வேதம் பற்றிய என்னுடய புரிதல்கள் மற்றும் வியாக்கீனங்கள் சற்று வித்தியாசமானது எனபது எனக்கு நன்றாகவே தெரியும். காரணம் நான் வேதாகம கல்லூரியில் படித்து வேத அறிவை வளர்க்க வில்லை. என்னுடய சுய மூளையால் ஆராய்ந்து வேத வியாகீனத்தை அறிந்து கொள்ளவில்லை. மாறாக தேவனால் நேரடியாக அபிஷேகம் பெற்றேன். எனக்கு இருந்த எல்லா சந்தேகங்களையும். தேவனிடமே கேடடு விளக்கம் பெற்றேன் இன்றும் அவ்வாறு விளக்கம் பெறுகிறேன். இவ்வாறு பதில் பெறமுடியும் என்பதற்கு "என்னை கேள்" "என்னை நோக்கி கூப்பிடு" என்று கர்த்தர் கட்டளையிட்டு சொல்லும் வசன ஆதாரமும் இருக்கிறது. இதை நான் சொல்ல வெட்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் வேத புத்தகமே வெளிப்பாட்டின் அடிப்படையில் எழுபட்டது அதற்க்கு பின்னும் அனேக தேவமனுஷர்கள் தேவ வெளிப்பாட்டை பெற்றிக்கிறார்கள் இன்றும் அநேகர் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஏசாயா 2:22நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.
சங்கீதம் 116:11எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
ரோமர் 3:4 , தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
என்று வசனங்கள் சொல்வதால், எந்த மனுஷனின் வியாக்கீனத்தையும் நான் ஏற்க்க விரும்புவதும் இல்லை ஏற்க்கபோவதும் இல்லைஅதே நேரத்தில் அதை அதிகம் எதிர்ப்பதும் இல்லை. ஆனால் எனக்கு ஒரு காரியத்தை தேவன் தெரிவித்தால் எழுதுவேன் இல்லையேல் பொறுத்திருப்பேன். இவ்வாறு நானாக வேதத்தை தேவ ஆவியானவர் துணையுடன் ஆராய்ந்து எழுதுவதால் என்னுடய வியாக்கீனகள் சற்று வித்தியாசமாக இருக்க நிச்சயம் வாய்ப்புண்டு.
காலம் காலமாக ஒரே உபதேசத்தை பின்பற்றி வருவதால் என்னை பற்றி பலருக்கு பலவிதமான அபிப்ராயம் மற்றும் கோபம் இருக்கலாம். அதை நான் மறுப்பதற்கில்லை. அவர்களின் கோபத்தையும் மன பாரத்தையும் குறித்து நான் கோபம் அடையாமல் அவர்களுக்காக பல நேரங்களில் தேவனிடம் ஜெபிக்கவே செய்கிறேன். அவர்களின் கோபமும் எரிச்சலும் நியாயமானதாக இருந்தால் எனக்கு தெரிவி யுங்கள் தேவனே நான் எழுதாமல் நிறுத்திவிடுகிறேன் என்றுகூட கேட்கிறேன்.
இந்நிலையில் நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்பும் செய்தி என்னவெனில்.
ஆவிக்குரிய உலகில் ஒரு வசனத்தை வியாக்கீனம் பண்ணுகிறவர்கள்
ஒரு குறிபிட்ட வேத வசனத்தை படித்து ஜெபத்தோடு ஆவியானவரின் துணையோடு அதை தியானித்து அதற்க்கு இணை வசனங்களோடு ஒப்பிட்டு அதற்க்கு ஒரு முழுமையான வடிவை கொடுத்து விளக்கு கிறார்கள்.
