அன்று ஏசாயா தீர்க்கதரிசனமாக சொன்ன இந்த தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது!
இன்று அனேக ஜனங்களுக்கு தேவனின் உண்மையான வார்த்தைகள் தேவையில்லாமல் போய்விட்டது. இதமான வார்த்தைகள் பைபிளில் எங்கிருக்கிறது என்று தேடி எடுத்து போதிக்கிறார்கள். கர்த்தரின் வார்த்தைகள் கடுமையாக இருப்பதால் யாரும் பரிசுத்தராகிய தேவன் முன்னால் பரிசுத்தமாக நிற்க விருப்பம் இன்றி இருக்கிறார்கள்
ஏதாவது சாக்குசொல்லி எப்படியாவது எதையாவது காரணம்காட்டி அவருடய கண்களின் பார்வையில் இருந்து எஸ்கேப் ஆகிவிடவே விரும்புகிறார்கள். எரிச்சலுள்ள தேவனாகிய கர்த்தரை பாவத்தை பார்க்கமாடாத சுத்த கண்ணரை சாந்தமுள்ளவராக்கிவிட்டு பாவத்தை துணிந்து செய்கிறார்கள். தேவனை அறிய விரும்பாத அநேகர் தேவனையும் அவர் வார்த்தைகளையும் புறம்பே தள்ளிவிட்டார்கள்! காரணம்.
அநேகர் விரும்புவதெல்லாம் அவர்கள் மனதுக்கு இதமான வார்த்தைகளே எனவே அதை அள்ளி கொடுப்பதற்கு இன்று உலகில் அனேக தீர்க்கதரிசிகள் எழும்பியிருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை
10. இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ் சொல்லாமல் எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள்,
அநேகர் நாம் தேவனுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி யோசிக்காமல் தேவன் நமக்கு என்ன தருவார் என்ற ஏக்கத்திலேயே அலைவதை பார்க்க முடிகிறது.
கடிந்துகொள்ளுதலை கேட்க யாரும் தயாராக இல்லை. கீழ்படிய விரும்பும் மனநிலை அநேகருக்கு இல்லாமல் போய்விட்டது. ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி தேவனின் கற்பனைகளை தள்ளிவைத்து விட்டு சுகமாக வாழ்ந்துவிட துடிக்கும் கூட்டமே உலகில் அதிகம் நிரம்பியுள்ளது.
செப்பனியா 3:2அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை
பிசாசுகள் கூடத்தான் இயேசுவை தேவனின் குமாரன் என்று அறிக்கயிட்டனவே. எனவேகிறிஸ்த்தவம் என்றபோர்வைக்குள் ஒளிந்துகொண்டுஎந்த சாத்தானும் தேவனைஏமாற்றிவிட முடியாது.
தேவன் "நியாயத்தையும் நீதியையுமே" தூக்க்குநூலாக வைகக போகிறார். மாயையின் மறைவில் வாழ்ந்துகொண்டு "நம்மை காண்பவன் யார்?" "நான் தப்பித்துவிடுவேன்" என்று எண்ணி உங்களை நீயே மோசம்போக்கி கொள்ளாதேயுங்கள். பணத்தின் பின்னனேயும் உலக இன்பத்தின் பின்னேயும் ஓடி தங்களுக்குள்ள அழைப்பை இழந்து இந்த உலகத்தால் கறைபட்டுபோகாதீர்கள். தேவனின் மனவிருப்பம் என்னவென்பதை அறிந்து செயல்படுங்கள்
மத்தேயு 7:21பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
ஆண்டவராகிய இயேசு பேரிலுள்ள விசுவாசத்தோடு பிதாவின் சித்தம் செய்கிறவன் மாத்திரமே பரலோககத்தில் பிரவேசிக்க முடியும். பிதாவையும் பிதாவின் சித்த்ததையும் அறியாமல் தள்ளி விட்டவர்கள் அங்கு பிரவேசிக்க முடியாது என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது.
சிம்சோனை தேவன் தன் கிருபையினிமித்தம் அபிஷேகித்து தெரிந்துகொண்டும் அவன் தன்தகாத கிரியையினால் அழைப்பை இழந்துபோனான்.
தேவனுக்கேற்ற கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்று அறியீர்களோ?
வெளி 3: 15. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
வெளி 3: 19.
நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
இங்கு ஆவியானவர் சொல்வது இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம்திரும்பி அவரது சபைக்குள் வந்த கிறிஸ்த்தவர்களை பாத்துதான் என்பதை மறந்துவிட வேண்டாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)