கடுமையான வார்த்தைகளை தவிர்க்கலாமே.. பக்திவைராக்கியம்
நல்லது தான் ஆனால் அடுத்தவரை நாம் ஏன் நிந்திக்க
வேண்டும்..சோதிகளின் பிதாவை பற்றி நீங்கள் அறிந்தவைகளை
ஒரு திரி அமைத்து விளக்கலாமே!!!//
சகோ. ஜான் அவர்களே நான் சுந்தர் அவர்களை நிந்திக்க வில்லை! அவர் சோதிகளின் பிதா என்பவர் பிதாவின் பிதாவும் , கிறிஸ்துவின் தேவனுமாய் இருக்கிறார் என்கிற கூற்றை விமர்சிக்கிறேன். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று முன்று தொழத்தக்க ஆள்தத்துவங்களை மாத்திரமே வேதத்தில் பார்க்கிறோம் இவர்:
பிதாவிற்கு மேலே 'இன்னொரு பிதா' இருப்பதாக எழுதினார்.
இரட்சிப்புக்கு கிருஸ்துவைதவிர மேலும் முன்று வழிகள் இருந்ததாக எழுதினர்.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மறு சுழற்ச்சி (Reincarnation ) முறையின் மூலம் மிண்டும் பிறப்பார்கள் என்று எழுதினார்.
ஆதாரம் கேட்டால் பரிசுத்த ஆவி உனக்கு இல்லை, நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து கேட்டு எழுதும் பரிசுத்தவான் ஆகையால் வாயை மூடு என்பார். இதுவரை அவர் எழுதிய பொய்களை நிரூபிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்பதுதான் வேதனை!!
John wrote:அவர் சோதிகளின் பிதா என்பவர் பிதாவின் பிதாவும் , கிறிஸ்துவின் தேவனுமாய் இருக்கிறார் என்கிற கூற்றை விமர்சிக்கிறேன். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று முன்று தொழத்தக்க ஆள்தத்துவங்களை மாத்திரமே வேதத்தில் பார்க்கிறோம் இவர்:
பிதாவிற்கு மேலே 'இன்னொரு பிதா' இருப்பதாக எழுதினார்.
இரட்சிப்புக்கு கிருஸ்துவைதவிர மேலும் முன்று வழிகள் இருந்ததாக எழுதினர்.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மறு சுழற்ச்சி (Reincarnation ) முறையின் மூலம் மிண்டும் பிறப்பார்கள் என்று எழுதினார்.
ஆதாரம் கேட்டால் பரிசுத்த ஆவி உனக்கு இல்லை, நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து கேட்டு எழுதும் பரிசுத்தவான் ஆகையால் வாயை மூடு என்பார். இதுவரை அவர் எழுதிய பொய்களை நிரூபிக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை என்பதுதான் வேதனை!!
சகோதரரே நான் இதுபோன்ற கருத்துக்களை எழுதும் திரிகளில் அங்கேயே தங்கள் கேள்விகளை முன்வைத்து சரியான ஒரு விவாதத்தை நடத்தியிருந்தால் இதுபோன்று இங்குவந்து அவதூறுகளை எழுதிக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சோதிகளின் பிதாவை பற்றி வசன ஆதாரத்தோடு எழுதிய ஒரு திரி இருக்கிறது, அங்கு தாங்கள் எந்த வசனத்தின் அடிப்படையில் அதை இல்லை என்று மறுக்கிறீர்கள் என்பதை எழுதுங்களேன்.
முதலில் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் எழுதிக் கொண்டுதான்இருந்தேன். திரித்துவம் மற்றும் மரணமில்லா வாழ்க்கை இரண்டுக்கும் நான் பக்கம் பக்கமாக பதில்எழுத, இறுதியில் பதில் எதுவும் சொல்லாமல் நீங்கள் காணாமல் போய்விட்டு, இப்பொழுது அதை எழுதினேன் இதை எழுதினேன் நானும் இறைநேசனும் ஒண்ணு என்பதுபோல் தேவையற்ற கருத்துக்களை ஆங்காங்கே தூவி வருகிறீர்கள்.
தாங்களின் குணத்தையும் நோக்கத்தையும் நிதானித்த பிறகுதான் நான் தங்களுக்கு பதில் சொல்வதை தவிக்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இயேசு பெற்ற பிரதான ஆசாரியதுவத்தின் காரியத்தை அறியவும்,மெல்கிசதேக்கின் காரியத்தை புரிந்துகொள்ளவும் ஏது உண்டாக,நான் ஏற்கனவே பின்வரும் கேள்வியை கேட்டிருந்தேன்..
இயேசு மரித்து உயிர்தேளவேண்டியது முன்குறிக்கபட்டது என நாம் அறிந்துள்ளோம்.. இயேசு பிறக்கும்போதே பிரதான ஆசாரியாராய் இருந்தாரா? அல்லது உயிர்தெழுந்த பின்பு பிரதான ஆசாரியத்துவத்தை பெற்றாரா? என்பதை நாம் ஆராயலாம்...
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த திரியில் கருத்துகளை பதிவதில் மகிழ்ச்சி. காரணம் இன்றைக்கு நான் படித்த வேத வாசிப்பின் பகுதியும் மேல்கிசெதேக்கை பற்றி தான். அதே சமயத்தில் மற்றொரு திரியிலும் மேல்கிசேதேக்கை பற்றிய விவாதம் தொடங்கப்பட்டது.
சரி, இயேசு எப்போது பிரதான ஆசாரியத்துவத்தைப் பெற்றார் என்பதை வேதத்தின் அடிப்படையில் பாப்போம்.
எபிரெயர் 5
8. அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
9. தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,
10. மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
இயேசுவானவர் தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி மேல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என தேவனால் அழைக்கப்பட்டாராம். ஆக, இயேசுவானவர் பூரணரான பின்பு மேல்கிசேதேக்கின் பிரதான ஆசாரியதுவத்தை பெற்றார்.
பூரணமான குமாரன் ஆணையோடே கூடிய வசனத்தினால் ஏற்படுத்தப்பட்டார்.
எபிரெயர் 7:28 நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
இந்த பிரதான ஆசாரியரின் முதல் ஆசாரிப்பு எங்கே தொடங்குகிறது என்று பார்த்தால், அவர் மரணதினால் பரிசுத்த ஸ்தலத்தின் திரையைக் கிழித்து பரிசுத்த ஸ்தலதிற்கு சென்று தம் பாவமிலாத சொந்த ரத்தினாலே நமக்கு பாவ நிவர்த்தி செய்ததே!!!
எபிரெயர்6:20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
இதினாலே இயேசுவைக்கொண்டு தேவசமூகத்திற்கு செல்கிறவன் முன்போல தேவ பிரசன்னதினால் மரணத்தை அடையாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு இந்த ஆணை புது நம்பிக்கையை ஏற்படுத்தி மனிஷருக்கு ஆதுமா நன்கூரமானது!!!
எபிரெயர்6:19 அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
1) யோவான் 8.56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். 57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். 58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஆபிரகாம் இயேசு கிருஸ்துவை கண்டதாக இல்லை. ஆனால் மெல்கிசேதேக்கை ஆபிரகாம் கண்டான். கண்டு மகிழ்ந்து அவருக்கு தசம பாகம் தந்தான்.
2) ஆதியாகமம் 14.18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, 19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. 20. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
மெல்கிசேதேக்கு அப்பமும், திராட்சரசமும் கொடுத்து ஆபிரகாமை ஆசிர்வதித்தார். இயேசு கிருஸ்துவோ தன் சரீரத்தையும், இரத்தத்தையும் கொடுத்து இந்த உலகை ஆசிர்வதித்தார்.
3) கீழ்கண்ட வசனங்கள் இயேசு கிருஸ்துவின் முந்தின ஆள் தத்துவம் சொன்னது என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
சங்கீதம் 2.7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; 8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
தீர்மானத்தின் விவரத்தை சொல்லுகிறவரை நோக்கி கர்த்தர் பேசினவைகள் இவைகள். தீர்மானத்தை இங்கு விவரிக்கிறவர் தான் குமாரனாய் ஜநிப்பிக்கபடபோகிறவர் என்பதை தமிழ் தெரிந்தவர் மறுக்க இயலாது. ஆக, ஜெனனமாவதர்க்கு இருபத்தெட்டு தலைமுறைகளுக்கு முன்னமே 'தீர்மானத்தை விவரிக்கிற ஆள்தத்துவம்' குமாரனாய் முன்குறிக்கப்பட்டது.
கீழ்கண்ட வசனமும் குமாரனாய் முன் குறிக்கப்பட்ட ஆள் தத்துவம் சொன்னதே
எபிரேயர் 10.5. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; 6. சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். 7. அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். 8. நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: 9. தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
இந்த வசனம் எப்போது வருகிறது என்று பார்த்தால் இதன் முன்னும், பின்னும் மெல்கிசேதக்கை பற்றி பேசும் போது வருவதை காணலாம். அதனால் இயேசு கிருஸ்துவின் முந்தின ஆள் தத்துவம் மெல்கிசேதேக்கே என அறியலாம்.
சகோ.சந்தோஷ் அவர்களே , //இயேசு கிருஸ்து - மெல்கிசேதேக்கு 1) யோவான் 8.56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். 57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். 58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆபிரகாம் இயேசு கிருஸ்துவை கண்டதாக இல்லை. ஆனால் மெல்கிசேதேக்கை ஆபிரகாம் கண்டான். கண்டு மகிழ்ந்து அவருக்கு தசம பாகம் தந்தான்.// தங்கள் கூற்றுக்கு அனேக இணையதள ஆதாரங்களை தர இயலும் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் நாமோ வேததின்படி அடிப்புல் மேயவே விருபுகிறோம். எனவே வேதம் என்ன சொல்லுகிரதேன்பதே அனைத்திலும் முக்கியம். ஆபிரகாம் உண்டாகும் முன்பே நான் 'இருந்தேன்' என இயேசுவானவர் சொல்லாமல் ஆபிரகாம் உண்டாகும் முன்பே 'இருக்கிறேன்' என்கிறார். இது சரியாய் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சொற்றடர். அப்படியானால் 'இருக்கிறேன்' என்று சொன்ன இயேசுவானவர் சரீர பிறப்பில் தமக்கு 41 தலைமுறைக்கு முந்தின ஆபிரகாம் உண்டாகும்போது 'இருந்தது' போல தாம் சரீரத்தில் உண்டாகும் முன்பும் 'இருந்திருக்கிறார்' என்பது தெளிவாகிறது. இப்படி என்றுமே இருக்கிற தன்மையை தான் 'இருக்கிறவராக இருக்கிறேன்' என்கிற தன்மை. தெய்வத்தன்மை!!! //யாத்திராகமம் 3:14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்// ஆக, முட்செடியில் வெளிப்பட்ட 'இருக்கிறவர்' என்கிற நாமமுடையவரை சகோதரர் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். (சகோ. சுந்தர் அவர்களும் இது தொடர்பான தம்முடைய பதிவை இன்று தந்துள்ளார்) சரி இப்படி 'என்றுமே இருக்கிற ஒருவர்' என்றுமே 'இருந்தால்' அவரது முறைமையை எவ்வாறு அவரே பின்பற்றுவார் என்பது தான் இங்கு கேள்வி?? முறைமையை பின்பற்றுவது என்பது ஏற்கனவே உள்ள ஒரு 'bench mark' அல்லது 'standard'ஐ ஒருவர் செயலாக்கம் கொடுத்து பின்பற்றுவது. அல்லது ஒருவர் கொள்கைவகுத்து கொடுத்தபின் அல்லது மறைந்த பின் அவரது முறைமை பின்பற்றுவதை போன்றது. ஆனால் மேல்கிசேதேக்கோ 'மறையாதவர்' என்று வேதம் சொல்லுகிறது.. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!!! தொடரும்....
//இயேசு கிருஸ்து - மெல்கிசேதேக்கு 1) யோவான் 8.56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். 57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். 58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆபிரகாம் இயேசு கிருஸ்துவை கண்டதாக இல்லை. ஆனால் மெல்கிசேதேக்கை ஆபிரகாம் கண்டான். கண்டு மகிழ்ந்து அவருக்கு தசம பாகம் தந்தான்.//
தங்கள் கூற்றுக்கு அனேக இணையதள ஆதாரங்களை தர இயலும் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் நாமோ வேததின்படி அடிப்புல் மேயவே விருபுகிறோம். எனவே வேதம் என்ன சொல்லுகிரதேன்பதே அனைத்திலும் முக்கியம். ஆபிரகாம் உண்டாகும் முன்பே நான் 'இருந்தேன்' என இயேசுவானவர் சொல்லாமல் ஆபிரகாம் உண்டாகும் முன்பே 'இருக்கிறேன்' என்கிறார்.
இது சரியாய் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சொற்றடர். அப்படியானால் 'இருக்கிறேன்' என்று சொன்ன இயேசுவானவர் சரீர பிறப்பில் தமக்கு 41 தலைமுறைக்கு முந்தின ஆபிரகாம் உண்டாகும்போது 'இருந்தது' போல தாம் சரீரத்தில் உண்டாகும் முன்பும் 'இருந்திருக்கிறார்' என்பது தெளிவாகிறது. இப்படி என்றுமே இருக்கிற தன்மையை தான் 'இருக்கிறவராக இருக்கிறேன்' என்கிற தன்மை. தெய்வத்தன்மை!!!
யாத்திராகமம் 3:14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்
ஆக, முட்செடியில் வெளிப்பட்ட 'இருக்கிறவர்' என்கிற நாமமுடையவரை சகோதரர் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். (சகோ. சுந்தர் அவர்களும் இது தொடர்பான தம்முடைய பதிவை இன்று தந்துள்ளார்) சரி இப்படி 'என்றுமே இருக்கிற ஒருவர்' என்றுமே 'இருந்தால்' அவரது முறைமையை எவ்வாறு அவரே பின்பற்றுவார் என்பது தான் இங்கு கேள்வி?? முறைமையை பின்பற்றுவது என்பது ஏற்கனவே உள்ள ஒரு 'bench mark' அல்லது 'standard'ஐ ஒருவர் செயலாக்கம் கொடுத்து பின்பற்றுவது. அல்லது ஒருவர் கொள்கைவகுத்து கொடுத்தபின் அல்லது மறைந்த பின் அவரது முறைமை பின்பற்றுவதை போன்றது. ஆனால் மேல்கிசேதேக்கோ 'மறையாதவர்' என்று வேதம் சொல்லுகிறது..