இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இதுவும் பாவத்தில் அடங்குமா?


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
இதுவும் பாவத்தில் அடங்குமா?
Permalink  
 


வணக்கம் எனக்கு சில மறைவான வாழ்க்கை பற்றிய சந்தேகங்கள் உள்ளன. இந்த இணையத்தளத்தின் உதவியுடன் அவற்றைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறேன். 

சுய இன்பம் பாவமா???

இந்த சமுதாயத்தில் எங்கு சென்றாலும் எல்லாரும் சுயஇன்பத்தில் திளைத்திருக்கின்றனர். மருத்துவம்கூட சுயஇன்பத்திற்கு வெகுமதி தந்து அது கற்பளிப்புக்கள் போன்ற சமுக விரோதச் செயல்களைத் தடுப்பதாகக் கூறுகிறது..

எனவே கிறீஸ்தவர்கள் மத்தியில் இதற்கு என்ன பதில் என்பதை வசன ஆதாரத்துடன் யாராவது விளக்குவீர்களா????



-- Edited by SUNDAR on Thursday 2nd of February 2012 08:10:49 PM

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

தங்களின்  கேள்வி நியாயமானதுதான் என்றாலும் அதை தலைப்பில் கேட்டுள்ள முறை படிப்போரை முகம்சுளிக்க வைக்கலாம் எனவே  தலைப்பை  சற்று மாற்றியுள்ளேன்.
     
தங்களின் கேள்விக்கு பழைய ஏற்பாட்டில் எந்தபதிலும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை. அனால் புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை அது பாவம் என்று வசனம் சொல்கிறது.   
 
கொரிந்தியர் 6:9
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
 
சில செய்கைகள் நமது பார்வைக்கும் உலகத்தார் பார்வைக்கும் தவறு இல்லாத செயல்போல தெரியலாம், ஆனால் அவைகள் மறைவான  குற்றங்கள் என்ற தலைப்புக்குள் அடங்கும்.  
 
அதிகமாக ஜெபித்து/ வேத தியானத்தில் ஈடுபட்டு ஆண்டவருடன் உறவாட  பழகினால் இவ்வகை பாவத்தில் இருந்து விலகிவிட முடியும் என்று நான் கருதுகிறேன்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

மிக்க நன்றி சகோ. சுந்தர் அவர்களே.

நான் வெகுகாலமாக விடை தேடிய வினா.

உண்மையிலே நான் அந்தப் பாவத்திலே அகப்படவில்லை. ஆனாலும் எனது நண்பர்கள் பலர் அந்தப் பாவத்தில் செத்துக்கொண்டிருக்கின்றனர்..

அவர்கட்காகவே நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன்

மிக்கநன்றி...



__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard