இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. சுந்தர் பதிவுகள் பற்றிய விமர்சனங்கள்


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோ. சுந்தர் பதிவுகள் பற்றிய விமர்சனங்கள்
Permalink  
 


சகோ. சுந்தர் பதிவுகளை பற்றி விமர்சிக்க விரும்புவோர் அல்லது  Criticize  பண்ண விரும்புவோர் இந்த தனி திரியில் தங்கள்  விமர்சனங்களை  முன் வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிரார்கள். பதிவுகள் நீக்கபடாமல் தவிர்க்க  இந்த  முறைமையை பின்பற்றவும். தங்கள் விமர்சனங்களுக்கு  பதில் தருவதும் தராததும் அவரது சொந்த விருப்பம்.
 
தளத்தின் செயல்பாடுகள் தடைபடாமல் இருக்கவும் தளத்துக்கு வரும் மன்ற  அன்பர்களுக்கு தளத்தை பற்றிய தவறான கணிப்பு உருவாகாமல் தடுக்கவும்  இந்த முடிவு எடுக்கப்படுகிறது.  
 
சிலருக்கு அவரது கருத்துக்களை  நம்ப முடியவில்லை என்பதற்காக அதை நம்பும் மற்றவர்களை குறைத்து பதிவிடவேண்டிய அவசியம் இல்லை. இளக்காரமான பேச்சு/கேலி கிண்டல் போன்றவற்றை தவிர்க்கவும். 
 
திகமானபேர் நம்புகிறார்கள் என்பதற்காக ஒரு  வியாக்கீனம் உண்மை ஆகிவிடாது அதுபோல் சிலர்
மாத்திரமே நம்புகிறார்கள் என்பதற்காக ஒரு கருத்து பொய்யாகிவிடாது. கேட்டுக்கு போகும் வழிதான் பெரியதாக இருக்கும்  அதில்தான்  அதிகமானோர்  பயணம் செய்வார்கள் என்றும் ஜீவனுக்கு போகும் வழி குறுகியது அதை கண்டு  பிடிப்பவரே சிலர்தான் என்று விவிலிய வசனம் சொல்கிறது.
 
மத் 7:14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
 
புதிய சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை தடை செய்து வைத்ததால்தான் பாரம்பரியமான கத்தோலிக்க மதம் வழிமாறி போனது. இங்கு யாரும்  இறைவனின் அவதாரமோ, கர்த்தருக்கு ஆலோசனை காரரோ  கிடையாது எனவே எல்லா உண்மையும் அறிந்த யாரும் இருக்க வாய்ப்பில்லை.
 
சில தளங்களில் யார் சொல்லும் கருத்தும் அவர்கள் விசுவாசத்துக்கு ஒத்துபோகாமல் கொஞ்சம் வித்தியாசமான இருந்தால் நீக்கபடுகிறது. ஆனால் இங்கு எல்லோருடைய கருத்துக்களும் அனுமதிக்கப் படும். படிப்பவர்களுக்கு எது சரியாக படுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளட்டும்.
 
அதற்கிடையில் அவருடய பதிவுகள் பற்றி விமர்சிக்க விரும்புவோர் இந்த திரியில் விமர்சிக்கலாம்.  
   


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

Bro. John Wrote: 
////சகோ. ஜான் அவர்களே..நல்ல கேள்விகள் இன்னும் சற்று நேரத்தில் திரு. சுந்தர் உங்களை திட்ட ஆரம்பித்து விடுவார்.////
 
சகோதரர் அவர்களே என்னுடய கருத்துக்களை கேலியும் கிண்டலும் செய்வதோடு நான் ஒரு வசன ஆதாரம் கொடுத்து "வசன ஆதாரம் கொடுத்துவிட்டேன்" என்று எழுதியபோது "கிழித்தீர்கள" என்று தரமற்ற வார்த்தையை பயன்படுத்தி யது நீங்கள்தான். யார் திட்டுகிறார் யார்  வாங்கிகொண்டு மெளனமாக இருக்கிறார் என்பதை  தேவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.     
 
Bro. John Wrote: 
  ////அவர் தேவனிடம் 'நேரடி தொடர்பில்' இருந்து கேட்டு சொல்லும் காரியங்களை அப்படியே எடுத்து கொள்ள வேண்டும்.///
 
நான் எழுதும் எல்லாமே எந்த மனுஷநிடமும் கேட்டு அறியாமல் தேவனிடம் விடாப்பிடியாககேட்டு  தியானித்து எழுதியதுதான்.  இதை சொல்வதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. தேவனே "என்னை கேள்" என்றும் "என்னை நோக்கி கூப்பிடு" என்றும் சொல்லி யிருக்கும்போது அவரிடம் கேட்டு எழுதினேன் என்று சொல்வதில் என்ன தவறு?
 
ஆனால் தாங்கள் குற்றம் சுமத்துவதுபோல்  நான் சொல்வதை யாரும் ஏற்க்கவேண்டும் என்ற கட்டாயமும்  இல்லை. அப்படி யாரையும்  கட்டாயப்படுத்தவும் இல்லை.  தங்களுக்கு ஏற்க்க முடியவில்லை என்றால விட்டு விடுங்கள் என்றுதானே நான் சொல்லி வருகிறேன்.
ஆனால் நீங்கள்தான் விடாப்பிடியாக வந்து குற்றம் சுமத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.     
  
Bro. John Wrote: 
//வசன அடிப்படையில் கேள்வி கேட்க்க கூடாது!///
 
நீங்கள் சொல்லும் வசனம் மட்டும்தான் வசனம் நான் சொல்வது எல்லாம் வசனமே அல்ல என்பதுபோல் விளக்குகிறீர்கள் அத்தோடு   இயேசு அவரது வாயாலேயே சொன்ன நேரடி வசனங்களைகூட  நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்கள் பிறகு  எங்கிருந்து வசன ஆதாரம் தருவது?.
 
"இயேசுவின் வார்த்தையை கைக்கொள்ளுவது என்றால்" அவரது வார்த்தைகள்படி வாழ்வது என்று  சிறுபிள்ளைகள் கூட சொல்லும் ஆனால் தாங்களோ "இயேசுவை ஏற்றுக்கொள்வதுதான் அவர் வார்த்தைகள்படி வாழ்வது" என்று புது வியாக்கீனம் பண்ணுகிறீர்கள் பிறகு  எப்படி விவாதம் பண்ணுவது?      
 
Bro. John Wrote: 
///"விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" ஆகையால் திரு. எட்வின் விசுவாசிப்பது போல நீங்களும் விசுவாசியுங்கள்!!///  
 
கொஞ்சம் விட்டால் வசனத்தையே கேலி கிண்டல் பண்ணுவீர்கள் போலதெரிகிறது.
 
Bro. John Wrote: 
 ////"காணாதவைகளிலே துணிவாய் நுழைவதில்" திரு. சுந்தர் கைதேர்ந்தவர்!!
  கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.///

தெரிந்தோ தெரியாமல் இந்த வார்த்தையை பதிவிட்டுள்ளீர்கள். இந்த வார்த்தைகள் அப்படியே தங்களுக்குதான் பொருந்தும். காணாதவை களிலும் தெரியாதவைகளிலும் துணிந்துஇறங்கி கேலிகிண்டல் செய்து பந்தைய பொருளை இழந்து போகாதபடி பார்த்து கொள்ளுங்கள்.  தங்களை  பொறுத்தவரை  நான் எழுதும் எதுவுமே காணாதுதான்.
 
தேவன் தங்கள் கண்களை திறந்து அறிந்திருக்கிறீர்களா? நரகம் பாதாளம் இவற்றை பார்த்திருக்கிறீர்களா? தேவ வழி நடத்துதலில் பசி தூக்கம் உணவு இன்றி அலைந்திருக்கிரீர்களா?  இருதயம் திறக்கபட்டு  அடுத்தவர் இருதயத்தில் நினைப்பதைகூட உங்கள் இருதயத்தில் அறியும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்களா?
 
எதுவும் காணவில்லை தானே? பிறகு எப்படி இவைகளை எல்லாம்  கண்டு வசன அடிப்படையில் தியானித்து  எழுதும் இங்கு துணிகரமாக புகுந்து  கேலி கிண்டல் செய்து வருகிறீர்கள்?
 
