இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கண்ணுக்கு இனிமையாக இருப்பது எல்லாம் கர்த்தரின் தோட்டமல்ல!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
கண்ணுக்கு இனிமையாக இருப்பது எல்லாம் கர்த்தரின் தோட்டமல்ல!
Permalink  
 


சில நாட்களுக்கு முன்னால் ஒரு சிறிய கைப்பிரதி ஓன்று என்னிடம் படிக்கும்படி கொடுக்கபட்டது. தொடக்கத்தில் எழுதப்பட்டிருந்த அனைத்து செய்திகளும் மிக அருமையாக கிறிஸ்த்தவத்தை  பற்றியே இருப்பதுபோலவே இருந்த அதிலுள்ள வார்த்தைகள், இறுதியி முடியும் போது வேறு ஒரு மனுஷனையும் வேறொரு தெய்வத்தையும் மையப்படுத்தி எழுதியிருந்ததை அறிந்து ஏமாந்து போனேன்.    
 
நல்ல நோட்டுக்கும் கள்ள நோட்டுக்கும் வேறுபாடை கண்டுபிடிப்பது என்பது மிக கடினமான காரியம். இரண்டு நோட்டுகளும்  எல்லா விதத்திலும் ஏறக்குறைய ஓன்று போலவே தென்படும். சில நுணுக்கமான வேறுபாடுகளை வைத்தே அது  கள்ள  நோட்டா அல்லது நல்ல நோட்டா என்பதை  அறியமுடியும். இல்லையேல் நாம் ஏமாற
வேண்டியதுதான். அதுபோல் இன்றைய உலகத்தில்  ஏறக்குறைய எல்லா பொருளுக்கும் அசல் போலவேதோன்றும் டூப்ளிகட் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதை  நாம்  அறியலாம். மரம் செடி கொடிகளில்கூட இப்பட டூப்ளிகட் வகைகள் உண்டு.  பார்ப்பதற்கு அச்சு அசல் நல்ல கடுகு போலவே தெரியும் காட்டு  கடுகும், நல்ல திராட்சை போலவே தெரியும் காட்டுதிராட்சையும்கூட உண்டு. கோவக்காய் வெள்ளரிக்காய் போன்றவற்றில் நல்ல சுவையுள்ள காயும் கசப்பான காய்களும் கூட உண்டு என்பதை நாம்அறிவோம். இவைகள்  இரண்டும் ஒன்றுபோலவே இருப்பதால்  இதில் நல்லது எது கெட்டது என்பதை அறியாது போலிகள் மூலம்  அநேகர் ஏமாந்து போவது வாடிக்கையான ஓன்று. 
 
அதே போல் தேவனுடய காரியங்களிலும் அனேக போலி ஆவிகள் இந்த உலகில் கிரியை செய்து வருகிறது என்றும் அவற்றை பகுத்தறிய வேண்டியது அவசியம் என்றும் வேதம் நம்மை எச்சரிக்கிறது. அசல் போலவே தென்படும் போலிக்கள் இந்த கடைசி காலத்தில் அனேகமாக பெருத்துபோய்விட்டது.  ஆவிக்குரிய மனுஷன்   போலிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
 
I யோவான் 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
 
மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
 
இப்படி அனேக கள்ள தீர்க்கதரிசிகள் இந்த கடைசி காலத்தில் தோன்றி செயல்பட்டு வருவதால் உண்மையான தேவனின் வார்த்தை அல்லது வழி எங்கு இருக்கிறது என்பதை அறிவது மிக கடினமே.  அதிகம் கூட்டம் சேருவதை வைத்தோ அல்லது ஆட்களின் தோற்றத்தை வைத்தோ மாய்மாலமான வார்த்தைகளைவைத்தோ எவர்  ஒருவரையும் நாம் சரியாக கணித்துவிட முடியாது. 
 
மத்தேயு 7:14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
 
"ஜீவனுக்கு போகும் வழியை கண்டுபிடிப்பவர்  மிக சிலர்தான்" என்று வேதம் சொல்வதை மீண்டும் இங்கு நினைபூட்டுகிறேன். பெருங் கூட்டம் தவறான வழியில்தான் போகும்! எகிப்த்தில் இருந்து புறப்பட்ட ஆறுலட்சம் பேரில் கானானில் பிரவேசித்தது இரண்டே இரண்டுபேர்தான் என்பது நமக்கு திருஷ்டாந்திரம். எனவே உண்மையை சிரத்தை எடுத்து ஆராயாமல் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கைகோர்க்கவேண்டாம்!  
 
சோவாருக்கு போகும் வழி கர்த்தருடைய தோட்டத்தை  போலவே 
இருந்ததால்  அதை சுதந்தரித்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் அங்குபோய் கூடாரம்போட்ட லோத்துவின் வாழ்க்கை அனேக  பிரச்சனைக்குள்ளாகி போனது,  
 
ஆதியாகமம் 13:10 அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
 
அதுபோல் இன்றும் உலகில் கண்களுக்கு காதுக்கும் இருதயத்துக்கும் இனிமையான  கர்த்தருடைய வார்த்தைகள் போலவே தோன்றும் அனேக போலிகளாலும் வர்ண ஜாலங்களில் மின்னும்  காரியங்களால்
கிறிஸ்த்தவ உலகம்  நிரம்பி வழிகிறது. அதை கண்டதும் இதுதான்  கர்த்தரின் தோட்டம் என்று நம்பி ஏமாந்து போகாதீர்கள்!
 
இந்த உலக வாழ்க்கையில் இன்பங்களை தரக்கூடிய இனிமையான எந்த ஒன்றுமே கர்த்தரின் தோட்டம் அல்ல!
 
I யோவான் 2:16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
 
இந்த உலகத்தில் எல்லாவற்றையும் துறந்நிலையே கர்த்தரை நோக்கி நம்மை வழி நடத்தும்.
 
லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்
 
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து கர்த்தரால் எதேன்  தோட்டத்தை விட்டு விரட்டப்பட்டபோது அவர்களுக்கு தேவனால் கொடுக்கபட்ட சாபம்:
 
ஆதியாகமம் 3:17  , பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.   என்பதே
 
எனவே, நாம் இந்த உலகத்தில் வாழும் காலம் வரை இந்த வாழ்வின் பலனை வருத்தத்தோடுதான் அனுபவிக்க வேண்டும். அது தேவனால் நியமிக்கபட்ட நியமணம். நமக்கு அவசியம் தேவையான எந்தஒரு  பொருளும்கூட அளந்துதான் கொடுக்கப்படும். உண்மை  அவ்வாறிருக்க, இந்த உலகத்தில் இன்பத்தை  அள்ளித்தரும் எந்த ஒரு காரியமும் உலக ஆசீர்வாதத்தை வாக்குபண்ணும் எந்த ஊழியமும், காண்பதற்கு கர்த்தருடய  தோட்டம்போல தென்படும் எதுவும் மாயமானதும் ஆவிக்குரிய மனுஷனுக்குய் அது கண்ணியாகவுமே  அமையும்!   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard