இரண்டாம் உலகப்போரின்போது அமேரிக்கா, ஜப்பானில் உள்ள குரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு இடங்களின் மேல் அணுகுண்டை போட்டு தரைமட்டமாக்கியது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். 1939இல் துவங்கிய இந்த போரில் 1941 வரை அமெரிக்கா நடுநிலை நாடு என்ற போர்வையில் தன் ஆயுதங்களை விற்று பணம் ஈட்டி கொண்டிருந்தது. டிசம்பர் ஏழு 1941இல் அவ்வாய்(Hawaii) பகுதியில் இருந்த 'பேர்ல் துறைமுகம்' என்னும் அமெரிக்க கடற்படை தளத்தை ஜப்பான் தாக்கியதால் மட்டுமே வட அமெரிக்க இரண்டாம் உலகப் போரில் குதித்தது.
ஜப்பானின் முதல் தாக்குதல் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பை கொண்டு வந்தது! இந்த தாக்குதலுக்கு ஜப்பானியர் இரண்டு பிரிவாக மொத்தம் 353 விமானங்களை பயன்படுத்தினர். இந்த தாக்குதலினால் அமெரிக்க கப்பற்படையின் நான்கு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன மற்றும் 4 கப்பல்கள் பலத்த சேதத்துக்கு ஆளாகின. மேலும் 3 ஆயுதம் தாங்கி சிறு கப்பல்கள் 188 விமானங்கள் வீழ்த்தப்பட்டது , 2402 வீரர்களும் கொல்லப்பட்டனர், 1282 பேர் காயமடைந்தனர். ஜப்பானியர் களுக்கு இப்போரில் குறைந்த சேதமே ஆயின.
இதன் விளைவாக அமேரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடன அறிப்பை வெளியிட்டது. .
ஜப்பானின் படைகள் அமெரிக்காவின் பக்கம் உள்ள துறைமுகத்தை தாக்கிகொண்டிருக்க, அந்த கடும் தாக்குதலை சமாளிக்க முடியாத அமேரிக்கா தான் புதிதாக தயாரித்து வைத்திருந்த அணுகுண்டை ஜப்பான் மீது போட தீர்மானித்தது. முதலில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற குண்டின் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர்.
இந்த பெரும் இழப்பு ஜப்பானிய படைகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும் ஜப்பானியர்கள் தளர வில்லை காரணம் அமெரிக்காவிடம் ஒரே ஒரு அனுகுண்டு மட்டும்தான் இருந்தது அதை பயன்படுத்திவிட்டது இனி அவர்களை விடக்கூடாது
எப்படியாவது தொலைத்துவிட வேண்டும் என்று எண்ணி மீண்டும் கடும் தாக்குதலை நடத்தியது.
ஆனால் அமெரிக்கவோ இரண்டாவதாக நாகசாகிமீது 'பேட்மேன்' என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியதில் அந்த நகர் நிர்மூலமாக்கப்பட்டதோடு, கதிர்வீச்சால் சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் மாண்டதாக கூறப்படுகிறது.
இந்த இரண்டாம் அணுகுண்டால் மிகவும் கதிகலங்கிப் போன ஜப்பான் இன்னும் அமெரிக்காவிடம் பல அணுகுண்டுகள் இருக்கலாம் என்றுஎண்ணி அமெரிக்காவிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது!
இதற்க்கு ஒப்பாக:
தேவனால் ஆகாதவன் என்று தள்ளபட்ட சாத்தான், ஆதியில் இருந்தே தனது அதீத தந்திரங்களால் தேவனோடு போராடி வருகிறான். முதல் மனுஷனாகிய ஆதாமின் மகனாகிய ஆபேலை, காயீன் மூலம் கொலை செய்ய வைத்ததில் இருந்து எல்லா மனுஷர்களையும் ஏகமாக கெடுத்து, பின்னானில் தேவ ஜனமாகிய இஸ்ரவேலர்களை பாபிலோனுக்கு சிறைகளாக அனுப்பும் அளவுக்கு ஜனங்கள் எல்லோரையுமே பரிசுத்த தேவனுக்கு ஆகாதவர்கள் ஆக்கிபோட்டான். மனுக்குலம் முழுவதுமே ஏகமாய் கெட்டு போனது. நல்லவன் ஒருவனும் இல்லை என்ற நிலையிக்குள் உலகம் தத்தளித்தது!
சங்கீதம் 14:3எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
தனது தந்திரத்தால் மிகவும் பெருமிதம் அடைத்திருந்த சாத்தானுக்கு தேவனால் முதல்முதலில் வீசப்பட்ட ஆள்த்துவமாகிய அணுகுண்டு "ஆண்டவராகிய இயேசுவின் மனுஷ பிறப்பு"! கெட்டுபோன உலகினுள் கெடுக்க முடியாதவராய் அவர் வந்தார். இருண்டு போன உலகத்துக்குள் ஒளியாக அவர் வந்தார். பிசாசின் கிரியை அழிப்பதற்கு மனித வெடிகுண்டாக அவர் அவதரித்தார்! அக்குண்டால் சாத்தானின் தலை என்னும் தலைமை நசுங்கி போனது.
தேவனின் முதல் அணுகுண்டாகிய (ஆள்த்துவமாகிய) இயேசுவை பார்த்து அதிர்ந்து போன சாத்தான் மீண்டும் சுதாரித்துக் கொண்டு தீவிரமாக ஆலோசித்து திட்டம் தீட்டி கூட்டாளிகளோடு சேர்ந்து அவரை கொலை செய்து கொக்கரித்தான்! தேவனோடுகூட இன்னும் ஒரே ஒரு ஆள்த்துவம்தான் இருந்தது, அதை அவர் பயன்படுத்தினார் ஆனால் அவரை பூமியில் இல்லாதபடி நாம் அகற்றிவிட்டோம் என்று பூரிப்படைந்தான்.
