரெயர் 7:11 அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?
இதனால் தான் யூத கோத்திரத்தில் பிறந்த இயேசுவும்:லேவி கோத்திரத்தில் மாத்திரம் பெற தகுதியானவர்கள் என நியாயபிரமாணம் நியமித்த ஆசாரியத்தை நியாய பிரமாணத்தின் படி மாம்சதிற்கடுததாய் பெறாமல் மெல்கிசேதேக்கின் முறைமை படி பெறுகிறார்..
மாம்சதிற்கடுததாய் உள்ள ஆராரிய ஊழியம் நம்மை பூரனபடுத்தாது என வேதமும் சொல்கிறது..இதனால் தான் தேவனும் மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியரான இயேசுவை நியமிக்கிறது..
நீதியின் ராஜா,சமாதானத்தின் ராஜா,தேவ குமாரனுக்கு ஒப்பான ,பரி பூரண நித்திய ஆசாரிப்பை உடைய,பிறப்பு இறப்பு இல்லாத,வம்ச வரலாறு இல்லாத இவர் பரிசுத்த ஆவியானவராய் தானே இருக்க முடியும்!!!
பரலோகத்தின் நித்திய ஆசாரியராக மெல்கிசேதேக்கு இருக்கும்போது..ஆவிகுள்ளாய் செய்யப்படும் ஆராதனைகள் அனைத்தும் பிதாவை தானே சென்றடையும்..
மெல்கிசேதேக்கு பரிசுத்த ஆவியானவரே!!!
எபிரெயர் 5:11 இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
என பவுல் கூறுகிறார்..
நாம் இனியும் கேள்வியில் மந்தமாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை..தேவன் தாமே நம் மனக்கண்களைபிரகாசிக்க செய்வாராக!!
எபேசியர் 1:19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
-- Edited by JOHN12 on Wednesday 4th of January 2012 08:40:26 PM
-- Edited by SUNDAR on Saturday 7th of January 2012 11:05:22 AM
சகோ. ஜான் அவர்கள் ஒரு புதிதான கருத்தை தெரிவித்திருக்கிறார். நீண்ட விளக்கம்கள் கொடுத்து ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கிய மேல்கிசெதேக்கை "பரிசுத்த ஆவியானவர்" என்று தெரிவிக்க முற்படுகிறார்.
மெகிசெதேக்கை பற்றி வேதவசனங்கள் குறிப்பிடும் எல்லா இடங்களிலும் அவரை,
என்று சொல்லி "அவன்" "இவன்" என்று எழுதியிருப்பதை பார்க்க முடியும்.
வேத வசனங்களானது தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவர் இன்றும் என்றும் எப்பொழுதும் ஜீவனுள்ளவர். வசனங்களை எழுத ஏவிய ஆவியானவர் மொழி பெயர்ப்பில் முற்றிலும் தவறாக எழுத அனுமதித்து விடமாட்டார் என்றும் அதுவும் தன்னையே அவன்/இவன் என்று மொழிபெயர்க்க அனுமதிக்க மாட்டார் என்று நான் கருதுக்கிறேன்.
மேலும் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் நடந்து வருகையில் தாகம் தீர்த்த கன்மலையை கிறிஸ்த்துவே என்று உறுதியாக சொல்லும் வேதாகமம்
I கொரிந்தியர் 10:4எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
மேல்கிசெதேக்கை பற்றி பலமுறை எழுதியும் "அவர் ஆவியான தேவன்" என்று எந்த கருத்தும் சொல்லாமல் மெளனமாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒருவரை தேவனாக உயர்த்தும் காரியத்தில் வேதம் சொல்வதற்கு மிஞ்சி எண்ணுவது தவறு என்றே கருதுகிறேன்.
இந்நிலையில், தேவத்துவத்துக்குள் ஒருவரான "பரிசுத்த ஆவியானவரை" மெல்கிசேதேக்கு என்று குறிப்பிடுவது தவறான ஒரு நிலை என்று எண்ணி சகோ ஜான்12 அவர்களின் இந்த கருத்துக்கள் தவறாக இருக்குமோ என்று கருதுகிறேன். சகோ ஜான்12 அவர்கள் பரிசுத்த ஆவியானவரை பற்றிய உண்மையை சரியாக அறியாமல் எழுதியிருக்கிறாரா அல்லது என்னுடய அனுமானம்தான் தவறா என்பதை அறிய ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கருதுகிறேன்.
என்னுடய புரிதலை சரிசெய்துகொள்ள சகோதரர்கள் தவறாமல் தங்கள் கருத்து என்னவென்பதை சற்று தெரிவிக்கவும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பிரதான தளநிர்வாகி கிறிஸ்து என்பதால் என் கருத்துகளை பதிகிறேன்..
Bro.Sundarr///நீண்ட விளக்கம்கள் கொடுத்து ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கிய மேல்கிசெதேக்கை "பரிசுத்த ஆவியானவர்" என்று தெரிவிக்க முற்படுகிறார்////
நீங்கள் கூறுகிறபடி நான் கருத்தை தெரிவிக்க முற்படவில்லை.. கருத்தை தெரிவித்திருக்கிறேன்..இரண்டு கூற்றுக்கும் வித்தியாசம் உண்டு.ஆகவே முதலில் இதனை தெரிவு படுத்துகிறேன்.
Bro.Sundar//////வேத வசனங்களானது தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவர் இன்றும் என்றும் எப்பொழுதும் ஜீவனுள்ளவர். வசனங்களை எழுத ஏவிய ஆவியானவர் மொழி பெயர்ப்பில் முற்றிலும் தவறாக எழுத அனுமதித்து விடமாட்டார் என்றும் அதுவும் தன்னையே அவன்/இவன் என்று மொழிபெயர்க்க அனுமதிக்க மாட்டார் என்று நான் கருதுக்கிறேன்.////////
நீங்கள் தேவனை ஒரு அஃறிணை பொருளுக்கு(அணுகுண்டு என்று) ஒப்பிடீர்கள்..வேதத்துக்கு மீறி அனேக ஆள்ததுவங்கள் உண்டு என்று மீறி,தங்களின் கற்பனைகளை(தகாத கற்பனைகள் தேவனை மனமடிவாக்கும் என ஏற்கனவே எழுதிஉள்ளேன்) பிடித்து கொண்டு தொடர்ந்து கருத்துகளை பதிகிறீர்கள்..
Bro.Sundar Wrote//தேவனின் நாமத்துக்கு மகிமையை தேட விரும்பும் தாங்கள் முதலில் வேதம் "அவன்" "இவன்" என்று குறிப்பிடும் மெல்கிசெதேக்கை ஆவியான தேவனாக எழுதி தேவனை தாழ்துவதையும், "மகத்துவத்தை அறிய முடியாத தேவனை" அறிந்துவிட்டதாக கருதி, அவரை மூன்று ஆள்த்துவத்துக்குள் அடக்கி விடாப்பிடியாக அவரை மட்டு படுத்த நினைப்பதையும் விட்டொழியுங்கள் அப்பொழுது தானாகவெ தேவனின் நாமத்துக்கு மகிமை உண்டாயிருக்கும்////
பலமுறை தங்களின் இந்த அநேக ஆள்தத்துவம் என்கிற கருத்துக்கு வேத விளக்கம் கேட்டும்,நீங்கள் இதுவரை வசன அடிபடையில் ஒரு விளக்கத்தையும் முன் வைக்கவில்லை..இப்போது நீங்கள் இதனை பதிவிட்டாலும் எங்களை போன்ற அநேகருக்கு உங்களுடைய இத்தகைய கருத்துகளை புரிந்துகொள்ள எதுவாக இருக்கும்..பதில அளிக்க மறுக்கும் பட்சத்தில் தங்களை தாங்களே வேதத்திற்கு மீறி யோசிகிறவர் என கூறுபவராய் இருப்பீர்கள்..
மாறாக தங்களின் இத்தகைய போக்கை விமர்சிக்க என்னை எப்போதும்அனுமதியாமல்..என்னை உங்களின் இத்தகைய விசுவாசத்தை பிடித்துக்கொள்ள ஆலோசனை கூறுகிறீர்கள்..
II தெசலோனிக்கேயர் 2:4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ,
மேற்கூறிய வசனத்தில் "தேவனேனபடுவது" என்ற பதத்தை கவனிக்க.. உடனே நம்மை நாம் உயர்திணை (நான்,நாம்,நாங்கள்,அவன்,அவள்) என கருதிக்கொண்டு கர்த்தரை "அது" என்போமா!!!
அவ்வாறு அல்ல.. இயேசுவை வேதத்தில் அனேக இடத்தில அவன்,இவன் என குறிபிடப்பட்டுள்ளது...
எனவே நாம் நம் இருதயத்தில் அவரை மீகாளை போல புறகனிகலாமா? ஆவிக்குரிய மலடுகளாய் தானே போவோம்!!
அடிப்படை விசுவாசம் அநேகருக்கு மாம்சம்,ரத்தம் இவைகளை கொண்டே இன்றைய தினம் சுவிஷேசம் என்ற பெயரில் அறிவிக்க படுகிறது..
தேவனை உணர்ந்து தேவன் என அறிக்கை இடுகிற என்னை போன்றோர்..
மாம்சம்,ரத்தம் இவைகளால் உணர்ந்து அறிகிரதில்லை..
மத்தேயு 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
தங்கள் வெளிப்பாடுகளை தாங்கள் வெளிபடுதும்போது வசனங்களை தங்கள் இஸ்டத்திற்கு வலைப்பதுண்டு..அவைகள் ரட்சிப்பின் காரியத்தில் குழப்பங்களை ஏற்படுதுவதாகவோ,இடறலாய் இருபதாய் உணர்ந்தாலோ நான் தங்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாது தலையிடுவதுண்டு..
இதோ நான் ஒருகாரியத்தை ஏற்கனவே சொல்லியபடி,எனது வெளிபாட்டை வசனத்தின் அடிப்படையில்,ஆதாரங்களோடு பொது விவாதமாய் சொல்லயுள்ளேன்..
தாங்கள் மறுபதாய் இருந்தால் வேத அடிப்படையில் மறுத்து கருத்துகளை வெளியிடுங்கள்..இல்லையெனில் ஜெபத்தில் காரியனகளை வைத்து வெளிப்படும் வரை காத்திருங்கள்..
தங்கள் வெளிப்பாடுகள் தேவனிடம் வந்தவை என்று சொல்லியும் அனேக காரியங்கள் அவருக்கு புறம்பாய் இருப்பதை நானும் அறிந்தவனாகவே இருக்கிறேன்.. ஆனாலும் கர்த்தர் நம்மை பொருத்து கடிந்து கொள்தலை வெளிபடுத்துகிறார்..
Bro.Sundar Wrote /////இந்நிலையில், தேவத்துவத்துக்குள் ஒருவரான "பரிசுத்த ஆவியானவரை" மெல்கிசேதேக்கு என்று குறிப்பிடுவது தவறான ஒரு நிலை என்று எண்ணி சகோ ஜான்12 அவர்களின் இந்த கருத்துக்கள் தவறாக இருக்குமோ என்று கருதுகிறேன். சகோ ஜான்12 அவர்கள் பரிசுத்த ஆவியானவரை பற்றிய உண்மையை சரியாக அறியாமல் எழுதியிருக்கிறாரா அல்லது என்னுடய அனுமானம்தான் தவறா என்பதை அறிய ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம் என்று கருதுகிறேன்.///////////
இப்படி தான் ஒருவேளிப்பாடை கர்த்தரின் பிரசன்னம் கொண்டு விளங்கி கொள்ளாமல் ஓட்டெடுப்பு நடத்துவீர்களா!! சுந்தர் அவர்களே.. இது கர்த்தரின் பார்வைக்கு உகந்ததல்ல என அறியாமல் போனீர்கள்..
இப்படி தான் யூதாசின் விழுகைக்கு பிறகு.,
அப்போஸ்தலர் 1:20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது..
கர்த்தருக்கு காத்திருக்காமல் சீட்டு போட்டு நம் அப்போஸ்தலர்கள் மதேயுவை தெரிந்தெடுத்தனர்..
கர்த்தர் மத்தேயுவை அப்போஸ்தலனாகி இருந்தால் வேதத்தில் அவரது அப்போஸ்தல செயல்பாடுகள் எங்கே..
தம்முடைய வார்த்தை ஒன்றையும் தரையில் விழ விடாமல் யூதாசின் கண்காணிப்பை தம்மால் அழைக்கப்பட்ட உத்தம ஊழியனான பவுலுக்கு(புறஜாதியின் அப்போஸ்தலன்) கொடுக்கிறார்...
பவுலின் ஊழியமும்,அதின் விஸ்தாரமும்,ஊழியத்தின் மேன்மையும்,கொடுக்கப்பட்ட ஆகமங்களின் எண்ணிக்கையும்,வெளிப்பட்ட தேவ மகிமையும் நாம் அறிவோமே!!
நீங்கள் ஓட்டெடுப்பு நடத்துதலின் காரியமும் இவ்வாறானதே..
நான் எழுதியது தங்களின் இரட்சிப்புக்கு அடுத்த காரியத்தில் இருந்து அல்ல..
இந்த வெளிப்பாடு ஒரு ரகசியம்.. அவ்வளவே..பரிசுத்த ஆவியை நீங்கள் விசுவாசிகிறீர்கள்...நல்லது..
ஆகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற தேவ புதிரரர் அனைவரும் தேவ சமூகத்தில் கர்த்தர் வெளிபடுத்தும் காரியத்தை இங்கு பதியகடவர்..
வெளிபாடுக்கு சம்பந்தம் இல்லாத வசன வளைபுகளையும்,மனித வசன கையால்தல்களையும் கர்த்தரின் நாமத்தினால் கடிந்துகொள்கிறேன்..
பதில் அளிகிரவர்கள் பதிவை படித்தபின்,இது பரிசுத்த ஆவியானவரின் காரியம் ஆதலால் நிதானமாய் தங்கள் கருத்துகளை பதியவும்..
பலமுறை தங்களின் இந்த அநேக ஆள்தத்துவம் என்கிற கருத்துக்கு வேத விளக்கம் கேட்டும்,நீங்கள் இதுவரை வசன அடிபடையில் ஒரு விளக்கத்தையும் முன் வைக்கவில்லை///
///எனவே நாம் நம் இருதயத்தில் அவரை மீகாளை போல புறகனிகலாமா? ஆவிக்குரிய மலடுகளாய் தானே போவோம்!!////
இந்த வெளிப்பாடு ஒரு ரகசியம்.. அவ்வளவே..பரிசுத்த ஆவியை நீங்கள் விசுவாசிகிறீர்கள்...நல்லது..
ஆகவே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற தேவ புதிரரர் அனைவரும் தேவ சமூகத்தில் கர்த்தர் வெளிபடுத்தும் காரியத்தை இங்கு பதியகடவர்..
வெளிபாடுக்கு சம்பந்தம் இல்லாத வசன வளைபுகளையும்,மனித வசன கையால்தல்களையும் கர்த்தரின் நாமத்தினால் கடிந்துகொள்கிறேன்..
பதில் அளிகிரவர்கள் பதிவை படித்தபின்,இது பரிசுத்த ஆவியானவரின் காரியம் ஆதலால் நிதானமாய் தங்கள் கருத்துகளை பதியவும்..
சகோ. ஜான்12 அவர்களே தாங்கள் இந்த் தளத்தில் எழுத ஆரம்பித்ததில் இருந்துஏறக்குறைய என்னுடய எல்லா பதிவுகளுக்கு எதிர் கருத்துக்களை எழுதி வருகிறீர்கள் என்பதை அறிவீர்கள். எல்லாவற்றிருக்குமே என்னிடம் சரியான பதில் இருந்தும் தாங்கள் ஆவியானவர் பெயரில் எழுதுகிறேன் என்று சொல்லி எழுதுவதால் நானும் எதற்கும் விளக்கம் எழுத விருப்பம் இல்லாமல் இருந்தேன். தாங்கள் எழுதிய தேவன் "யாருடனும் போராடுவது இல்லை" என்று கருத்துக்கு நேர் எதிர் வசனஆதாரம் கொடுத்தேன், அதற்க்கு ஏதேதோபுரியாத விளக்கம் கொடுத்து நிராகரித்துவிட்டு, என்னை வசனத்தை வளைக்கிறேன் என்று குற்றம் சாட்டிவிட்டு, இறுதியில் இப்பொழுது "ஆவியானவரே மெல்கிசேதேக்கு" என்று வேதம் சொல்லாத கருத்தை துணிந்து எழுதிவிட்டு பின்னர் ஆவியானவர் பெயரால் எல்லோரையும் பயம்காட்டிகொண்டு இருக்கிறீர்கள்.
இடையிடையே பிறரை நியாம் தீர்த்தல்மற்றும் 'ஆவிக்குரிய மலடாகி போககூடாது" :யூதாசின் விழுகை" என்றெல்லாம் மறைமுகமாக தாங்கள் எழுதுவது எனக்கு நமது பழைய சகோதரர் ஒருவரின் நினைவைத்தான் கொண்டுவருகிறது. தாங்கள் போன்ற வர்களுக்கு விளக்கம் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. நேரடியாக வசனம் சொல்லியும் அதை சற்றும்பொருட்படுத்தாமல் நிராகரிக்கும் தாங்கள், நான் சொல்லும் எந்த கருத்தையும் ஏற்க்கபோவது இல்லை என்பதை தெளிவாகவே புரிந்துகொண்டபிறகு விளக்கம் கொடுப்பதில் நேரம்தான் விரயமாகும்.
இப்பொழுது இந்த திரியை பொறுத்தவரை "ஆவியானவர்தான் மெல்கிசேதேக்கு" என்று வேதம் சொல்லாத பட்சத்தில் "ஆவியானவர் மேல்கிசெத்க்கு இல்லை" என்று சொல்வதற்கு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை! ஒருவேளை தங்கள் கருத்துப்படி ஆவியானவர்தான் மேல்கிசெதேக்காக இருந்தாலும் ஏன் என்னை மேல்கிசெத்க்காக ஏற்க்க வில்லை என்று ஆண்டவர் கேட்கபோவது இல்லை. ஆனால் ஒருவேளை ஆவியானவர் மெல்கிசெதேக்காக இல்லாத பட்சத்தில தேவனை தரம் தாழ்த்திய பாவத்துக்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை சகோதரரே. தங்கள் துணிகரம் அல்லது வெளிப்பாடு தங்களோடு இருக்கட்டும். எங்களுக்கு தெளிவாக தெரியாதவரை தேவனை எந்த மனுஷனுக்கும் ஒப்பாக்க நாங்கள் தயாராக இல்லை.
ஆவியானவரை பற்றி தாங்கள் அதிகம் அறியவில்லை என்பதை மாத்திரம் என்னால் புரியமுடிகிறது! ஆவியானவரின் பணி என்னவென்று வேதம் சொல்கிறது என்பதை கொஞ்சம் நன்றாக ஆராய்ந்து பாருங்கள் ஆவியானவர்யாரென்ற உண்மைபுரியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
விவாதம் என்றால் கருத்துகள் பரிமாரபடதானே வேண்டும்.. அவ்வாறிருக்க நாம் ஏன் எதிர்கிறீர்கள் என கருதிகொள்ளவேண்டும்..
வேதமும் பின்வருமாறு கூறுகிறதே!!
நீதிமொழிகள் 18:17 தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.
கிறிஸ்துவின் சரீரத்தில் நீங்கள் ஒரு உறுப்பு என்றல் நான் வேறொரு உறுப்பை இருக்க கூடும்..ஆனால் நாம் ரட்சிபடைய சிந்தப்பட்ட ரத்தம் ஒன்றே!! கிறிஸ்துவின் சரீரமும் ஒன்றே!!
கருத்து ஒத்துவரவில்லை என்றால் உடனே சகோதர சிநேகத்தை நாம் விட்டுவிடவேண்டியதில்லை என நான் கருதுகிறேன்.
நான் தங்களை எதிர்கிறவன் என்ற கூற்றை நானே மறுக்கிறேன்.. தங்களின் அனேக கருத்துகள் என்னை ஈர்த்ததுண்டு..
முதலில் என்னுடைய இந்த வெளிபாடு எந்தவிதத்தில் மற்றவர்களுடைய ஜீவியத்துக்கு பயன்படும் என்று பதிய மனமில்லாதிருந்தேன்..
ஆனால் தாங்கள் அனேக காரியங்களில் கர்த்தரை தங்கள் இஷ்டம் போல ஒப்புமை செய்தது எனக்கு ஏற்கத்தக்க காரியமாய் படவில்லை..
Bro.Sundar///இப்பொழுது இந்த திரியை பொறுத்தவரை "ஆவியானவர்தான் மெல்கிசேதேக்கு" என்று வேதம் சொல்லாத பட்சத்தில் "ஆவியானவர் மேல்கிசெத்க்கு இல்லை" என்று சொல்வதற்கு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை! ஒருவேளை தங்கள் கருத்துப்படி ஆவியானவர்தான் மேல்கிசெதேக்காக இருந்தாலும் ஏன் என்னை மேல்கிசெத்க்காக ஏற்க்க வில்லை என்று ஆண்டவர் கேட்கபோவது இல்லை. ஆனால் ஒருவேளை ஆவியானவர் மெல்கிசெதேக்காக இல்லாத பட்சத்தில தேவனை தரம் தாழ்த்திய பாவத்துக்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை சகோதரர///
வேதத்தில் மெல்கிசதேக்கு யார் என குறிபிடபடாததால் நியாயதீர்ப்பின் நேரத்தில் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பது தங்களின் கருத்து...
அப்படியானால் 666 என்பதை பற்றிகூட நமக்கு சரியான அறிவு கிடையாது..
அதற்காக ஆராயாமல்,பதில் பெறாமல் விட்டுவிடாமா சகோதரா?
அவ்வாறு செய்தால் நியாயதீர்பின் முன் எவ்வாறு தப்பிகொள்வோம்..
என்னுடைய கருத்து என்னவெனில் கர்த்தரை ரகசியத்தை வெளிபடுதுகிரவராகவும் தேடவேண்டும்..
சில ரகசியங்களை கர்த்தரிடம் நாம் பெறாமல் போவது நம் ஆவிக்குரிய வாழ்கையில் பினடைவை ஏற்படுத்தும்.
Bro.Sundar////தங்கள் துணிகரம் அல்லது வெளிப்பாடு தங்களோடு இருக்கட்டும். எங்களுக்கு தெளிவாக தெரியாதவரை தேவனை எந்த மனுஷனுக்கும் ஒப்பாக்க நாங்கள் தயாராக இல்லை////
சரி..மேல்கிசெதேக்கை மனிதன் என்கிறீர்கள்..வேதத்தில் எங்கே மெல்கிசதேக்கு மனிதன் என கூறப்பட்டு உள்ளது?
ஆரம்பமும்,முடியும் அற்றவர் அல்லவா மெல்கிசதேக்கு!!
மனிதர்களில்,தூதர்களில்,வேறெந்த வேதம் காட்டும் கிரியைகளில் அவ்வாறு உள்ளதா??
நான் பயமுருதுகிறேன் என்கிறீர்கள்!!!!
சகோதரா..புனை பெயரில் எழுதுகிறேன்..சுயத்திற்கு வரும் எந்த மகிமையும் நான் ஏற்கிரதில்லை..நான் தங்களுடன் போராடி என்ன செய்ய போகிறேன்..
கர்த்தரை அறிய மனமில்லாமல் இருபதற்கு பதிலாக சோதித்தாவது அறியுங்கள்..
கர்த்தர் காட்டினால் விசுவாசியுங்கள்.. இல்லயேல் முதுகிற்கு பின் கருத்துகளை எறிந்து போடுங்கள்.. இனி இத்திரியை பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிப்பேன்..
லூக்கா 8:10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
என்னுடைய கருத்து என்னவெனில் கர்த்தரை ரகசியத்தை வெளிபடுதுகிரவராகவும் தேடவேண்டும்..
சில ரகசியங்களை கர்த்தரிடம் நாம் பெறாமல் போவது நம் ஆவிக்குரிய வாழ்கையில் பினடைவை ஏற்படுத்தும்.
நமக்கு வெளிப்படுத்தப்படும் ஒரு ரகசியமானது ஏதாவது ஒரு காரியத்தில் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அதைப்பற்றி ஆராய்ந்து அறிந்துகொள்வது மிக மிக அவசியம்தான். இந்த வெளிப்பாட்டின் மூலம் தாங்கள் சொல்லவரும் கருத்து என்ன? நாம் அறிய வேண்டிய முக்கிய பாடம் என்ன?
அத்தோடு இதன் மூலம் இறைவன் நமக்கு என்ன தெரிவிக்க விரும்புகிறார் என்பதையும் தெரிவித்தால் நலம் என்று கருதுகிறேன்.
மேற்கண்ட வெளிபாட்டில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் பாடம்
என்னவெனில்,
இயேசு பெற்றுக்கொண்ட பிரதான ஆசாரியத்துவம் மனுசனால் உண்டாகாமல் தேவனால் உண்டானது..
இதை முன் வைக்க தான் மேல்கிசேதேக்கு பற்றி பவுல் பெசவேடியதாயிற்று..
மனுசனால் உண்டாய் இருந்தால்,மேல்கிசேதேக்கு இறப்பற்றவராய் பூமில் இருக்க,அவரது முறைமை யேசுவினால் ஏன் பின்பற்றப்படவேண்டும் என்கிற கேள்வி எழும்...
(ஒருவர் உயிருடன் இங்கேயே இருக்க அவர் முறைமை எவ்வாறு பின்பற்றப்படும்..ஆகவே மேல்கிசேதேக்கு பூமியை சார்ந்தவர் இல்லை என்பது திண்ணம்)
எனவே மெல்கிசெதேக்கின் பிரதான ஆசாரியத்துவம் பரத்திற்கு அடுத்தது..
இதன் காரணமாகவே தாவீதும் ஆசாரியர்கள் மாத்திரம் உண்ணத்தக்க அப்பத்தை யூத கோத்திரத்தில் பிறந்தவனாய் இருந்தும் தான் சாப்பிட்டது மட்டும் அல்லாமல்,தன உடன் வந்தவர்க்கும் பங்கிட்டான்..
இது தேவசமூகத்தை அவமதித்ததாக ஏன் என்னபடவில்லை சகோதரரே...
என் சுதந்திரமாய் இருப்பார்கள் என தேவன் ஆசாரிய புத்திரர்களை சொன்னார்..
ஆனால் தாவீது ஏன் சுதந்திரமும் பாத்திரத்தின் பங்குமானவரே என்று தேவனை கூறுகிறார்..
வேதத்தில் எந்த சம்பவம் அல்லது வெளிப்பாடு அவரை அவாறு கூற வெய்திருக்ககூடும்..
தாவீது இயேசு பெறப்போகும் பிரதான ஆசாரியத்துவத்தை அறிந்து அடையாளமாய் இதை செய்தான்..
ஏசுவும் பரிசேயரிடத்தில் மேற்கூறிய தாவீது சமூகத்து அப்பம் உண்ட சம்பவத்தை வினவினபோது,போதிக்கும் பரிசேயர்கள் பதில் அளிக்கவில்லை!!
2000 வருடம் கழித்தும் இக்காரியங்கள் நமக்கு இன்னும் புதைபோருளாய் இருக்கத்தான் வேண்டுமோ?
எனவே மேல்கிசேதேக்கு மனிதன் என அறிக்கை இடுகிறவர்,இயேசு பிரதான ஆசாரியத்துவத்தை மனிதர்களிடத்தில் இருந்து பெற்றார் என அறிக்கை செய்பவர் ஆவார்..இது ஆவிக்குரிய பின்னடைவை ஏற்படுத்தாதா என்ன!?
வேதமும் பின்வருமாறு கூறுகிறதே..
எபிரெயர் 7:14-17.
நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறாரென்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.
அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
எனவே மெல்கிசதேக்கின் முறைமை பெற்ற பிரதான ஆசாரியரான யேசு,மனிதர்களிடத்தில் இருந்து அதை பெறாமல் பரத்தில் இருந்து அதை பெற்றதை நாம் நிச்சயமாய் வேத அடிப்படையில் அறியகடவோமாக..
பரலோகத்தில் நம் ஏசுவிற்கு சமமான வேறு யார் பிரதான ஆசாரியராய் இருக்க முடியும் என இப்போது நீங்களே கூறுங்கள்...
எபிரெயர் 8:11. அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
-- Edited by JOHN12 on Tuesday 10th of January 2012 01:43:48 PM
இதன் காரணமாகவே தாவீதும் ஆசாரியர்கள் மாத்திரம் உண்ணத்தக்க அப்பத்தை யூத கோத்திரத்தில் பிறந்தவனாய் இருந்தும் தான் சாப்பிட்டது மட்டும் அல்லாமல்,தன உடன் வந்தவர்க்கும் பங்கிட்டான்..
சகோதரர் ஜான்12 அவர்களே தங்களின் விளக்கங்கள் நாங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு அதிகமாக இருபதுபோல் தெரிகிறது. தாவீது ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடும் தேவ சமூகத்து அப்பத்தை சாப்பிட்டதும் மேல்கிசேதேக்குவுக்கும் தொடர்பு நிலைகளை புரிவதற்கு கடினமாக உள்ளது.
JOHN12 wrote:////எனவே மேல்கிசேதேக்கு மனிதன் என அறிக்கை இடுகிறவர்,இயேசு பிரதான ஆசாரியத்துவத்தை மனிதர்களிடத்தில் இருந்து பெற்றார் என அறிக்கை செய்பவர் ஆவார்..இது ஆவிக்குரிய பின்னடைவை ஏற்படுத்தாதா என்ன!?////
சங்கீதம் 110:4நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.
இயேசுவை தேவனே நித்திய ஆசாரியராக ஏற்ப்படுத்தினார் என்பதை இஸ்ரவேலர் வேண்டுமானால் மறுக்கலாம் அனால் இங்கு யாரும் மறுப்பதற்கில்லை. மேலும் இந்த உண்மையை தெரிவிக்கும்முன்னமே நான் மற்றும் இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லோருமே "இயேசு தேவனால் நித்திய ஆசாரிய பட்டம் பெற்றவர் என்று விசுவாசிக்கிறோம்.
என்னை பொறுத்தவரை நான் வெளிப்பாடுகளை மதிக்க கூடியவன் எனவே தங்களுக்கு இந்த காரியம்குறித்து சில உண்மைகளை தேவன் தெரிவித்திருந்தால் அதை எதிரித்து பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை! எனவே இந்த விஷயத்தில் மேலும் கருத்துசொல்ல நான் விரும்பவில்லை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னால் முடிந்தவரை காரியங்களை விளக்கி சொல்ல தேவகிருபையின்படி முயற்சிக்கிறேன்..
நாம் எல்லோரும் இயேசு பிரதான ஆசாரியன் என்பதை அறிவோம்..அவ்வாறு நியமித்தவர் கர்த்தர் என்பதையும் அறிவோம்..
அனால் இந்த பிரதான ஆசாரியத்துவம் மாம்சதிற்கடுததல்ல,நியாய பிரமாணத்திற்கும் அடுத்ததல்ல என்பதற்கு வசன ஆதாரம் தருகிறேன்..
எபிரெயர் 7:16 அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்...
அது லேவி கோத்திரத்தின் முறைமையின்படி வராமல் பரத்திலிருந்து அருளப்பட்டது..என்பதை நாம் விசுவாசிக்கவேண்டும்..
நீங்கள் அறியாமல் மேல்கிசேதேக்கு மனிதன் என்றீர்கள்.. அவர் மனிதன் என்றால் யேசு பெற்ற ஆசாரியத்துவம் மாம்சத்தின் படியாய் வந்த ஆசாரியத்துவம் என்று வேதத்திற்கு எதிராய் மாறிவிடுமே...!!! அவ்வாறு நம்பப்படும் வேலையில் நிச்சயம் ஆவிக்குரிய பின்னடைவை ஏற்படுத்தும்...
அதைதான் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்பினேன் ...
ஒரு சரியான புரிதலுக்குள் நாம்வர..
இப்போது சகோதரர்களிடம் ஒருகேள்வி..
இயேசு மரித்து உயிர்தேளவேண்டியது முன்குறிக்கபட்டது என நாம் அறிந்துள்ளோம்.. இயேசு பிறக்கும்போதே பிரதான ஆசாரியாராய் இருந்தாரா? அல்லது உயிர்தெழுந்த பின்பு பிரதான ஆசாரியத்துவத்தை பெற்றாரா? என்பதை நாம் ஆராயலாம்...
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார
சகோதரரே இந்த மெல்கிசேதேக் பற்றி இந்த இரண்டு இடங்களில் தான் பழையஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது இந்த இரண்டு காரியத்தை வைத்து கொண்டு நாம் மெல்கிசேதேக்கை குறித்து ஒரு தெளிவான ஒரு முடிவை எடுக்க முடியாது
ஆனால் புதிய ஏற்பாட்டில் எபிரெயர் என்னும் நிருபத்தை எழுதிய ஒருவர் மெல்கிசேதேக்கை குறித்து சொல்வதை பார்த்தால்
எபிரெயர் 5:11இந்தமெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்
எபிரெயர் 7 : 2இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.
எபிரெயர்7 : 16 ,17அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், நீர் மெல்கிசேதேக்கின்முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்
சுருக்கமாக சொல்கின்றேன்:
இங்கு எபிரெயர் நிருபம் எழுதியவனுக்கு அனேக காரியங்கள் மெல்கிசேதேக்கை குறித்து வெளிபடுத்த பட்டுள்ளது மெல்கிசேதேக்கை குறித்து தெரிந்த அவன் மெல்கிசேதேக்கை குறித்து சொல்லும் பொழுது அவன்,இருந்தான்,ஒப்பானவனாய்,இவன் என்று ஒரு மனிதனை தான் குறிப்பிட்டு சொல்வது போல உள்ளது
இந்த எபிரெயர் நிருபம் எழுதியவர் சொல்வதை நன்கு கவனித்தால்
எபிரெயர் 5:11இந்தமெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்
விஸ்தாரமாய் பேசலாம் என்று சொல்வதை பார்த்தால் எபிரெயர் நிருபம் எழுதியவனுக்கு மெல்கிசேதேக்கைகை குறித்து அனேக காரியங்களை வெளிபடுத்த பட்டுள்ளது தெரிந்து உள்ளது அப்படி வெளிபடுத்த பட்ட அவன் மெல்கிசேதேக்கைகை குறித்து சொல்லும் பொழுது நிதானமாய் பேசாமல் அவன்,இருந்தான்,ஒப்பானவனாய்,இவன் என்று தான் திரும்ப திரும்ப சொல்கின்றார் தேவனுடைய ஆவியானவர் என்றால் நிச்சயம் நிருபம் எழுதியவர் இப்படி அவன் இவன் என்று சொல்லி இருக்க மாட்டார்.
எனவே என்னுடைய கருத்து என்னவெனில் இந்த மெல்கிசேதேக்கு என்பவர் ஒரு விசேஷமான ஒருவர் ஆவார் ஆனால் இவர் தேவனுடைய எந்த பிரிவுகளிலும் அடங்கமாட்டார் என்பதே என் கருத்து.............
-- Edited by EDWIN SUDHAKAR on Tuesday 10th of January 2012 10:48:24 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
// பலமுறை தங்களின் இந்த அநேக ஆள்தத்துவம் என்கிற கருத்துக்கு வேத விளக்கம் கேட்டும்,நீங்கள் இதுவரை வசன அடிபடையில் ஒரு விளக்கத்தையும் முன் வைக்கவில்லை..இப்போது நீங்கள் இதனை பதிவிட்டாலும் எங்களை போன்ற அநேகருக்கு உங்களுடைய இத்தகைய கருத்துகளை புரிந்துகொள்ள எதுவாக இருக்கும்..பதில அளிக்க மறுக்கும் பட்சத்தில் தங்களை தாங்களே வேதத்திற்கு மீறி யோசிகிறவர் என கூறுபவராய் இருப்பீர்கள்..
மாறாக தங்களின் இத்தகைய போக்கை விமர்சிக்க என்னை எப்போதும்அனுமதியாமல்..என்னை உங்களின் இத்தகைய விசுவாசத்தை பிடித்துக்கொள்ள ஆலோசனை கூறுகிறீர்கள்.. //
சுந்தர் ஒரு சர்வதிகாரி! "அநேக ஆள்தத்துவம் " என்கின்ற குப்பையை அவரால் நிரூபிக்க முடியாதது. அவருடைய புது பிதாவாகிய "சோதிகளின்" பிதாவிடத்தில் கேட்டுப்பார்த்து பதில் சொல்லலாமே!
சுந்தர் ஒரு சர்வதிகாரி! "அநேக ஆள்தத்துவம் " என்கின்ற குப்பையை அவரால் நிரூபிக்க முடியாதது. அவருடைய புது பிதாவாகிய "சோதிகளின்" பிதாவிடத்தில் கேட்டுப்பார்த்து பதில் சொல்லலாமே!
சகோதரர் ஜான் அவர்களே ரொம்ப அறிவாளித்தனமாக பேசுவதாக எண்ணிக்கொண்டு நீங்கள் அறியாத தேவத்துகங்களை பற்றிய கருத்தை குப்பை அது இது என்று எழுதி வீணாக விழுந்துபோகாதீர்கள்.
"சோதிகளின் பிதா" "ஒருவரும் சேரக்கூடாத ஒளி" என்று வேதத்தில் சொல்லபட்டுள்ள வார்த்தையையே நான் தனி ஆளத்துவமாக கூறியிருக்கிறேன். உங்களுக்கு அவர்குறித்த உண்மைகள் தெரியாமல் கண்களும் இருதயமும் அடைக்கபட்டு போய்விட்டது அதற்க்கு நான் என்ன செய்ய? உங்களுக்கு தெரியும்படிக்கும் சோதிகளின் பிதாவாகிய பேரொளியை உங்களுக்கு காட்ட என்னால் முடியாது சகோதரரே.
இல்லாத ஒன்றை குறித்து இவ்வளவு தெளிவாக பிடிவாதமாக எழுதிக்கொண்டு இருக்க நான் மடையன் அல்ல! அதற்க்கு எந்த அவசியமும் எனக்கு இல்லை. தேவத்துவத்துக்குள் நாம் அறியாத விஷயங்கள் ஆயிரம் இருக்கிறது.
இந்நிலையில் தெரியாத விஷயத்தில் இவ்வளவு துணிகரம் கூடாது. "எனக்கு தெரியாதது எதுவும் இல்லை, தேவனையும் அவர் மகத்துவத்தையும் அளவிட்டுநான் அறிந்துவிட்டேன்"என்ற மமதையே தங்களை இவ்வாறு எழுத வைக்கிறது.
இதற்குமேல் தங்களுக்கு நான் எதுவும் விளக்கம் சொல்ல விரும்ப வில்லை. ஆண்டவர் அவருடைய சித்தபடி செய்வாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சுந்தர் ஒரு சர்வதிகாரி! "அநேக ஆள்தத்துவம் " என்கின்ற குப்பையை அவரால் நிரூபிக்க முடியாதது. அவருடைய புது பிதாவாகிய "சோதிகளின்" பிதாவிடத்தில் கேட்டுப்பார்த்து பதில் சொல்லலாமே!
சகோ : ஜான் அவர்களே நீங்கள் சகோ : சுந்தரை அவதுராய் பேசுவதும் மட்டும் அல்லாமல் இப்பொழுது ஒரு நடுக்கமும் பயமும் கொஞ்சமும் மனதில் இல்லாமல் தேவனை பற்றி பேசுகின்றோம் என்று தெரிந்தோம் அவருடைய ஆழ்த்ததுவங்களை குப்பை என்று துணிகரமாய் சொல்கின்றீர்கள்
நான் அல்ல நாளை உங்கள் நாவானதே உங்களை நீயாயம் தீர்க்கும் என்பதை மனதில் வைத்து கொண்டு தேவனிடத்தில் மன்னிப்பை பெற்றுகொல்லுங்கள் என்று உங்களை தாழ்மையோடு கேட்டுகொள்கின்றேன்
சகோ : சுந்தர் அவர்கள் கருத்துக்கள் புடிக்கவில்லை என்றால் எனக்கு பிடிக்கவில்லை யாரும் இதை எற்றுகொல்லாதீர்கள் என்று சொல்லி வெளியேறிவிடுங்கள் சகோ :சுந்தரை அவமதிக்கின்றேன் என்று நினைத்து கொண்டு தேவனை அவமதிக்காதீர்கள....
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 11th of January 2012 12:28:06 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
ஆனால் தாங்கள் கூறுகிறபடி சொல்லபோனால் வேதத்தில் சாத்தான்,தேவ தூதர்கள் அவன்,இவன் என அழைக்கப்பட்டுள்ளனர்..இவர்கள் ஆண்களாக எண்ணிவிட முடியாது..மனிதர்கள் என்றும் கூறிவிட முடியாது..தூதர்கள் பணிவிடை ஆவிகள் என வேதம் தெளிவாய் கூறுகிறதே..
தீர்க்கதரிசிகள் சுத்தகண்ணன் என தேவனையும் கூறுகிறார்களே!! அவமரியாதையாய் தேவனை கூறினார்கள் என ஆகிவிடுமா? இல்லையே..
நாம் மெல்கிசேதேக்கை மனிதன் கருத முடியாது..
ஏன் என்றால் பின் வரும் காரணங்களை பாருங்கள்..
மாம்சத்தின் அடிப்படையில் இயேசு ஆசாரியத்துவத்தை பெறாதபோது நாம் மேல்கிசதேக்கை மனுஷன் என கூற இயலாது. இயேசுவானவர் மாம்சத்தின் அடிப்படையில் பிரதான ஆசாரியத்துவத்தை பெறவில்லை..(வசனங்களை ஏற்கனவே தந்துள்ளேன்)..
மாம்சத்தின் அடிப்படையில் ஆசாரியத்துவம் பெற லேவி கோத்திரத்தில் பிறக்கவேண்டும் என தாங்கள் அறிந்திருப்பீர்கள்.. ஆக யூதகுலத்தில் பிறந்த இயேசு நியாய பிரமாணத்தின் அடிப்படையில் அழிவுள்ள ஆசாரியத்துவத்தை பெறாமல் நித்திய ஆசாரியத்துவ முறைமையை மேல்கிசதேக்கிடம் இருந்து பெறுகிறார்..
மெல்கிசதேக்கு ஆரம்பமும்,முடிவும் இல்லாதவர் எனவே அவர் மனிதரும் அல்ல,தேவ தூதனும் அல்ல.. நித்தியமாய் உள்ளவர்கள் தான் நித்திய ஆசாரியராய் இருக்க முடியும் என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது..
தேவகுமாரனுக்கு ஒப்பாய் நீங்கள் எந்த விசேஷமான மனிதனையும்,தேவதூதனையும் வேதத்தின் அடிப்படையில் கூற இயலாது..
தேவகுமாரனுக்கு சமமான வேறொரு ஆசாரியர் யார்? நம் தேவனுக்கு சமமானவர் யார்..
பிதா என கூற இயலாது அவர் பிரதான ஆசாரியர்களால் ஆராதிக்க படுகிறவர்..
பரிசுத்த ஆவியான நம் தேவனே மெல்கிசதேக்கு!!!
மெல்கிசதேக்கின் முறைமையின்படி இயேசுவை தவிர வேறொருவருக்கு வேறொரு ஆசாரியத்துவம் அனுமதிக்க படவில்லை..
ஆனால் கடைசிகாலத்தில் அவ்வாறு நித்திய ஆசாரியத்துவம் போல காட்டப்படும் வேறொரு ஆசாரியத்துவம் அந்திகிறிஸ்துவால் கான்பிக்கபடலாம் என்பது என்னுடைய அனுமானம்..