ஆனால் என்னை பொறுத்தவரை,
தேவன் என்னை சுமார் ஆறுநாட்கள் ஆபிஷேகித்தபோது ஒரு முழுமையான காரியத்தை தெரியப்படுத்தினார் அந்த வெளிப்பாட்டை
அவ்வப்போது தியானத்து தேவன் தெரியப்படுத்தும் காரியங்களை அடிப்படையாக கொண்டு, அந்த வெளிப்பாடுகளுக்கு வேதத்தில் இருந்து வசன ஆதாரம் தேடி எடுத்து பதிவிடுகிறேன்.
நான் கொடுப்பது வெளிப்பாட்டின் அடிப்படைய்லான அனுபவ சாட்சி அல்லது அனுபவ வியாக்கீனம் ஆனால் அநேகர் கொடுப்பது எங்கோ
கேட்ட அல்லது யாரோ காலம் காலமாக சொல்லிவரும் ஒரு விளக்க மாகத்தான் இருக்கும் அல்லது தேவன் சொன்னதாக கூட இருக்கலாம் அது உண்மையாக கூட இருக்கலாம் எனவே அவர்களின் கருத்துக்கு நான் என்றும் எதிர்த்து நிற்ப்பது இல்லை
ஆனால் தேவன் எனக்கு தெரிவிக்கும் கருத்துக்கு வசன அதரம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிந்து எழுதுவதுதான் என்னுடைய பணியே அன்றி, அடுத்தவர் சொல்லும் கருத்துக்கு என்னுடய கருத்து ஒத்து போகிறதா என்பதை என்னால் கவனிக்க முடியாது.
"ஆட்டை பலியிடு மாட்டை பலியிடு' என்று வேதம்முழுவதும் அனேக முறை வார்த்தைகள் வந்தாலும் "பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்" என்ற ஒரே வேத வார்த்தை தேவன் பலியின்மேல் பிரியமானவர் அல்ல என்பதை நமக்கு உணர்த்திவிடும். நான் வெட்டுவேன், கொல்லுவேன், அடிப்பேன், இடிப்பேன் என்று அனேக இடங்களில் தேவன் சொல்லியிருந்தாலும் "மனப்பூர்வமாய் மனு புத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை" என்ற ஒரே வார்த்தை தேவன் யாரையும் மனபூர்வமாக தண்டிக்கவில்லை என்பதை நமக்கு உணர்த்திவிடும்.
அதுபோல் எனக்கு தெரிவிக்கபட்ட கருத்துக்கு ஓரிரு வசன ஆதாரம் தான் இருந்தாலும் அதை நிச்சயம் நிராகரிக்க முடியாது. அத்தோடு இந்த எனது வார்த்தைகளை நம்பவேண்டும் என்று நான் யாரையும் கட்டயாப்படுத்துவதும் இல்லை. உண்மை என்று விசுவாசிப்போர் நம்பலாம் இல்லை கள்ள உபதேசம் என்று கருதுவோர் விலகி
போகலாம்!
தேவன் தெரிவித்ததை எழுதவேண்டியது என்னுடய கடமை, அவர் திட்டமாக எனக்கு உணர்த்தினால் அப்பொழுதே நான் எழுதுவதை விட்டுவிடுவேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் கொடுப்பது வெளிப்பாட்டின் அடிப்படைய்லான அனுபவ சாட்சி அல்லது அனுபவ வியாக்கீனம் ஆனால் அநேகர் கொடுப்பது எங்கோ கேட்ட அல்லது யாரோ காலம் காலமாக சொல்லிவரும் ஒரு விளக்க மாகத்தான் இருக்கும் அல்லது தேவன் சொன்னதாக கூட இருக்கலாம் அது உண்மையாக கூட இருக்கலாம் எனவே அவர்களின் கருத்துக்கு நான் என்றும் எதிர்த்து நிற்ப்பது இல்லை
வசனத்தின் அடிப்படையில் வெளிப்பாடோ அல்லது வெளிப்பாட்டின் அடிப்படையில் வியாக்கீனமோ எதுவாக இருந்தாலும் இறைவன் ஒருவரே எனவே உண்மை என்பது ஒன்றே ஒன்றாகத்தானே இருக்க முடியும்.
எல்லோரும் குழப்புகிறார்கள் என்பதற்காக நாமும் சேர்ந்து குழப்பக்கூடாது.
எரே 15:19நீ தீழ்ப்பானதினின்று விலையேறப் பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்
மண்ணுக்குள் இருந்து வரும் தங்கமானது விலை யேறப்பெற்றதுதான் ஆனால் அதில் தேவையற்ற சில தாதுக்களும் சேர்ந்து கலப்படமாகத்தான் வரும். மானிடர்கள் இரண்டையும் பிரித்து எடுப்பதுபோல். நாம் கேட்கும் இறை செய்திகளுளும் சில பொய்கள் கலந்தே இருக்கும் இந்த தீழ்ப்பானதினின்று விலை யேறப்பெற்றதை பிரித்து எடுக்கவேண்டும் என்று இறைவன் சொல்வதை கவனித்தல் அவசியம் அதுவும் சரி இதுவும் சரி என்றால் எது உண்மை?உண்மை ஒன்றுதானே இருக்க முடியும்?
Nesan wrote:அதுவும் சரி இதுவும் சரி என்றால் எது உண்மை?உண்மை ஒன்றுதானே இருக்க முடியும்?
உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான் என்பது நிச்சயமான ஓன்று ஆனால் அந்த உண்மையை முழுமையாக அறியும் நிலையில் பலவேறு மனுஷர்களுக்கிடையே வேறுபாடு உண்டு.
உதாரணமாக ஒரு சினிமா படத்தை பாதியில் இருந்து பார்ப்பவர்களும் உண்டு, இறுதி பகுதியை மட்டும் பார்ப்பவர்களும் உண்டு முழுமையாக பார்ப்பவர்களும் உண்டு, பிறரிடம் கதையை கேட்டு அறிந்திருப் பவர்களும் உண்டு.
இதில் பாதி பகுதியில்இருந்து படத்தைபார்த்து கதையை சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. இறுதி பகுதியை மட்டும் பார்த்து கதையை சொல்பவர்களும், பிறரிடம் கதையை கேட்டு சற்று கூட்டி குறைத்து சொல்பவர்களும் பொய்யை சொல்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால். அவர்கள் முழு உண்மையையும் அறியாமல் தாங்கள் அறிந்த காரியங்களை பற்றி பேசுகிறார்கள் என்பதுதான் உண்மை.
எனது தகப்பனாருக்கு நாங்கள் நான்கு ஆண் பிள்ளைகள். அதில் நான் ஐந்து வருடம் ஹாஸ்டலில் தங்கி படித்துவிட்டு பின்னர் உடனே ஏழு வருடம் மும்பை பட்டணம் சென்றுவிட்டதால், நான் ஒரு பிள்ளை இருப்பதே அநேகருக்கு தெரியாது. எனவே பலர் என் தகப்பனாருக்கு மூன்று ஆண்பிள்ளைகள்தான் இருக்கிறார்கள் என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் எங்கள குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நான் ஒருவர் நாலாவதாக இருக்கிறேன் என்பது தெரியும்.
இங்கு என்தகப்பனுக்கு மூன்று பிள்ளைகள்தான் என்று சொல்பவர்கள் முற்றிலும் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது சரியான உண்மையை அறியாமல் கூருகிரார்களேயன்றி அவர்கள் தெரிந்து பொய் சொல்லவில்லை என்றே பொருள்படும்.
இதே நிலையில்தான் நானும் கணிக்கிறேன். அவரவர்அறிந்த பகுதிகளை அவரவர் சொல்கின்றனர். யார் சொல்வதையும் நான் தவறு என்று கூற விரும்பவில்லை. தேவன் எனக்கு தெரியப்படுத்தி நான் அறிந்த உண்மைகளுக்கு வசனஆதாரம் இருக்கிறது என்பதை மாத்திரமே இங்கு சொல்ல விரும்புகிறேன்.