யோ 5:2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4. ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான் 5. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். 6. படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7. அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்.
இயேசு கிறிஸ்த்து நன்மை செய்கிறவராகவே சுற்றி திரிந்தார். அவர் எல்லாவித நோய்களையும் குணமாக்கி பிசாசுகளை விரட்டினார். துன்பத்தில் வாடும் அநேகரைபார்த்து மனதுருகி குணமாக்கினார் என்று விவிலியம் பதிவு செய்துள்ளது.
இயேசுக்கு அனேக வல்லமைகள் இருந்தும் அந்த பெதஸ்தா குளத்தருகே இருந்த குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக் காரர்களில் ஒரே ஒருவனை மட்டும் தேர்ந்தெடுத்து
இந்த கேள்வி மட்டும் அல்ல, கேள்வி கேட்கவேண்டும் என்றால் இன்னும் அனேக கேள்விகள் இருக்கிறது,
எத்தனை மனுஷர்களோ உலகில் இருக்க, எரேமியாவை தேவன் சிறுபிள்ளையாய் இருக்கும்போதே தெரிந்துகொள்ள காரணமா என்ன?
எரேமியா 1:6அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். எரேமியா 1:7ஆனாலும் கர்த்தர், நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.
இஸ்மவேல் பிறக்கும் முன்னரே அவன் துஷ்ட மனுஷனாக இருப்பான் என்று தேவன் சொல்ல காரணம் என்ன?
ஆதியாகமம் 16:12அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
பிள்ளைகள பிறக்கும் முன்னே மூத்தவன் இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று தேவன் சொல்ல காரணம் என்ன?
ரோமர் 9:12மூத்தவன்இளையவனுக்குஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
இஸ்ரவேல் கோத்திரத்தில் எத்தனையோ ஜனங்கள் இருக்க தேவன் முதலில் சவுலை தெரிந்துகொண்டது ஏன்?
I சாமுவேல் 9:17சாமுவேல் சவுலைக் கண்ட போது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன் தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.
எலியா காலத்தில் எத்தனையோ விதவைகள் இருக்க அவன் சாரிபாத்துரில் உள்ள விதவையின் வீட்டுக்கு மாத்திரம் அனுப்பப்பட காரணம் என்ன?
இப்படி கேள்வியை கேட்டுகொண்டே போய் இறுதியில் "சர்ப்பம் இருந்த இடத்தில்கொண்டு தேவன் ஆதாம் ஏவாளை படைக்க காரணம் என்ன?" என்பதுவரை கேட்கலாம்.
இவை எல்லாமே ஏதோ ஒரு காரியத்தின் அடிப்படையில் தேவனின் முன் குறித்த திட்டத்தில் நிறைவேறுதல் என்றுதான் சொல்லமுடியும்.
மேலதிக விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உபா 10:17உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
"இறைவன் பட்சபாதம் பண்ணுகிறவர் அல்ல" என்று விவிலியம் தெளிவாக சொல்கிறது. எனவே அவர் சரியான காரணம் இல்லாமல் ஓர வஞ்சனையாக எந்தஒரு காரியத்தையும் செய்திருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.
எனவே பெதஸ்தா குளத்தருகே நிறைய நோயாளிகள் இருந்த அந்த இடத்தில் ஒரே ஒருவனை மட்டும் இயேசு குணமாக்க ஏதாவது ஒரு மறைவான காரணம் நிச்சயம் இருக்கும் என்றே கருதுகிறேன். அதுபோல் இறைவனின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கு பின்னாலும் எதாவது நியாயமான காரணம் இருக்கத்தான் செய்யும். இது குறித்து வெளிப்பாடு உள்ளவர்கள் இருந்தால் பதிவிடலாம்.
பெதெஸ்தா குளத்து சம்பவத்தை பொறுத்தவரை என்னுடைய கணிப்பு என்னவெனில், பாவத்திநிமித்தமே ஒரு மனுஷனுக்கு நோய் நொடிகள் வந்தாலும் (யோவா 5:14 ), நம் தேவன் மிகுந்த மனதுருக்கம் உள்ளவர் ஆகையால், துன்பத்தில்/ நோயில் வாடும் ஒவ்வொரு மனுஷனின் இருதயநிலையும் தேவனுடய சமூகத்தில் ஆராயப்படுகிறது, அவனுக்குள் இருக்கும் நற்குணங்கள் / தேவனை வெறுக்காத தன்மை, பிறரை குறைகூறாத நிலை மற்றும் தேவன் பேரில் அவனுக்கு இருக்கும் விசுவாசம் இவற்றின் அடிப்படையிலேயே அவனுக்கு தேவையான உதவிகள் தேவனுடைய கரத்தில் இருந்து அருளப்படுகின்றன என்பதே என்னுடய கணிப்பு.
இதற்க்கு ஆதாரமாக வியாதிபட்டு மரித்து விடும் தருவாயில் இருந்த எசெக்கியா ராஜா 'நான் உண்மையும் உத்தமுமாக இருந்தேன்" என்று சொல்லி தேவனை நோக்கி அழுததிநிமித்தம் தேவன் அவனை மீண்டும் உயிர்ப்பித்து அனவது வாழ்நாளை கூட்டிய சம்பவத்தை கூறலாம்.
இங்கே பெதேஸ்தா குளத்தருகே இருந்த வியாதியஸ்த்தன் மிகுந்த மன வேதனையில் இருந்தான் என்பதை இயேசுவோடு கூடிய அவனது சம்பாஷனை மூலம் அறிய முடிகிறது.
யோவான் 5:6படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
அந்த வியாதியஸ்தன் இயேசுவைபற்றி அறிந்திருக்கவில்லை என்று வேதம் சொல்கிறது
13. சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை
ஆகினும் அவன் இயேசுவை பார்த்து "ஆண்டவரே" என்று சொல்லுவது அவனின் மன தாழ்மையை நமக்கு தெரிவிக்கிறது.
7. அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான் என்றான்.
மேலும் அவன் தன்னுடய இயலாமை மற்றும் தனக்கு யாரும் இல்லை என்பதையும் வேதனையோடு ஆண்டவரிடம் தெரிவிக்கிறான். பிறரை கெடுத்து எதுவும் பெரிதாக சொன்னதுபோல் தெரியவில்லை. (இன்றைய பிச்சைகாரர்களாக இருந்தால் தனக்கு முன்னேபோய் குளத்தில் இறங்குபவனை திட்டி தீர்த்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்)
இந்நிலையில்: 8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
அவன் குணமான இந்த காட்சியை அங்கிருந்த பல வியாதியஸ்தர்கள் பார்த்திருக்க கூடும். ஆனால யாரும் இயேசுவை கூப்பிட்டு என்னையும் சுகமாக்கும் என்று கேட்டது போல் எதுவும் வேதத்தில் பதிவு இல்லை.
எனவே இந்த ஒரே வியாதியஸ்தனை குணமாக்கியதோடு இயேசு கடந்து சென்றிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
7. அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான் என்றான்.
மேலும் அவன் தன்னுடய இயலாமை மற்றும் தனக்கு யாரும் இல்லை என்பதையும் வேதனையோடு ஆண்டவரிடம் தெரிவிக்கிறான். பிறரை கெடுத்து எதுவும் பெரிதாக சொன்னதுபோல் தெரியவில்லை. (இன்றைய பிச்சைகாரர்களாக இருந்தால் தனக்கு முன்னேபோய் குளத்தில் இறங்குபவனை திட்டி தீர்த்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்)
இந்நிலையில்: 8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
அவன் குணமான இந்த காட்சியை அங்கிருந்த பல வியாதியஸ்தர்கள் பார்த்திருக்க கூடும். ஆனால யாரும் இயேசுவை கூப்பிட்டு என்னையும் சுகமாக்கும் என்று கேட்டது போல் எதுவும் வேதத்தில் பதிவு இல்லை.
எனவே இந்த ஒரே வியாதியஸ்தனை குணமாக்கியதோடு இயேசு கடந்து சென்றிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
சகோதரர் சொல்வது போல் அவன் திக்கற்று (அநாதையாக) இருந்தான் ஆகையால் அவனை ,இரட்சித்தார் முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன். (யோபு 29:12)
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. (சங் 10:14)
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக் 1:27)