இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்!
Permalink  
 


ஆண்டவராகிய இயேசு ஞானஸ்தானம் பெற்று கரை ஏறும் போது ஆவியானவர் புறா ரூபம் கொண்டு அவர் மேல் வந்து இறங்கியதாக  வேதம் சொல்கிறது 

லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
 
இங்கு நாம் தேவனின் மூன்று ஆள்த்துவங்களை காண முடிகிறது  
 
1. குமாரன் பூமியில் இருக்கிறார்  
2 ஆவியானவர் புறா வடிவில் குமாரன் மேல் வந்து தங்குகிறார் .   
3. பிதா வானத்தில் இருந்து "நீர் என்னுடய நேச குமாரன்" என்று சாட்சி கொடுக்கிறார்.
 
இந்நிலையில் ஆண்டவராகிய இயேசு போதிக்கும்போது "நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று சொல்ல காரணம் என்ன?
 
யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
 
அவர் மேல் வந்து தங்கியவர் பரிசுத்த ஆவியானவர் என்று நம்மால் அறிய முடிகிறது! ஆனால் இயேசு தன்னோடு இருப்பது பிதா என்று சொல்வதோடு நாங்கள் இருவர்தான் என்றும் சொல்கிறார்.
 
யோவான் 8:16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். 17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
 
இயேசு இவ்வாறு "நாங்கள் இருவர்தான்" என்று சொல்ல காரணம் என்ன?  எனக்கு சரியாக புரியாத இந்த கேள்விக்கு விளக்கம் தெரிந்த சகோதரர்கள் பதில் தரவும்! 
 


-- Edited by SUNDAR on Tuesday 10th of January 2012 03:31:32 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
RE: நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்!
Permalink  
 


//இங்கு நாம் தேவனின் மூன்று ஆள்த்துவங்களை காண முடிகிறது

1. குமாரன் பூமியில் இருக்கிறார்
2 ஆவியானவர் புறா வடிவில் குமாரன் மேல் வந்து தங்குகிறார் .
3. பிதா வானத்தில் இருந்து "நீர் என்னுடய நேச குமாரன்" என்று சாட்சி கொடுக்கிறார்.//

இன்னும் நிறைய ஆள்தத்துவம் உண்டு என்று சொல்லிவிட்டு இப்போது பரிசுத்த ஆவியானவர் எங்கே என்று கேட்டால் என்ன சொல்லுவது? முதலில் எத்தனை ஆள்தத்துவம் என்பதை முடிவு செய்யலாம். மேலும் 'தேவனுடன் நேரடி' தொடர்பில் உள்ள தங்களுக்கு தெரியாதது வேறு யாருக்கும் தெரியப்போவது இல்லை. வேண்டுமானால் கேள்வியும் நானே , பதிலும் நானே என்பது போல நேசன் அவர்கள் பதில் கொடுக்கலாம்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்!
Permalink  
 


John wrote:
இன்னும் நிறைய ஆள்தத்துவம் உண்டு என்று சொல்லிவிட்டு இப்போது பரிசுத்த ஆவியானவர் எங்கே என்று கேட்டால் என்ன சொல்லுவது? 

தெரியவில்லை அல்லவா? இந்த கேள்விக்கு வெளிநாட்டுகாரர்கள்  எவரும்  பதில் எழுதி வைக்கவில்லைபோல்  இருக்கிறது எனவேதான் தெரியவில்லை என்று கருதுகிறேன். தெரிந்தால் பதில் தாருங்கள்  தெரியாத இடத்தில் ஏன் வந்து ஆஜராகி தேவையற்ற பதிவை தருகிறீர்கள்? 

John wrote:  
///முதலில் எத்தனை ஆள்தத்துவம் என்பதை முடிவு செய்யலாம்///
 
தேவனுடைய ஆள்தத்துவம் எத்தனை என்பதை முடிவு செய்யும்  அளவுக்கு  அதிகாரம் எனக்கு இல்லை சகோதரரே! முடிவெடுக்க முடியாத காரணத்தால்தான் இந்த கேள்வியை  கேட்டுள்ளேன்!என்னுடய கருத்துப்படி தேவன் ஒருவரே! அவர் நமக்கு தெரிந்து மூன்று ஆளத்துவமாக செயல்பட்டிருக்கிறார். இன்னும் அவசியம் வந்தால் அவர் எத்தனை  ஆள்த்துவமாகவும்  மாற முடியும் என்பதுதான். இந்த கருத்தை மறுக்க விரும்பினால், எந்த ஒப்புமை கருத்துகள் இல்லாமல்
"நான் இத்தனை ஆள்த்துவம்தான் இதற்குமேல் என்னால் செயல்பட முடியாது" என்று தேவன் வேதத்தில்  சொல்லியிருந்தால் சொல்லுங்கள் அது குறித்து ஆராயலாம். வேதத்தில் தெளிவாக சொல்லப் படாத உங்கள் நம்பிக்கையை கொண்டுவந்து திரும்ப திரும்ப என்மேல் ஏன் திணிக்க முயர்ச்சிக்கிறீர்கள்?  
 
John wrote:
///மேலும் 'தேவனுடன் நேரடி' தொடர்பில் உள்ள தங்களுக்கு தெரியாதது வேறு யாருக்கும் தெரியப்போவது இல்லை.////
     
ஆம்! நான் தேவனுடன் நேரடி தொடர்பில் உள்ளவன்தான்!  ஆனால் எனக்கே தெரியவில்லை என்று சொல்கிறேன் அல்லவா? தங்களுக்கு தெரிந்தால் பதிவிடுங்கள் இல்லை எனில் ஒரு ஓரத்தில் அமர்ந்து  வேடிக்கை பார்க்க வேண்டியதுதானே. மேலும் ஆவியானவர் மூலம் தேவனின் நேரடி தொடர்பில் இல்லாதவன் ஒரு கிறிஸ்த்தவன் என்று சொல்வதற்கு தகுதியற்றவன் என்றும்கூட  சொல்வேன்
 
John wrote:
////வேண்டுமானால் கேள்வியும் நானே , பதிலும் நானே என்பது போல நேசன் அவர்கள் பதில் கொடுக்கலாம்///
 
இப்பொழுது "இறைநேசனும் நானும் ஒண்ணுதானா" என்ற உண்மை  தங்களுக்கு தெரியவேண்டும் அவ்வளவுதானே? அலுவலகம் போகும் போது அவரே அதற்க்கு  விரைவில்  பதில் தருவார். கொஞ்சம் அவரசப்படாமல் காத்திருங்கள்


-- Edited by SUNDAR on Thursday 12th of January 2012 06:34:07 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SUNDAR wrote:
ஆண்டவராகிய இயேசு ஞானஸ்தானம் பெற்று கரை ஏறும் போது ஆவியானவர் புறா ரூபம் கொண்டு அவர் மேல் வந்து இறங்கியதாக  வேதம் சொல்கிறது 
லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
இங்கு நாம் தேவனின் மூன்று ஆள்த்துவங்களை காண முடிகிறது  
 1. குமாரன் பூமியில் இருக்கிறார்  2 ஆவியானவர் புறா வடிவில் குமாரன் மேல் வந்து தங்குகிறார் .  3. பிதா வானத்தில் இருந்து "நீர் என்னுடய நேச குமாரன்" என்று சாட்சி கொடுக்கிறார்.
 
இந்நிலையில் ஆண்டவராகிய இயேசு போதிக்கும்போது "நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்" என்று சொல்ல காரணம் என்ன?
 யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
 அவர் மேல் வந்து தங்கியவர் பரிசுத்த ஆவியானவர் என்று நம்மால் அறிய முடிகிறது! ஆனால் இயேசு தன்னோடு இருப்பது பிதா என்று சொல்வதோடு நாங்கள் இருவர்தான் என்றும் சொல்கிறார்.
 யோவான் 8:16. நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை,  நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். 17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
 இயேசு இவ்வாறு "நாங்கள் இருவர்தான்" என்று சொல்ல காரணம் என்ன?  எனக்கு சரியாக புரியாத இந்த கேள்விக்கு விளக்கம் தெரிந்த சகோதரர்கள் பதில் தரவும்! 
******************************************************************************** 

இந்த கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் யாராவது  பதில் எழுதுங்களேன்.   நானும் அறிந்துகொள்ள  ஆவலாய் இருக்கிறேன்.



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Bro.Sundar//ஆண்டவராகிய இயேசு ஞானஸ்தானம் பெற்று கரை ஏறும் போது ஆவியானவர் புறா ரூபம் கொண்டு அவர் மேல் வந்து இறங்கியதாக வேதம் சொல்கிறது
லூக்கா 3:22பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன்,
யோவான் 10:30நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
அவர் மேல் வந்து தங்கியவர் பரிசுத்த ஆவியானவர் என்று நம்மால் அறிய முடிகிறது! ஆனால் இயேசு தன்னோடு இருப்பது பிதா என்று சொல்வதோடு நாங்கள் 'இருவர்தான்என்றும் சொல்கிறார்.///
//இயேசு இவ்வாறு "நாங்கள் இருவர்தான்" என்று சொல்ல காரணம் என்ன? எனக்கு சரியாக புரியாத இந்த கேள்விக்கு விளக்கம் தெரிந்த சகோதரர்கள் பதில் தரவும்! ///
சகோதரர்களே!!
'இருவர் தான் என்பது நமது தவறான புரிதல் ' இருவர் தான் என கர்த்தராகிய இயேசு கூறவில்லை.இருவர் என தான் கூறினார்.கவனிக்க..
நியாய பிரமாணத்தின் படியான குறைந்த பட்ச சாட்சிகளின் எண்ணிக்கை அடிபடையில் தம்மை தேவனுடைய குமாரன் என கூறக்கூடிய காரியத்தை தான் பின் வரும் வசனம் காட்டுகிறது. உடனே நாம் இருவர் என்பதை 'இருவர் தான்' என தவறாய் புரிந்து கொள்ள கூடாது..
யோவான் 8:16 நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை,நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
யோவான் 8:17 இரண்டுபேருடைய சாட்சிஉண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. 
பேந்தகோஸ்தே நாள் அன்று தேற்றரவாளன் அருளபட்டார் என நாம் அனைவரும் அறிந்ததே!!! சத்தியஆவியான தேற்றரவாளனின் செயல் பாடு உயர்த்த இயேசுவை குறித்து சாட்சி கொடுப்பது தான்..பாருங்கள்!!
யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.
ஆக பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி என்பவர்களின் செயல்பாடுகளில் ஒன்று தான் 'இயேசுவை தேவ குமாரன்' என சாட்சி இடுகின்ற காரியம் என்பதை சகோதரர்கள் அறிவார்களாக!!
மேற்கான்பித்த இவ்வசனங்களை துய்த்து அறிந்த பின் தான் அடைப்புக்குறிக்கு உள்ளான பின் வரும் வசனங்களையும் மொழி பெயர்பாளர்களால் சரியாய் தர இயன்றது என்பது என் விசுவாசம்..

I யோவான் 5:7 பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
GLORY TO GOD!!!!


-- Edited by JOHN12 on Friday 23rd of March 2012 07:23:21 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

////யோவான் 8:16. நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.  இரண்டுபேருடைய சாட்சி உண்மை யென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
 
JOHN12 wrote
'இருவர் தான் என்பது நமது தவறான புரிதல் ' இருவர் தான் என கர்த்தராகிய இயேசு கூறவில்லை.இருவர் என தான் கூறினார்.கவனிக்க////
 
சகோதரரே  "நானும் என்னை அனுப்பிய பிதாவும்" என்று சொன்ன இயேசு தொடர்ந்து "இரண்டுபேருடைய சாட்சி" என்று சொல்கிறார்
இதில் இதற்குமேல் என்ன தெளிவான கூறுதல்  தங்களுக்கு தேவை என்பது புரியவில்லை. "மூன்று ஆள்தத்துவம்" என்று எங்குமே சொல்லப்படாததை  "மூன்று ஆள்த்துவம்தான்" என்று உறுதியாக விசுவாசிக்கும் தாங்கள் இவ்வளவு தெளிவாக சொல்லபட்ட வார்த்தைகளை தவறான புரிதல் என்று  சொல்லுவது ஆச்சர்யம்தான். ஒருவேளை யோவான் வேண்டுமானால் தவறாக புரிந்திருக்கலாமோ? 
ஏனெனில் அவர் தொடர்ந்து கீழ்கண்ட வசனத்தையும் சொல்லியிருக்கிறார். 
 
யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்
 
 
நித்திய ஜீவனை அடைய இரண்டுபேர்களை அறியவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.  
 
JOHN12 wrote
//பேந்தகோஸ்தே நாள் அன்று தேற்றரவாளன் அருளபட்டார் என நாம் அனைவரும் அறிந்ததே!!!///
 
உண்மைதான் சகோதரரே! இயேசுவும் பரிசுத்த ஆவியானவரை  "வேறொரு தேற்றரவாளரை" என்றுதான்  சொல்லியிருக்கிறார். 
 
யோவான் 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
 
அந்த கூற்றின் அடிப்படையில் இயேசு சொல்லும் அந்த "வேறொரு தேற்றரவாளர்" அப்பொழுது அங்கு இல்லை. இவர் போனபிறகுதான் அவர் வருவார்  என்று நிதானிக்கலாம்.
 
யோவான் 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்
 
இந்நிலையில் இயேசு ஞானஸ்தானம் பெரும்பது அவர் மீது புறா  ரூபம் கொண்டு வந்து இறங்கிய பரிசுத்த ஆவியானவர் யார்?
  
லூக்கா 3:22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார்.  
 
அத்தோடு மேலும் பலரோடு பரிசுத்த ஆவி இருந்தார் என்று வசனம் சொல்கிறது 
 
லூக்கா 2:25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
 
இந்நிலையில் இன்னொரு இடத்தில் வசனம்  "பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை" என்று சொல்ல காரணம் என்ன
 
யோவான் 7:39 
இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால்பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.
 
தேவத்துவம் சரியான உண்மை என்னவென்பதை அறியவிரும்பாமல்,  தாங்கள் நம்பும் "தேவனுக்கு மூற்று ஆள்த்துவம்தான்" என்ற  கருத்தை நிலைநாட்ட ஏதாவது ஒரு விளக்கத்தை கொடுத்து சமாளிக்கவே விரும்புகிறீர்கள் என்பதை மாத்திரம் என்னால் புரியமுடிகிறது.


-- Edited by SUNDAR on Saturday 24th of March 2012 03:54:21 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard