இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தள நிர்வாகி அவர்கள் கவனிக்கவும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
தள நிர்வாகி அவர்கள் கவனிக்கவும்!
Permalink  
 


நமது தளத்தில் இயேசு கிறிஸ்த்து யார்?  பற்றிய பல்வேறு விவாதங்கள் மீண்டும் தொடங்கிவிட்டது.    
 
வசனம் இவ்வாறு சொல்கிறது:
 
மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
 
மேலும்,
 
I கொரிந்தியர் 12:3   பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
 
No one can say, “Jesus is Lord,” but by the Holy Spirit.
 
தேவனை அறிந்துகொள்ளுதல் என்பது ஒரு அனுபவம் சார்ந்த விஷயம் என்றே நான் கூறுவேன்.  அதாவது தேவனின் ஆழங்களை அறிந்த  பரிசுத்த ஆவியை பெறாதவர்கள் இயேசுவை கர்த்தர் என்று சொல்ல முடியாது என்று வசனம் சொல்கிறது. பரிசுத்த ஆவியை பெற்று  ஒருவருக்கு  இயேசுவை பற்றியும் தேவனை பற்றியும் சரியான வெளிப்பாடு இல்லை என்றால் அவரை யாரும் அறிந்துவிட முடியாது. நான் பார்த்தவரையில் தேவன் தன்னை  அவரவருக்கு அவரவர் விசுவாசத்தின் அடிப்படையில்  வெளிப்படுத்தியிருப்பதை அறிய முடிகிறது.
 
தேவனின் செயல்பாடுகள் அடிப்படையிலேயே அவருக்கு நாமங்கள் வழங்கப்பட்டுள்ள சிருஷ்டிப்பின்போது ஒன்றான  தேவனாக இருந்தவர் சர்வ வல்லமையுள்ள யஹோவாகவும் பின்னர் இரட்சிப்பின் நிறைவேற்றத்தின்போது இயேசுவாகவும் மனுஷர்களை தேவனின் சத்தியத்துக்குள் வழி நடத்தும் நிலையில்  அவர்   ஆவியானவராகவும் இருக்கிறார். இவை எல்லாவற்றையும் செய்கிற தேவன் ஒருவரே! நான்  ஒருவர்தான் என்று அவரே சொல்லுகிறார்   
 
ஏசாயா 44:24  கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
 
சங்கீதம் 86:10 தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

 

ரோமர் 3:30 விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.

இவ்வாறு இருக்கையில் தேவன் தன்னை ஒருவருக்கு சரியாக வெளிப்படுத்தாவிட்டல் அவர்கள் உண்மையை அறிந்துகொள்ள முடியாது. இங்கு நமக்கு தெரிந்த கருத்தை அடுத்தவர்மேல் திணிப்பது என்பது சாத்தியம் அல்ல. உண்மை அறியாதவர் எப்படி அதை ஏற்க்க முடியும்? 
 
இங்கு யாரையும் குறை சொல்ல முடியாது. நமது தளத்தில் எழுதும் சகோ. அன்பு, சகோ. சந்தோஷ் மற்றும் சகோ. ஜான் மூவருமே அவரவர்
தேவனை  அறிந்துகொண்டுள்ள விதத்தில் வெவேறு விசுவாசம்  உள்ளவர்களாக இருப்பதை நாம் ஏற்கெனவே அறிவோம். நம்முடய  விசுவாசம் தேவன் ஒரேவேர் அவர் பல்வேறு பரிணாமங்களின் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பதே.  அவரவர் விசுவாசத்துக்கு என்ற  சில  வசன ஆதாரங்கள் இருப்பதையும் நாம் அறியமுடியும். எனவே யாரும் யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் மாற்றிவிட முடியாது.     
 
இந்நிலையில் தேவனிடம் தன்னை வெளிப்படுத்துமாறு தொடர்ந்து ஜெபித்து "ஆண்டவரே உம்மை பற்றிய சரியான புரிதலை எனக்கு தாரும் நான் தவறான பாதியில் அல்லது தவறான விசுவாசத்தில் சென்றுவிடாதபடி என்னை காத்துகொள்ளும்" என்று தொடர்ந்து ஜெபித்தல் ஒன்றே தேவனை நாம் அறியும் வழி என்று கருதுகிறேன்.
 
மற்றபடி  "இயேசு யார்? அவரை ஆராதிக்கலாமா? தொழுது கொள்ளலாமா? என்பது  போன்ற முடிவை எட்டமுடியாத, ஒருநாளும் முடிவுக்கு வராத விவாதங்கள் மீண்டும் தேவையா?
   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

JOHN12 wrote:

If some of our brothers are still having doubt about foundation (Christ), as per my concern, there is no point to build further...

Surely I can tell u all that it will not add any spiritual value to the new comers/visitors by just telling stories and wonders of GOD.Fruiltfull truths also needed to be told about god with solid evidence. 


சகோதரர் அவர்களின் இந்த கருத்து முற்றிலும் உண்மையான ஓன்று. அஸ்திபாரம் சரியில்லை என்றால் அதன் மேல் கட்டப்படும் வீடு  நிச்சயம் நிலை நிற்காது என்பது நாம் அறிந்தது. ஆனாலும் யார் யாருக்க எத்தனை  முறை ஒரு கருத்தை திரும்ப திரும்ப சொல்லவேண்டும்  என்ற ஒரு நியதி இருக்கிறது அல்லவா? நாம் சொல்வதை  ஏற்காத வர்களிடம் திரும்ப திரும்ப சொல்லி சண்டையிட்டு கொள்வதில் என்ன பலன்?  

தேவனை அனுபவபூரவமாக அறிந்து உணர்ந்த நான் முதலில் முத்தமிழ் என்ற ஒரு தளத்தில் தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க போராடினேன் எத்தனையோ பதிவுகளை கொடுத்தும்  பயனில்லை. பின்னர் இன்னொரு மன்றத்தில் போய் இந்துசாமிகள் மெய்தேவனல்ல என்று எழுதி  போராடினேன்  எந்த பயுனுமில்லை. பின்னர் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் தேவன் எனக்கு தெரிவித்த பல காரியங்களை  எழுதினேன் அனேக மன  கஷ்டங்கள்தான் உண்டனது, அடுத்து கோவை பெரேயன்ஸ் தளத்தில் சுமார் இருநூறு பதிவுகளுக்குமேல் கொடுத்தேன். சகோ. அன்பும் அங்கு விவாதித்தார்கள் ஆனால் அவர்களின் ஒரு சிறு  கொள்கையை கூட எங்களால் மாற்ற முடிய வில்லை. பின்னரே இந்த தளத்தில் எழுத ஆரம்பித்தேன். துவக்கத்தில் நான் சகோ. அன்பு சகோ. சந்தோஷ்  சகோ. இளங்கோ மற்றும் சகோ. தீமோத்தே இன்னும் அனேக சகோதரர்கள் இணைந்துதான் இந்ததளத்தில் எழுதினோம்  நாளடைவில் ஒவ்வொருவருக்கும் இடையில் அடிப்படை  கருத்து  வேறுபாடு வரவே அவரவர் தனிதனி தளங்களை உருவாக்கி எழுதி வருகிறார்கள். 
 
என் அனுபவத்தின் மூலம்  நான் அறிந்துகொண்ட பாடம் "தேவன் ஒருவருக்கு உண்மையை உணர்த்தாவிட்டால் அவர்கள் எந்த உண்மையையும் அறிய முடியாது" எனவே தேவனைபற்றிய உண்மையை அறியவேண்டும் என்றால் தேவனை நோக்கி விடாப் பிடியாக கண்ணீரோடு மன்றாடி ஜெபிபதை தவிர வேறு எந்த வழியுமே இல்லை. அவர் உணர்த்தினால்தான்  அவரை பற்றிய உண்மை புரியும்  என்பதுதான். 
 
இயேசுவும் கூட பேதுருவிடம் அதையே கூறினார்.  
 
மத்தேயு 16:17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

ஆம்! சரியான உண்மைகளை தேவன் ஒருவரே வெளிப்படுத்த முடியும்.  
 
நான் சகோ. அன்பு மற்றும் சந்தோஷ் அவர்களின் எழுத்துக்கள் பற்றி அதிகம் அறிவேன் அவர்களின் பல கருத்துக்கள எனக்கு பிடிக்கும். அத்தோடு தங்கள் போன்ற திரித்துவத்தை பேசும் சகோதரர்களின்  வார்த்தையிலும் உண்மைகள் இருப்பதால்  யாருடனும் நான் போராடுவதும் இல்லை. தங்களுக்கு தெரிவிக்கபட்டத்தை தாங்கள்  சொல்கிறீர்கள் தங்களுடன் போராட எனக்கு என்ன இருக்கிறது.
 
நமக்குள் இருக்கும் ஆவியானவரையே  பாருங்கள் நாம் செய்யும் தவறு குறித்து ஒருமுறை இரு முறை உணர்த்துவர் அதையும்மீறி நாம் அந்த தவறை செய்யும்போதுஅவர் மௌனமாகிவிடுவார். அவர் மனுஷனோடு தொடர்ந்து போராடுவதில்லை. பிறகு நாம் ஏன் அதிகம் போராட வேண்டும் என்பதே என்னுடய கருத்து.  
 
"தேவன் ஒருவர்" என்றும்,  "நான் ஒருவன்" என்று தேவனே  சொல்லும் எத்தனை வசனத்தை  எடுத்து காட்டினாலும், வேதத்தில் எங்குமே நேரடியாக சொல்லப்டாத ஏதாவது ஒரு காரியத்தை சொல்லி "அவர் மூவராய் இருக்கிறார்"  என்பதை நிரூபிபதையே தாங்கள் விரும்பு கிறீர்கள். பிறகு சொல்லப்படும் வசனத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அதேபோல் இயேசுவே "பிதா என்னிலும் பெரியவர்" என்று சொல்லியிருக்க,  இல்லை அவர் தேவனுக்கு சமமானவர் என்று இன்னொரு வசனத்தை வைத்தே தாங்கள் பேசினாலும் முதலில் இயேசு சொன்ன வார்த்தைக்கு என்ன மதிப்பிருக்கிறது? பிறகு வசன ஆதாரங்கள் எங்கிருந்து கொண்டுவர முடியும்? நல்லது!  தங்கள் மனதில் எனது  கருத்துக்கள் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தவில்லை. ஏனெனில் நீங்கள் அறிந்திருப்பதில் உறுதியாக இருக்கிறீர்கள் இந்நிலையில்  தங்களிடம் போராடி என்ன பயன்? சொல்லுங்கள்!
 
அதுபோல் அவரும் அவரது கருத்தில் உறுதியாக இருக்கிறார்.  மற்றவர்கள் ஏன்? ஒரு கத்தோலிக்க கிறிஸ்த்தவருக்கு சிலை வணக்கம் கூடாது என்று வேதம் சொல்வது தெரியாமலா இருக்கும் ஆனால் அவரும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அதை தொடர்ந்து  செய்துக் கொண்டுதான் வருகிறார்கள். 
 
"யாரையும் திருத்த முடியாது" என்று சொல்வதால் அவர்களை அப்படியே விட்டுவிடவேண்டும் என்பது எனது கருத்தல்ல. நாம் அறிந்த உண்மைகளை  எழுதி வைப்போம். முடிந்த அளவு  பிறருக்கு விளக்க முயல்வோம் ஏற்ப்பவர்கள் ஏற்க்கட்டும் ஏற்காதவர்கள்  விலகி  போகட்டும். அனால் சகோதரர்களுக்குள் வெறுப்பை / கோபத்தை
உண்டாக்கும் கடின விவாதங்கள் வேண்டாமே! 
 
கலாத்தியர் 5:15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள். அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
 
என்று வேதம் சொல்கிறதே.  மேலும் ஓரிருமுறை புத்தி சொன்னபிறகு
விலகிவிடவும் வேதம் வலியுறுத்துகிறது
 
தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
 
அதே நேரத்தில் ஒருவன் வேதப்புரட்த்தனா அல்லது அவன் நரகத்துக்கு பாத்திரனா என்பதை நாம் தீர்க்க கூடாது என்றும் வேதம் சொல்கிறது
 
I கொரிந்தியர் 4:5  கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்
 
எழுத்துவாக்கில் கோபபட்டு  நம் சகோதரனை முட்டாள் மூடன் என்று சொன்னால்  நாம் நரகத்துக்கு பாத்திரவனாககூட ஆகிபோகலாமாகை யால்  என் எழுத்துக்கள் குறித்து தேவனின் நியாய தீர்ப்புக்கு நான்  பயந்திருக்கிறேன் எனவேதான் யாரும்  கோபமூட்டும் வார்த்தைகள் வெளிப்பட்டால் விலகிவிடுவேன்.
 
தாங்கள் தேவனிடம் இருந்து நேரடியாக வெளிப்பாட்ட்டை பெற்றீர்களா அல்லது பாரம்பரிய விசுவாசத்தை நம்புகிறீர்களா?  என்பது எனக்கு தெரியாது. ஆனால் யார் சொல்வதன்  அடிப்படையிலோ அல்லது  தங்கள் சொந்த  வேத ஆராட்சியின் அடிப்படையிலோ தஙகள்  கருத்தில் உறுதியாக நீங்கள் நின்று அதை நிரூபிக்க நினைக்கும்போது. 
 
எந்த  மனுஷனாலும் போதிக்கப்படாமல் தேவ ஆவியினால் அபிஷேம் பெற்று, கர்த்தருடைய ஆவியால் நடத்தபட்டு, பரிசுத்த ஆவி  மற்றும் கிறிஸ்த்துவின் ஆவியின் வல்லமையால் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட அனேக காரியங்கள் என் கண்ணாலேயே பார்த்து , "தேவ ஆவி வேறு, கர்த்தரின் ஆவி வேறு, கிறிஸ்த்துவின் ஆவி வேறு (ரோ 8:9,10௦,11) என்பதை அனுபவ பூர்வமாக அறிந்த என்னால் எப்படி மனுஷ போதனைகளுக்கு செவிகொடுக்க முடியும்  சகோதரரே?  எனவே என்னையும் கூட யாரும் மாற்ற முடியாது! தேவன் எவினாலன்றி  தங்களாலும்  என்னை நம்ப முடியாது.  
 
வேதாகமத்திறக்கும்  ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அது என்னவெனில் ஒருவர் எந்த விசுவாசத்தோடு அதை படிக்கிறாரோ அதற்க்கு ஏற்றா போல் ஒரு கருத்தையோ அல்லது ஒருசில வசனங்களையாவது சுட்டி காட்டிவிட முடியும்.
 
பட்டையகத்தி வைத்திருக்கும் ஒருவனிடம் "ஏன் இப்படி பட்டயத்தை கையில் வைத்துகொண்டுஅலைகிறாய்? என்று கேட்டால் "பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்"
என்று இயேசுவே சொல்லியிருக்கிறார் அதனால் வாங்கி வைத்திருக்கிறேன்  என்று சொல்வான்.  வேசியிடம் போய் நீ மனம் திரும்பு என்று சொன்னால் "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்" என்று இயேசு சொல்லியிருக்கிறார் எனவே உங்களுக்கு முன்னே தேவ ராஜ்ஜியம் போய்விடுவேன் என்று கூற முடியும். 
 
இதெல்லாம் யாருக்கும்  உதவாத பயனற்ற பதில்கள்!  
 
அதேபோல்  "இயேசு" ஒன்றான மெய் தேவனல்ல  என்ற நோக்கிலேயே  வேதத்தை தேடினால் அவருக்கு அப்படியே தெரியும். இயேசு தேவன் தான் என்ற நோக்கில் தேடினால அது அப்படியே  தெரியும். நாம் எந்த விசுவாசத்தில் இருக்கிறோமோ அது போலவே வசனங்கள் நமக்கு தென்படும். எனவேதான் விசுவாசத்தால் எல்லாம் கூடும் என்று வேதாகமம் சொல்கிறது.   இயேசு பொதுவாக பிசாசின் எல்லா வல்லமைகளையும் முறியடித்து அற்ப்புதம் செய்பவர்தான் ஆனால் அவரது சொந்த ஊர்காரர்கள் அவிசுவாசம் அவரது வல்லமையையே  தடை செய்ததே.
   
எனவே நான் இங்கு சொல்ல வருவது என்னவெனில் ஒருவர் ஒரு வசனத்தை காட்டி ஒரு செய்தியை சொல்லும்போது இன்னொருவர் இன்னொரு வசனத்தைகாட்டி அதை INVALID பண்ணுவது என்பது  ஒரு சரியான நிலை அல்ல. வேதத்தில் உள்ள ஒவ்வொரு  வசனத்துக்கு அதற்கென்ற தனி வல்லமை உண்டு! அதது அனுப்பபட்டவேலையை நிச்சயம் செய்துமுடிக்கும். அது அவரவர் விசுவாசத்தின்  அடிப்படையில் நிறைவேறும்.
 
தாங்கள் நினைப்பதுபோல் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை. ஒரு சந்தேகம்வந்தால் அதை நிச்சயம் கிளியர் பண்ணிவிடமுடியும் ஆனால் இப்படித்தான் என்று உறுதியாக நிர்ப்போரை ஒன்றும் பண்ண முடியாது. அதாவது ஒன்றும் இல்லாத பாத்திரங்களை எதையாவது ஊற்றி நிரப்பி விட முடியும் ஆனால் ஏற்கெனவே "நான் எல்லாவற்றையும் அறிந்து விட்டேன் இதுதான் உண்மை" என்ற நோக்கில்  முழுமையாக நிரம்பி யிருக்கும் பாத்திரத்தில் எவ்வளவு வேகமாக எதை ஊற்றினாலும் அது வெளியேதான் கொட்டும். அதனால் எந்த  பயனும் இல்லை வீண்  கோபம்தான் உண்டாகும். எனவேதான் இந்த விவாதத்தை நிறுத்த பரிந்துரை செய்தேன்.  
    
இல்லை! இது அவசியம். நிச்சயம் விவாதித்துதான் ஆகவேண்டுமென்று விருப்பம் இருந்தால் கடின வார்த்தைகள் எதையும்  பயன்படுத்தாமல் சுமூகமான முறையில் தொடர்ந்து விவாதிக்கலாம். அதற்க்கு நான்  தடையாக இருக்க விரும்பவில்லை.   
  


-- Edited by SUNDAR on Wednesday 25th of January 2012 11:03:26 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SUNDAR wrote:
மற்றபடி  "இயேசு யார்? அவரை ஆராதிக்கலாமா? தொழுது கொள்ளலாமா? என்பது  போன்ற முடிவை எட்டமுடியாத, ஒருநாளும் முடிவுக்கு வராத விவாதங்கள் மீண்டும் தேவையா?
   

அன்பு சகோதரர்களே,  கிறிஸ்தவர்களாகிய  நாம் இன்னும் "இயேசு யார்" "தேவன் யார்" "யாரை கும்பிடுவது" என்பதை அறியாமல் நமக்குள்ளேயே அடித்து கொண்திருந்தால்  புதிதாக வரும் யாரும்  இந்த தளத்துக்குள் உள்ளே வரவே மாட்டார்கள். மேலும் யாரும் தாங்கள் கொண்டுள்ள அபிப்ராயத்தை அவ்வளவு சீக்கிரம்  மாற்றிவிடப் போவது இல்லை  என்பது அதி நிச்சயம், மாறாக கடின வார்த்தைகள் மட்டுமே  வெளியில் வரும்.   

எனவே தயவு செய்து இயேசுவை விவாத பொருளாக்கி விவாதிப்பதை நிறுத்திவிடலாம். நிறுத்திவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

நமது ஆண்டவரையும், இறைவனையும் மகிமைப் படுத்தும் எத்தனையோ சாட்சிகள் மற்றும் வசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் அருமையான கருத்துக்களை நம்மால் எழுதமுடியும்.

எனவே மற்றவர்களுக்கு பிரயோஜனம் உள்ள நல்ல கருத்துக்களை/ சாட்சிகளை/ கட்டுரைகளை மாத்திரம் பதிவிடுவோம்.

எல்லோரையும் மதிப்போம்.

 அன்புடன் 

இறைநேசன்   



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//எனவே தயவு செய்து இயேசுவை விவாத பொருளாக்கி விவாதிப்பதை நிறுத்திவிடலாம். நிறுத்திவிடும்படி அன்புடன் வேண்டுகிறேன்.//

Good decision, I welcome it.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Dear friends and brothers,

     I am also feeling not good about the confusions happening between the conversations..

But,

     If some of our brothers are still having doubt about foundation (Christ), as per my concern, there is no point to build further...

     Surely I can tell u all that it will not add any spiritual value to the new comers/visitors by just telling stories and wonders of GOD.Fruiltfull truths also needed to be told about god with solid evidence.

    If we still thought of building a community without knowledge of basic beliefs, it is going to be an example shown by our Yehushuwah(yesu).He has already told about foolishly built house.Has n’t he??

Mat-7:24

Therefore whosoever heareth these sayings of mine, and doeth them, I will liken him unto a wise man, which built his house upon a rock:

Mat-7:25

And the rain descended, and the floods came, and the winds blew, and beat upon that house; and it fell not: for it was founded upon a rock.

Web community also a church!!!

 





__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே!!!

   அப்படியானால் விளக்கம் தேவைப்படும் பட்சத்தில் வினவலாம்,பதில் தரலாம்..கடினவார்தைகள் தொடரும் பட்சத்தில் விட்டுவிடலாம்..ஒரு விவாதம் தொடங்கும் பட்சத்தில் விவாதத்தில் பங்கேற்கும் நபர் தனது விசுவாசத்தை பதிவு செய்தால் நேரம் மிச்சமாகும் என்பது என் கருத்து..

   சகோதரரே மாறாதது தான் அடிப்படை விசுவாசம்..அது இயேசு சொன்ன உவமையில் வருவது போன்ற வசன விதை...விதைத்த பின் விதை மாறாது..ஆனால் வரும் பலன் விதைக்கப்பட்ட நிலத்தை போல மாறக்கூடியது..

   சகோதரரே..நீங்கள் கூறுவது போல் மூன்று தேவன் என்பது எனது விசுவாசம் அல்ல.தேவன் ஒருவர் என்பது என் விசுவாசம்.பிதா குமாரனைவிட பெரியவர் என்பதும் எனது விசுவாசம்..

 ஆனால் எருமைக்கு எர்ரம்,ஆகவே குதிரைக்கு குர்ரம் என வாதிடுபவர்களுக்கு,

  நான் பிதாவிற்கு இயேசு சமமாய் இருந்தும் கீழ்படுதினார் என வேத அடிப்படையில் காண்பித்தேன்..



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//ஆனால் எருமைக்கு எர்ரம்,ஆகவே குதிரைக்கு குர்ரம் என வாதிடுபவர்களுக்கு,//

எனக்குத் தெரிந்து இத்தளத்தில் ஜாண்12-ன் இக்கூற்றுக்கு மிகவும் பொருத்தமானவராக ஜாண்12-தான் காணப்படுகிறார். எனது இக்கூற்றுக்கு ஆதாரம் அவரது கூற்றின் முன்/பின் வரிகளிலேயே காணப்படுகிறது.

முன்வரி:

//பிதா குமாரனைவிட பெரியவர் என்பதும் எனது விசுவாசம்..//

பின்வரி:

//பிதாவிற்கு இயேசு சமமாய் இருந்தும் கீழ்படுதினார் என வேத அடிப்படையில் காண்பித்தேன்//

Good comedy.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ. அன்பு அவர்களே..

    உங்களுக்கு நான் கூறினது இவ்வளவாய்   உரைத்ததில் எனக்கு ஆச்சர்யம் எதுவும் இல்லை..

    எனது முன் பின் வரிகளை எதற்கு  ஆதாராம் என காண்பிக்க முயற்சிகிறீர்கள் .திரிகளில் பதில் அளிக்காமல் இங்கு மல்லுக்கு நிற்பது போல் காண்பித்தாலும் அது இயலாமையின்   வெளிபாடே ..ஏதோ 'யுரேக்கா' என கண்டுபிடித்து விட்டதாக பிதற்றிகொல்கிறீர்கள்!!

   கணக்கு புத்தகம் போல் நீங்கள் ஆவி இல்லாமல் வேதம் படிக்கும் பட்சத்தில் நான் கூறின உதாரனத்திற்க்கு போருதமானவராகவே ஆகிறீர்கள்...ஆனால் அதை நீங்களே பதில் அளித்து இவ்வாறு  ஒப்புகொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை..

GREAT COMMEDY..

biggrin

KIND NOTE:நீங்கள் சகோ.ஜான் அவர்களுடன் நடத்தும் குழாயடி சண்டையை முதலில் நிறுத்துங்கள்..நிறுத்தும் பட்சத்தில் என்னை போன்றவர்களால் இவ்வாறு நிர்வாகிக்கு எழுத அவசியம் இருக்காது..

வயதில் சிறியவர்களிடதும் மரியாதை  பாராட்டுங்கள்.அது உங்கள் தரத்தை உயர்த்தும் நிச்சயம்..



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//

சகோ. அன்பு அவர்களே..

    உங்களுக்கு நான் கூறினது இவ்வளவாய்   உரைத்ததில் எனக்கு ஆச்சர்யம் எதுவும் இல்லை..

    எனது முன் பின் வரிகளை எதற்கு  ஆதாராம் என காண்பிக்க முயற்சிகிறீர்கள் .திரிகளில் பதில் அளிக்காமல் இங்கு மல்லுக்கு நிற்பது போல் காண்பித்தாலும் அது இயலாமையின்   வெளிபாடே ..ஏதோ 'யுரேக்கா' என கண்டுபிடித்து விட்டதாக பிதற்றிகொல்கிறீர்கள்!!

   கணக்கு புத்தகம் போல் நீங்கள் ஆவி இல்லாமல் வேதம் படிக்கும் பட்சத்தில் நான் கூறின உதாரனத்திற்க்கு போருதமானவராகவே ஆகிறீர்கள்...ஆனால் அதை நீங்களே பதில் அளித்து இவ்வாறு  ஒப்புகொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை..

GREAT COMMEDY..

biggrin

KIND NOTE:நீங்கள் சகோ.ஜான் அவர்களுடன் நடத்தும் குழாயடி சண்டையை முதலில் நிறுத்துங்கள்..நிறுத்தும் பட்சத்தில் என்னை போன்றவர்களால் இவ்வாறு நிர்வாகிக்கு எழுத அவசியம் இருக்காது..

வயதில் சிறியவர்களிடதும் மரியாதை  பாராட்டுங்கள்.அது உங்கள் தரத்தை உயர்த்தும் நிச்சயம்..

//

இது காமெடியல்ல, உளறல்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

நல்லது..உளறலாகவே இருக்கட்டும்..படிக்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள்..எது உளறல் என்று?

தங்கள் கோபமும்,பரிகாசமும் நியாயமற்றது...
உங்களின் இத்தகைய போக்கின் நிமித்தம் தான் சகோ.நேசன் அவர்களின் கூற்றுப்படி தங்களிடம் விவாதிக்க விரும்பவில்லை..
தாங்கள் சிறிது காலம் முந்தைய போக்கிலிருந்து விலகி சரியானபடி கருத்துகளை பதிந்தீர்கள்.இப்போது குழப்ப அரசியலை ஆரம்பிதுவிடீர்கள்..

நானும் இத்துடன் தங்களுடன் விவாதிப்பதை நிறுத்துகிறேன்..






__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//நல்லது..உளறலாகவே இருக்கட்டும்..படிக்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள்..எது உளறல் என்று?//

படிக்கிறவர்கள் புரிந்து கொள்வார்களோ இல்லையோ, என் தேவன் நிச்சயம் அறிவார். அது போதும் எனக்கு.

//தங்கள் கோபமும்,பரிகாசமும் நியாயமற்றது...//

இதையும் தேவனின் நியாயத்தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.

//உங்களின் இத்தகைய போக்கின் நிமித்தம் தான் சகோ.நேசன் அவர்களின் கூற்றுப்படி தங்களிடம் விவாதிக்க விரும்பவில்லை..//

ஆமாம், எப்போதைய்யா நீங்கள் விவாதித்தீர்கள்? ஆரம்பத்திலிருந்தே என்னைக் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்குவதை மட்டுமே செய்தீர்கள். என்னைத் தாக்குவதற்கு சரியான (வசன) முகாந்தரம் இல்லாததால், உங்களுக்கே உரிய பாணியில் உளறினீர்கள், அல்லது காமெடி செய்தீர்கள். இப்போதுகூட கெடவில்லை. நான் எழுதின வேதாகம கருத்துக்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துப்போட்டு, இது இந்த வசனத்துக்கு எதிரானது எனச் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். சும்மா, சும்மா சிறுபிள்ளைத்தனமாக பேசக்கூடாது.

//தாங்கள் சிறிது காலம் முந்தைய போக்கிலிருந்து விலகி சரியானபடி கருத்துகளை பதிந்தீர்கள்.இப்போது குழப்ப அரசியலை ஆரம்பிதுவிடீர்கள்..//

எல்லாம் நீங்கள் பார்க்கிற கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. ஏதோ சிலகாலம் உங்களுக்கு “நல்ல கண்ணோட்டம்” இருந்திருக்கும்போலுள்ளது.

//நானும் இத்துடன் தங்களுடன் விவாதிப்பதை நிறுத்துகிறேன்..//

நீங்கள் விவாதிப்பதை, sorry, உளறுவதை நிறுத்த முன்வந்ததற்கு மிகமிகமிக நன்றி.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

Brother.Anbu,

திரித்துவம் திரியை படித்தாலே தங்களின் சுவாபம் பற்றி அறியலாம்..

நீங்கள் ஆதாரம் தருவதாக கூறி புத்திஈனமாய்  என்று எதேதோ சொல்வீர்கள்,பரிகசிபீர்கள்...

நீங்களே உங்கள் எழுத்துகளினால் நான் தேவமகிமையை தேடுகிறேன் என்றும்,விவாதிக்கலாம் எனவும்  கூறினீர்கள் ......

இப்போது உளறுகிறேன் என்கிறீர்கள்..

இதனை படித்த பின்னும் சிறுபிள்ளைதனமாக மீண்டும் மீண்டும் விளக்கம் என்று எதையோ ஒன்றை அளிக்க துடிபீர்கள்  என்பதையும் நான் அறிவேன்.

இதோ.,உங்கள் இத்தகைய மாறுபாடான எழுத்துகளை புரகணிகிறேன்..

சுவாபபடி  பார்த்தால்,தங்களை நன்றாக பரிகசிக்க ஏது உண்டு...ஆனாலும் அத்தகைய சிந்தனைகளை புறக்கணித்து பேச நினைத்தேன் ...

புத்தியீனமாய் பரிகாசத்தை தூண்டிவிடுகிறீர்கள்..என் தேவன் தங்களுக்கு நிச்சயம்  நல்ல புத்தி தருவார்..இத்துடன் வீண் பேச்சையும், பரிகாசதையும் முடிந்தால் நிறுத்துங்கள்....

தங்களுக்கு பதில் அளித்து நேர விரயம் செய்ய விரும்பவில்லை..தங்களுடன் குழாயடி சண்டையும் எனக்கு வேண்டாம் ...

நேர விரயத்திற்கும்,நாகரீகமற்ற விவாதங்களுக்கும் நான் தளத்திற்கு வரவில்லை ...

 

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

பார்த்தீர்களா சகோதரரே? சிறிது நேரத்துக்குள் இப்படிபட்ட விவாதம் தேவையில்லை என்ற நிலைக்கு நீங்கள் இருவருமே வந்துவிட்டீர்களே. நான் எவ்வளவோ விவாதித்துவிட்ட அனுபவத்தில்தான் இந்த ஆலோசனையை எழுதினேன்.  நல்லது.

Bro. JOHN12 wrote:


அப்படியானால் விளக்கம் தேவைப்படும் பட்சத்தில் வினவலாம்,பதில் தரலாம்..கடினவார்தைகள் தொடரும் பட்சத்தில் விட்டுவிடலாம்..ஒரு விவாதம் தொடங்கும் பட்சத்தில் விவாதத்தில் பங்கேற்கும் நபர் தனது விசுவாசத்தை பதிவு செய்தால் நேரம் மிச்சமாகும் என்பது என் கருத்து..
 


இது ஒரு நல்ல ஆலோசனை.  ஒரு தெளிவான சிந்தனையும்  கூட நாம் யாரிடம் வாதிடுகிறோம் அவர்கள் கொள்கை என்னவென்பது  தெரியாமல் வாதிடுவதைவிட தெரிந்துகொண்டு பின்னர் வாதிடுவதா அல்லது வேண்டாமா என்று தீர்மானித்து செயல்பட பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆலோசனையை செயல்படுத்தலாம்.
 
ஆனால் இந்த தளத்தை பொறுத்தவரை நாங்கள் எந்த விசுவாசத்தில் உள்ளவர்களையும்  விலக்குவதோ நியாயம் தீர்ப்பதோ இல்லை. அந்த அதிகாரமும்  எங்களுக்கு இல்லை. அனால் அவர்களால் சொல்லும் கருத்து ஏதாவது பாதகம் விளைவிக்கும் நிலையில்  இருக்கும்போது  அது நிச்சயம் சுட்டிகாட்டபடும்.
    
Bro. JOHN12 wrote:      
/////சகோதரரே மாறாதது தான் அடிப்படை விசுவாசம்..அது இயேசு சொன்ன உவமையில் வருவது போன்ற வசன விதை...விதைத்த பின் விதை மாறாது..ஆனால் வரும் பலன் விதைக்கப்பட்ட நிலத்தை போல மாறக்கூடியது.///
 
இதுவும் கூட மிக அருமையான கருத்து. விதைக்கபட்ட விதை  தரும் பலனை வைத்துதான்  அந்த நிலம்  எப்படிபட்டது என்பதை அறிய முடியும்.  ஆனால் "பலன்" என்ற வார்த்தை எதை குறிக்கும் வசனத்தின் அடிப்படையில் வாழ்வதையா? அல்லது அதிக அத்துமாக்களை ஆதாயம் பண்ணுவதையா? அல்லது ஆவியின் கனிகளால் நிறைந்திருப்பதையா? அல்லது தேவனுக்கு ஊழியம் செய்வதையா? என்பதை தீர்மானிப்பது அவசியம்.
       
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard