தளத்தில் பதிவிடும் சகோதர /சகோதரிகள் முடிந்த அளவு அந்தந்த திரியின் தலைப்பு சம்பந்தபட்ட கருத்தை மாத்திரம் சம்பந்தபட்ட திரியில் பதிவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
இனி குழப்பத்தை உருவாக்கும் நோக்கில் பதிவிடப்படும் தேவையற்ற பதிவுகள் உடனுக்குடன் நீக்கப்படும். அதன்மூலம் தளத்தை பார்வையிடுவோர் ஒரு சரியான புரிதலுக்குள் வர முடியும்.
தளம் தொடங்கியதில் இருந்தே தளத்தின் செயல்பாடுகளை சீர்கெடுக்கும் முயற்ச்சியில் இடைவிடாது போராடிக்கொண்டு இருக்கும் சாத்தான் வெட்கபட்டுபோகும்படி வேண்டிக் கொள்ளவும். ஆண்டவர் நம்மோடு இருக்கையில் நாம்எதற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. மேலும் இது இறைவனின் பணி அவரது திருக்கரம் இங்கு பதிவிடும் ஒவ்வொருவரோடும் இருந்து நடத்த பிரார்த்திப்போம்.
எனக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தால் அதிகம் எழுத முடிவதில்லை. உடனுக்குடன் பதில் தர முடிவதில்லை, எனவே இந்த மாடரேட்டர் பொறுப்பை தகுதியுள்ள இன்னொரு சகோதரரிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகிறேன். இறை சித்தம் நிறைவேறட்டும்.
தளத்தில்பதிவிடும்சகோதரர்கள்தொடர்ந்துபதிவுகளைதாருங்கள்.யார்தோற்கிறார்யார் ஜெயிக்கிறார்என்பதுஇங்கு பிரச்சனை அல்ல. நாம் இங்கு இறைவனைபற்றிதான்காரியங்களை எழுதுகிறோம்.எவரும்கெட்டு போவதர்க்கு இங்குஎந்த வழியும்சொல்லவில்லை. அப்படிபட்ட எந்த ஒரு கருத்தையும் நாம்இங்கு அனுமதிப்பதும் இல்லை. எனவேஎந்தகாரியமானாலும் நிதானமாக சரியாகபதிவிட்டுவிவாதிக்கலாம்.
இறைவனை பற்றி எழுதும் அல்லது பேசும் ஒவ்வொரு காரியங்களும் அவரது ஞாபகபுஸ்தகத்தில் எழுதி வைக்கப்படும் என்பதுஉண்மை.டிவி/சினிமா/பாட்டு போன்றஉலககுப்பைகளில் புரளுவதை விட இறைவனை பற்றி எதை தியானித்தலும் அது நன்மைக்கே எனவேதொடர்ந்து தியானிப்போம்கருத்துக்களை எழுதுவோம்.
தளத்தின் செயல்பாடுகளை முடக்க நினைக்கும் சத்துருவெட்கபட்டுபோகட்டும்.
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
-- Edited by Nesan on Thursday 19th of January 2012 10:16:15 PM