மூல மொழியில் விவிலியத்தை ஆராய்வது கடினமான காரியம் என்று எண்ணியிருந்தேன். தாங்கள் கொடுத்துள்ள தொடுப்புகள் மூலம் சுலபமாக மூல மொழியில் வேதாகமத்தை ஆராய முடிகிறது.
////இதே தளத்தில் "யாவே தேவனும், இயேசு கிருஸ்துவும் ஒருவரா?" என்னும் தலைப்பிலான விவாதத்தில் கருத்து தெரிவித்த ஒருவர் (JOHN12) இந்த தேவரீர் என்ற வார்த்தையை ஆதாரமாக கொண்டு இருவரும் ஒருவர் என்று சொல்லியுள்ளார்./// ஏன் என் பெயரை தாங்கள் காரியம் இல்லாமல் பயன்படுத்தியுள்ளீர்கள் என தெரியவில்லை!!! "யாவே தேவனும், இயேசு கிருஸ்துவும் ஒருவரா?"என்ற கேள்விக்கு நான் தந்த பதிலை இணைத்துள்ளேன்..பாருங்கள்.. நான் எழுதியது
/////சகோதரர் சந்தோஷ் அவர்களே!!!!
யேகோவா என்ற நாமத்தில் தேவன் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களால் அறியப்படவில்லை..அவர் சர்வ வல்லமை உள்ள தேவன் என்ற நாமத்தில் மாத்திரம் அறியப்பட்டார்..
யாத்திராகமம் 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
ஆனால் தேவன்,. நாம் யஹோவா என்ற நாமதிலும் தேவனை அறிய விரும்பி பிற்காலத்தில் வெளிபடுத்துகிறார்..
எரேமியா 16:21 ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
தேவன் யஹோவா என்ற நாமத்தை எவ்வாறு அறியசெய்கிறார் என பார்க்கும் போது...
இயேசுவின் மூலமாய் தான்...இயேசுவின் பெயர் யஹோவா என வேதத்தில் உள்ளது...
சங்கீதம் 68:4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
இயேசுவானவர் பிதாவின் நாமம் தரித்தவராய் வந்தார் என வசனம் உள்ளது..அவருக்கு வழியை ஆயதபடுத்தினவர் யோவான் என்பதை நாம் அனைவரும் அறிந்தததே..
யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை..
எனவே பிதா யஹோவா என வலியுறுத்த அவசியம் இல்லை..
இயேசுவானவர் யஹோவா என வேதம் சொல்லுவதால்.எந்த துதிக்கும்,கீர்த்தனைக்கும்,ஸ்தோதிரத்திரதிறதிற்கும்,ஆராதனைக்கும்,புத்தியுள்ள ஆராதனைக்கும்,மகிமைபடுத்துதலுக்கும் பாத்திரமாய் இருக்கிறார்..
மகா தேவனுக்கு மகிமை உண்டாவதாகுக..///// தங்களுக்கான ஏன் பதிலில் 'தேவரீர்' என்ற பதம் எங்குள்ளது?பதில் தாருங்கள்..
பின் வரும் என் கேள்விகளுக்கு தங்களால் தங்கள் மொழிபெயர்ப்பை பயன்படுத்தி பதில் தர இயலுமா??
வேதத்தில் மொழிபெயர்ப்பை பற்றி எங்குள்ளது..
தேவன் முன் இருக்கும் ஜீவ புஸ்தகத்தின் மூல பாஷை எது??
தேவன் முன் நிற்கும் நியாபக புஸ்தகத்தின் மூல பாஷை எது??
நாம் பேசும் பாஷையில் நீங்கள் குறிப்பிடுவது மாதிரியான மொழி பிணக்கல்கள் இருக்குமானால் தேவன் முன் இருக்கும் மேற்கூறிய புஸ்தகத்திலும் அவ்வாறாக இருக்குமா?
நீங்கள் மாத்திரம் அறிந்துகொள்ளும் படி தேவன் ஒரு நாமத்தை தங்களுக்கு தருவாரானால்,அதின் மூல பாஷை என்னவென்பீர்கள்??
மூலபாஷைகளின் வரிவடிவம் காலத்திற்கேற்ப மாறி இருக்க நீங்கள் எந்த வரிவடிவத்தை reference ஆக எடுகிரீர்கள்..இதை பற்றிய தெளிவு தங்களுக்கு உண்டா??
பாஷைகளை பிரிந்து போக செய்த தேவன், ஒரே பாஷையை வேதத்தில் எங்கு கட்டளையிடுகிறார்? என பாருங்கள். பின் வேத வசனங்களை முன் நிறுத்தி கருத்துகளை பதியுங்கள். தங்களின் பதிலை எதிர்பார்கிறேன்...
GLORY TO LORD THE GOD!! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதிமொழிகள் 20:10வெவ்வேறானநிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
-- Edited by JOHN12 on Friday 20th of April 2012 09:58:37 PM
ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்காக, மூல மொழியில் வேதத்தை படிக்க முடியுமா? என தேடிய போது எனக்கு கிடைத்த இணைப்பு இது. அவர் வேற்று மதத்தினர் என்பதால் சரியான தகவலை அவருக்கு தர வேண்டியிருந்தது.
அப்போது நான் கண்டறிந்த சில விஷயங்கள் அதிர்ச்சியை தந்தன. அவற்றில் ஒன்று
"தேவரீர்" என்பவர் யார்? என அந்த இஸ்லாமியர் கேட்டிருந்தார். அதற்காக மூல மொழியில் தேடிய போதுதான் அந்த வார்த்தை மூல மொழியில் இல்லை என்பதை கண்டேன். அதாவது விளிச் சொல் இல்லாமல் எழுதப்பட்ட வசனத்தை அப்படியே எழுதினால் மரியாதை குறைவாக இருக்கும் என கருதிய ஒருவர் "தேவரீர்" என்ற வார்த்தையை இடை செருகலாக சேர்த்திருந்தார்.
இதில் எதுவும் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் இந்த வார்த்தையை அடைப்புக்குறிக்குள் போட்டு எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்ன? என்று கேட்கலாம்.
இதே தளத்தில் "யாவே தேவனும், இயேசு கிருஸ்துவும் ஒருவரா?" என்னும் தலைப்பிலான விவாதத்தில் கருத்து தெரிவித்த ஒருவர் (JOHN12) இந்த தேவரீர் என்ற வார்த்தையை ஆதாரமாக கொண்டு இருவரும் ஒருவர் என்று சொல்லியுள்ளார்.
ஆனால் மூல மொழியில் இந்த வார்த்தை இல்லாதத்தால் இந்த கருத்து சரியாகாது என்பதை அறிய முடியும். இது போல சில வேத வசனங்கள் திருத்தப்பட்டு இருப்பதை அப்போது அறிய முடிந்தது.
//இயேசுவின் மூலமாய் தான்...இயேசுவின் பெயர் யஹோவா என வேதத்தில் உள்ளது...
சங்கீதம் 68:4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
இயேசுவானவர் பிதாவின் நாமம் தரித்தவராய் வந்தார் என வசனம் உள்ளது..அவருக்கு வழியை ஆயதபடுத்தினவர் யோவான் என்பதை நாம் அனைவரும் அறிந்தததே.//
சங்கீதம் 68.4 ல் வரும் "வனாந்திரங்களில்" என்பதை வைத்து இயேசு கிருஸ்துதான் யேகோவா என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இந்த வசனத்தில் வரும் வார்த்தை "வனாந்திரம்" அல்ல "வானாந்திரம்". சில தமிழ் வேத மொழிபெயர்ப்புகளில் வானந்திரம் (அதாவது பரலோகம்) என்னும் வார்த்தை வனாந்திரம் என தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில வேதத்தில் பார்த்தால், சங்கீதத்தில் வரும் வார்த்தை "ஹெவன்" என்றும், மற்றொன்று "வில்டர்னஸ்" எனவும் சரியாக உள்ளதை காணலாம். மத்தேயுவும், ஏசாயா வசனத்தைதான் தீர்க்கதரிசனமாக காட்டுகிறதே தவிர சங்கீத புத்தகத்தை அல்ல. (நானும் வெகு காலம் வனாந்திரம் என்றே அதை படித்து வந்திருக்கிறேன்.)
//யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை..
எனவே பிதா யஹோவா என வலியுறுத்த அவசியம் இல்லை..
இயேசுவானவர் யஹோவா என வேதம் சொல்லுவதால்.எந்த துதிக்கும்,கீர்த்தனைக்கும்,ஸ்தோதிரத்திரதிறதிற்கும்,ஆராதனைக்கும்,புத்தியுள்ள ஆராதனைக்கும்,மகிமைபடுத்துதலுக்கும் பாத்திரமாய் இருக்கிறார்..//
இயேசு கிருஸ்து பிதாவின் நாமமாக சொல்வது, "இயேசு கிருஸ்து" என்னும் தன்னுடைய நாமத்தைதான். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூவரையும் குறிப்பிடும் ஒரே நாமம் "இயேசு கிருஸ்து" என்பது மட்டும் தான், இது திரியேக நாமம் என அழைக்கப்படுகிறது.
யேகோவா என்பது ஏக தேவனின் நாமமாக வேதத்தில் உள்ளது. அவர் நீதி செய்யும் தேவனாக உள்ளார். மனிதர்களிடம் அன்பு கூற விரும்பிய அவர் தன் குமாரனை அனுப்பியதன் மூலம் பிதாவாக வெளிப்பட்டார்.
மனிதர்கள் செய்த வினைகளுக்கேற்ப பதில் அளிக்கும் தேவனாக இல்லாமல், அன்புள்ளவராக இயேசு கிருஸ்துவின் மூலமாக பிதா வெளிப்பட்டார். ஆகவே யோகோவாவும் இயேசு கிருஸ்துவும் ஒருவர் அல்ல. "யோகாவா என் இரட்சகர்" என்பதே "இயேசு கிருஸ்து" என்னும் நாமத்தின் உள் அர்த்தமாகும். அதாவது "யோகாவா" என்பது அல்ல.
"பிதா" என்னும் வார்த்தை சொல்லும் குணங்களுக்கும், "தேவன்" என்னும் வார்த்தை சொல்லும் குணங்களுக்கும் வேறுபாடு உண்டு. ஆகவே யோகாவா என்று வேதத்தில் வரும் வார்த்தைகளை இயேசு கிருஸ்து என மாற்றி படிக்க முடியாது.
ஆனால் தேவன் பிதாவானார் என்ற வகையில் இஸ்ரவேல் மக்களுக்கு யேகோவா தேவன் கொடுத்த ஆசிர்வாதங்களை இயேசு கிருஸ்து என்னும் நாமத்தின் மூலம் சுதந்தரித்துக் கொள்ளவும், அதே சமயம் அவர் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த சாபங்களில் இருந்தும், தண்டனைகளில் இருந்தும் தப்பித்து கொள்ளவும் முடிகிறது.
பழைய ஏற்பாட்டு புத்தகம் யோகாவா என்னும் நாமத்தினால் உள்ளது. அதில் உள்ள ஆசிர்வாதங்களை இயேசு கிருஸ்து என்னும் நாமத்தினால் நாம் விசுவாசத்தினால் சுதந்தரித்து கொள்கிறோம். அதாவது அங்கு நாம் சொல்லும் நாமம் எழுத்தின்படி இல்லை. நம்முடைய விசுவாசத்தினால் அதை அவ்வாறு நோக்குகிறோம். அதனால் அதை பற்றி எப்போதாவது மேற்கோள் காட்ட வரும் போது அதில் உள்ள யோகாவா என்னும் வார்த்தையை எடுத்து விட்டு இயேசு கிருஸ்து என்னும் வார்த்தையை அடைப்புக் குறிக்குள் போட வேண்டும்.
இப்படி செய்வதே எழுதப்பட்ட வார்த்தை, விசுவாசம் என இரண்டுக்கும் மதிப்பளிக்கும் செயலாகும். வேத வசனம் எழுதப்பட்ட சில சுவர்களில் அடைப்புக் குறிக்குள் இயேசு கிருஸ்து என்னும் வார்த்தை போடப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இதுவே சரியானதாகும்.
இதன்படி சில தவறுகளையும், சரிகளையும் பார்ப்போம்.
1. வசனம் :
II சாமுவேல் 12:15 அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.
II சாமுவேல் 12:15 அப்பொழுது //இயேசு கிருஸ்து// உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.
- தவறு ஏனெனில் இது தேவன் தந்த தண்டனையாகும்.
2. I சாமுவேல் 6:19 ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். I சாமுவேல் 6:19 ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் //இயேசு கிருஸ்துவினுடைய// பெட்டிக்குள் பார்த்தபடியினால், //இயேசு கிருஸ்து// ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது //இயேசு கிருஸ்து // ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். - தவறு ஏனெனில் இது தேவன் தந்த தண்டனையாகும்.
