//கிறிஸ்துவை ஆராதிக்க சொல்லாத எந்த பிதாவும் லூசிபர் தான் என்ற என்னுடைய கருத்தில் மாற்றமில்லை.//
கிறிஸ்துவை ஆராதிக்கும்படி பிதாவாகிய தேவனும் சொல்லவில்லை, குமாரனாகிய இயேசுவும் சொல்லவில்லை, வேதாகமத்தின் எந்த வசனமும் சொல்லவில்லை. எனவே Mr.John-ன் கூற்றுப்படி, பிதாவாகிய தேவனும் லூசிபர் என அர்த்தமாகிறது. இக்கருத்து பிதாவாகிய தேவனை தூஷிப்பதாக இருப்பதோடு, அவரை மெய்த்தேவனாக ஏற்றுக்கொண்ட அனைவரது மனதையும் புண்படுத்துவதாகவும் உள்ளது.
எனவே, Mr.John தனது கருத்தை வசன ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும், அல்லது தன் கருத்தை வாபஸ் பெறவேண்டும் என அவரை அறிவுறுத்துமாறு நிர்வாகத்தினரை வேண்டுகிறேன்.
-- Edited by Nesan on Monday 23rd of January 2012 09:34:29 PM
மேற்கூறியவாறு சகோ.அன்பு அவர்கள் எழுத அவரின் முரண்பட்ட போக்கே காரணம்..
இவர் சொன்ன திரியில் சகோதரர் ஒருவரை விவாதிக்க வேண்டாம் எனவும்,மண்டையில் உரைகாதா எனவும் அவமரியாதையாய் பேசி உள்ளார்..
மற்றுமல்லாது இயேசுவை எந்த ஒரு திரியிலும் தேவன் என சகோ.அன்பு அவர்கள் அறிக்கை செய்ய வில்லை.. கேட்டால் கிறிஸ்து என ஒப்புகொள்கிறேன் என்கிறார்..
நான் எழுதிய மற்றும் மற்ற சகோதரர்கள் எழுதிய திரிகளுள் பரிசுத்த ஆவியானவர் தேவன் என்பதற்கான வசன ஆதாரமும்,கிறிஸ்து தேவன் என்பதற்கான வசன ஆதாரத்தையும் தந்துள்ளோம்..அதெல்லாம் சகோ.அன்பு கருத்தில் கொள்ளவில்லை ..
எசுவானவர் தேவன் என நான் அறிக்கையிடுகிறவன்.. தேவன் ஆராதனைகுரியவன் என அறிவேன்..
பிதா தேவ குமாரனில் மகிமை அடைகிறார் என்பதை வேதத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்... கிறிஸ்துவானவர் கர்த்தர் மாத்திரமே..பரிசுத்த ஆவியானவர் வல்லமை மாத்திரமே என நினைக்கிறவர்கள் வேதத்தில் என்பதை வேதத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்...
முதலில் சகோ அன்புவிடம் நிர்வாகி அவர்கள் ஒரு கேள்வியை கேளுங்கள்..
இயேசுவை அவர் தேவன் என்கிறாரா? என்று..கர்த்தராகிய தேவன் யார் என்று..முரண்பாடாக பதில் அளிக்கும் பட்சத்தில் அவரது மேற்கூறிய கேள்வியை புறகணிக்க நானும் ஒரு உறுப்பினனாக அறிவுறுத்துகிறேன்..
With thanks,
Joseph
-- Edited by JOHN12 on Saturday 21st of January 2012 10:53:45 AM
உலா வருபவர்,மற்றொருவர் என அதிகபடியான வார்த்தைகள் தேவை இல்லை .
நீங்கள் எழுதிய அணைத்து திரிகளையும் ஆதாரமாக முன் வைக்கிறேன்..
டிசம்பர் முதல் தேதியில் இருந்து பதிவுகளை படிக்கிறேன்,பதிகிறேன்..இயேசுவை தேவன் என நீங்கள் அறிக்கை செய்த எந்த பதிவும் இல்லை....முடிந்தால் நீங்கள் காட்டுங்கள்..
ஒரு உருபினனாக,பார்வையாளனாக எனது கருத்தை முன்வைத்தேன்..
சகோ.நேசன் சொல்லிய கருத்தை ஏற்று கொண்டேன்..இனி உங்களுடன் விவாதிக்க எனக்கும் ஒன்றும் இல்லை..
உங்களுடன் எனக்கு எந்த சொர்போரும் தேவை இல்லை என கருதுகிறேன்..
JOHN12 wrote:இயேசுவை அவர் தேவன் என்கிறாரா? என்று..கர்த்தராகிய தேவன் யார் என்று..முரண்பாடாக பதில் அளிக்கும் பட்சத்தில் அவரது மேற்கூறிய கேள்வியை புறகணிக்க நானும் ஒரு உறுப்பினனாக அறிவுறுத்துகிறேன்..
With thanks,
Joseph
சகோதரர் ஜான்12 அவர்களே இறைவனை பற்றிய எத்தனையோ கருத்துக்கள் இந்த உலகத்தில் உலவுகின்றன அவரவர்கள் அவரவர் சொல்லும் கருத்துதான் உண்மை என்று நம்பிகொண்டுதான் அதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் இந்நிலையில் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் வழியில் வாழ விரும்பும் நாம் சற்று பரந்த விட்டுகொடுக்கும் மனதோடு இருக்கவேண்டும் என்பது எனது கருத்து
ஒருவர் இறைவனைப்பற்றி சொல்லும் கருத்து இன்னொருவருடைய பிடிக்காவிட்டால் "ஓரிரு முறை புத்தி சொன்ன பிறகு விலகிவிடுவதுதான் நல்லது" என்று விவிலியம் சொல்கிறது. அப்படி பட்டவர்களுக்கு வேறு வழிகளில் உண்மையை உணர்த்த முயல்வதுதான் சரியே அன்றி அவர் போகும் இடம் எலாம் பின்னால் போய் "ஒண்டிக்கு ஒண்டி வாரியா" என்று எதிர்த்துகொண்டு நிற்ப்பது சரியல்ல.
நமது தளத்தில் சகோ. அன்பு, ஜான் அவர்களோடு விவாதம் வேண்டாம் என்று விலகும்போது, அவர் ஒரு கேள்வி கேட்க இவர் ஒரு பதிலை சொல்லிக் கொண்டு இருக்கிறார் எனவே அவருடைய எதிர் கூற்று அவ்வாறு அமைந்துள்ளது. ஆகினும் அவ்வாறான வார்த்தையை தவிர்ப்பது நல்லது.
அவரோடு விவாதிக்க வேண்டும் என்றால் அவர் நடத்தும் தளத்தில் போய் அவரை எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் அவர் வசன ஆதாரத்தோடு பதில் தருவர். இங்கு வேண்டாம்.
//நமது தளத்தில் சகோ. அன்பு, ஜான் அவர்களோடு விவாதம் வேண்டாம் என்று விலகும்போது, அவர் ஒரு கேள்வி கேட்க இவர் ஒரு பதிலை சொல்லிக் கொண்டு இருக்கிறார் எனவே அவருடைய எதிர் கூற்று அவ்வாறு அமைந்துள்ளது. ஆகினும் அவ்வாறான வார்த்தையை தவிர்ப்பது நல்லது.//
நேசன் அவர்களே! எனது சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்கிறீர்கள். உங்கள் ஆலோசனையை மதிக்கிறேன். எனவே அவ்வார்த்தைகளை தக்கவிதமாக மாற்றிக் கொள்கிறேன்.
இந்த ஜாண் என்பவர் “எனது தேவன் லூசிபர்” எனச் சொன்ன நாளிலிருந்து இவரிடம் நான் விவாதம் செய்யாமல் விலகிவிலகிச் செல்கிறேன். ஆனாலும் என்னைக் குறித்த கருத்தை வாபஸ் வாங்காமல், நான் எங்கு சென்றாலும் என் பின்னே வந்து மீண்டும் மீண்டும் ஒரே பதிவைத் தந்து, இவருக்கு நான் பதில் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன் என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கி வருகிறார். இந்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு யௌவன ஜனம் என்பவர், இந்த ஜாணுடன் விவாதம் செய்யமுடியாமல் நான் ஓடி ஒளிவதாகக் கூறுகிறார். இதோ Face Book-ல் யௌவன ஜனத்தின் பதிவு:
//அந்தி கிறிஸ்துவின் ஆவிகளின் உபதேசத்துக்கு எதிராக தனது முதுமையிலும் போராடிய அன்பின் அப்போஸ்தலனின் பெயரில் ஒருவர் வந்ததுமே அவரிடம் தாக்குபிடிக்கமுடியாமல் உலக ஞானமும் அதன் பிரகாசமும் மறைந்துவிட்டதே ஆச்சர்யம்தான்..!
இப்படி யௌவன ஜனம் சொல்வதை சற்றும் உறுத்தலின்றி ஜாண் ஏற்றுக்கொள்கிறார். எனவேதான் சற்று கடுமையான வார்த்தைகளில் அவரை நான் விமர்சித்தேன்.
ஜாண் எனும் பெயரில் உலாவரும் மற்றொருவரான ஜாண்12 அவர்களோ, நான் சொல்லாததையெல்லாம் சொல்லி குழப்பத்தை உண்டாக்குகிறார்.
//மற்றுமல்லாது இயேசுவை எந்த ஒரு திரியிலும் தேவன் என சகோ.அன்பு அவர்கள் அறிக்கை செய்ய வில்லை.. கேட்டால் கிறிஸ்து என ஒப்புகொள்கிறேன் என்கிறார்..//
நான் என்ன சொல்லியுள்ளேனோ அதன் அடிப்படையில்தான் என்னை விமர்சிக்க வேண்டும். ஜாண் அவர்கள் சொன்ன ஒரு கூற்றை நேரடியாக அப்படியே எடுத்துக்காட்டித்தான் நிர்வாகத்திடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அதேபோல், நான் சொன்ன ஒரு கூற்றை (முடிந்தால்) நேரடியாக எடுத்துப்போட்டு, என்மீது நிர்வாகத்திடம் ஜாண்12 வேண்டுகோள் வைக்கட்டும். அதன்பின் அதற்கான என் விளக்கத்தைத் தருகிறேன்.
கிறிஸ்து யாரென வேதாகமம் சொல்வதை கண்டும் காணாதிருக்கிற குருடர்களுக்காக இவ்வசனங்கள் இங்கு பதியப்படுகின்றன.
லூக்கா 1:30 தேவதூதன் அவளை நோக்கி: ... 31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. 32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; .... என்றான்.
1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். ... என்றான்.
மத்தேயு 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். ... என்றார்.
மத்தேயு 26:63 பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; ... என்றார்.
மத்தேயு 27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
மாற்கு 1:1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
யோவான் 1:34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
யோவான் 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
அப்போஸ்தலர் 8:37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி; ..
1 தீமோ. 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;
இயேசுவை தேவனுடைய குமாரனென்று விசுவாசித்து அறிக்கை செய்தால் போதுமென்றும், அப்படி அறிக்கை செய்பவன் அவரது நாமத்தினால் நித்தியஜீவனைப் பெறுவானென்றும் வேதாகமம் தெளிவாகச் சொல்லியிருக்கையில், எந்த அற்ப மனிதனின் அதிமேதாவித்தன அறிவின்படி இயேசுவை தேவாதி தேவன் என்றோ அவரே ஒரே தேவன் என்றோ அவரே ஆராதனைக்குரியவர் என்றோ நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
விவாதிக்க விரும்பாமால் இருக்கவேண்டும் என்றிருக்கிறேன்..மீண்டும் வீணாய் என் பெயரை இழுத்துள்ளீர்கள்..
தேவகுமாரனை அறிக்கை இடுதல் என்றால் என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.கிறிஸ்துவும் பிதாவும் சமமானவர்கள் என இஸ்ரவேல்லரே அறிந்திருந்தனர்..பின்பு என்ன சொல்ல உங்களுக்கு..இக்காரணத்தினால் தானே இயேசு குற்றம் சாட்டபட்டர்...
பிதாவிற்கு குமாரன் சமமல்ல என கூறுகிற நீங்கள் குமாரனை எவ்வாறு அறிக்கை இடுகிறவர்?
ஏசுவின் நாமத்தின் நிமித்தம் கொலை செய்யப்படவும் என்னை போன்றவர்கள் ஆயதமே..
..பாருங்கள் உங்களுடைய எந்த வினோதமான வேத அறிவும் இத்தகைய தங்கள் போக்கினால் ரட்சிப்பிற்கு உதவபோகிறதில்லை என இப்போதாவது அறிந்து கொள்ளுங்கள்..
//பிதாவிற்கு குமாரன் சமமல்ல என கூறுகிற நீங்கள் குமாரனை எவ்வாறு அறிக்கை இடுகிறவர்?//
இயேசு சொன்னது:
யோவான் 14:28 என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
யூதர்களின் தவறான புரிந்துகொள்தல்:
யோவான் 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் இயேசு சொன்னதை அப்படியே ஏற்று அதையே அறிக்கையிடுகிறேன். இயேசுவின் கூற்றை அவமாக்கும் வண்ணமான யூதர்களின் தவறான புரிந்துகொள்தலை ஏற்றுக்கொண்டு, அதையே அறிக்கையிடுவதென்பது எனக்குத் தூரமாயிருப்பதாக.
சங்கீதம் 83:17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
யேகோவாவும் இயேசுவும் வேறல்ல..
யோவான் 14:28 என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
இயேசு மனிதனாக இருக்கும் இருக்கும் பொது சொன்ன வார்த்தைகள் தான் நீங்கள் காட்டிய வசனம்..அவ்வசனம் முற்றில்லும் உண்மையே..
அவ்வாறு அவர் கூறினபோது தேவதூதர்களிலும் சிறியவர்(மனிதர்) தான்..ஆகவே அவரை தூதர் என்பீர்களோ..அவர் கர்த்தர்,தேவரீர்,தேவன்,தேவாதி தேவன் என வேதம் தெளிவாய் கூறுகிறதே..
நீங்கள் நடுநிலை மனதோடு,உங்கள் முந்தய போக்கை விட்டு என் தேவனை அறிந்துகொள்ளபோகிறீர்கள் என கர்த்தருக்குள்ளாக விசுவாசிக்கிறேன் ..
Thanks,
Joseph
தேவாதிதேவனுக்கு மகிமை உண்டாகுக!!!
-- Edited by JOHN12 on Monday 23rd of January 2012 11:57:06 AM
சகோ.ஜாண்12 அவர்களே! தற்போதைய பதிவைப் போலவே இறுதிவரை நிதானமாக விவாதித்தால், உங்களோடு எனது கருத்தைப் பரிமாறிக்கொள்ள எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
விவாதம் முடியும் முன்பே இது இப்படித்தான், இவர் இப்படித்தான் எனத் தீர்க்காமல் திறந்த மனதுடன் விவாதியுங்கள். நீங்களும் தேவ நாம மகிமைக்காகத்தான் போராடுகிறீர்கள், நானும் தேவ நாம மகிமைக்காகத்தான் போராடுகிறேன். இந்த நம்பிக்கை நம்முள் இருந்தால் நமக்குள் வீனான மோதல் உண்டாக வாய்ப்பிருக்காது.
யோவான் 5:18-ல் யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினதற்கான 2 காரணங்கள் கூறப்பட்டுள்ளன. 1. ஓய்வுநாள் கட்டளையை இயேசு மீறினார், 2. தேவனை தமது சொந்தப் பிதா எனச் சொல்லி தம்மைத் தேவனுக்கு சமமாக்கினார்.
இந்த 2 குற்றச்சாட்டுகளையுமே யூதர்களின் சார்பாகத்தான் சுவிசேஷகர் யோவான் கூறுகிறார். அதாவது யூதர்கள் இப்படியாக இயேசுவைக் குற்றஞ்சாட்டி அக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரைக் கொலைசெய்ய வகை தேடினார்கள் என்பதையே சுவிசேஷகர் கூறுகிறார்.
மற்றபடி, ஓய்வுநாள் கட்டளையை இயேசு மீறினார் என்பதோ, இயேசு தம்மைப் பிதாவுக்குச் சமமாக்கினார் என்பதோ சுவிசேஷகரின் கருத்தல்ல. இப்படித்தான் நான் 100% நம்புகிறேன்.
ஒருவேளை நீங்கள் நம்புவதுபோல, “ஓய்வுநாள் கட்டளையை இயேசு மீறினார் என்பதும், இயேசு தம்மைப் பிதாவுக்குச் சமமாக்கினார் என்பதும் சுவிசேஷகரின் கருத்தாக இருந்தால்” நிச்சயமாக சுவிசேஷகரின் அக்கருத்தை நான் ஏற்கவுமாட்டேன், அதை relay செய்யவுமாட்டேன்.
இயேசுவே தமது வாயால் நேரடியாக “என் பிதா என்னிலும் பெரியவர்” என்று சொல்லியிருக்கையில், அவரது இக்கூற்றை பொய்யாக்கும் வண்ணம் “இயேசு தம்மை தேவனுக்கு சமமாக்கினார்” என சுவிசேஷகர் சொன்னால், அதை எப்படி நான் ஏற்கமுடியும்?
Which is more powerful and reliable? Whether Jesus' statement or John's statement? Definitely I will consider Jesus' statement to be more powerful and reliable, and I will totally reject and ignore John's statement.
But I believe 100% that John has just relayed the charges of Jews against Jesus and expressed not his own opinion about Jesus.
//யோவான் 14:28 என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
இயேசு மனிதனாக இருக்கும் இருக்கும் பொது சொன்ன வார்த்தைகள் தான் நீங்கள் காட்டிய வசனம்..அவ்வசனம் முற்றில்லும் உண்மையே..//
இயேசு மனிதனாக இருக்கும்போதுதான் அவர் தன்னைத் தேவனுக்குச் சமமாக்கினார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது (யோவான் 5:18). எனவே உங்களது இவ்விவாதம் ஏற்புடையதல்ல.
//தேவனுக்கு இயேசுவானவர் சமம் என வேதம் தெளிவாய் சாட்சி தருகிறது சகோதரரே..//
இப்படியாக நீங்கள்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்களேயொழிய, இயேசுவோ “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்றல்லவா நேரடியாகச் சொல்லியுள்ளார்?
நான் இயேசு சொல்வதை ஏற்பதா? நீங்கள் சொல்வதை ஏற்பதா?
//அவ்வாறு அவர் கூறினபோது தேவதூதர்களிலும் சிறியவர்(மனிதர்) தான்..ஆகவே அவரை தூதர் என்பீர்களோ..//
மனிதராக, தேவதூதரிலும் சிறியவராக இருப்பவர் “என் பிதா என்னிலும் பெரியவர்” என்பதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமில்லையே!
மேலும், அவர் மனிதராக இருக்கும்போதுதானே அவர் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினார் என யூதர்கள் குற்றஞ்சாட்டினர்?
“அவரை தூதர் என்பீர்களோ?” எனும் கேள்வியெல்லாம் நம் விவாதத்திற்கு தேவையற்றது. “என் பிதா என்னிலும் பெரியவர்” என இயேசு சொன்னார், எனவே இயேசு பிதாவுக்குச் சமமானவர் அல்ல என்பது 100% நிச்சயம்.
//அவர் கர்த்தர், தேவரீர், தேவன், தேவாதி தேவன் என வேதம் தெளிவாய் கூறுகிறதே..//
இயேசுவைக் கர்த்தர் என்றும் தேவன் என்றும் வேதாகமம் கூறுகிறது என்பதை ஏற்கிறேன். ஆனால் அவரை தேவாதி தேவன் என ஒரு வசனமும் கூறவில்லை என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வேன். மாத்திரமல்ல, யெகோவா தேவனையே தேவாதி தேவன் என வேதாகமம் சொல்கிறது என்பதையும் திட்டவட்டமாகச் சொல்வேன்.
சரி, உங்களிடம் ஒரு கேள்வி. தேவாதி தேவன் என்றால் தேவர்களுக்கெல்லாம் தேவன் என அர்த்தம் என்பதை ஒப்புக் கொள்வீர்களல்லவா?
அப்படியானால் யெகோவாவின் தேவனாக இயேசுவைக் காட்டும் ஏதேனும் ஒரு வசனத்தை உங்களால் சொல்ல முடியுமா?
நிச்சயம் முடியாது. ஆனால் இயேசுவின் தேவனாக யெகோவாவைக் காட்டும் வசனத்தை என்னால் சொல்ல முடியும்.
ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.
இயேசு மகா தேவன்
தீத்து 2:13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.
இயேசு மெய்யான தேவன்
I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
இயேசு சர்வவல்லமையுள்ள கர்த்தர்
வெளி 1:8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
-- Edited by John on Tuesday 24th of January 2012 12:17:07 AM
// “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்” என இயேசு சொல்வதையும் நான் எப்படி மறுக்கமுடியும்? சிந்தியுங்கள்.//
என்ன ஒரு வேதனை!! தேவனாகிய கர்த்தர் எனபது கிறிஸ்துவையும் குறிக்கும் என்பது புரட்டர்களுக்கு ஏன் புரிவதில்லை?
Revelation 1:8 “I am the Alpha and the Omega,” says the Lord (g2962 κύριος kyrios) God (g2316 θεός theos), “who is and who was and who is to come, the Almighty.”
Matt 4:10 Then saith Jesus unto him, Get thee hence, Satan: for it is written, Thou shalt worship the Lord (g2962 κύριος kyrios) thy God (g2316 θεός theos), and him only shalt thou serve.
நேரமின்மையால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்
God is the ONLY one Who was uncaused, uncreated. Jesus was uncreated.
John 1:3 All things came into being through Him, and apart from Him nothing came into being that has come into being.
God is the ONLY One who can be worshipped but Angels Worshipped Jesus
Jesus is the Son of God in a way that no angel ever was or is (Heb 1:5 :For to which of the angels did God ever say,"You are my Son, today I have begotten you"?).
Prayers Offered to Jesus:
Revelation 5:8 And when he had taken the scroll, the four living creatures and the twenty-four elders fell down before the Lamb, each holding a harp, and golden bowls full of incense, which are the prayers of the saints
Stephan Prayed to Jesus:
Acts 7:59 And as they were stoning Stephen, he called out, “Lord Jesus, receive my spirit.”
Jesus is the Creator And Eternal, He was refered as Jehova (LORD) in OT
Heb 1:10 And,"You, Lord, laid the foundation of the earth in the beginning, and the heavens are the work of your hands;
Heb 1:11 they will perish, but you remain; they will all wear out like a garment,
Heb 1:12 like a robe you will roll them up,like a garment they will be changed.But you are the same, and your years will have no end."
Same Verses Used for YHWH (which can be used to refer both Father and Son)
Psalm 105:25 Of old you laid the foundation of the earth,and the heavens are the work of your hands.
Psalm 105:26 They will perish, but you will remain; they will all wear out like a garment.You will change them like a robe, and they will pass away,
Psalm 105:27but you are the same, and your years have no end.
Believers betrothed to YHWH
Hosea 2:19 "And I will betroth you to me forever. I will betroth you to me in righteousness and in justice, in steadfast love and in mercy."
betrothed to JESUS
2 Cor 11:2 For I feel a divine jealousy for you, since I betrothed you to one husband, to present you as a pure virgin to Christ.
-- Edited by John on Tuesday 24th of January 2012 12:21:13 AM
//நீங்கள் திரிகளில் முதன்முறையாக இயேசுகிறிஸ்துவை தேவன் என அறிக்கை செய்துள்ளீர்கள்..//
சகோ.ஜாண்12 அவர்களே! நீங்கள் எனது பதிவுகளில் பலவற்றைப் படிக்கவில்லை என நினைக்கிறேன். என்றைக்கு யோவான் 1:1-ஐ நான் படித்தேனோ அன்றைக்கே இயேசுவும் ஒரு தேவன் என்பதை நான் அறிந்துகொண்டேன். ஆயினும் அப்போதெல்லாம் (அதாவது சுமார் 20 வருடங்களுக்கு முன்னதாக) இவ்விஷயத்தில் என் மனதில் தெளிவில்லாமல் குழப்பம் தான் இருந்தது.
அதென்ன “ஆதியில் வார்த்தை தேவனோடிருந்தது, தேவனாயிருந்தது; அப்படியானால் தேவன் ஒருவரில்லையா, இரண்டு தேவனா; இயேசுவை தேவன் என்றும், தேவனுடைய குமாரன் என்றும் வசனம் சொல்கிறதே; இதெப்படி?” எனப் பல்வேறு கேள்விகள் என் மனதில் இருந்தன. ஆயினும் அக்கேள்விகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, “பிதாவாகிய தேவன் வேறு, குமாரனாகிய இயேசு வேறு, இயேசுவானவர் பிதாவாகிய தேவனின் குமாரனாக இருக்கிறார் என்பது நிச்சயம்” என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன்.
சுமார் 3 வருடங்களுக்கு முன்னதாகத்தான் “இயேசுவை தேவன் என எந்த அர்த்தத்தில் வேதாகமம் சொல்கிறது” எனும் கேள்விக்கான பதிலை தெளிவாக அறிந்தேன். நான் அறிந்ததை தமிழ் கிறிஸ்தவ தளத்தில் அக்டோபர் 2009 லேயே பதிந்திருந்தேன். அப்பதிவுகள் அடங்கிய திரி TCS-லிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அதன் copy என்னிடம் இருந்ததால் அதை எனது நித்தியஜீவன் தளத்தில் பதித்துள்ளேன். அதிலுள்ள ஒரேயொரு பதிவை தங்கள் பார்வைக்காக இங்கு பதிக்கிறேன்.
இத்தளத்தின் விவாதங்கள் பகுதியில், திரித்துவம் எனும் தலைப்பில் சகோ.ராஜ்சார்லஸ் பின்வருமாறு எழுதியிருந்தார். //மூவரும் சமமானவர்கள், மூவரும் நித்தியமானவர்கள், மூவரும் யாராலும் உண்டாக்கபடாதவர்கள்.//
சகோ.ராஜ்சார்லஸ் மட்டுமல்ல, அவரைப்போல் பலரும் இதே கருத்தை உடையவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் இயேசு என்ன சொல்கிறார்?
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார். யோவான் 14:28 ... ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்
இயேசுவுக்கு சகல அதிகாரத்தையும் கொடுத்தவர் பிதா. அதிகாரத்தைப் பெற்றவர், அதிகாரத்தைக் கொடுத்தவருக்குச் சமமாக இருக்கமுடியுமா?
இயேசுவைத் தேவன் என சில வசனங்கள் கூறுவது மெய்தான். ஆனால் “ஒரே தேவன் (Unique God)” யாராக இருக்கமுடியும்? பிதாவாகிய தேவனாக மட்டுமே இருக்கமுடியும். இரண்டு “Unique God” அல்லது இரண்டு “ஒரே தேவன்” இருக்கவே முடியாது. பின்வரும் வசனங்களில் பவுல் கூறுவதைப் படியுங்கள்.
1 தீமோத்தேயு 2:5,6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.
இயேசுவை தேவன் என வேறு சில வசனங்கள் கூறியுள்ளபோதிலும் (யோவான் 1:1; 20:28; எபிரெயர் 1:9), தேவன் ஒருவரே எனச் சொல்லி, “தேவன்” என்ற வார்த்தைக்குரிய uniqueness-ஐ இவ்வசனத்தில் பவுல் காண்பிக்கிறார்.
இயேசுவை தேவன் என சில வசனங்கள் கூறுவது மெய்தான். ஆனால் இயேசுவின் தேவன் யார்? பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
மத்தேயு 27:46 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். யோவான் 20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். எபிரெயர் 1:8-12 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. ... ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; ... நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
எபிரெயர் 1:8-ம் வசனம், குமாரனாகிய இயேசுவை தேவன் எனக் கூறுகிறது. ஆனால், அதையடுத்த 9-ம் வசனம், “தேவனே, உம்முடைய தேவன்” எனச் சொல்லி பிதாவானவர் குமாரனாகிய தேவனுக்கும் தேவனாக இருக்கிறார் எனக் கூறுகிறது.
தேவன் எனும் வார்த்தை ஒரு வசனத்தில் சாத்தானைக் குறிப்பிடுகிறது. தேவர்கள் எனும் வார்த்தை பழைய ஏற்பாட்டின் சில வசனங்களில் ஆசாரியர்களைக் குறிப்பிடுகிறது. பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
சங்கீதம் 82:1,6 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். (இவ்வசனங்களில் தேவர்கள் எனும் வார்த்தை இஸ்ரவேலரை நியாயம் விசாரித்த ஆசாரியர்களைக் குறிப்பிடுகிறது. இவ்வசனங்களைத்தான் பின்வரும் வசனங்களில் இயேசு மேற்கோள் காட்டுகிறார்.)
யோவான் 10:33 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
தேவவசனத்தைப் பெற்றுக்கொண்ட ஆசாரியர்களையே தேவர்கள் என தேவன் சொல்லியிருக்கும்போது, பிதாவிடமிருந்து பரிசுத்தமாக்கப்பட்ட வந்த தம்மை ஏன் தேவனுடைய குமாரன் என தாம் சொல்லக்கூடாது எனபதே இயேசுவின் கேள்வி.
தேவன் எனும் வார்த்தைப் பயன்பாட்டின் அடிப்படையில் இயேசு பிதாவுக்குச் சமம் எனும் முடிவை எடுப்பது சரியல்ல. மேற்கூறிய வசனங்களில், தேவன், தேவர்கள் எனும் வார்த்தைகள் பலரையும் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் கருத்து என்ன?
இஸ்ரவேலர்களுக்கு ஆசாரியர்கள் தேவர்களாயிருந்தனர்.
இப்பிரபஞ்ச மக்களுக்கு சாத்தான் தேவனாக இருக்கிறான்.
உலக மக்கள் அனைவருக்கும் பிதாவும் இயேசுவும் தேவனாக இருக்கின்றனர்.
ஆனால் உலக மக்களுக்கு மட்டுமின்றி இயேசுவுக்கும் தேவனாக பிதா இருக்கிறார்.
எனவே இயேசு உட்பட அனைவருக்கும் ஒரே தேவனாக இருப்பது பிதாவாகிய தேவனே. அந்த ஒரே தேவனையே ஆராதனை செய்யும்படி இயேசு கூறுகிறார். இதற்கு மிஞ்சி எண்ணுவதற்கு எதுவுமில்லை என்பதே என் கருத்து.
அடுத்த பதிவில் தொடர்கிறது ...
//
இப்போது அறிந்தீர்களா, நான் இயேசுவை தேவன் என அப்போதே கூறியுள்ளேன் என்பதை?
இயேசுவை தேவன் என வேதவசனம் சொல்வதை நான் எப்படி மறுக்கமுடியும்? அவ்வாறே “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்” என இயேசு சொல்வதையும் நான் எப்படி மறுக்கமுடியும்? சிந்தியுங்கள்.