தங்களுக்கு இவைகள் காணாததாக இருக்கலாம் ஆனால் எல்லாமே நான் அனுபவபூர்வமாக கண்டது!  நான் கண்டதையும் கேட்டத்தையும் அறிந்தததையும்  எழுதாமல் இருக்கக்கூடாதே
 
அப்போஸ்தலர் 4:20நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்
 
சகோதரரே  கேலிப்பேச்சும்  கிண்டலான விளக்கங்களும் உலக நிலைக்கு ஒத்துபோகலாம் ஆண்டவருடைய  காரியங்களை எழுதுகையில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். காணாத எதையும் துணிந்து  எழுதி தேவையில்லாமல்  தேவகோபத்தை குவித்துகோள்ள நான்  என்ன பயித்தியக்காரனா? ஆனால் நீங்களோ காணாத காரியங்களை குறித்து துணிந்து விமர்சிக்கிறீர்கள். என்னுய சாட்சிகளை அநேகர் ஏற்க்கமாட்டார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் ஏனெனில் தேவகுமாரனாகிய  இயேசு சொன்ன காரியத்தையே அன்று யாரும்  ஏற்றுக்கொள்ளவில்லை   
 
யோவான் 3:32தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
 
தங்களுக்காக நான் ஜெபிக்கிறதுபோல  எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள். நான் எழுதுவது தவறு என்று தேவன் எனக்கு
உணர்த்தினால் நான் நிச்சயம் நிறுத்திவிடுவேன். மனுஷ சக்தியால் என்னை தடுத்துவிடலாம் என்று மாத்திரம் எண்ண வேண்டாம். நான் கர்த்தரின் பெலத்தில் ஆடும் கைப்போம்மையே!
 
நான் யாருடைய கருத்தில் அதிகமாக தலையிட்டு துணிந்து குற்றம் சுமத்துவது இல்லை ஓரிரு முறை சொல்லிய பிறகு பயனில்லை என்றால் மெளனமாக விலகிவிடுவேன். காரணம் நான் அனைத்தும் அறிந்தவன் அல்ல! பிறர்  சொல்வதிலும் உண்மை இருக்கலாம் அதற்க்கு நாம் ஏன் எதிர்த்து நிற்கவேண்டும்  என்ற எண்ணமே.   
 
என்னுடன் விவாதிக்கவேண்டும் என்று தாங்கள் விரும்பினால்  பொறுமையான வார்த்தைகளை பயன்படுத்தி நான் சொல்லும்  வசனங்களையும் கருத்தில் கொண்டு விவாதிக்கலாம். இடக்கும்கேலி கிண்டலும் செய்வதாக  இருந்தால் நான் மௌனமாகிவிடுவேன். தனிப்பட்ட யாருக்கும்  கடிந்து புத்திசொல்ல எனக்கு கட்டளை இல்லை. 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

என்னுடயை எழுத்துக்களுக்கு பல சகோதரர்களிடமிருந்து எழுந்த  எதிர்ப்பிநிமித்தம்  சில நாட்களுக்கு முன்னர் "இனி  தளத்தில் ஆண்டவர் பற்றி தளங்களில் அதிகம்  எழுதகூடாது" என்ற முடிவில் இருந்தேன். அது என்னுடைய உலக வாழ்வு நிலைக்கு மற்றும் பொழுது போக்குக்கு சற்று இலகுவாக இருந்தபோதும்  எப்பொழுதும்  வேதவசனத்தை பற்றியே ஏதாவது தியானித்துகொண்டிருக்கும்  நான், இம்முடிவின் மூலம் தேவனின் தொடர்பு நிலையை விட்டு சற்று பிரிய நேர்ந்தது.
 
அந்நேரம் ஒருநாள், நான் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது  திடீர் என்று எனக்கு  என்னுடய எதிர்காலத்தை குறித்தும் பிள்ளைகள் மற்றும் குடும்பம் குறித்தும் ஒருபயம் மற்றும் திகில் என்னை சூழ்ந்து கொண்டது.
 
ஆண்டவர் வருகை தாமதமானால் நான் எப்படி வாழப்போகிறேன் ஆண்டவர் பேரிலுள்ள நம்பிக்கையில் எதையுமே சேர்த்து வைக்க விரும்பாமல் ஒன்றுமே இல்லாமல் இருக்கிறேனே! என்னுடய வேலை  நிரந்தரம் அற்றது! கம்பனியும் நிரந்தரம் இல்லாதது! ஒருமாதம் சம்பளம் இல்லை என்றாலும் வீட்டு வாடகை மற்றும்  குடும்ப செலவுக்கு ஆகும் செலவைகூட என்னால் சமாளிக்க முடியாது. அது மட்டுமல்ல 'சர்வ வல்லவராகிய  கர்த்தர் மேலுள்ள நம்பிக்கையில் என் பிள்ளைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகளை கூட நான் சரியாக  போடவில்லையே'  என்ற பயம் உண்டானது. 
 
ஆகினும் ஒரே கணத்தில் சுதாரித்துக்கொண்டு இந்தமட்டும் காத்த தேவன் இனிமேலும் நிச்சயம் காத்திடுவார் என்ற நம்பிக்கையில் பயத்தை உதறி தள்ளி தேவனை ஸ்தோத்தரிக்க ஆரம்பித்தேன்.    
 
சங்கீதம் 40:4 , கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 17:7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
 
என்ற வாக்குத்தத்தங்கள் அடிப்படையில், கர்த்தரையே முழுவதும் நம்பி நமது வாழ்க்கை  எதிர்காலம் எல்லாவற்றையும் அவர்மேல் வைத்துள்ள நம்மைவிட்டு  தேவ பிரசன்னம் ஒரு கணம் விலகினாலும்கூட  திகிலும்  பயமும் வியகூலமும் நம்மை சூழ்ந்துகொள்ள வாய்ப்புண்டு! தேவ பிரசன்னம் இல்லாமல் பயந்து பயந்து வாழ்வதைவிட சாவது  நலமாக இருக்கும்  எனவே  ஒருமுறை கூட  பின்னால் திரும்பி பார்த்து பயத்தின் ஆவிக்கு இடம் கொடுப்பது தவறு  என்று முடிவெடுத்தேன்! 
 
என்னை, பின்னால் திரும்பி பார்க்கவைக்க போராடும் ஆவிகளை இயேசுவின் நாமத்தில் கடிந்துகொள்கிறேன்.
    
மேலும் இனி சர்ச்சைக்குரிய எந்த கருத்தையும் எழுதாமல் நல்ல  பயனுள்ள கருத்துக்களை மாத்திரம் எழுத கர்த்தருக்குள் தீர்மானித்திருக்கிறேன்  
 


-- Edited by SUNDAR on Wednesday 29th of February 2012 09:58:38 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

//ஆகினும் ஒரே கணத்தில் சுதாரித்துக்கொண்டு இந்தமட்டும் காத்த தேவன் இனிமேலும் நிச்சயம் காத்திடுவார் என்ற நம்பிக்கையில் பயத்தை உதறி தள்ளி தேவனை ஸ்தோத்தரிக்க ஆரம்பித்தேன்.    

சங்கீதம் 40:4 , கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா 17:7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
என்ற வாக்குத்தத்தங்கள் அடிப்படையில், கர்த்தரையே முழுவதும் நம்பி நமது வாழ்க்கை  எதிர்காலம் எல்லாவற்றையும் அவர்மேல் வைத்துள்ள நம்மைவிட்டு  தேவ பிரசன்னம் ஒரு கணம் விலகினாலும்கூட  திகிலும்  பயமும் வியகூலமும் நம்மை சூழ்ந்துகொள்ள வாய்ப்புண்டு!//

நீதிமொழிகள் 23:17 நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. 18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

நீதிமொழிகள் 3:5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, 6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

யோவேல் 2:26 நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
 
சர்வ வல்லவராகிய கர்த்தரை நம்பியவர்கள்  ஒருபோதும் வெட்கப்பட்டுபோவதில்லை. இந்த பூமியில் நமக்கு சில பற்றாகுறைகள்  இருக்கலாம், இறைவனுக்காக  நாம் சில காரியங்களை இழக்க நேரிடலாம் ஆனால் 
 
மத் 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
 
இறைவனுக்காக எந்த ஒரு சிறு இன்பத்தையோ அல்லது பொருளையோ  இழந்தவர்கள் யாரையும் தேவன் அப்படியே விட்டுவிடாமல் அதற்குரிய பலனை ஓர்நாளில்  நிச்சயம் தருவார்.
 
எரே30:10 ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்;
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard