சகோதேரர்களே இன்று அநேகர் தேவன்மேல் அன்பாய் இருக்கின்றார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால்
பயம் என்பது தான் இல்லாமால் போகின்றது இந்த பயம் இல்லாமல் போவதினால் நாம் பாவம் செய்கின்றோம் தேவனுக்கு சத்துருவாய் மாறுகிறோம்
யோவான் அனேக வசனங்களின் நாம் தேவன் மேல் அன்பாய் இருந்தால் பாவம் செய்யமாட்டோம் என்று சொல்கின்றார்
ஆனால் என்னை பொறுத்தவரை விரும் அன்பு மட்டும் நம்மை தேவனுக்கு பிரியமானவனாக இருக்கவைக்க முடியாது
அந்த அன்போடு கூட கலந்து கர்த்தருக்கு பயப்படும் பயம் இருக்கவேண்டும்
உபாகமம் : 10
12"இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து,
உபாகமம் : 5
29"அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்
உபாகமம் : 6
13"உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக
யோபு : 1
1"ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
சங்கீதம் : ௦ 60
"சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர்.
சங்கீதம் :112
1"அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்
சங்கீதம் : 119
3"உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்
ஆம் சகோதரரே கர்த்தர் மேல் அன்பாய் இருந்தால் மட்டும் போதாது ஏனென்றால் இந்த உலகத்தில் அதிகபட்சம் எல்லா மனிதர்களுக்கும் கடவுள் மேல் அன்பாய் தான் உள்ளார்கள் (இந்து,கிறிஸ்தவம்,முஸ்லிம்,)அனால் இந்த விரும் அன்பு மட்டும் நம்மை பரிசுத்தத்தில் நடத்தாது தேவன் மேல் பயம் கலந்த அன்பு மட்டும் தான் நம்மை தேவனுக்கு பிரியமான மகனாக நடத்த முடியும்
எனக்கு தெரிந்து நான் அனேக கேடி ரவுடி மற்றும் குடிக்காரர்கள் போன்ற மனிதர்களை பார்த்து இருக்கின்றேன் அவர்கள் எல்லாம் தன தாயிக்கும் தன தகப்பனுக்கும் பயப்படவே மாட்டார்கள் ஆனால் பாருங்கள் தன தாயின் மீது மிகவும் அன்புள்ளவர்கள் தன தாயிக்கு ஏதாவது ஒன்று என்றால் கண்ணீர் விட்டு அலுத்து புலம்பி உயிரையே விட்டுவிடுவார்கள் மிகவும் வேதனை படுவார்கள் இவர்கள் தங்கள் தாயின்மேல் அன்பாய் தான் இருக்கின்றார்கள் ஆனால் என்ன ப்ரோஜினோம் அவர்கள் மீது பயம் இல்லையே பயம் என்பது அவர்களுக்கு இருந்து இருந்தால் நிச்சயம் அவர்கள் இப்படி கேடி ரவுடி என்று மாறி இருக்க மாட்டார்கள்
ஆம் சகோதர்களே இதே நிலையில் தான் நாம் எல்லோரும் இருக்கின்றோம் நாம் எல்லோருக்கும் தேவன் மீது மிகவும் அன்பு உள்ளதுஅதை இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதே நேரத்தில் நமக்கு பயம் மட்டும் இல்லை என்றால் நாம் நம் தேவனுக்கு பிரியமில்லாதவனாய் தான் நடக்க முடியும் தேவன் மேல் அன்பு வைத்து தேவனுக்கு தொந்தரவாய் இருக்கின்றவன் எப்படி பட்டவன் தன் தேவனுக்கு தொந்தரவையும் தலைவலியையும் தான் இருப்பான் ஆதலால் என் சகோதரரே அன்பு அன்பு என்று வாயினால் மட்டும் சொல்லாமல் நம் தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கின்றார் அவருக்கு பாவம் என்பது பிடிக்கவே பிடிக்காது என்பதை அறிந்து
தேவனுக்கு பயந்து நடுங்கி அவர்மேல் முழு இருதயதோடும் முழு ஆத்மாவோடும் அன்பு வைத்து இருப்பதே உண்மையான அன்பு
உண்மையான அன்பு கர்த்தருக்கும் அவர் வார்த்தைக்கும் பயந்து நடப்பதே ஆகும்.
எனக்கு தெரிந்ததை அவசர அவசரமாக் எழுதிவிட்டேன் பிழைகள் ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்
-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 28th of January 2012 01:24:26 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)
உண்மையான அன்பு கர்த்தருக்கும் அவர் வார்த்தைக்கும் பயந்து நடப்பதே ஆகும்.
சரியான வார்த்தைகளுடன் நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள் சகோதரரே. ஆனால் இது அநேகருக்கு புரியாது. பவுல் எழுதியிருக்கும் நிரூபங்களில் உள்ள கருத்துக்களை தவறாக புரிந்துகொண்ட அநேகர் கிருபை இருந்தால் போதும் கிரியை தேவையே இல்லை என்பதுபோல் ஒரு கருத்தில் இருந்துகொண்டு அவ்வாறே போதித்து கொண்டும் இருப்பதால் பலருக்கு இது புரிய வாய்ப்பில்லை.
I கொரிந்தியர் 13:13இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
விசுவாசம் நம்பிக்கை இவைகளைவிட அன்பே பெரியது என்று பவுல் திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார்.
இந்த அன்பை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்
1. தேவன் மீது (இயேசு மீது) செலுத்தும் அன்பு
2. நம்போன்ற மனுஷர்கள் மீது செலுத்தும் அன்பு.
இந்த இரண்டையும்தான் இரண்டு பிரதான கட்டளையாக இயேசு சொல்லியிருக்கிறார்
மத்தேயு 22:37இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;
39. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்,
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
தேவன் மீது/ இயேசு மீது அன்பாய் இருப்பது எப்படி என்று வேதம் சொல்கிறது?
இயேசுமேல் அம்பாய் இருந்ததல் என்பதற்கு இயேசு கொடுக்கும் விளக்கம் இதோ:
யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,
இதை தொடர்ந்து தேவன் மேல் அன்பாய் இருப்பதற்கு அப்போஸ்தலர் கொடுக்கும் விளக்கம் இதோ:
I யோவான் 5:3நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்;
இப்படி இயேசுவின்/ தேவனின் வார்த்தைகள் கைகொள்ளப்பட வேண்டும் என்று எத்தனை வசனம் சொன்னாலும் நீதிக்கும் நேர்மைக்கும் எதிர்த்து நின்று எந்த கீழ்படிதலும் கிரியையும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து பரலோகம் போய்விட துடிக்கும் சாத்தான்களுக்கு அது புரிய போவதில்லை. எனவே தேவனின் சித்தபடி வாழ விரும்பும் தேவனுடய பிள்ளைகள் மாத்திரம் இதை புரிந்துகொள்ளட்டும்.
அடுத்து பிற மனுஷர்கள் மீது அன்பு செலுத்துதல் என்றால் என்னவென்பதை பார்க்கலாம்:
நாம் நம்மேல் அன்பு கூறுவதால் நாம் செய்யும் தப்பிதங்கள் எல்லாம் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம் அதுபோல் பிறர் செய்யும் தப்பிதங்களையும் அவர்களின் தவறான நடக்கைகளையும் மனதார மன்னிப்பதே ஒருவர்மேல் உண்மையான அன்பு கூறுவதாகும்
மாற்கு 11:25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்
உண்மையான அன்பின் குணங்கள் என்னவென்பதை பவுல் தொகுத்து தந்துள்ளார்:
I கொரிந்தியர் 13:4. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, 5அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
I கொரிந்தியர் 13:7சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு நீடிய சாந்தம் உடையது: ஒரு சிறிய வார்த்தையை கூட தாங்கிக்கொள்ள முடியாமல் எதிர்த்து நிற்கும் கிறிஸ்த்தவர்கள் இன்று உலகில் ஏராளம். சபையில் வசனம் வாசிக்கும் ஒருவர் ஒரு முறைக்கு இரண்டு முறை திக்கிவிட்டால், சபை பாஸ்டர் உடனே டென்சன் ஆகிவிடுகிறார்.
அன்புக்கு பொறாமை இல்லை: ஒரு பாஸ்டர் வீட்டில் ஜெபித்துக் கொண்டு இருக்கும்போது எதிர்பாராமல் இன்னொரு பாஸ்டர் வந்து விட்டால் இருவரும் ஒரு நட்புணர்வோடு பேசுவதை விட்டு விட்டு இன்னொருவர் உள்ளே வரவே தயங்குகிறார்.
அன்பு தன்னை புகழாது: நான் தொட்டால் கீழே விழுவார், நான் விரட்டினால் பேய் ஓடிவிடும், நான் ஜெபித்தால் நோய் குணமாகிவிடு என்ற வார்த்தையை எத்தனை முறை கேட்டாகிவிட்டது. நான் சபை பாஸ்டர், கேர்செல் லீடர், நான் லே பாஸ்டர், நான் ரெவரெண்டு, நான்
தீர்க்கதரிசி இப்படி எந்த எண்ணம் மனதில் இருந்தாலும் அது தர்ப்புகழ்ச்சியே.
அன்பு தீங்கு நினையாது: நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்
அதனால் பரலோகம் போவேன் ஏற்றுக் கொள்ளாதவன் எல்லாம் நரகம் போவார்கள் என்று பெருமையாய் நினைப்பதுகூட பிறருக்கு தீங்கு நினைப்பதுதான். உண்மை அதுவாக இருந்தாலும் அவர்களுக்காக பரிதபித்து பாரத்தோடு ஜெபிப்பதுதான் உண்மையான அன்பு.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பவுல் சொன்ன அந்த நல்ல குணமெல்லாம் எத்தனை கிறிஸ்த்தவர் களிடத்தில் இருக்கிறது என்பதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் கிரியையே வேண்டாம் என்றும் "என் வார்த்தையை கைகொள்" என்று சொல்வதன் பொருள் இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும் என்று பலர் போதிக்கிறார்களே பிறகு இதை எல்லாம் பற்றி கவலைப்படபோவது யார்?