ஆனால் அந்த பூரிப்பு அவனுக்கு நீண்டநாட்கள் நிலைத்திருக்க வில்லை! தேவன் அடுத்த ஆளத்துவ அணுகுண்டாகிய ஆவியானவர் பெந்தேகொஸ்தே நாளில் சாத்தானின் கிரியைகள் மீது போடப்பட்டார். அரண்டுபோனான் சாத்தான்! ஆயிரமாயிரமாக ஆவியில் நிரம்பிய ஜனங்கள் ஆண்டவரிடம் வந்து சேர்ந்தனர்! ஆகினும் இரண்டு அணு குண்டால் ஆடிப்போய் சரணடைந்த ஜப்பானியர்களை போல் தளர்ந்து விடவில்லை இந்த சாத்தான்! காரணம் அவனது முடிவு அவனுக்கு நன்றாகவே தெரியும். எனவே முடிந்த வரை போராடி விடுவது என்று முடிவெடுத்தான்.
"தேவனிடம் இருந்தது மேலும் இரண்டு ஆள்த்துவம்தான் அதையும் பயன்படுத்திவிட்டார் எனவே தலை(மை) நசுங்கி போனாலும் தன்னை இனி யாரும் ஓன்று செய்யமுடியாது" என்று எண்ணிக்கொண்டு, இன்றும் அதிகேடான கிரியைகளை செய்து ஆண்டவருக்கு கோபமூட்டி வரும் சாத்தானை, தேவன் தம் விஸ்வரூபத்தால் விரைவிலேயே நம் காலின்கீழ் நசுக்கிபோடுவாராக!
-- Edited by Nesan on Thursday 5th of January 2012 09:30:35 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தாங்கள் ஒரு மோசமான வரலாற்று நிகழ்வை நினைவு படுத்தியுள்ளீர்கள்..நல்லது..
அனால் அக்கினியை போட வந்த இயேசுவையும்,வல்லமையின் ஆவியானவரையும் ஏன் அணுகுண்டுக்கு ஒப்பிடீர்கள்?
லூக்கா 12:49 பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
மாம்சத்திற்கு எந்த போரும் ஆவிக்குரிய போருடன் ஒப்பிட தகுதி அற்றது..
எபேசியர் 6:12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
கர்த்தருக்கு யாருடனும் எந்த போராட்டமும் இல்லை...
இந்த பிசாசு தான் யுத்தம் பண்ணுகிறவன்..யுத்தம் பண்ணியும் மேற்கொள்ளாதவன்..
வெளி 12:7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை..
நாம் தான் தேவனுடன் ஜெபங்களிலும்,சாத்தானோடு இவ்வுலக வாழ்கையிலும் போராடவேண்டியவர்கள்..
வேதத்தில் மேற்கூறியவாறு சொல்லபட்டிருக்க, தாங்கள் எவ்வாறு அணு-போரையும் ஆவிக்குரிய போராட்டத்துடனும்,அமெரிக்கா போன்ற ஒரு பொல்லாத நாட்டை கர்த்தருடன் எவ்வாறு ஒப்பிடு செய்தீர்கள் எனக்கு விளங்கவில்லை..
தேவனுடன் சாத்தான் என்றும் போர் புரிந்ததில்லை..தேவனை சேர்ந்தவர்களுடன் தான் அவன் யுத்தம்..
முதலாவது தேவதூர்களிடம் தான் போர் செய்து இருக்கிறான்..வேதத்தில் ஆதாரங்கள் உண்டு..
இனிவரும் காலங்களில் தேவ தூதரோடும் போர் செய்யும் நிலையில் பிசாசு நிலையில் இல்லை..பரலோகத்தில் இல்லாதபடி தாழ்த்தப்பட்டு போனானே..
பிசாசு தனக்கு கொஞ்சகாலமே உண்டு என்று அறிந்தவனாக இருக்கிறான் என வேதம் கூறுகிறது..தான் பண்ண போகிற யுத்தம் சித்திக்காது என அறிந்தவனாகவே இருக்கிறான்..
இனி வரும் அவனுடிய யுத்தம் மக்களுடனானது அல்ல..பரிசுத்தவான்களுக்கு எதிரானது!!!
வேதம் பின்வருமாறு சொல்கிறது..
வெளி 12:17 அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
வெளி 13:7 மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
இறுதியில் தான் .........
வெளிபடபோகும் (சத்ருவை பாதபடியாகி போடும்) குமாரனுக்கும் அவர் சேனைக்கும் எதிரானது...
வெளி 19:19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
தீத்து 2 :11-13. ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
-- Edited by JOHN12 on Thursday 5th of January 2012 06:11:41 PM
சகோ : சுந்தர் இயேசுவை அணுகுண்டுக்கு ஒப்பிட்டார் என்பதை சுட்டி காட்டும் நண்பரே
இயேசுவே தன்னை திருடனுக்கு ஒப்பிட்டு சொன்னதை கிழே உள்ள வசனத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
லூக்கா : 12
39. திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
40. அந்தப்படியேநீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்..!!!
-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 5th of January 2012 08:38:26 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
EDWIN SUDHAKAR wrote:இயேசுவே தன்னை திருடனுக்கு ஒப்பிட்டு சொன்னதை கிழே உள்ள வசனத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
இதுமட்டுமல்ல சகோதரரே, //////கர்த்தருக்கு யாருடனும் எந்த போராட்டமும் இல்லை../// என்று சகோதரர் JOHN12 திட்டமாக எழுதுகிறார்.
யாத் 17:16அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
கர்த்தரின் யுத்தம் தலைமுறை தலைமுறை தோறும் நடக்கும் என்று வேதம் சொல்வதை சகோதரர் வாசிக்கவில்லையா?
அடுத்து
I சாமுவேல் 17:47கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
இங்குநடக்கும் யுத்தம் அனைத்துமே கர்த்தருடையது என்பதும் நாம் அனைவரும் கர்த்தரின் படையில் சேனை வீரர்கள் என்பதும் அறியாமல் நாம் என்ன செய்துவிடபோகிறோமோ தெரியவில்லை.
என்றாவது நீங்கள் தேவனை திருடனுக்கு ஒப்பிட்டு ஸ்தோத்திரம் என்று அவரை துதித்ததுண்டானால்...என்னை மன்னியுங்கள் ..
வருகையின் ரகசியத்தை யேசுவானவர் ஒப்பிட்டு காட்ட திருடனை கூறினால்..
நீங்கள் அவரை இப்படியொரு முறையில் மேற்கோள் காட்டுகிறீர்கள்..
சரி..நாம்மை நாம் தாழ்த்தி முட்டாள் என்பதற்கும்,அடுத்தவர் நம்மை கூறுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா??
இயேசு தம்மை திருடனுடன் ஒப்பிடுவது அவரது தாழ்மையின் காரணமாக வருவது..
நான் அவரை திருடன் என கூறமாட்டேன்..அவ்வாறு கூறுவது என் தேவனை கனவீனம் செய்வதாக பொருள் கொள்கிறேன்.அது என்னை அதி-மேதாவியாக காட்டும் என எண்ணுகிறேன்...
சகோ.நேசன் அவர்களே!!
கர்த்தர் யாருடனும் போராடுகிறவர் அல்ல என்பதற்கான வசன ஆதாரம்...
ஆதியாகமம் 6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
..நான் போராட்டத்தை பற்றி கூறி இருக்க,நீங்கள் ஏன் நான் யுத்தத்தை பற்றி பேசினதாக எழுதினீர்கள் சகோதரரே???
-- Edited by JOHN12 on Friday 6th of January 2012 01:37:36 PM
என்றாவது நீங்கள் தேவனை திருடனுக்கு ஒப்பிட்டு ஸ்தோத்திரம் என்று அவரை துதிததுண்டானால் ...என்னை மன்னியுங்கள் ..
வருகையின் ரகசியத்தை அவர் ஒப்பிட திருடனை கூறினால்..நீங்கள் அவரை இப்படியொரு படஹதில் மேற்கோள் காட்டுகிறீர்கள்..
சரி..நாம்மை நாம் தாழ்த்தி முட்டாள் என்பதற்கும்,அடுத்தவர் நம்மை கூறுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா..
இயேசு தம்மை திருடனுடன் ஒப்பிடுவது அவரது தாழ்மையின் காரணமாக வருவது..நான் அவரை திருடன் என கூறமாட்டேன்..அவ்வாறு கூறுவது என் தேவனை கனவீனம் செய்வதாக பொருள் கொள்கிறேன்.அது என்னை அதி-மேதாவியாக காட்டும் என எண்ணுகிறேன்...
மன்னிக்கவேண்டும் சகோதரரே நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தான் பதில் எழுதிகிறீர்களா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது
உதாரனத்திற்க்கு சில காரியங்கள் ஒப்பிட்டு பேசுவது தவறு அல்ல என்பதை உங்களுக்கு தெரிவிக்கவே ஆண்டவராகிய இயேசு சொன்ன ஒரு ஒப்பிட்டை உங்களுக்கு சுட்டி காட்டினேன் ஆனால் நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்பது உண்மையாகவே சொல்கின்றேன் எனக்கு புரியவில்லை.!
-- Edited by EDWIN SUDHAKAR on Friday 6th of January 2012 11:00:20 AM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
Bro.EDWIN///உதாரனத்திற்க்கு சில காரியங்கள் ஒப்பிட்டு பேசுவது தவறு அல்ல என்பதை உங்களுக்கு தெரிவிக்கவே ஆண்டவராகிய இயேசு சொன்ன ஒரு ஒப்பிட்டை உங்களுக்கு சுட்டி காட்டினேன் ஆனால் நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள் என்பது உண்மையாகவே சொல்கின்றேன் எனக்கு புரியவில்லை.!///
நண்பரே..
கர்த்தர் தம்மை தாழ்த்தி நீங்கள் கூறுகிற வண்ணமாக திருடனுக்கு தம்மை ஒப்பீடு செய்தார்..நானும் நிச்சயம் மறுக்கவில்லை...
கர்த்தர் தம்மை திருடனுக்கு தாழ்த்துகிறதிற்கும்,நாம் அதே வீதத்தில் அவரை தாழ்த்துகிறதிற்கும் வித்தியாசம் உண்டென கருதி தான் முன்பு அவ்வாறு எழுதினேன்..
அதனால் தான் நாம் நாம் திருடனுக்கு ஸ்தோத்திரம் என கூறி கர்த்தரை என்றும் துதித்ததில்லை..
அவ்வாறிருக்க சாரோனின் ரோஜாவை,பள்ளத்தாக்கின் லீலீயை,புறா கண்களை உடையவரை நாம் ஏன் திருடனுக்கும்,அணுகுண்டுக்கும் ஒப்பிட வேண்டும் என்பது தான் என் கேள்வி..
சகோ.சுந்தர் தலைப்பை மாற்றியதற்காக நன்றி..
