இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்! (கிறிஸ்த்துவை அறிக்கையிடுதல்)


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்! (கிறிஸ்த்துவை அறிக்கையிடுதல்)
Permalink  
 


தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் வசனங்களை வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக்கொண்டு, “ஆ, கிறிஸ்து சர்வத்துக்கும் மேலான தேவன் என வசனம் சொல்கிறது; எனவே பிதாவைவிட கிறிஸ்துதான் மேலான தேவன்” என்று சொல்லி “ஆ, ஊ” என சிறு பிள்ளை போல் துள்ளிக் குதித்து அறியாமையில் மூழ்கிக்கிடக்கிற ஜாண் எட்வர்ட் போன்றவர்களை எப்படித்தான் அறியாமை இருளிலிருந்து வெளியே கொண்டு வருவதோ தெரியவில்லை.

தமிழ் மொழிபெயர்ப்புக்கு அடுத்தபடியாக, இந்த ஜாண் போன்ற திரித்துவக்காரர்கள் நம்புகிற வேதாகமம், KJV ஆங்கில வேதாகமம் ஆகும். இந்த KJV-லும் தமிழ் வேதாகமத்திலும் ரோமர் 9:5 படுகிற பாட்டைக் கொஞ்சம் பார்ப்போம்.

Rom 9:5 Whose are the fathers, and of whom as concerning the flesh Christ came, who is over all, God blessed for ever. Amen. KJV

பரிசுத்த வேதாகமத்தில் இதே வசனம்:

பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

தமிழ் வேதாகமத்தை வைத்து “கிறிஸ்து சர்வத்திற்கும் மேலான தேவன்” என வாய் கிழிய கத்துகிற ஜாண், முதலாவது KJV-ல் இதே அர்த்தம் காணப்படுகிறதா என்பதை ஆராய்ந்து பார்ப்பாராக. இந்த ஆராய்ச்சியிலேயே இவருக்கு தலை சுற்றிவிடும். ஒருவேளை தலை சுற்றாமல் தப்பித்தால், பின்வரும் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் படித்து ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வருவாராக.

1. Whose are the fathers, and of whom as concerning the flesh Christ came, who is over all, God blessed for ever. Amen. -King James Version(KJV)

2. Of whom are the fathers and from whom, according to the flesh, Christ came, who is over all, the eternally blessed God. Amen. -New KJV

3. Theirs are the patriarchs, and from them is traced the human ancestry of Christ, who is God over all, forever praised! Amen. -NIV

4. Whose are the fathers, and of whom is Christ as concerning the flesh, who is over all, God blessed for ever. Amen. -American Standard

5. Whose are the fathers, and from whom is the Christ according to the flesh, who is over all, God blessed forever. Amen. -New American Standard

6. Great men of God were your fathers, and Christ himself was one of you, a Jew so far as his human nature is concerned, he who now rules over all things. Praise God forever! -Living Bible

7. To them belong the patriarchs, and of their race, according to the flesh, is the Christ. God who is overall be blessed for ever. Amen. -Revised Standard

8. They have the family roots. Christ, in the human sense, came from them. God is over everyone. Praise Him forever. Amen. -Simple English

9. To them belong the fathers and out of them, so far as physical descent is concerened, came Christ who is overall, God, blessed for ever. Amen. -New Jerusalem with Apocrypha

10. Theirs the patriarchs, and from them, according to the flesh, is the Messiah. God who is overall be blessed forever. Amen. -New American with Apocrypha

இதையெல்லாம் படித்த பின்னராவது, “ஐயோ, ஒரேயொரு மொழி பெயர்ப்பை நம்பி, இப்படி முட்டாள்த்தனமாக முடிவுசெய்துவிட்டோமே” என ஜாண் உணர்வரா என்பது தெரியவில்லை.

அவர் உணர்வாரோ இல்லையோ, தவறான மொழிபெயர்ப்புகள் நம்மைத் தவறாக வழிநடத்திவிடும் என்பதை தள அன்பர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். ரோமர் 9:5 சம்பந்தமான மேலும் விபரம் தேவைப்படுபவர்கள், பின்வரும் தொடுப்புக்குச் செல்வார்களாக.

http://eternal-life.activeboard.com/t41384788/topic-41384788/



-- Edited by anbu57 on Tuesday 24th of January 2012 08:13:51 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
RE: நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்! (கிறிஸ்த்துவை அறிக்கையிடுதல்)
Permalink  
 


காமாலைக்காரன் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாத் தெரிகிறதைப் போல, நம்ம மேதாவி ஜாண் எட்வர்டுக்கும் ஒரு வசனத்தில் இயேசு எனும் வார்த்தையும் தேவன் எனும் வார்த்தையும் இருந்தாப் போதும், “ஐய்யா, இயேசுதான் தேவன்னு இந்த வசனம் சொல்லுதே” அப்படின்னு சொல்லி துள்ளிக் குதிச்சிருவார். இப்படி அவர் சொல்ற வசனங்களில் ஒன்றுதான் 1 யோவான் 5:20.

அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

இந்த வசனத்தின் முதல் பகுதியில் இயேசுவை தேவனுடைய குமாரன் என யோவான் தெளிவாகச் சொல்கிறார். இப்படிச் சொன்ன அவர், அதே வசனத்தின் இறுதியில், அதே இயேசுதான் மெய்யான தேவன் என்றும் சொல்வாரா அப்படீன்னு இந்த ஜாண் கொஞ்சமும் யோசித்துப் பார்ப்பதில்லை. வசனத்தில் எங்காவது ஒரு இடத்தில் இயேசு என்றும், இன்னொரு இடத்தில் தேவன் என்றும் போட்டிருக்கா, அது போதும் அவருக்கு. அதையும் இதையும் link செய்து, இயேசுதான் தேவன், தேவன் தான் இயேசு-ன்னு declare செய்திருவார்.

இப்படித்தான் 1 யோவான் 5:20 வைச்சு, “இயேசுதான் மெய்யான தேவன்” என declare பண்ணுகிறார். ஆனா உண்மையில் வசனம் அப்படித்தான் சொல்கிறதா என்பதை அறிய விரும்புபவர்கள், பினவரும் தொடுப்பில் காணப்படும் பத்திரிகையின் 10-ம் பக்கம் சென்று, அதில் காணப்படும் பகுதியைப் படிக்கவும்.

http://www.christian-perfection.com/2008/Nov08.pdf




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


இனியவர்

Status: Offline
Posts: 59
Date:
நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்! (கிறிஸ்த்துவை அறிக்கையிடுதல்)
Permalink  
 


  திரு. அன்பு அவர்கள் எல்லா வசனங்களுக்கும் அவர் தரப்பு விளக்கங்களை அளித்த பின்பு தொடருகிறேன் 

இயேசு சர்வத்திற்கும் மேலான தேவன்


ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.

இயேசு மகா தேவன்

தீத்து 2:13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.


இயேசு மெய்யான தேவன்

I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

இயேசு சர்வவல்லமையுள்ள கர்த்தர்

வெளி 1:8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

 இயேசு ஒரு சிருஷ்டி அல்ல


யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேல்லாமல் உண்டாகவில்லை.



-- Edited by John on Wednesday 25th of January 2012 05:21:43 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.அன்பு அவர்களே,

 

தங்கள் கருத்துகளை முதலாவது பகிர்ந்தததற்கு நன்றி..

இயேசுவையும்,பிதாவையும் கர்த்தர் எனவும் தேவன் என ஒப்புகொள்கிறீர்கள்..நல்லது..

இப்போது தங்களின் கேள்வி தேவாதிதேவனை பற்றியது..

தேவாதி தேவனை பற்றி நாம் ஏற்கனவே நாம் விவாதித்த பொது,

 நீங்கள் குறிப்பிட்ட ஒரு வசனம் தான் தேவாதிதேவன் என பின்வரும் வசனம்.


உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.

தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவன் எனவும் கர்த்தாதி கர்த்தர் எனவும் வசனம் சொல்கிறது..இப்போது நீங்கள் என்ன சொல்லபோகிறீர்கள்..பின் வரும் வசனம் ஆட்டுகுட்டியானவரை கர்த்தாதி கர்த்தர் என்கிறதே..


வெளி 17:14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்..

பின்வரும் வசனம் இயேசுவை தேவனாகிய கர்த்தர் என்கிறதே..

சங்கீதம் 68:18 தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.

எரேமியா 30:9 தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.

நாம் பிதாவையும் சேவிக்கவேண்டும்,குமாரனையும் சேவிக்கவேண்டும் என் நம் தேவனே தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------------------

யோவேல் 2:27 நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

 



-- Edited by JOHN12 on Wednesday 25th of January 2012 04:11:18 PM

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard