அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் (ரோமர் 11 :16)
//
சகோ. ஜான் அவர்களே..நல்ல கேள்விகள் இன்னும் சற்று நேரத்தில் திரு. சுந்தர் உங்களை திட்ட ஆரம்பித்து விடுவார். அவர் தேவனிடம் 'நேரடி தொடர்பில்' இருந்து கேட்டு சொல்லும் காரியங்களை அப்படியே எடுத்து கொள்ள வேண்டும். வசன அடிப்படையில் கேள்வி கேட்க்க கூடாது! உங்களுக்கு விசுவாசம் இல்லாததால் திரு. சுந்தர் எழுதுவதற்கு எதிராய் எழுதுகிறீர்கள். "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" ஆகையால் திரு. எட்வின் விசுவாசிப்பது போல நீங்களும் விசுவாசியுங்கள்!! "காணாதவைகளிலே துணிவாய் நுழைவதில்" திரு. சுந்தர் கைதேர்ந்தவர்!!
கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
எண்ணற்ற ஆள்தத்துவம் என்ற அவரது விசுவாசத்தை மாற்ற முடியாது என அவர் தெளிவாய் முந்தைய பதிவிலேயே கூறி உள்ளார்..ஆனால் தேவன் உணர்த்தினால் மாற்றலாம் என்கிற பதத்தையும் சேர்த்தே அவ்வாறு எழுதி உள்ளார்.ஆகவே நானும் பதிகிறேன்.,.,
காரியத்தை வசனத்தின் அடிபடையில் முன் நிறுத்துவோம், ஏற்று கொள்வதும், ஏற்று கொள்ளாததும் அவர் அவர் விருப்பம்.. எல்லாரும் பேதுருவை போல் தேவன் முன் வலையை அலசுவதில்லை..
ஒரே வசனத்தில் சுருக்கமாய்,தெளிவாய் நீங்கள் கூறிய கருத்து முற்றிலும் உண்மை..
இங்கு விவாதம் என்னவெனில்..
ஆவிகளை கொண்டு சுந்தர் ஆள்ததுவங்களை பிரித்தார்..
அதாவது பிதாவின் ஆவி,குமாரனின் ஆவி,பரிசுத்த ஆவி மற்றும் எலோஹிம் (இவரை தேவ ஆவி என்கிறார்) என்று நான்கு ஆட்கள் உள்ளதாக ஆவிகளின் அடிப்படையில் காண்பிகிறார்.
நீங்கள் முன் நிறுத்திய வசனத்தில் கர்த்தருடைய ஆவி என்று வருகிறது..
///எண்ணற்ற ஆள்தத்துவம் என்ற அவரது விசுவாசத்தை மாற்ற முடியாது என அவர் தெளிவாய் முந்தைய பதிவிலேயே கூறி உள்ளார்.///
சகோ. அவர்களே நான் அவ்வாறு சொல்வதன் பொருள் என்ன வென்பதை அறிந்துகொள்ளுங்கள்.
தேவனை "இத்தனை ஆள்தத்துவம்தான் உள்ளவர்" என்று யாராலும் நிர்ணயித்துவிட முடியாது என்பதன் பொருளிலேயே அனேக ஆள்த்துவமானவர் என்று கூறுகிறேன். காரணம் இந்த உலகில் இருக்கும் மனுஷர்கள் தூதர்கள் எல்லோருமே அவரால் உருவாக்கபட்ட ஆள்த்துவங்களே. அவரவருக்கு மகிமைகள் வேறாக இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு மனுஷனும் ஒரு ஆள்த்துவம்தானே. இந் நிலையில் அவர் விரும்பினால் ஏதாவது ஒரு கருப்பொருள் மூலம் இன்னொரு ஆள்த்துவத்தை உருவாக்கிவிட முடியும் என்பதை வலியுறுத்தவே அவ்வாறு சொல்கிறேன்.
தேவன் தன்னை "நான் ஒருவனாய்" என்று சொல்லியிருக்கிறார் இயேசுவோடு சேர்த்து "நாங்கள இருவராய்" என்று சொல்லியிருக்கிறார் அதற்க்குமேல் தேவனுக்கு "ஏழு ஆவிகள" உண்டு என்று வசனம் சொல்கிறது. அதற்க்கு மேல் நாங்கள் மூவர் என்று அவர் எங்கும் சொல்லவில்லை. இந்நிலையில் இப்படி நேரடியாக சொல்லும் வசனங்களை எல்லாம் புறம்பே தள்ளிவிட்டு எதையாவது காரணம் காட்டி அவர் மூவர் என்று சொல்வதை எப்படி ஏற்க்க முடியும்?
என்னை பொறுத்தவரை:
ஆதாமை படைத்த தேவன் அவனில் இருந்து ஒரு எலும்பை எடுத்து ஏவாளை படைத்ததுபோல. ஒன்றான மெயதெய்வமாகிய தேவன் ஆதியிலிருந்து தன்னுடன் ஒன்றாய்இருந்த வார்த்தையை ஜெனிப்பித்து மாம்சமாக்கினார்.
புருஷன் ஸ்திரி இருவரும் தனிப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரே மாம்சம் என்று குறிப்பிடப்படுவதுபோல. இயேசுவும் தேவனும் தனித்தனியாக செயல்பட்டாலும் தேவன் ஒருவரே.
I கொரி 12:6 எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிறதேவன்ஒருவரே.
ஸ்திரிக்கு புருஷன் தலையாக இருப்பதுபோல கிறிஸ்த்துவுக்கு தேவன் தலையாய் இருக்கிறார்.
கொரிந்தியர் 11:3 ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன்தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்
பரிசுத்த ஆவியானவர் என்பவர் ஆள்த்துவமுள்ள தேவனுடைய ஆவியே அன்றி அவர் ஒரு தனிப்பட்ட தேவன் இல்லை.
I பேதுரு 4:14தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்
எபேசியர் 4:30நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
I கொரிந்தியர் 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
பரிசுத்த ஆவியானவரை தேவனுடைய ஆவி என்றுதான் வசனம் சொல்கிறதேயன்றி "பரிசுத்த ஆவியாகிய தேவன்" என்று தனிப்பட்ட தேவனாக சொல்லும் வசனம் எங்கும் வசனமும் இல்லை.
தேவனுக்கு ஏழு ஆவிகள் உண்டு என்பதை மூன்று இடத்தில் வசனம் தெளிவாக சொல்கிறது. அந்த ஏழு ஆவிகளும் ஏழு கண்களாக பூமியில் அனுப்பபட்டு கிரியை செய்து வருகிறது.
வெளி 4:5தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
வெளி 5:6 அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
தேவன் மூவர் என்பது இந்துமத கோட்பாடு. இங்கு ஏழு ஆவிகளை ஒருங்கே கொண்டுள்ள தேவன் இருவரோ மூவரோ அல்ல "தேவன் ஒருவரே"
-- Edited by SUNDAR on Tuesday 14th of February 2012 10:27:24 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோதரரே "ஆவி" என்று வரும் வாத்தைகளை எல்லாம் "ஆவியானவர்" என்று எழுதி விளக்கம் கேட்கிறீர்கள். தாங்கள் கொடுத்துள்ள ஆதாரமான ஆவியானவர்களை ஒவ்வொருவராக எழுதி தமிழ் வேதாகமத்தில் எழுதி தேடினேன். கர்த்தரின் ஆவியானவர் தவிர வேறுஎந்த ஆவியானவரும் வேத புத்தகத்தில் இருப்பதுபோல் தெரியவில்லை. கர்த்தரின் ஆவியானவர் குறித்து அவரே எழுதியிருக்கிறார்.
"ஆவி" என்ற வார்த்தைக்கும் "ஆவியானவர்" என்ற வார்த்தைக்கும் வேறுபாடு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இறைவன் தன்னுடைய "ஆவி" என்னும் வல்லமையை மாத்திரம் அனுப்பி கிரியை செய்ய முடியும், ஆவியோடு கூடிய ஆள்த்துவ மாகவும் இறங்கிவந்து கிரியை செய்யமுடியும் என்பதை விவிலியம் நமக்கு உணர்த்துகிறது எசே 3:14 ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது;
இங்கு "ஆவி" என்று குறிப்பிட்டுள்ளது தேவனின் வல்லமை.
II சாமு 23:2 கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்
இங்கு "ஆவியானவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆள்த்துவ முள்ளவரை. அப் 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலேநிரப்பப்பட்டு,ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள் இங்கு "பரிசுத்த ஆவி" என்னும் வல்லமையால் நிரப்பபட்டவர்கள் "ஆவியானவர்"என்னும் ஆள்த்துவ முள்ளவர் தந்த வரத்தின்படியே அந்நிய பாஷை பேசினார்கள். "ஞானத்தின் ஆவி" "வல்லமையின் ஆவி" "கிருபையின் ஆவி" "அன்பின் ஆவி" போன்ற எல்லாமே இறைவனின் வல்லமைகள் அல்லது பண்புகளை என்பதே சரி என்று கருதுகிறேன் எனவேதான் அவ்வார்த்தைகள் எங்கும் "ஞானத்தின் ஆவியானவர்" என்றோ "வல்லமையின் ஆவியானவர்" என்பதுபோலோ மொழிபெயர்க்க படவில்லை. நீங்களாக "ஆவியானவர்" என்று மொழிபெயர்த்து சொன்னீர்களானால் எப்படி? மொழி பெயர்த்தவர்கள் ஆவியானவரின் ஆள்த்துவத்தை அறிந்து உணர்ந்து ஆவியானவரால் தூண்டப்பட்டு சரியாக மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்றே எடுத்துகொண்டு ஆவியானவர் என்று வரும் பதத்தில் மட்டும் அவர் குறிப்பிடாத வேறு ஏதாவது ஆவியானவர் இருந்தால் மட்டும் சொல்லுங்கள் நாம் பார்க்கலாம்.
நானும் மற்ற மொழிபெயர்ப்புகளை அறிவேன்.ஆனாலும் நான் விவாதிப்பது நம் பொதுவான தமிழ் வேதாகம மொழிபெயரிபில் இருந்து மட்டுமே.,
சகோ.நேசன் ////சகோதரரே "ஆவி" என்று வரும் வாத்தைகளை எல்லாம் "ஆவியானவர்" என்று எழுதி விளக்கம் கேட்கிறீர்கள். தாங்கள் கொடுத்துள்ள ஆதாரமான ஆவியானவர்களை ஒவ்வொருவராக எழுதி தமிழ் வேதாகமத்தில் எழுதி தேடினேன். கர்த்தரின் ஆவியானவர் தவிர வேறுஎந்த ஆவியானவரும் வேத புத்தகத்தில் இருப்பதுபோல் தெரியவில்லை. கர்த்தரின் ஆவியானவர் குறித்து அவரே எழுதியிருக்கிறார். ////
சங்கீதம்143 10. உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
இதில் 'நடத்துவாராக' என்னும் பதத்தை சகோதரர் கவனிக்கவில்லையா..
ஆவி என்னும் வசனங்களை பார்க்க வேண்டுமானால் தேடும் தளங்கள் மாத்திரம் உதவாது சகோதரரே..ஆவிகளை பற்றிய மற்ற அனேக வசனங்களும் உண்டு,,மற்ற சில உதாரங்ககளும் உண்டு.
லூக்கா1:35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
மேற்கூறிய வசனத்தில் குமாரனை -பரிசுத்தமுள்ளவர் என கூறாமல் பரிசுத்தமுள்ளது என வேதாகமத்தில் வருகிறது..உடனே குமாரனை வெறும் வல்லமை என்போமா..அவர் குழந்தை என கூரபட்டது என கொண்டாலும் ஆள்தத்துவம் அல்லவா!!
இவ்வசனத்தை தவறாய் வியாக்கினம் செய்பவர்கள் தான் ஆவியை வெறும் வல்லமை என கூறுபவர்.ஆவியினால் வல்லமை வெளிப்படும்.ஆனால் ஆவி என்பது வல்லமை மட்டுமே என கூறினால் கவனிக்க.,
யோவான் 6:39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
இவ்வசனத்தில் 'அவைகள்,தந்தவை' என்கிற பதங்கள் மனிதர்களை குறிப்பவை தான்..நாம் ஜீவாத்மா தானே.,பின் ஏன் தேவன் அவைகள் என்கிறார்??
ஆக 'ஆவி' என்பது 'ஆவியானவர்' என 'ஆனவர்' உடன் சேர்ந்து வந்தால் தான் ஆள் தத்துவம் என்றில்லை..
சரி., எடுத்துகாட்டாக ஆவி,ஆவியானவர் என வரும் பின்வரும் வசனங்களை பாருங்கள்
நியாயாதிபதிகள் 6:34 அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
நியாயாதிபதிகள் 11:29 அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.
பின்வரும் வசனகளில் கர்த்தரின் ஆவி சிம்சோனுக்கு பலத்தை தருகிறார். இங்கு பலத்தின் ஆவி என இன்னொரு பதம் தரப்படவில்லை பாருங்கள்.
நியாயாதிபதிகள் 14:6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
நியாயாதிபதிகள் 14:19 கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக்கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.
இங்கு வேறெந்த பண்பு பெயரின் ஆவியும் தரப்படவில்லை பாருங்கள்..ஆகவே கர்த்தரின் ஆவிக்குள் அணைத்து ஆவிகளும் அடக்கம்.கர்த்தரின் ஆவியும்,ஆவியானவரும் ஒன்று..
பணிவிடை ஆவிகள் எனபடுகிற தூதர்கள் வெறும் வல்லமையா என்ன?அவ்வாரல்லவே..அவர்கள் ஜீவனுள்ள தூதர்கள் அல்லவா..
பிசாசு ஆவியாய் தான் இருக்கிறான். வேதத்தில் பிசாசின் ஆவி என வருகிற பதங்களில் எல்லாம் அவனை ஆள்தத்துவமாகவே பார்க்கிறோம்.வெறும் வல்லமையாக அல்ல.
ஆனால் தேவனின் ஆவி என வருகிறவைகளை வல்லமை என மட்டுபடுத்துகிறோம்.
ஆவி என்பதும்,ஆவியானவர் என்பதும் ஒரே பதம் என படித்து அறிந்து கொள்ளுங்கள் சகோதரரே..
நான் கூறின அனைத்து ஆவிகளும் தேவ ஆவிகுள்ளாய் அடக்கம் என அறிந்தே பதிகிறேன்..
தேவனுக்கு மகிமை உண்டாகுக !!
-- Edited by JOHN12 on Wednesday 15th of February 2012 12:00:06 PM
என்னுடைய நிலைப்பாடும் தேவன் ஒருவர் என்பதே.நான் ஒருபோதும் மூன்று தேவன் என கூறுவதை ஒப்புகொள்வதில்லை.
Bro.Sunar///தேவனை "இத்தனை ஆள்தத்துவம்தான் உள்ளவர்" என்று யாராலும் நிர்ணயித்துவிட முடியாது என்பதன் பொருளிலேயே அனேக ஆள்த்துவமானவர் என்று கூறுகிறேன். காரணம் இந்த உலகில் இருக்கும் மனுஷர்கள் தூதர்கள் எல்லோருமே அவரால் உருவாக்கபட்ட ஆள்த்துவங்களே. அவரவருக்கு மகிமைகள் வேறாக இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு மனுஷனும் ஒரு ஆள்த்துவம்தானே. இந் நிலையில் அவர் விரும்பினால் ஏதாவது ஒரு கருப்பொருள் மூலம் இன்னொரு ஆள்த்துவத்தை உருவாக்கிவிட முடியும் என்பதை வலியுறுத்தவே அவ்வாறு சொல்கிறேன்.///
தங்கள் நிலைப்பாடை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது..
ஆனால் வேதத்தில் உள்ளவை,நமக்கு வேதத்தில் கான்பிக்கபட்டவை மூன்று ஆள்ததுவங்கள் தான்..நீங்கள் ஏற்கனவே சாட்சி இடுகிறவர் என அடைப்புக்குள் வருகிற வசனம் அல்லாத வேறொரு நேரடி வசன ஆதாரம் கேடீர்கள்.நானும் பின்வரும் வசனத்தை நேரடி ஆதாரமாய் தந்தேன்..
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நீங்கள் ஞானஸ்தானம் பெற்றிருந்தீர்கள் என்றால், நிச்சயம் அனேக ஆள்ததுவங்களின் நாமங்களில் பெற்றிருக்க மாட்டீர்கள் மேற்சொன்ன மூன்று நாமங்களின் அடிப்படையில் தான் பெற்றிருப்பீர்கள்.அவ்வாறு இருக்க நாம் ஏன் மூன்றிற்கு மேற்பட்ட தேவனின் ஆள்ததுவங்களை குறித்து யோசிக்கவேண்டும்?
//தேவன் தன்னை "நான் ஒருவனாய்" என்று சொல்லியிருக்கிறார் இயேசுவோடு சேர்த்து "நாங்கள இருவராய்" என்று சொல்லியிருக்கிறார் அதற்க்குமேல் தேவனுக்கு "ஏழு ஆவிகள" உண்டு என்று வசனம் சொல்கிறது. அதற்க்கு மேல் நாங்கள் மூவர் என்று அவர் எங்கும் சொல்லவில்லை. இந்நிலையில் இப்படி நேரடியாக சொல்லும் வசனங்களை எல்லாம் புறம்பே தள்ளிவிட்டு எதையாவது காரணம் காட்டி அவர் மூவர் என்று சொல்வதை எப்படி ஏற்க்க முடியும்//
நான் ஏற்கனவே ஏழு ஆவிகள் என்பவை யாவை என ஏற்கனவே திரித்துவம் குறித்த திரியில் பதிந்துள்ளேன்..(ஆவிக்குரிய சபைகளின் மேல் வெயக்கபட்ட ஒரே தேவனின் கண்கள்,இதயம் குறித்த காரியம் அது..)
Glory to GOD!!!
-- Edited by JOHN12 on Wednesday 15th of February 2012 02:51:44 PM
பிதா குமாரனுக்கு சமமாய் இருந்தும் கீழ்பட்டார் என்பதை குறித்து நான் ஏற்கனவே எனது கருத்துகளை நீங்கள் அறிய முந்தைய திரியில் தந்துள்ளேன்.. அவரை மாம்ச ரீதியாய் அறிந்துள்ள நாம் இனி மாம்சத்தில் அறிகிரதில்லை என்று பவுல் சொன்ன கருத்தின் பொருளையும் வலியுறுத்தி உள்ளேன்.
சகோதரரிடம் நான் ஏற்கனவே சில கேள்விகள் கேட்டுள்ளேன்..அதற்கும் பதில் தாருங்கள். அப்போது நீங்கள் காண்பித்த 4 ஆள்தத்துவங்களை நாம் எளிதிலாராயலாம்.
GLORY TO GOD
-- Edited by JOHN12 on Wednesday 15th of February 2012 06:32:46 PM
சகோ. ஜான் அவர்களே..நல்ல கேள்விகள் இன்னும் சற்று நேரத்தில் திரு. சுந்தர் உங்களை திட்ட ஆரம்பித்து விடுவார். அவர் தேவனிடம் 'நேரடி தொடர்பில்' இருந்து கேட்டு சொல்லும் காரியங்களை அப்படியே எடுத்து கொள்ள வேண்டும். வசன அடிப்படையில் கேள்வி கேட்க்க கூடாது! உங்களுக்கு விசுவாசம் இல்லாததால் திரு. சுந்தர் எழுதுவதற்கு எதிராய் எழுதுகிறீர்கள். "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" ஆகையால் திரு. எட்வின் விசுவாசிப்பது போல நீங்களும் விசுவாசியுங்கள்!! "காணாதவைகளிலே துணிவாய் நுழைவதில்" திரு. சுந்தர் கைதேர்ந்தவர்!!
கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
சகோ. ஜான் அவர்களின் இந்த பதிவிற்க்கான பின்னூட்டத்தை பார்க்க இந்த திரியை சொடுக்கவும்.
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நீங்கள் ஞானஸ்தானம் பெற்றிருந்தீர்கள் என்றால், நிச்சயம் அனேக ஆள்ததுவங்களின் நாமங்களில் பெற்றிருக்க மாட்டீர்கள் மேற்சொன்ன மூன்று நாமங்களின் அடிப்படையில் தான் பெற்றிருப்பீர்கள்.அவ்வாறு இருக்க நாம் ஏன் மூன்றிற்கு மேற்பட்ட தேவனின் ஆள்ததுவங்களை குறித்து யோசிக்கவேண்டும்?
சகோதரரே நானும் ஞானஸ்தானம் பெற்றுள்ளேன் "பிதா குமாரன் பரிசுத்த ஆவி" என்ற தேவனின் மூன்று ஆள்த்துவங்களையும் ஏற்கிறேன். ஆகினும் இந்த வசனத்தின் அடிபடையில் நாம் தேவன் மூவர் என்ற முடிவுக்கு வரமுடியாது.
காரணம் இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் ஒரு கழுதையை கொண்டுவர சொன்னார்.
லூக்கா 19:31அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது 'ஆண்டவருக்கு" வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
இங்கு கழுதையை அவிழ்ப்பதற்கு இயேசுவின் "ஆண்டவருக்கு வேண்டும்" என்ற வார்த்தை பயனபட்டதுபோல் மனுஷனின் இரட்சிப்புக்கு அல்லது மனுஷன் மீதுள்ள பாவகட்டை அவிழ்ப்பதற்கு "பிதா குமாரன் பரிசுத்த ஆவி" என்ற நாமங்கள் மூலம் ஞானஸ்தானம் கொடுக்கபடுகிறது அது தேவனின் நியமணம்.
நானே என் மகனிடம் ஒரு இடத்தில் போய் "என் பெயரை சொல்லி" ஒரு பொருளை வாங்கிவர சொன்னால், எனக்குமேல் எனது அப்பாவோ அல்லது எனது தாத்தாவோ இல்லை என்று பொருள் ஆகிவிடாது. மனுஷர்களின் இரட்சிப்புக்கு தேவனின் இந்த மூன்று ஆள்த்துவமுள்ள நாமங்கள் மூலம் ஞானஸ்தானம் கொடுக்கப் படுகிறது. இதன் அடிப்படையில் அதற்க்கு மேல் ஒன்றுமில்லை என்றோ அல்லது இம்மூன்றும் சமம் என்றோ முடிவுக்கு வருவது சரியல்ல என்றே கருதுகிறேன்.
JOHN12 wrote://நாம் ஏன் மூன்றிற்கு மேற்பட்ட தேவனின் ஆள்ததுவங்களை குறித்து யோசிக்கவேண்டும்?///
தேவனின் மகத்துவத்தை எவரும் சரியாக அறியமுடியாது" என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால் அனேக ஆள்த்துவங்கள் பற்றி நான் பேசப்போவது இல்லைதான். ஆனால் தேவனை "மூன்று ஆள்தத்துவம் மாத்திரம் உள்ளவர்" என்ற வரையறைக்குள் கொண்டு வருவதால்தான் நான் இல்லை அதைவிட அவர் மேலானவர் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்.
சுருக்கமாக சொன்னால், "தேவன் மூன்றாய் இருக்கிறார் " என்று எங்கும் சொல்லப்படாமல் உருவான "திரித்துவம்" என்ற வேதத்தில் இல்லாத மனுஷ கொள்கை மூலம் கிறிஸ்த்துவுக்கு தலையாய் இருக்ககூடிய சர்வ வல்லவராகிய தேவன் மட்டுப் படுத்தப்படுகிறார். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். அதே நேரம் "என் பிதா என்னிலும் பெரியவர்/ எல்லோரிலும் பெரியவர்" என்று தெளிவாக சொன்ன தேவ குமாரனான இயேசுவானவர், அவர் சொல்லிய வார்த்தைக்கு மேலாக மனுஷர்களால் உயர்த்தப்படுகிறார்.
குமாரனாகிய இயேசுவும், பரிசுத்த ஆவியானவரும் தேவனால் அனுப்பபட்டவர்கள். இவர்களை அனுப்பிய பிதா எல்லோரிலும் பெரியவர் என்று நான் அறிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன்.
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்
என்று இயேசு சொல்லும் வார்த்தையை தாங்கள் நிராகரிக்காமல் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதற்க்கு விருப்பம் இல்லை என்றால் தேவனின் ஆள்த்துவங்கள் குறித்து நாம் விவாதிப்பதில் எந்த பயனும் இல்லை என்றே கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
JOHN12 wrote:ஆவி என்னும் வசனங்களை பார்க்க வேண்டுமானால் தேடும் தளங்கள் மாத்திரம் உதவாது சகோதரரே..ஆவிகளை பற்றிய மற்ற அனேக வசனங்களும் உண்டு,,மற்ற சில உதாரங்ககளும் உண்டு.
சகோதரரே வேறு வேறு பெயர்களுடன் சுமார் 15 ஆவியானவர்களை வசன ஆதாரத்தோடு எழுதியிருந்தீர்கள். அப்படி ஒரு ஆவியானவரை நான் வேதத்தில் வாசித்திருக்காத காரணத்தால் நேரம் எடுத்து ஒவ்வொரு அவியானவராக போட்டு தேடி பார்த்தால் தாங்கள் குறிப்பிட்ட ஒரு ஆவியானவரும் வேதத்தில் இல்லை. பதில் கேட்டால் அப்படி தேடக் கூடாது என்பது மாதிரி பதில் தருகிறீர்கள். முதலில் தாங்கள் வேத வசனங்களை சுட்டி காட்டும் போது அதில் உள்ள எந்த எழுத்தையோ அல்லது எழுத்தின் உறுப்பையோ மாற்றாமல் சுட்டி காட்டுவது நல்லது. அட்லீஸ்ட் தாங்கள் வசனத்துடன் சேர்த்துள்ள வார்த்தைகளை வேருபடுத்தியாவது காண்பியுங்கள். ஆவியை "ஆவி" என்று எழுதுங்கள் "ஆவியானவர்" என்று வருவதை ஆவியானவர் என்று எழுதுங்கள் பிறகு எங்கு ஆள்தத்துவம் இருக்கிறது என்பதை குறித்து ஆராயலாம்.
அடுத்து, சில ஆள்தத்துவம் உள்ள ஆவிகளை வேதம் ஏன் அக்ரிணையில் மொழி பெயர்த்துள்ளது என்பது இங்கு கேள்வியலல. அதற்க்கு வேறு காரணங்கள் இருக்கலாம். பழைய ஏற்பாட்டை பொறுத்தவரை "தேவ ஆவியானவர்" "கர்த்தருடைய ஆவியானவர்" தவிர வேறு ஏதாவது ஆவியானவர்கள் இருக்கிறார்களா என்பதை மாத்திரம் எனக்கு தெரிவியுங்கள். பிறகு புதிய ஏற்பாட்டுக்கு போகலாம். (பொதுவாக "ஆவியானவர்" என்ற தனிப்பட்ட சுட்டுபெயர் இல்லாமல் வரும் வார்த்தை கர்த்தருடைய ஆவியானவரையோ அல்லது தேவ ஆவியானவரையோ அல்லது இரண்டுபேரும் சேர்ந்த ஒரு நிலையையோ குறிக்கலாம். "அமைச்சர்" என்று பொதுவாக சொன்னால் அது எந்ததுறை அமைச்சரையும் குறிக்கலாம் என்பது எனது கருத்து)
பிதா குமாரனுக்கு சமமாய் இருந்தும் கீழ்பட்டார் என்பதை குறித்து நான் ஏற்கனவே எனது கருத்துகளை நீங்கள் அறிய முந்தைய திரியில் தந்துள்ளேன்.. அவரை மாம்ச ரீதியாய் அறிந்துள்ள நாம் இனி மாம்சத்தில் அறிகிரதில்லை என்று பவுல் சொன்ன கருத்தின் பொருளையும் வலியுறுத்தி உள்ளேன்.
சகோதரரே நான் வேதம் சொல்லும் எந்த வார்த்தையையும் நிராகரிப்பது இல்லை. மேலும் இது அந்த காலத்துக்கு சம்பந்தமானது என்பதுபோல் பிரிப்பதும் இல்லை. வேத வார்த்தைகள் நிரந்தரமானது என்று விசுவாசிப்பன் நான்.
தாங்கள் குறிப்பிடுவதுபோல் "இயேசு தேவனுக்கு சமாமாயிருந்தும்" என்ற வார்த்தை வேத புத்தகத்தில் வருகிறது:
பிலிப்பியர் 2:6அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
பவுல் சொன்ன இந்த வார்த்தையும், இயேசு தன் வாயாலேயே சொன்ன "என் பிதா என்னிலும் பெரியவர்" என்ற வார்த்தையும் வேறுபடுவதால் இதற்கு நானறிந்த விளக்கத்தை இரண்டு வசனத்தின் பொருளும் மாறாமல் விரைவில் தனி திரியில் தருகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பிதா குமாரனுக்கு சமமாய் இருந்தும் கீழ்பட்டார் என்பதை குறித்து நான் ஏற்கனவே எனது கருத்துகளை நீங்கள் அறிய முந்தைய திரியில் தந்துள்ளேன்.. அவரை மாம்ச ரீதியாய் அறிந்துள்ள நாம் இனி மாம்சத்தில் அறிகிரதில்லை என்று பவுல் சொன்ன கருத்தின் பொருளையும் வலியுறுத்தி உள்ளேன்
(2) அனுப்ப பட்டவன் தன்னை அனுப்பவரிலும் பெரியவர் அல்ல
(3) ஊழியக்காரன் தன எஜமானிலும் பெரியவன் இல்லை
(4) நீங்கள் ஜெபிக்கும் பொழுது (என்னை நோக்கி அல்ல) பரம மண்டலத்தில் இருக்கின்ற என் பிதாவே என்ற பிதாவை நோக்கி வேண்டி ஜெபிக்க கற்று கொடுத்து இருக்கின்றார்
இவைகள் எல்லாம் இயேசு தன வாயால் சொன்ன வார்த்தைகள்
உங்களுக்கு இயேசுவின் மீது அதிக அன்பு இருந்தா அவருடைய வார்த்தையை கை கொள்ளுங்க அவரை தேவனை விட பெரியவரா காட்ட நினைக்காதிங்க...
இயேசு அதை எல்லாம் பார்க்கவே மாட்டார்
உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்
இயேசு சீடர்களின் கால்களை கழுவினார் என்று
இயேசு மனிதர்களால் வரும் மகிமையை ஏற்று கொள்வது இல்லை என்று தன வார்த்தையில் சொல்லி இருக்கின்றார்
நீங்க அவரை என்ன தான் அவரை தேவனை விட உயர்த்தினாலும் தேவனுக்கு சமமாக்கினாலும் அவர் அதை எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார் இதை நான் சொல்லவில்லை நீங்கள் தேவனுக்கு சமமாக்கின ஆண்டவராகிய இயேசு தான்
நான் மனிதனால் வருகின்ற மகிமையை ஏற்று கொள்வது இல்லை என்று சொல்லிவிட்டார் அவர் மனம் மாறாதவர்
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் (வசன ஆதாரம் )
ஏனென்றால் நீங்க சொல்லுவிங்க அது பூமில இருக்கும் பொழுது ஆனா இப்ப அவர் பரலோகத்தில் இருக்கார் அதானால தான் இயேசு எப்பவும் மாறாதவர் என்று வசன ஆதாரம் கொடுத்தேன் .................
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 22nd of February 2012 08:49:07 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
இந்த திரியை ஆரம்பத்தில் இருந்து படித்தீர்களா? எழுப்ப பட்ட கேள்வி என்னவெனில் யகோவா தேவனும் ,ஏசுவும் ஒருவரா என்பது?
யகோவா என்பது ஏசுவையும் குறிக்கும் என்ற வசன ஆதாரம் தரபட்டுள்ளது பின்பு வேறு அனேக கேள்விகள் வந்தன.,
Edwin/////(1) என் தேவன் என்னை விட பெரியவர்
(2) அனுப்ப பட்டவன் தன்னை அனுப்பவரிலும் பெரியவர் அல்ல
(3) ஊழியக்காரன் தன எஜமானிலும் பெரியவன் இல்லை
(4) நீங்கள் ஜெபிக்கும் பொழுது (என்னை நோக்கி அல்ல) பரம மண்டலத்தில் இருக்கின்ற என் பிதாவே என்ற பிதாவை நோக்கி வேண்டி ஜெபிக்க கற்று கொடுத்து இருக்கின்றார்
இவைகள் எல்லாம் இயேசு தன வாயால் சொன்ன வார்த்தைகள்///
சகோதரர் அன்பாய் கூறுகிறதை ஏற்றுகொள்கிறேன்..இயேசுவின் கீல்படிதல்களை பற்றிய காரியம் மிக ஆச்சர்யமானது..
Edwin//// உங்களுக்கு இயேசுவின் மீது அதிக அன்பு இருந்தா அவருடைய வார்த்தையை கை கொள்ளுங்க அவரை தேவனை விட பெரியவரா காட்ட நினைக்காதிங்க...
இயேசு அதை எல்லாம் பார்க்கவே மாட்டார்
உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்///
எட்வின் அவர்களே .,இப்போதும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.,
நான் எப்போதும் இயேசு பிதாவை பார்க்கிலும் பெரியவர் என கூறியதே கிடையாது..
சகோதர்கள் ஆள்ததுவதை குறித்து அறிந்து கொள்ள நான் எப்போதும் குமாரன் தேவனுக்கு சமமாய் இருந்தும் கீல்பட்டார் எனவே வேத அடிப்படையில் கூறுவேன்..
தாங்கள் பங்கேற்ற ஒரு திரியில் தானே இவைகளை விளக்கினேன்!!
பிதா குமாரனிடம் இதை குறித்து பேசுவதை நீங்கள் ஒருகாலமும் வாசித்ததில்லையா..
ஏசாயா 49:6 யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.
மேற்கூறிய வசனத்தில் 'தாசனாய் இருப்பது என எழுதப்பட்டுள்ளது'..அப்படியானால் தாசனாய் இருபதற்கு முன் எவ்வாறு இருந்தார். தங்களுக்கு தெரியுமா?? தெரிந்தால் பகிருங்கள்..
இயேசு சுய நாமத்தில் வராமல் பிதாவின் நாமத்தில் பூமிக்கு வந்தார்? தங்களுக்கு தெரியுமா?? பிதாவிற்கு மகிமையை தேடி தனக்கு மகிமையை தேடாமல் பிதாவிற்கு மகிமையை தேடி தானே!!
நீங்கள் கூறுகிற அதே கருத்தை தான் நானும் கூறுகிறேன் என்பதை தெரிவிப்பதை சகோதரர் அறிந்து கொள்ளுங்கள்..
தற்போதைய ஆளுகை குமாரனுக்கு கொடுக்கப்பட்ட ஆளுகை அவர் உலக இறுதி வரை ஆளவேண்டியது..முடிவின் பின் தான் பிதாவின் ஆளுகை..பாருங்கள்.
1 கோரி :24 ,25. அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.
ஆளுகையை பிதாவிற்கு ஒப்பு கொடுத்த பின் குமாரன் என்ன செய்வார்..தாசனாய் இருந்து காரியத்தை முடித்தாரே!! குமாரனின் மகிமையை ஆராய்ந்து பாருங்கள் சகோதரரே..
அவர் அதிசயமானவர் என அதினால் தான் வேதத்தில் சொல்லபடுகிறார்..
சத்ரு பாதபடியாகி போடப்படும் வரைக்கும் தாசனானவர் (குமாரன்) பிதாவிற்கு கீழ்பட்டவர் தான். நான் நீங்கள் காண்பிக்கிற எந்த வசனத்னையும் திரிக்கவும் இல்லை கண்டுகொள்ளாமல் விட்டதும் இல்லை..