யோகாவும், இயேசு கிருஸ்துவும் ஒருவரே என சொல்லி, மேலே குறிப்பிட்டபடி இட மாற்றம் செய்தால் யாரும் கிருஸ்துவ மதத்தை பரப்ப முடியாது போகும்.
4. சங்கீதம் 41:3 படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
சங்கீதம் 41:3 படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் // (இயேசு கிருஸ்து) // தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
-சரி ஏனெனில் இது ஒரு ஆசிர்வாத வசனம். ஆனால் இயேசு கிருஸ்து என்பதை அடைப்பு குறிக்குள் போட வேண்டும்.
சங்கீதம் 41:3 படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் //இயேசு கிருஸ்துவின் மூலமாக யோகாவா தேவன்// தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
மேற் கண்டவாறு சொல்வதும் சரிதான்.
மேலும் யோகாவா என்னும் நாமம் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் வெளிப்பட்டது. இயேசு கிருஸ்து என்னும் நாமம் உலக மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆகவே யோகாவாவும், இயேசு கிருஸ்துவும் ஒருவரே என சொல்ல முடியாது.
(கடவுள் ஏன் மனிதர்களுக்கு துன்பத்தை கொடுக்கிறார்? என்ற கேள்விக்கு கிருஸ்துவ தளங்களில் பதில் தேடிய போது, ஒருவரும் இயேசு கிருஸ்து மனிதர்களுக்கு ஏன் துன்பத்தை கொடுக்கிறார் ? என்ற கேள்வியை முன் வைக்காமல் கடவுள் ஏன்? என்ற கேள்விக்கே தங்கள் பதிலை சொல்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த தளங்கள் எல்லாம் இயேசு கிருஸ்து கடவுளே என்பதை வசனங்களின் மூலம் அடித்து சொல்லும் தளங்கள். ஒரு பக்கம் இவ்வாறு சொல்லிவிட்டு துன்பம் என வரும் போது மட்டும் இயேசு கிருஸ்து என்னும் வார்த்தையை கடவுளுக்கு பதிலாக (இருவரும் ஒருவரே என்பதால்) இவர்கள் பயன்படுத்த தயங்குவது / மறுப்பது ஏன்? - இவர்கள் சொல்வது சரியா? தவறா? இது பற்றி இன்னொரு இடத்தில் ஆராயலாம்)
நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்காமல் ஒரு பதிலை இவ்வளவு நாள் கழித்து தருகிறீர்கள். தங்களின் கொள்ளும் அறிந்துகொள்ளும் விருப்பம் ஒரு கேள்விக்கு கூட தங்களை பதில் தரவோட்டவில்லையா?இருக்கட்டும். நல்லது!!
BRO//சங்கீதம் 68.4 ல் வரும் "வனாந்திரங்களில்" என்பதை வைத்து இயேசு கிருஸ்துதான் யேகோவா என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இந்த வசனத்தில் வரும் வார்த்தை "வனாந்திரம்" அல்ல "வானாந்திரம்". சில தமிழ் வேத மொழிபெயர்ப்புகளில் வானந்திரம் (அதாவது பரலோகம்) என்னும் வார்த்தை வனாந்திரம் என தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.//
'தவாறான பதிவு 'என்றொரு 'தவறான பதிவை' நீங்கள் தான் தருகிறீர்கள்!!
வனாந்தரம் என்கிற வார்த்தை தான் வேதத்தில் உள்ளது.தாங்கள் குறிப்பிடுவது போல வனாந்'தி'ரம் அல்ல. மேலும் தாங்கள் குறிப்பிடும் 'வானாந்'தி'ரம்' என்கிற ஒரு வார்த்தை தவறானது!!.வானாந்'த'ரம் என்பதே சரியான வழங்கல்!!
தமிழிலேயே இவ்வளவு தெளிவின்மை இருக்கும் போது ஏன் இந்த வி'வாத' விருப்பம்??
நான் ஆராய்ந்த படி 'வானாந்திரம்' என்கிற வார்தையும் அதே (வனாந்தர) பொருளை தான் தருவதாக தெரிகிறது (இலங்கை தமிழர்கள்,மலையாளிகள் பேசுவது நமக்கு வேறுபாடாய் இருப்பதாக தோன்றுவது போல..)
மேலும் தாங்கள் கூறுவது போல பரலோகம் என்கிற வார்த்தை வேதத்தில் (எந்த தமிழ் மொழிப்பெயர்புகளில் எடுத்துக்கொண்டாலும் )பல இடங்களில்வந்திருந்தும் ஒரு முறை கூட 'வானாந்தரம்' என்கிற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. என்ன காரணம்? இதற்கு தங்கள் பதில் என்ன??
தாங்கள் அளவிற்கு அதிகமான காரியங்களையும், கதைகளையும் கேள்விப்பட்டு முக்கியமானவைகளில் ஏன் குழப்பிகொள்கிறீர்கள்!! என்னை பொறுத்தவரை தாங்கள் சரி என்பதை அறிந்து கொண்டே விவாதத்தில் பங்கேற்கிறீர்கள்.
அந்த 'சரி' என்பது சில சமயங்களில் குழப்பமடைந்து பிற்பாடு 'சரி இல்லாமல்' போய்விடுகிறது (இந்த பதிவை போல!!)
அருமையான வேத அறிவு தங்களுக்கு உண்டு. தங்களுடைய வேத அறிவு நற்செய்திக்கு அதிகமாய் பயன்படுவதாக!! (ஒரு வேண்டுகோள் தான் !!)
ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிற வசனம் எவ்வளவாய் தான் புடமிடப்படும் என்று தான் புரியவில்லை!!
மாற்கு 1:3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
ஏசாயா 40:3-5கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்.கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
தாங்கள் குறிப்பிடும் படி வனாந்தரத்தை பரலோகம் (தங்கள் கூறுவது போல வானாந்திரம்) என்றால் மேற்கூறிய வசனத்தின் படி 'அவாந்திரவெளியும்' பரலோகம் ஆகிறது!!
ஆகவே!! நாம் சரியான புரிதலின்படி, அவாந்திரவெளிக்கும், வானாந்திரத்திற்க்கும் நாம் போகாமல் பரலோகத்திற்கு போக ஆசிக்கிரபடியினால் வேதத்தில் சரியாக உள்ளதை திரிக்க துணிகரம் கொள்ளாதிருப்போமாக!!
மேலும் 'தேவனுக்கு வழியை' என்று வருகிற மேற்கண்ட வசனத்தை பார்க்கும் போதும் பின் வரும் புதிய ஏற்பாட்டு வசனங்களில் வரும் 'கர்த்தருக்கு வழியை' என வரும் வசனத்தை பார்க்கும் போதும்இயேசுகிறிஸ்துவானவர் தேவனும் கர்த்தருமானவர்!!
லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,
மத்தேயு 3:3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்தில்கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
மாற்கு 1:3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலேகூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
சங்கீதம் 68:4 தேவனைப்பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
'எஹுஷுவ்ஹா' (எஹோவா) என்கிற பொதுநாமம் இயேசுவானவர்க்கும் உரியது!!மனிதர்களுக்கு அந்த நாமம் இயேசுவின் நாமத்தில் வெளிப்படுத்தப்பட்டது என்பதை இன்னமும் விளக்க வேண்டுமோ!?
மேற்குறிப்பிடப்பட்டுள்ள புதியஏற்பாட்டு வசனங்களில் குறிப்பிடபட்டுள்ளவைகள் தாங்கள் குறிப்பிடும் 'வானாந்திரங்களா'?!! வனாந்தரத்தில் ஏறி வந்தது இயேசு கிறிஸ்துவே, இதை அறிக்கையிடாத எந்த கிறிஸ்துவனும் இயேசு 'வனாந்தரத்தில் எறிவந்ததாக குறிப்பிடப்படுகிற' தீர்க்கதரிசனம் இயேசுவின் வாழ்வில் நிறைவேறவில்லை எனக்கூறுபவர் ஆவார்!!
//இப்படி செய்வதே எழுதப்பட்ட வார்த்தை, விசுவாசம் என இரண்டுக்கும் மதிப்பளிக்கும் செயலாகும். வேத வசனம் எழுதப்பட்ட சில சுவர்களில் அடைப்புக் குறிக்குள் இயேசு கிருஸ்து என்னும் வார்த்தை போடப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இதுவே சரியானதாகும்.
இதன்படி சில தவறுகளையும், சரிகளையும் பார்ப்போம்.//
சில நடைமுறை வாழ்கையில் தவறாய் வழங்கப்படுகிற உதாரணங்களை தந்துள்ளீர்கள்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய ஆள்தத்துவங்கள் 'தேவன்' என குறிக்கப்பட்டுள்ளதானாலும் , தேவன் எந்த ஆள் தத்துவத்தில் பரிபூரணமாய் ஒன்றிணைந்து செயல்படுகிறார் என்பதை அறிந்தவர்கள் குழப்பிக்கொள்ள வாய்ப்பு இல்லை..
ஏனென்றால் பிதாவானவர் இல்லாமல் இயேசுவானவர் தனித்து செயல்படுகிரதில்லை. அவர் செயல்படுவது ஆவியின் பலத்தோடு தான்!!
''தேவரீர்" என்ற பதம் ஆங்கில வேதத்திலேயோ, மூல மொழியிலேயோ இல்லை.
'தேவரீர்' என்பது தமிழ் பதம் ஆகையால் மூல பாஷையிலும்,ஆங்கில வேதத்திலும் இருக்க சாத்தியம் இல்லை சகோதரரே..இதிரியில்மும் ,தொடர்பான திரியிலும் 'தேவரீர்' என்கிற பதத்தை நான் பயன்படுத்தாமல் நான் விளக்கமளித்ததை தாங்கள் அறிந்துகொண்ட போதிலும் மீண்டும் இது தொடர்பான கேள்வியை கேட்கிறீர்கள். தவறில்லை..
தமிழில் 'செப்பலோசை','அகவலோசை' என்கிற ஓசைகள் இயல்பாய் வருகிறபடி மூலபாஷையிலும் உண்டு என்பது தங்களுக்கு தெரியுமா!! நம்முடைய தமிழ் மொழிப்பெயர்ப்பில் 'விளி'க்கும் பதங்களை இவ்வாறு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் இத்தகைய அம்சம் இல்லையாதலால் மொழிபெயர்ப்பில் வித்தியாசபடுவது சகஜம் தான்!!
BRO//(கடவுள் ஏன் மனிதர்களுக்கு துன்பத்தை கொடுக்கிறார்? என்ற கேள்விக்கு கிருஸ்துவ தளங்களில் பதில் தேடிய போது, ஒருவரும் இயேசு கிருஸ்து மனிதர்களுக்கு ஏன் துன்பத்தை கொடுக்கிறார் ? என்ற கேள்வியை முன் வைக்காமல் கடவுள் ஏன்? என்ற கேள்விக்கே தங்கள் பதிலை சொல்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த தளங்கள் எல்லாம் இயேசு கிருஸ்து கடவுளே என்பதை வசனங்களின் மூலம் அடித்து சொல்லும் தளங்கள். ஒரு பக்கம் இவ்வாறு சொல்லிவிட்டு துன்பம் என வரும் போது மட்டும் இயேசு கிருஸ்து என்னும் வார்த்தையை கடவுளுக்கு பதிலாக (இருவரும் ஒருவரே என்பதால்) இவர்கள் பயன்படுத்த தயங்குவது / மறுப்பது ஏன்? - இவர்கள் சொல்வது சரியா? தவறா? இது பற்றி இன்னொரு இடத்தில் ஆராயலாம்) //
INTERESTING OBSERVATION.. கண்டிப்பாக அறிய தாருங்கள்!!
பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய ஆள்தத்துவங்கள் 'தேவன்' என குறிக்கப்பட்டுள்ளதானாலும், தேவன் எந்த ஆள் தத்துவத்தில் பரிபூரணமாய் ஒன்றிணைந்து செயல்படுகிறார் என்பதை அறிந்தவர்கள் குழப்பிக்கொள்ள வாய்ப்பு இல்லை..
தேவன் எந்த ஒரு ஆள்த்துவத்திலும் ஒருங்கிணைத்து பரிபூரணமாக செயல்பட முடியும் என்ற
தேவ வல்லமையை முழுமையாக நம்பினால் நாம் குழம்பிபோக வேண்டிய அவசியம் இருக்கவே இருக்காது!
JOHN12 wrote:
////ஏனென்றால் பிதாவானவர் இல்லாமல் இயேசுவானவர் தனித்து செயல்படுகிரதில்லை. அவர் செயல்படுவது ஆவியின் பலத்தோடு தான்!!////
மிகவும் சரியான கருத்து சகோதரரே!
அதேபோல் "இயேசுவானவர் இல்லாமல் பிதாவின் தெய்வத்துவம் பூரணம் அடையாது" என்பதையும் தாங்கள்
அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
என்னுடைய கருத்து சரி என்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் சமமானவர்கள் என்ற கருத்து எப்படி பொருந்தும்?
மூவரும் இணைந்தால் மட்டுமே தெய்வத்துவம் பூரணம் அடையும்! எனவே மூவரும் ஒருவரே!அதாவது வெவேறு பணிகளை செய்யும் ஒரே தேவனின் ஆள்த்துவங்கள்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//எனவே மூவரும் ஒருவரே!அதாவது வெவேறு பணிகளை செய்யும் ஒரே தேவனின் ஆள்த்துவங்கள் //
உண்மை சகோதரரே!! தங்களின் இந்த கருத்துக்காக தேவனை துதிக்கிறேன்.
//என்னுடைய கருத்து சரி என்றால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் சமமானவர்கள் என்ற கருத்து எப்படி பொருந்தும்?//
பின்வரும் வசனத்தில் 'தம்மில் தாமே' என்பதை கவனியுங்கள்.. அதற்க்கு பொருள் என்ன!!
யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.
மேற்கண்ட வசனத்திற்கு தங்களின் விளக்கத்தை தாருங்கள்!! பின்வரும் வசனங்களை
குறித்த தங்களின் விளக்கத்தையும் பார்வையையும் அறிய விரும்புகிறேன்.
யோவான் 5:18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
யோவான் 14:28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
தங்களின் விளக்கத்தை தொடர்ந்து நாம் விவாதிப்போம். அது நிச்சயம் கருத்து செறிந்ததாகவும், அதிக பிரயோசனமாகவும் இருக்கும்.
ஆண்டவராகிய இயேசு எப்படி தேவனுக்கு சமமாகிறார் என்பதையும் அத்தோடு எப்படி தேவன் அவரைவிட பெரியவராக இருக்கிறார் என்பதை குறித்தெல்லாம் மிக விபரமாக கீழ்கண்ட கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.
தாங்களும் அதில் கேள்விஎழுப்பி அதற்க்கான பதிலை பெற்றுள்ளீர்கள். ஆகினும் மீண்டும் தங்கள் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்கள் நல்லது.
இங்கு தேவனின் விஷயத்தில் ஒரு முக்கியத்துவம் என்னவெனில் யாருடைய விசுவாசத்தையும் முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது! காரணம் "தேவன் வல்லமை மிக்கவர்" அவரை மனுஷ அறிவினால் ஆராய முடியாது! அவர் எப்படிபட்டவராகவும் இருக்க முடியும். இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவருக்கு யாரும் கட்டளையிட முடியாது! வசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக இருப்பதால் அது இருபுறமும் பேசும்!
எனவே நான் யாருடைய கருத்தையும் முழுவதும் எதிர்த்து விவாதிப்பது இல்லை! நான் தங்களின் கருத்தை எதிர்த்து மன கடினமாக விவாதித்தால், நாளை தேவன் தாங்கள் சொல்லும் நிலையிலேயே இருந்து என்னை தவறானவனாக்கி விடுவார்!
அதே நிலைதான் எல்லோருக்கும் நேரும் என்பதை கருத்தில் கொள்க!
எனவே தேவனுக்கு அவர் சித்தப்படி செயல்பட நான் எங்கும் எதிர்த்து நிற்க விரும்பவில்லை! அவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கவும் விரும்பவில்லை!
நன்றி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தங்களின் தொடர்பான விளக்கங்களை எதிர்பார்த்தேன். சில காரியங்களை பதியலாம் என்றும் எண்ணி இருந்தேன்.விவாதித்த பழையவை எல்லாம் நினைவு இருக்கிறது!! நான் தங்களின் விசுவாசத்தில் இருந்து நூலிழை அளவில் மாத்திரமே மாறுபடுகிறேன். (அனேக ஆள்ததுவத்தை கை விட்டு நீங்கள் தற்போது போல திரித்துவத்தை பேசுகிற பட்சத்தில்!!). அதே சமயம் தாங்கள் கூறுவது போலவே தங்களை இதற்காக நிர்பந்திக்க நான் கிறிஸ்துவுக்குள் உரிமை எடுத்துகொள்ள போவதில்லை!! (காரணம் தாங்களே அறிவீர்கள்)
தாங்கள் தேவனின் மகத்துவத்தை அறிய முடியாது என உறுதியாய் நம்புகிற பட்சத்தில் என் விசுவாசம் பின்வரும் வசனத்தை சார்ந்தே வேறுபடுகிறது.. தேவனுடைய மகத்துவத்தை அறிய பிரகாசமான மனக்கண்ணை பெறலாம் என்று!!
சகோ.சுந்தர் அவர்களே!!
எபேசியர் 1:19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
இது சகோ.சந்தோஷ் அவர்களின் மொழிபெயர்ப்பு தொடர்பான திரியாதலால்,தொடர்பான திரிகளில் இதை குறித்து தேவ கிருபை நேரிட்டால் பேசுவோம்.
இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமானவர் என்று 6 காரியங்களை வசனத்துடன் வெளியிட்டிருந்தேன் அதில் ஒன்றுக்கு கூட உருப்படியான பதிலை சொல்லவில்லை. . வசனம் கொடுத்தால் பதிலை காணோம். மீண்டும் கொடுக்கிறேன் பதில் சொல்லுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவ தூதர்கள் ஆராதிக்க வேண்டும் என்று எபிரெயர் 1:6 சொல்லுகிறது.
இயேசுவை கர்த்தர் என்று நாவு யாவும் அறிக்கை பண்ண வேண்டுமென்றும், வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழ்உள்ள முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்க வேண்டும் என்று பிலிப்பிர் 2: 9-11 சொல்லுகிறது.
வெளிப்படுத்தல் 5:13 ல் மூவுலகில் உள்ள அனைத்து சிருஸ்டிகளும் எல்லா ஸ்தோத்திரம், கனம், மகிமை , வல்லமையை இயேசு கிறிஸ்துவுக்கு செலுத்துகிறதைப் பார்க்கிறோம்.
ஆராதனைக்கு உரியவராகிய இயேசு கிறிஸ்து தேவன் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
3. தேவன் தன் மகிமையை வேறொருவருக்கும் கொடார். (ஏசாயா 42:8, யாத்திராகமம் 20:3-5)
ஆபிராகமம், ஈசாக்கு, யாக்கோபு என்ற நம் முற்பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார் (அப்போஸ்தலர் 3:13)
தேவன் தன் மகிமையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்கு கொடுப்பது அவரை தேவன் என்பதை உறுதிப்படுத்துகிறது.
4. தேவனை ஒருவருக்கும் ஒப்பிடவோ, நிகராக்கவோ கூடாது. (ஏசாயா 40:25)
பிலிப்பியர் 2;6 சொல்லுகிறது இயேசு கிறிஸ்து தேவனுக்கு சமமானவர்.
யோவான் 1;1, 5:18,20, 10:30, கொலோசெயர் 1:15, தீத்து 2:13, 1யோவான் 5:20, எபிரெயர்1:8-13, இந்த வசனங்கள் அனைத்தும் இயேசு தேவனுக்கு நிகரானவர் என்பதை காட்டுகிறது.
தேவனே தேவனுக்கு நிகராயிருக்க முடியுமே தவிர வேறுயாரும் நிகராக முடியாது. குமாரனாகிய இயேசு தேவனுக்கு நிகரானவர்.
5. தேவன் தன்னில் தானே ஜீவனுடையவர் ( யோவான் 5:26)
.என் ஜீவனை கொடுக்கவும் எடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. (யோவான் 10:18), நானே உயிர்தெழுதலும்,ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 11:25)
பிதாவாகிய தேவனைப்போல் குமாரானாகிய தேவனும் தன்னில் தானே ஜீவனுள்ளவராயிருக்கிறார்.
6.பரிசுத்தாவியானவர் தேவனின் ஆவி என்றும் குமாரனின் ஆவியென்றும் அழைக்கப்படுகிறார்
மத்தேயு 10:20, ரோமர் 8:9, கலாத்தியர் 4:6, இந்த வசனங்களைப் பார்த்தால் பரிசுத்தாவியானவர் பிதாவின் ஆவி என்றும் குமாரனின் ஆவியென்றும் சொல்லப்படுகிறதை பார்க்க முடியும். இது பிதாவாகிய தேவனும் குமாரனும் ஒரே தேவன் என்பதை வெளிப்படுத்துகிறது.