கூடுமானவரை நம் தேவனின் நாமத்திற்கு மகிமை உண்டாக தேடுவோம் என்கிறேன்...
JOHN12 wrote:.நான் போராட்டத்தை பற்றி கூறி இருக்க,நீங்கள் ஏன் நான் யுத்தத்தை பற்றி பேசினதாக எழுதினீர்கள் சகோதரரே???
சகோ. ஜான் அவர்கள் தங்களை நான் சற்று மேன்மையானவராக நினைத்திருந்தேன் ஆனால் நீங்களும் "தங்களை கிறிஸ்த்தவர் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தங்கள் தப்பிதங்களை உணராமல் பிறரை நியாயம் தீர்க்கும்" சாதாரணமாணவர்போல எழுதுகிறீர்கள். உங்கள் எல்லோருக்குள்ளும் ஒரே ஆவி கிரியை செய்வதை என்னால அறிய முடிகிறது.
நாம் சொல்லவரும் ஒரு கருத்தை சரியாக புரிய வைப்பதற்கு அதற்க்கு ஒப்பான பிற சம்பவங்களை உவமை படுத்தி எழுதுவது என்னுடைய வழக்கம். அதன் அடிப்படையில் நான் அணுகுண்டை தேவனின் கிரியைகளோடு ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
அணுகுண்டானது அது போடபட்ட்ட இடத்தை அக்கினியால் பட்சிக்கும் அதுபோல் "தேவனும் பட்சிக்கிற அக்கினியாக இருக்கிறார்" என்று வேதம் சொல்கிறது. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்தும்
லூக்கா 12:49பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
அதுபோல் ஆவியானவர் முதல் முதலில் இறங்கிய போதும் "அக்கினி மயமான நாவுகள்" வந்தது என்று வசனம்சொல்கிறது. அக்கினி என்று சொன்னவுடன் வாய் அவிந்துவிடாது! அதுபோல் அணுகுண்டு என்று சொன்னவுடன் அது அழித்து விடாது. நம் தேவன் எப்பொழுதும் எல்லோரையும் கொஞ்சிக்கொண்டு இருக்கும் தேவன் அல்ல! அவர் எரிச்சல் உள்ளவர்! சோதோம்/கோமரா என்னும் இரண்டு பட்டணங்களை கர்த்தர் அதேபோன்ற ஒரு செய்கையால் அழித்திருக்கிறார். அவர் மகத்துவத்தை பற்றி சொல்லும்போது நியாயதீர்ப்பையும் பற்றி சொல்வது அவசியமே!
JOHN12 wrote:
////அமெரிக்கா போன்ற ஒரு பொல்லாத நாட்டை கர்த்தருடன் எவ்வாறு ஒப்பிடு செய்தீர்கள் எனக்கு விளங்கவில்லை.///
இஸ்ரவேல் தேசத்தை அழித்து தீக்கிரையாக்கி அங்குள்ள ஜனங்களை எல்லாம் பாபிலோனுக்கு அடிமையாக கொண்டுபோன நேபுகாத் நேச்சாரை தேவன் "என்னுடய ஊழியக்காரன்" என்று சொல்லி யிருப்பதை தாங்களே சுட்டியுள்ளீர்கள். இந்நிலையில் சகோ. அன்புக்கு இயேசுவின் உயிர்தெளுதலில் பங்கில்லை என்று நியாயம் தீர்த்த நீங்கள் இப்பொழுது "அமெரிக்க மோசமான நாடு" என்று தீர்க்கிறீர்கள்.
"காலம் வரும் வரை ஒன்றையும் குறித்து நியாயதீர்ப்பு செய்ய வேண்டாம்" என்று வேதம் சொல்லியிருக்க தேவனின் அதிகாரத்தை கையில் எடுத்து இவ்வாறு நியாயம் தீர்க்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது எனபதுதான் எனக்கு இன்றுவரை புரியவில்லை. எது நல்ல நாடு எது மோசமான நாடு என்பதை தேவன் ஒருவரே அறிவார்.
ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்கு போன பரிசேயன், மற்றவன் ஆயக்காரன் சம்பவம் தெரியும். பிறரை பாவிஎன்றும் ஆகாதவன் என்று தீர்த்த அவன்தான் தேவனுக்கு ஆகதவானாகிபோனான் என்பதை இங்கு நினைப்பூட்டி கொள்கிறேன்.
JOHN12 wrote:
/////கர்த்தர் யாருடனும் போராடுகிறவர் அல்ல என்பதற்கான வசன ஆதாரம்...
ஆதியாகமம் 6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; ..நான் போராட்டத்தை பற்றி கூறி இருக்க,நீங்கள் ஏன் நான் யுத்தத்தை பற்றி பேசினதாக எழுதினீர்கள் சகோதரரே???////
கர்த்தர் மனுஷனோடேதான் போராடுவதில்லை என்று சொல்லி யிருக்காரேயன்றி அவர் யாருடனும் போராடுவது இல்லை என்று
எங்கும் சொல்லவில்லை. அனேக தவறான கருத்துக்களை கொண்டுள்ளீர்கள் ஆனால் சொல்லும் கருத்துகளை ஏற்க்க மனதில்லாமல் இருக்கிறீர்கள். தங்களுக்கு எதை எப்படி புரியவைப்பது என்பது எனக்கு புரியவில்லை.
இந்நிலையில் யுத்தம் வேறு போராட்டம் வேறு, போராடாமல் யுத்தம் பண்ணுவார் என்பது போன்ற மிகப்பெரிய உண்மையை சொல்கிறீர்கள்!
போராட்டம் = போர் + ஆட்டம் = போர் என்றால் யுத்தத்தைதான் குறிக்கும்.
ஆங்கில வழியில் பார்த்தாலும்
STRIVE means(intr) to fight; means To attempt to harm or gain power over an adversary by blows or with weapons.
இதை எல்லாம் தாங்கள் ஏற்காமல் நிராகரித்து விடலாம். ஆனால் கீழ்கண்ட வசனம் நேரடியாக சொல்வதை பாருங்கள்
சகரியா 14:3கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்
இப்பொழுது சொல்லுங்கள் கர்த்தர் போராடுவாரா மாட்டாரா என்று! இன்னும் ஏற்க்க மனதில்லாமல் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறீர்களா?
சகோதரரே! பரீட்சை எழுதுவதை விட எழுதிய பேப்பரை திருத்துவதற்கு அதிக ஞானம் வேண்டும். அதேபோல் ஒரு கட்டுரையை எழுதுவதைவிட அதில் உள்ள குறைகளை சொல்வதற்கு அதிக ஞானம் தேவை. எனக்கு போதிய ஞானம் இல்லை என்று கருதியே நான் யார் சொல்வதையும் முடிந்த அளவு குறைசொல்ல முற்படுவது இல்லை.
நான் எல்லோரோடும் இசைந்து விட்டுகொடுத்துபோகவே விரும்புகிறேன் முயற்ச்சிக்கிறேன் ஆனால்,
//// கூடுமானவரை நம் தேவனின் நாமத்திற்கு மகிமை உண்டாக தேடுவோம் என்கிறேன்..////.
தேவனின் நாமத்துக்கு மகிமையை தேட விரும்பும் தாங்கள் முதலில் வேதம் "அவன்" "இவன்" என்று குறிப்பிடும் மெல்கிசெதேக்கை ஆவியான தேவனாக எழுதி தேவனை தாழ்துவதையும், "மகத்துவத்தை அறிய முடியாத தேவனை" அறிந்துவிட்டதாக கருதி, அவரை மூன்று ஆள்த்துவத்துக்குள் அடக்கி விடாப்பிடியாக அவரை மட்டு படுத்த நினைப்பதையும் விட்டொழியுங்கள் அப்பொழுது தானாகவெ தேவனின் நாமத்துக்கு மகிமை உண்டாயிருக்கும்.
(இதுபோன்ற தேவையற்ற காரியங்களுக்கு விளக்கம் எழுதி எழுதியே எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரமும் பயனற்று போகிறது)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்னுடைய கருத்துகளை மட்டுமே நான் தெரிவித்தேன்..இன்னும் காயாத களிமண் போல தான் என் தகப்பன் கையில் இருக்கிறேன்..அனுதினமும் என்னை அவர் உருவாகுகிறார்..
ஆகவே..தவறுகளை ஒப்பு கொள்ள எனக்கு அதிகநேரம் தேவை படுகிறதில்லை சகோதரரே..
தவறுகளை சுட்டிக்காட்ட நீங்கள் சாட்சிகளை கூறினால் ஏற்பேன்,வெளிப்பாடுகளை கூறினால் நிதானித்து ஏற்பேன்..மனித நாவுகளை பயன்படுத்தி என்னை வீணே குற்றம் பிடிக்க முயன்றால் என்ன செய்ய..
வசனங்களை கொண்டு கடிந்துகொள்ளுங்கள்.அதுவே தலைக்கு எண்ணை போன்றது என்னை போன்றவர்களுக்கு..
///நான் அணுகுண்டை தேவனின் கிரியைகளோடு ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை///
தேவ கிரியையோடு நீங்கள் ஒப்பிடவில்லை..பரிசுத்த ஆவியோடும்,யேசுவோடும் ஒப்பிடீர்கள்.(குற்றம் கண்டுபிடிபதே என் வேலை என கருதிவிடாதீர்கள்.)
////தனது தந்திரத்தால் மிகவும் பெருமிதம் அடைத்திருந்த சாத்தானுக்கு தேவனால் முதல்முதலில் வீசப்பட்ட ஆள்த்துவமாகிய அணுகுண்டு "ஆண்டவராகிய இயேசுவின் மனுஷ பிறப்பு"! கெட்டுபோன உலகினுள் கெடுக்க முடியாதவராய் அவர் வந்தார். இருண்டு போன உலகத்துக்குள் ஒளியாக அவர் வந்தார். பிசாசின் கிரியை அழிப்பதற்கு மனித வெடிகுண்டாக அவர் அவதரித்தார்! அக்குண்டால் சாத்தானின் தலை என்னும் தலைமை நசுங்கி போனது. ////
உங்கள் எழுத்துக்கள் என்னை போன்ற அநேகரால் பார்க்கபடுகிறது சகோதரரே..நிதானித்து எழுதுங்கள்.
//இந்நிலையில் சகோ. அன்புக்கு இயேசுவின் உயிர்தெளுதலில் பங்கில்லை என்று நியாயம் தீர்த்த நீங்கள் இப்பொழுது "அமெரிக்க மோசமான நாடு" என்று தீர்க்கிறீர்கள்.///
மேன்மையான நாமத்தை உடையவரான கிறிஸ்துவை தேவன் என அறிக்கையிட,ஆவியானவரை துக்கபடுதும் படி இயேசுவின் பிறப்பை பற்றி நிதானமிலாமல் பேசினவர் உங்கள் பார்வையில் கவனிக்கபடுகிறபடி,என்னால் கவனிகபடுகிறதில்லை என நான் ஒப்புகொள்கிறேன்..
கர்த்தருடைய நித்ய உடன்படிகையானவரை குறித்து நிதானமாய் பேசாதவர்கள்..உடன்படிக்கை பெட்டியை துணிகரமாய் தாங்க தன் கையை நீட்டிய ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி அடித்தார் என்பதை அறியுங்கள்..
I நாளாகமம் 13:10 அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
கர்த்தரை மகிமைபடுத்தாத காரணத்தால் ஏரோது கர்த்தருடைய தூதனால் அடிக்கப்பட்டதை அறிவீர்களாக..
அப்போஸ்தலர் 12:23 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்..
BRO.SUNDHAR wrote:// நியாயம் தீர்த்த நீங்கள் இப்பொழுது "அமெரிக்க மோசமான நாடு" என்று தீர்க்கிறீர்கள்.///
ஒரு பொல்லாத நாடு அமெரிக்கா என்பதை தாங்கள் மறுகிறீர்களா என்ன?
என் ஜெபங்களில் அமெரிக்கா போன்ற ஒரு நல்ல நாட்டிற்காக ஸ்தோத்திரம் கூறுகிற நிலையில் நான் நிச்சயம் இல்லை.. கடைசி நாட்களில் வாழ்கிறோம் சகோதரா.. என்னை குற்றம் பிடிப்பதாக கருதி தாங்கள் நான் நியாயம்தீர்பதாக கூறாதிருங்கள்...கர்த்தரின் வார்த்தைகள் ஏற்கனவே நம்மை நியாயம் தீர்க்க பேசபட்டாயிற்று..
BRO.SUNDHAR wrote://///கர்த்தர் மனுஷனோடேதான் போராடுவதில்லை என்று சொல்லி யிருக்காரேயன்றி அவர் யாருடனும் போராடுவது இல்லை என்று எங்கும் சொல்லவில்லை. அனேக தவறான கருத்துக்களை கொண்டுள்ளீர்கள் ஆனால் சொல்லும் கருத்துகளை ஏற்க்க மனதில்லாமல் இருக்கிறீர்கள். தங்களுக்கு எதை எப்படி புரியவைப்பது என்பது எனக்கு புரியவில்லை.
இதை எல்லாம் தாங்கள் ஏற்காமல் நிராகரித்து விடலாம். ஆனால் கீழ்கண்ட வசனம் நேரடியாக சொல்வதை பாருங்கள்
சகரியா 14:3 கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்
இப்பொழுது சொல்லுங்கள் கர்த்தர் போராடுவாரா மாட்டாரா என்று! இன்னும் ஏற்க்க மனதில்லாமல் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறீர்களா?/////
தாங்களே மனுஷருடன் கர்த்தர் போராடுகிறவர் என்றும் சொல்கிறீர்கள்..
கர்த்தர் ஜாதிகளுடன் (அவர்களும் மனிதர்கள் தான்) யுத்தத்தில் போராடுவது போல் போராடுவார் என்கிறீர்கள்..இப்போது தாங்கள் என்ன பதில் கூறுவீர்கள்..நான் காட்டிய வசனமும்,நீங்கள் காட்டிய வசனமும் முரண்பாடாக தோற்றமளித்தாலும்., கர்த்தர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்..கவனிக்க!!!
இவசனங்களில் ஆள்தத்துவங்களை குறித்த சத்தியங்கள் மறைந்துள்ளன...
I தீமோத்தேயு 6:15 அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,
வெளி 17:14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
BRO.SUNDHER WROTE//////தேவனின் நாமத்துக்கு மகிமையை தேட விரும்பும் தாங்கள் முதலில் வேதம் "அவன்" "இவன்" என்று குறிப்பிடும் மெல்கிசெதேக்கை ஆவியான தேவனாக எழுதி தேவனை தாழ்துவதையும், "மகத்துவத்தை அறிய முடியாத தேவனை" அறிந்துவிட்டதாக கருதி, அவரை மூன்று ஆள்த்துவத்துக்குள் அடக்கி விடாப்பிடியாக அவரை மட்டு படுத்த நினைப்பதையும் விட்டொழியுங்கள் அப்பொழுது தானாகவெ தேவனின் நாமத்துக்கு மகிமை உண்டாயிருக்கும்////
தேவனை அணுகுண்டு என்றெல்லாம் வருணிக்கும் நீங்கள் அவன் இவன் என வேதத்தில் மேல்கிசேதேக்கு பற்றி சுட்டி காட்டுவீர்கள் என நான் முன்பே எதிர்பார்த்தேன்..
மொழி பெயர்ப்பின் அடிபடையில் நான் விளக்கம் கொடுக்கவில்லை.. உண்மையில் இவைகள் மேல்கிசேதேக்கு பற்றி எனக்கு வெளிபடுத்தபட்டவைகளே..(கிறிஸ்துவை அவன் இவன் என வேதத்தில் எழுதயுள்ள பகுதிகளை சுட்டி காட்டி இருப்பேன்,(HE என்றால் அவன்,அவர் இரண்டுக்கும் பொதுவானது என கூடுமானவரை விளக்கி இருப்பேன்)
தங்களை நிச்சயம் விசுவாசியுங்கள் என எப்பொது கூறினேன்.. வேத அடிபடியில் விளக்கினேன்..அந்த திரியில் எதிர்க்காமல்..இங்கு கருத்து தெரிவித்துள்ளீர்கள்..
தேவன் ஏவினால் விசுவாசியுங்கள்..இல்லையேல் உங்களை விசுவாசிக்க செய்வது என் காரியமல்ல ..
வேதம் காட்டும் ஆள் தத்துவங்கள் மூன்று..நீங்கள் வேதத்திற்கு வெளியே தங்களுக்கு வெளிபடுதபட்டதை குறித்து பேசலாம்.. ஆனால் உய்த்து அறியாமல் என்னால் விசுவாசிக்க இயலாது.. அது வழுவி போகிறதற்கு ஏதுவாகும்..மீண்டும் கூறுகிறேன் வேதம் காட்டும் ஆள் தத்துவங்கள் மூன்று.....
தங்களிடம் நற்பெயர் எடுக்க விரும்பி நான் தளத்திற்கு வரவில்லை...
இல்லையெனில் கர்த்தர் இவ்வுலக வாழ்க்கையில் குப்பையாய் காணப்பட்ட என்னை இவ்வுலகத்தில் தம் நாம மகிமைக்கு உயர்த்தியும்,தேவையான பொழுதுகளில் இடைபட்டும் இருக்கமாட்டார்..
பரம அழைப்பின் பந்தய பொருள் எப்போதும் கண்முன் இருபதால் நான் மனிதர்களை திருப்த்திபடுத்த முனைகிறதில்லை...
என்னை பற்றி கர்த்தர் தங்களுக்கு நன்மையாய் உணர்த்தினார் என்கிறீர்கள்.. தங்கள் கருத்துகளை வசனத்தை கொண்டு மறுத்தால் எதிர்பார்த்தபடி இல்லை என்கிறீர்கள்...
கர்த்தர் என் ஆத்துமாவை அறிந்து கொள்ளட்டும்..நான் என் தேவனனின் நாமத்தை மாறி மாறி உணர்த்தினார் என வீணில் வழங்குவதில்லை..
தவறாய் பொருள் கொள்கிறேன் என்கிறீர்கள்..ஆனால் என்னை குறித்து எதை சொல்லலாம் என யோசிக்கும் நிலையிலேயே இருகிறீர்கள் என நானும் தங்களை அறிகிறேன்..
(இதுபோன்ற தேவையற்ற காரியங்களுக்கு விளக்கம் எழுதி எழுதியே எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரமும் பயனற்று போகிறது)
தேவையற்ற காரியங்களுக்காக நீங்கள் எழுதுகிரதாக எனக்கு தோன்றவில்லை சகோதரரே.. அவ்வாறு தாங்கள் கருதினால்.. நான் எழுதுவதையே தேவையற்றது என கூறுகிறீர்கள்... நானும் தங்களின் பதிவுகளில் இடைபடுவதை நிறுத்துகிறேன் இத்தோடு..
நீதிமொழிகள் 15:3 கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது
இயேசு கிருஸ்து மனிதனாக இந்த பூமிக்கு வந்த தேவ குமாரனாவார். அவருக்கென்று சுய சித்தம் உண்டு. பிதாவாகிய தேவன் அவரை செய்ய சொல்லும் செயல்களை, கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.
தேவன் மேலும், மனிதர் மேலும் கொண்ட அன்பினாலும், அவர்கள் இருவரையும் இணைக்கவும் அவர் தானே முன்வந்து, தன்னைதான் தாழ்த்தி மனிதர்களின் சுமையை ஏற்று கொண்டு மனிதர்களுக்கு உதவி செய்கிறார்.
தேவன் மனிதர்களை கூட கட்டாயப்படுத்துவதில்லை. சுய சித்தம் செய்ய வேண்டும் எனவே விரும்புகிறார். ஒரு குழந்தை கூட, பெரியவர்கள் கட்டாயப்படுத்தி செய்ய சொல்லும் செயல்களை செய்ய விரும்புவதில்லை. இவ்வாறு ஆள் தத்துவமானவர் பிதாவாகிய தேவன் மீது கொண்ட அன்பினால் தன்னைதான் தாழ்த்தி பூமிக்கு வந்த நிகழ்வை, மனிதர்கள் அணுகுண்டு போடுவதற்க்கு ஒப்பாக சொல்வது என்பது சரியல்ல.
அணுகுண்டு என்பது மனம், உணர்வு எதுவும் இல்லாத ஒரு பொருளாகும் எந்த இடத்தில் போடப்படுகிறதோ அங்கு அது வெடிக்கும். ஒரு பொருளை போல தேவன் இயேசு கிருஸ்துவையும், பரிசுத்த ஆவியானவரையும் இந்த பூமிக்கு அனுப்பவில்லை.
இயேசு கிருஸ்துவின் சிலுவை வெற்றியும், பரிசுத்த ஆவியானவரின் பொழிவும், சாத்தானின் கிரியைகளின் மேல் போடப்பட்ட அணுகுண்டு என்பது சந்தேகமில்லை.
ஆனால் உங்கள் கருத்து இப்படிபட்ட அர்த்தத்தில் சொல்லப்படாமல், வேறு அர்த்தத்தில் உள்ளது. ஒரு மனிதன் அணுகுண்டை போடுவதை போல தேவன் இயேசு கிருஸ்துவையும், பரிசுத்த ஆவியானவரையும் பூமிக்கு அனுப்பினார் என்று சொல்வது அவர்கள் இருவரின் ஆள் தத்துவத்தையும் மறுதலிப்பதாக உள்ளது.
அது மட்டுமல்லாது இவர்கள் அடைந்த வெற்றி சாதாரணமானது போலவும், (உங்கள் கருத்துப்படி) இனி மேல் வரப் போகிற ஜெயங் கொண்ட மனிதனின் வெற்றி இவர்கள் அடைந்த வெற்றியை விட சிறப்பானதாய் இருக்கும் எனவும் கூறுவது போல் உள்ளது.
//தேவன் தம் விஸ்வரூபத்தால் விரைவிலேயே நம் காலின்கீழ் நசுக்கிபோடுவாராக//
(மூன்றாவது மட்டும் அணுகுண்டு இல்லாமல் ஸ்பெஷலா?)
ஆகார் ஆதரவற்றவளாக விடப்பட்டு கர்த்தரை நோக்கி கதறின போது, அவளை சந்திக்க கர்த்தர் வரவில்லை. ஆனால் கர்த்தருடைய தூதனானவர் தானாகவே முன் வந்து அவளை சந்தித்து அவளுக்கு உதவுகிறார். இவர் கர்த்தர் கட்டளையிட்டு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஆபிரகாம் ஈசாக்கை பலியிட கத்தியை உயர்த்திய போது, தூதனானவர் தானகவே முன் வந்து தடுத்து நிறுத்துகிறார். முள்ளில் மாட்டிக் கொண்ட ஒரு ஆட்டை ஈசாக்குக்கு, பதிலாக பலியாக கொடுக்கிறார்.
கர்ம வினைகளின் பலனால், பரிசுத்த குறைவினால் தேவனிடமிருந்து நன்மைகளை பெற்று கொள்ள, அவரை தரிசிக்க, உணர மனிதனால் முடிவதில்லை. மனிதனுக்கும், தேவனுக்கும் நடுவே பிளவு உண்டாகிறது. இவ்வாறு சிக்கலில் மாட்டி கொண்டு தேவனிடம் இருந்து உதவி பெற முடியாமல் தவிக்கும் போது, அந்த சிக்கலின் மத்தியில், முள்ளின் மத்தியில் தேவ குமாரனாகிய இயேசு கிருஸ்து தோன்றுகிறார்.
இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து தவிக்கும் போது அவர்களுக்கு விடுதலை தர, முட் செடியின் மத்தியில் இருந்து மோசேவுக்கு தரிசனமாகிறார்.
முள் என்பது துன்பத்தை, சிக்கலை, பிரச்சனையை குறிக்கிறது. மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்ம பலனை தன் மேல் சுமத்தி கொள்ளும் அவர், அவனுக்கு அதன் தீயவைகளில் இருந்து விடுதலை அளிக்கிறார். தேவனுக்கும், மனிதனுக்கும் இடையே உறவை புதுப்பிக்கிறார். முள்ளில் உதைப்பது கடினமாம் என்று பவுலுக்கு சொல்லி முள்ளின் மத்தியில் வந்தவர் நானே என்பதை அவனுக்கு சொல்கிறார். உன்னுடைய சிக்கலை நீயே தீர்க்க நினைப்பது முள்ளில் உதைப்பது போன்றதாகும். அது மேலும் துன்பத்தையே கொடுக்கும். ஆகவே உனக்கு பதிலாய் துன்பத்தை ஏற்று கொண்ட எனக்கு உன் வாழ்வை அர்ப்பணிப்பாயாக என்பதே பவுலுக்கு அவர் சொன்ன செய்தியாகும்.
இவ்வாறு இயேசு கிருஸ்து தன் சுய சித்தத்தினால் பிதாவிடம் அன்பு கொண்டு அவர் எதிர்பார்க்கிறதையும், அதற்கு மேலானதையும் செய்கிறார். "எள் என்றால் எண்ணெயோடு வந்து நிற்பது" என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல அவர் பிதாவுக்கு கீழ்பட்டு அவர் சித்தத்தை செய்கிறார்.
பிதாவின் சித்தத்தையே எப்போதும் செய்து வந்த அவர், தன் சுய சித்தம் செய்த சம்பவமும் வேதத்தில் உண்டு. இதை தவிர வேறு ச்ம்பவங்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அது என்னவெனில் தன் பிதாவின் வீட்டை கள்ளர் குகையாக்கினவர்களை. சவுக்கை எடுத்து அடித்து விரட்டிய சம்பவமே அது. பிதாவின் மேல் அவர் கொண்ட பக்தி வைராக்கியம் அவரை பட்சித்ததனால் அவர் அந்த கள்ளர்களை அடித்து விரட்டினார்.
SANDOSH wrote:அணுகுண்டு என்பது மனம், உணர்வு எதுவும் இல்லாத ஒரு பொருளாகும் எந்த இடத்தில் போடப்படுகிறதோ அங்கு அது வெடிக்கும். ஒரு பொருளை போல தேவன் இயேசு கிருஸ்துவையும், பரிசுத்த ஆவியானவரையும் இந்த பூமிக்கு அனுப்பவில்லை.
சகோதரர்களே!
ஒரு அணுகுண்டானது அது போடப்படும் இடத்தில் உள்ள கிரியைகளை எல்லாம் அழித்துவிடுகிறது அதுபோல்
"தேவனின் ஆள்த்துவங்கள் சாத்தானின் கிரியைகளை அழிப்பதற்காக தேவனால் அனுப்பபட்டவர்கள்" என்ற கருத்தில் தேவனின் ஆள்த்துவங்களை சாத்தானின் கிரியைகளை அழிக்கும் அணுகுண்டுக்கு ஒப்புமையாக எழுதினேன். மற்றபடி இந்த இரண்டுக்கும் இடையில் வேறுபல வேறுபாடுகள் நிச்சயம் இருக்கலாம் என்பதை நான் மறுப்பதற்கில்லை.
இந்நிலையில் இந்த ஒப்புமை தவறு என்று ஒருவருக்குமேல் இன்னொருவர் சொல்லும் பட்சத்தில், நான் தங்கள் கருத்துக்களை ஏற்கிறேன். தங்கள் சுட்டுதலுக்கு மிக்க நன்றி!
மீண்டும் இதுபோன்ற ஒப்புமைகளை எழுதாதபடிக்கு தேவன் என்னை பழக்குவிப்பராக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)